Happy Birthday Synapse!!!
அதற்கு பின் இந்த ஒரு வருடத்தில் அவர் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை 38.
எந்த படம் பார்த்தாலும் இவரின் பார்வையில் அந்த படம் எப்பிடி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். எந்த புத்தகம் படித்தாலும் இப்படி தான்.
மார்ச் மாதத்தில் இவரின் அலுவலகத்தில் "intranet" மாத இதழ்(potpourri) தொடங்கியது. அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இவரின் படைப்புகள் அதில் வெளியாகிறது. அக்டோபர் மாதத்தில் வெளியாகிய படைப்பு எந்திரன்.
போன வருடத்தில் நகத்தை எடுத்தது, பல்லு பிடுங்கியது, போன் அட்டென்ட் பண்ண போய் கீழ விழுந்தது போன்ற நிகழ்வுகள். இந்த வருடம் ஸ்கூட்டியோடு கீழே விழுந்த நிகழ்வு. பார்த்து பத்திரமாக இருங்க தாயீ.
இவரின் தோழி குரங்குக்கு செருப்பு கொடுத்த அனுபவத்தை எழுதிய இவருக்கு குரங்கோடு ஒன்றாக உட்கார்ந்து ஒரே தட்டில் சாப்பிட்ட அனுபவமே இருக்கிறது. ஆனால் வெட்டுக்கிளியை கண்டால் தான் பயம்.
டோனியின் ரசிகையான இவருக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெயிக்க வேண்டும் என்ற வெள்ளிக்கிழமை வேண்டுதலும் ஜெயித்தால் விசில் அடித்து சந்தோஷ படும் பழக்கமும் உண்டு.
தேசிய கீதம் எங்கு கேட்டாலும் ஒரு விநாடி அர்ஜுனின் நினைப்பு வருவதை தடுக்க முடியவில்லை. கூடவே ஒரு புன்முறுவலும் ஒட்டி கொள்ளும்.
சமீபத்தில் இவர் எழுதியதில் எனக்கு பிடித்த பதிவு Wasabi.
" இது வரை ப்ரியா அக்கா எழுதியதில் எனக்கு மிக மிக பிடித்தது அவர் தந்தை பற்றி அவர் எழுதிய தந்தை மகற்கு ஆற்றும் நன்றி. நான் மிகவும் சந்தோசமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் நான் செய்ய விரும்புவது இரண்டு விஷயங்கள். இந்த பதிவை படிப்பது, மொழி படம் பார்ப்பது. எனக்கு அலுக்காத விசயங்கள் இவை." சென்ற வருடத்தில் நான் எழுதிய வரிகள் இவை. இந்த நொடி வரை இதில் மாற்றம் இல்லை.
எல்லோரும் மன நிம்மதியுடன், உடல் நலத்துடன் வாழ வாழ்த்தும் இவர் உடல் நலத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துவோம்.
Synapse இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்துகள்.

1 comments:
என் வாழ்த்துகளும்.
Post a Comment