Tuesday, May 25, 2010

இயற்கை ராஜி பீ கேர்ஃபுல்

கவிதை என்ற பெயரில் எண்டரைத் தட்டும் ராஜிக்கு கடைசி எச்சரிக்கை. அவ கவித எழுதறத நிறுத்தலேன்னா என்ன மாதிரி பல கவிஞ்சர்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

சாம்பிளுக்கு சில.....


அள்ளி கொடுக்க நினைக்கும் காதல் அனைத்தும்

அடங்கி நிற்கிறது

உன்னை பார்த்த ஆனந்தத்தில்

***


உன் முதல் முத்தம்

முதல் பரிசு உணர்த்தாத

உனதான தாக்கம்

உன் முதல் மவுனத்தில்

***


கடற்கரை காற்றின் சுகத்தில்

மெய் மறந்திருக்கும்

அவளுக்கு புரியவில்லையா

என் முகத்தில் படும்

அவளின் மூச்சு காற்றுக்கு முன்

அது ஒன்றும் இல்லை என்று

***


இரவு நேர நெடுந்தூர பேருந்து பயணம்

எரிச்சல் என்ற தோழியிடம் சொன்னேன்

காதலித்து பார்

***


பதினைந்து விதமான சேலை

பத்து விதமான வளையல்

ஐந்து விதமான பொட்டு

அனைத்திலும் வித விதமாக அள்ளி குவித்தவளுக்கு

முத்தத்தில் மட்டும் மனசில்லை ஒன்றை தாண்ட

***

 
கால் வலிக்கிறதென்ற

என் கால் மீது அவள் காலை போட்டு

இப்போ என்றவளிடம் சொன்னேன்

வாய் வலிக்கிறது

***


நீ வேணும் என்று

கடவுளை நினைத்து

கண் மூட

உன் நினைவுகள் வந்து

கடவுளை மறக்கடித்து விட்டது

***

19 comments:

*இயற்கை ராஜி* said...

ம்ம்... சரிங்க மேடம்.. நடத்துங்க.. :-)

கபீஷ் said...

இது கவித, ராஜி கத்துக்கோ
:)))))

கபீஷ் said...

நீங்க சொல்லாட்டியும் நடத்துவோம் ராஜி

ஜோசப் பால்ராஜ் said...

ஆஹா, கவித கவித.

ஜோசப் பால்ராஜ் said...

ராஜின்னு பேரு இருந்தா கவித எழுதுறது என்ன காபி போடுற மாதிரி சர்வ சாதாரணமான விசயமா ?

மயில் said...

ஆமா இறுதி எச்சரிக்கை :))

மயில் said...

ராஜி உன் கவிதைனால வந்த விளைவைப்பாரு. இன்னொரு கவிதாயினி உருவாவதை உன்னால தடுக்க முடியுமா? நாங்கள்ளாம் சூறாவளீ காத்துல சுண்டல் சாப்பிடரவங்க :))

*இயற்கை ராஜி* said...
This comment has been removed by the author.
*இயற்கை ராஜி* said...

எனக்கு எதிர் கவிதை போடறேன்னு சொல்லி உங்க லவ்வுக்கு என்னை டேமேஜ் பண்றீங்களா மேடம்... கபீஷ்க்கா நான் திரும்ப சொல்றேன்...அவ எழுதறது எல்லாம் ஃபீல் பண்ணி எழுதறது.. நீங்க நம்பி ஏமாறப் போறீங்க‌

விக்னேஷ்வரி said...

கால் வலிக்கிறதென்ற

என் கால் மீது அவள் காலை போட்டு

இப்போ என்றவளிடம் சொன்னேன்

வாய் வலிக்கிறது //

ராஜி, இதெல்லாம் போட்டிக்காக எழுதுற கவிதை மாதிரி தெரியலையே...
பாவம் இயற்கை ராஜியை வேற டேமேஜ் பண்றீங்களா....

MAHA said...

க‌பீஸ் ந‌ம்பி ஏமாற‌ப் போறிங்க‌...க‌விதை சூப்ப‌ர்...

MAHA said...

க‌பீஸ் ந‌ம்பி ஏமாற‌ப் போறிங்க‌...க‌விதை சூப்ப‌ர்...

MAHA said...

\\"ராஜி, இதெல்லாம் போட்டிக்காக எழுதுற கவிதை மாதிரி தெரியலையே...
பாவம் இயற்கை ராஜியை வேற டேமேஜ் பண்றீங்களா...."//

நானும் அதே தான் நினைக்க‌றேன்

கார்க்கி said...

அப்புறம்?

Karthik said...

ஆல்ரெடி அழ ஆரம்பிச்சிட்டேன். ஸோ வேணாம். :)

@கார்க்கி : ஆர்.எஸ் புரம், காந்திபுரம், ராமநாதபுரம் நெறைய இருக்கு. :)

கோவை குமரன் said...

//நீ வேணும் என்று

கடவுளை நினைத்து

கண் மூட

உன் நினைவுகள் வந்து

கடவுளை மறக்கடித்து விட்டது //

நல்ல வரிகள்..

கோவை குமரன் said...

//நீ வேணும் என்று

கடவுளை நினைத்து

கண் மூட

உன் நினைவுகள் வந்து

கடவுளை மறக்கடித்து விட்டது //

நல்ல வரிகள்..

Sweatha Sanjana said...

அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life