Saturday, April 17, 2010

I am back :) :) :)

ஒரு வழியாக சென்னை திரும்பி அதே ஹாஸ்டலில் தஞ்சம் அடைந்தாகி விட்டது.

இன்னும் நம்ம மக்கள் கொஞ்சம் கூட மாறவில்லை.

VTV பட பாடல் நான்காவது முறையாக ஓடி கொண்டிருந்தது. ஒரு இருபது பேர் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தோம்.

நான் "இந்த பாட்டு பிடிக்காம போய்டும்.. எத்தன தடவ பார்ப்பீங்க. மாத்துங்கடி"

தோழி "ஆமா.. இப்படி தான் ... கண்கள் இருந்தால் பாட்ட கேட்டாலே நாம எல்லோரும் ஓடுறோம்.. அத்தன தடவ கேட்டு வெறுக்க வைச்சிட்டாங்க"

"சிம்பு நல்லா இருக்கான்"

"என்ன தான் திரிஷா நல்லா இருந்தாலும் நிறைய பொண்ணுங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. ஏன்னு தான் தெரியல" .

திரிஷாவின் ரசிகை ஒருத்தி "பொறாமையா இருக்குமோ?"

"இன்னும் கொஞ்சம் அழகா காமிச்சி இருக்கலாம் திரிஷாவ"

"திரிஷா அவ்வளவு வொர்த் இல்லடி"

"கவுதம் தான் இப்படியெல்லாம் அழகா படமோ/பாடலோ எடுக்க முடியும்" என்று சொல்லி கொண்டிருந்த ஒருத்தி என்னை பார்த்தவுடன் "மணிரத்தினம் சார் கூட தாங்க" என்றாள்.

விஜய் ரசிகை ஒருத்தி "விஜய் வச்சு கவுதம் படம் எடுத்தா விஜய் எங்கயோ போய்டுவான்"

"ஆனா கவுதம் தான் இருந்த இடம் தெரியாம போய்டுவார்"


நல்ல வேலையாக மேட்ச் ஸ்டார்ட் ஆக பேச்சு கிரிக்கெட் பக்கம் திரும்பியது. எந்த எந்த டீம் semi finals க்கு போகும் என்று கிட்ட தட்ட ஒரு சண்டை ஆரம்பித்தது

என்னை தவிர அத்தனை பேரும் சென்னைக்கு தான் சப்போர்ட்.

தாக்குதல் ஆரம்பித்தது .. "எல்லாத்துக்கும் சென்னை சென்னை அப்பிடின்னு உயிரை விடுற.. இப்போ மட்டும் அந்த பாசம் எங்க போச்சு.. எப்போ பாரு.. டெக்கான், மும்பைன்னு.. கொஞ்சம் கூட ஊர் பற்று இல்ல.. ."

சென்னை டீம்க்கு சப்போர்ட் பண்ணலன்னா ஊர் பற்று இல்லையா.. என்ன கொடுமை இது ..

"முதல்ல சென்னை டீம்க்கு விளையாடுரவங்களுக்கு அந்த பற்று இருக்கணும்..ரெய்னா, விஜய் மட்டும் உயிரை கொடுத்து விளையாடுறாங்க.. மத்தவங்கள கொஞ்சம் அவங்க சென்னை டீம்னு நியாபக படுத்துங்க.." என்று சொல்லி முடிக்கும் முன் "^&%*&^%*(&)*(*(&()&()_&" என்று ஒரு அஞ்சாறு பேரிடம் இருந்து அர்ச்சனை கிடைத்தது,...

நான் "சச்சின்விட வேற யாரும் இந்தியாவிற்கு இந்த மாதிரி விளையாடி கொடுக்க முடியாது.. அந்த நன்றி கூட தான் உங்களுக்கு இல்ல.. டோனி டோனின்னு உயிரை விடுறீங்க"

"ஹலோ சச்சின் பிடிக்காதுன்னு யார் சொன்னா. இருந்தாலும் டோனி தான் ஜெயிக்கணும்"

"சென்னை சச்சின் டீம் கிட்ட தர்ம அடிவாங்கி வாங்க போகுது. பார்த்துட்டே இருங்க"

ஒருத்தி "டோனி மாதிரி யாரும் கேப்டன் இல்ல"

"சரி நான் ஷேன் வார்னே கூட கம்பேர் பண்ணல. அசாருதீன் கூட கம்பேர் பண்றேன். அப்போ கூட எனக்கு டோனி சூப்பர்னு சொல்ல முடியல."

"நீ எல்லாம் திருந்த மாட்ட."

"இதுல திருந்த என்ன இருக்கு.. சச்சின் விட வேற யாரும் சூப்பர் இல்ல. அது உங்களுக்கே தெரியும். ஆனா நீங்க தான் டோனி டோனின்னு உயிரை விடுறீங்க."

"சென்னை semi finals கு போகும்" என்று எல்லோரும் சேர்ந்து கத்த, நான் "அதுக்கு நீங்க மும்பை மாதிரி ஜெயிச்சு போகணும். அத விட்டு DD, DC, RR எல்லோரும் தோற்கணும் அப்படின்னு மத்தவங்க தோற்க வெயிட் பண்ண கூடாது" என்று சொல்ல மறுபடி அர்ச்சனை.

எனக்கு ஒரு சந்தேகம் சச்சின் நன்றாக விளையாடினாலும் கங்குலி கங்குலி என்று உயிரை விட்ட கூட்டம் முதலில் இருந்தது. அதே மாதிரி டோனி டோனி என்று இப்போது உயிரை விடுகிறார்கள். அவர்கள் கங்குலி, தோனியை முழு மனதாக ஏற்று கொண்ட மாதிரி சச்சினை ஏற்று கொள்வதில்லை. என்னத்த சொல்றது போங்க.

சென்னை semi finals க்கு போக வேண்டும் என்ற வெள்ளிக்கிழமை வேண்டுதல்! யாருக்கு இருந்தாலும், ஹாஸ்டலே எனக்கு எதிராக வேண்டி கொண்டாலும்... ....சென்னை semi finals போகட்டும் கவலை இல்லை... ஆனால் அவர்கள் ஜெயிக்க போவது இல்லை..

15 comments:

வித்யா said...

வெல்கம் பேக்கு;)

\\விஜய் வச்சு கவுதம் படம் எடுத்தா விஜய் எங்கயோ போய்டுவான்"

"ஆனா கவுதம் தான் இருந்த இடம் தெரியாம போய்டுவார்"\\

கரெக்ட்:))

நான் கூட சென்னை சப்போர்ட்டர் தான். ஆனா தோனி கடுப்பத்தேறார். பார்ப்போம்.

Maddy said...

ராஜி பேக்குன்னுற உண்மையசொல்றதுக்கு உங்களுக்கு ரொம்ப தைரியம் போங்க வித்யா!

ஏதோ என்னால முடிஞ்ச் match stick firing.

Present Raji Miss.

மயில் said...

ஏன் இப்படி டைட்டில்லயே ஓப்பன் ஸ்டேட்மெண்ட் ???? :))

*இயற்கை ராஜி* said...

vanga madam ..vanga... vantha udane hostel sandai start panniyacha rowdy

Vijay said...

வருக வருக.

\\"இன்னும் கொஞ்சம் அழகா காமிச்சி இருக்கலாம் திரிஷாவ"
\\
சட்டில இருக்கறது தான் அகப்பைல வரும் :)

சென்னை அரை இறுதிக்குப் போனால் அது ஏதோ மற்ற அணிகளின் புண்ணியத்தில் தான் :) பார்ப்போம் :)

Karthik said...

Welcome back, I say! :))))

Chennai is chasing 193 to be in the semis. Lets see. :)

@Vijay : A win today will be enuf to ensure a place in the semis as our RR is good.

Karthik said...

விஜய் வச்சு கவுதம் படம் எடுத்தா விஜய் எங்கயோ போய்டுவான்"

"ஆனா கவுதம் தான் இருந்த இடம் தெரியாம போய்டுவார்"//

REPEATEYY. :)))

kanagu said...

Welcome back :) :)

Chennai in Semis.. :D :D Even though I like Sachin.. I want Chennai to win :) :)

KKR semisku pogathathu oru varutham than... :( :(

Vijay vachi panna Gautam menon gaali than :D :D

தாரணி பிரியா said...

எனக்கு கிரிக்கெட்டே பிடிக்காது. ஆனா சென்னைதான் ஜெயிக்கணும் ஏன்னா என் தங்கைக்கு சென்னை டீம் பிடிக்காது :)

ப்ரியா கதிரவன் said...

//சென்னை semi finals போகட்டும் கவலை இல்லை... ஆனால் அவர்கள் ஜெயிக்க போவது இல்லை.. //

மோடி,சசி தரூர் மேட்டர், பெங்களூரில் வெடிகுண்டுன்னு IPL அலங்கோலமா ஆகிட்டுருக்கு...பேசாம அடுத்து என்ன நடக்கும்ன்னு உங்க கிட்ட ஜோஷ்யம் கேக்கலாம் போலருக்கே?

//அவர்கள் கங்குலி, தோனியை முழு மனதாக ஏற்று கொண்ட மாதிரி சச்சினை ஏற்று கொள்வதில்லை. என்னத்த சொல்றது போங்க.
//
Beg to differ this statement!
சச்சின் என்ற ஒருவரை ஏற்றுக்கொள்ளாத (இந்த வார்த்தையே கொஞ்சம் கடினமானதாக இருக்கிறது),
ஒரு இந்தியன்...ஏன் ஒரு கிரிக்கெட் பார்ப்பவன் கூட இல்லை என்று கூட சொல்லலாம். CSK வோ, KKR சோ இல்லை வேறு எந்த ஒரு அணியுமோ வெற்றி பெற வேண்டும் என்று யார் நினைப்பதையும் சச்சினோடு தொடர்பு படுத்த தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

Anonymous said...

எனக்கு கங்குலி தான் பிடிக்கும். மும்பை தளகனத்துல இருக்காங்க!!!!யாரு win பண்ணலும் மும்பை win பண்ணகூடாது.

சுசி said...

வாழ்த்துக்கள்..

உங்களுக்கும் சென்னைக்கும்.
சென்னை டீமுக்கு இல்லை..

// I am back :) :) :) //

தக்குடுபாண்டி said...

/மத்தவங்கள கொஞ்சம் அவங்க சென்னை டீம்னு நியாபக படுத்துங்க.." // hahahaha

LK said...

ippathan first murai unga blog padikaren.. nalla irukku unga blog.. chennai mumbai match neenga pakkala, home teamana chennaiya support pannama, ground muluka sachin sachinuthan kathinanga..

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life