Tuesday, January 19, 2010

Thanks to Karki and Tharani akka!!!

பாதி பேர் தோரணம் கட்டுறாங்க, பாதி பேர் கிழிச்சி தொங்க விடுறாங்க இது எப்போதும் நடக்குறது தானே விட்டுடலாம் அப்பிடின்னு நினைச்சா கார்க்கியின் இந்த பதிவு படத்துல செல்வா என்ன தான் பண்ணி இருக்கார்னு பார்க்கணும்னு ஒரு ஆவலை தூண்டி விட்டுச்சு. தாரணி அக்காவோட பதிவ பார்த்த அப்புறம் இந்த படத்த நாம பார்த்தே ஆகணும்னு வெறியே வந்துடுச்சு. (தாரணி அக்கா பிட்டு போதுமா?)

எந்த படத்துக்கும் என்னோட எண்ணங்களை எழுதணும்னு தோணல. ஆனா ஆளாளுக்கு என்கிட்ட பேசினதுக்கு அப்புறம் எனக்கு எழுதணும்னு தோணிடுச்சு. தமிழ் சினிமாவில் இது ஒரு மிக பெரிய முயற்சி, trend மாத்திடும் அப்படி இப்படின்னு ஒரு நாலஞ்சு பேர் என்கிட்ட சண்டை போட்டாங்க அவங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. தசாவதாரம் கூட ஒரு முயற்சி தான். ஏன் பருத்தி வீரன், நாடோடிகள், சுப்ரமணியபுரம் இதுலாம் கூட நல்ல முயற்சிகள் தான். கதை களம் வேற மாதிரி இருக்குனா அன்பே சிவம், ஹேராம் ரெண்டு படமும் வித்தியாசமான கதை களம் இல்லையா? பணத்தை கொட்டி, நெறையயயயயயயய துணை நடிகர்கள வைச்சு, இப்படிலாம் படம் எடுத்தா அது தான் மிக பெரிய முயற்சின்னு என்னால ஒத்துக்க முடியல.

தசாவதாரத்தை கமலுக்காக வீணாக்கிட்டாங்க. அதே மாதிரி செல்வாவோட அபாரமான உழைப்பு அவராலேயே வீணாயிடுச்சுன்னு தான் எனக்கு தோணுது.

இத்தனை பேரோட உழைப்பை கொட்டி, பணத்தை கொட்டி எடுத்த முயற்சியில் லாஜிக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல். மிக பெரிய சொதப்பல் அழைத்தவுடன் வந்திறங்கும் ராணுவ வீர்கள். நாமலே இதை யோசிக்கும் போது செல்வா எப்படி இதை யோசிக்காமல் விட்டார். இல்லை படத்தை பிரம்மாண்டமாக கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்று நினைத்தாரா.

ரீமா நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா இந்த திமிர் தனத்த வல்லவன் படத்துலையே பார்த்தாச்சு. இதுல அழகா இருக்காங்க. வல்லவன்ல
எப்பிடி இருந்தாங்கன்னு தனியா வேற சொல்லனுமா? அது தான் பெரிய வித்தியாசம்.

பார்த்திபனின் நடிப்பு அபாரம். அவரின் அறிமுகத்தில் இருந்து இறுதி வரை ஆஹா மிக அற்புதம். எதுக்காக ஆண்ட்ரியா? இப்போது வரை புரியவில்லை.

கார்த்தி என் மச்சானோட தம்பியா இருந்துகிட்டு இந்த படத்துக்காக இத்தன நாட்களை வீணாக்கிட்டார். அது செல்வாவை நம்பி என்றால் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

கதை புரியவில்லை என்று நிறைய பேர் சொல்லிட்டாங்க. புரியாம போக அப்படி எதுவும் இல்லையே. அதுவும் இல்லாமல் அந்த கொடுமையான காட்சிகள் எல்லாம் தெள்ள தெளிவாக அவர் எதை பற்றி சொல்கிறார் என்று தெரிகிறதே. எனக்கு அந்த காட்சிகளை பார்த்தப்போ ஏன் கற்பனைன்னு போட்டாங்கன்னு தோணுச்சு?

பாடல்கள் எல்லாம் ரிலீஸ் ஆனப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சது. பாடல்கள் பிடிக்காத என் தோழிகளிடம் படம் வரட்டும் பாரு, கண்டிப்பா நல்லா படமாக்கி இருப்பார் செல்வான்னு சொன்னதும் தப்பா போச்சு. ஒன் மேல ஆசை தான் பாட்டு மட்டும் பார்க்க ஆறுதல்.

பின் பாதியில் சில இடங்களில் எனக்கு G.V. பிரகாஷிடம் கொஞ்சம் நேரம் நிறுத்துப்பா, முடியல என்று சொல்லணும் போல ஆய்டுச்சு.

ரீமாவின் virgin செக்கப், மனம் பிறழ்ந்து நடிக்கும் காட்சி, பார்த்திபனின் முடிவு என ஒவ்வொன்றிலும் இது என் படம் என்று செல்வா சொல்வது தெரிகிறது. பாலாவும் செல்வாவும் இந்த மாதிரி காட்சிகளை எடுப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நான் நினைப்பதுண்டு. மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

ஆனால் இத்தனையையும் மீறி அந்த நடராஜர் நிழல், போர்கள காட்சிகள்ன்னு நல்ல விசயங்கள் இருக்கின்றன. என்ன ஒரு creativity, அட என்று சொல்ல வைத்தது அந்த நடராஜர் நிழல் காட்சி. போர்கள காட்சியில எல்லோரும் சேர்ந்து நின்னு தாக்கும் இடத்தில் அதகளம் பண்ணி இருக்கார். அதே போல எல்லோரும் சொல்வது போல் எனக்கு வன்முறைகள் அதிகம் இருப்பதாக தெரியவில்லை. கதைப்படி பார்த்தால் சரியான படி தான் கொடுத்திருக்கிறார்.

செல்வா எனக்கு பிடிக்காது, இது செல்வாவோட படம் அப்பிடிங்கிற என்னோட எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு தான் இந்த படம் பார்த்தேன். 7G, காதல் கொண்டேன் பார்த்த பிறகு இருந்த கடுப்பு இப்போது இல்லை. ஆனால் படம் அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போல் ஆகி விட்டது. என்னை பொறுத்த வரை, மூன்று இல்லை இன்னும் மூன்று வருடங்கள் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை நேர்த்தியாக கொடுத்திருக்கலாம்.

நேத்து இந்த படத்தை பார்த்து விட்டு அந்த நடராஜர் நிழல் மற்றும் போர் காட்சிகளை நினைத்து எந்த அளவில் பிரம்மிப்பில் இருக்கின்றேனோ அதே போன்று ஒரு வித எரிச்சலையும் கொடுத்து விட்டது இது உலக படத்திற்கான முயற்சி என்ற வார்த்தைகள்.

முயற்சிகளை தட்டி கொடுத்து பாராட்ட வேண்டும், உண்மை தான், ஆனால் இத்தனை விசயங்களை பார்த்து விட்டு இது தான் தமிழ் படத்துக்கு மிக பெரிய மாற்றம், லாஜிக் பார்க்க கூடாது அப்படி இப்படி என்று மறுபடியும் என்கூட சண்டை போடணும்னா வாங்க போடலாம் :)

பின் குறிப்புகள்:
1. இந்த படத்துல பாட்டை நல்லா படமாக்கி இருப்பார்னு சொல்லி வாங்கி கட்டிகிட்டேன். ஆனா தல உங்கள, உங்க அசல் படத்த நம்பி நான் பெட் கட்டி இருக்கேன். நமக்கு புது முயற்சி, உலக படம்லாம் வேணாம் தல. அசல் படம் என் முதல (பெட் கட்டி தொலைச்சிட்டேன்) மோசம் பண்ணாம வந்துச்சுனா போதும் தல.

2. அசல் படம் ஒரு வேலை நல்லா இல்லேன்னா வேட்டைக்காரன் என்ற வார்த்தையை அசல் என்ற வார்த்தையாலும், விஜய் என்ற வார்த்தையை தல என்ற வார்த்தையாலும் replace பண்ணி அனுப்ப நெறைய மெசேஜ் ரெடியா வைச்சிருக்காங்க. ப்ளீஸ் தல ...

3. அசல் படம் நல்லா இருந்தா மட்டும் Synapse இல் விமர்சனம் வரும். இல்லேன்னா ப்ரியா அக்கா அத கண்டுக்காம விட்ருவாங்க.

26 comments:

Anonymous said...

அப்டின்னா வில்லு, சத்யம், அரசாங்கம், இதெல்லாம் ஒலக படம் இல்லையா? :))

Karthik said...

ஆயிரத்தில் ஒருவன் பத்தி கருத்து சொல்லாம இருக்கறது நான் ஒருத்தன் தான் போல. ஆவ்வ்..

அசல் ஆஸ்கார் வெல்லும் என்பதை மட்டும் சொல்லிக்கிறேன். ;)

கார்க்கி said...

தலைப்ப பார்த்துட்டு பயந்துட்டேன் :)))

நீங்க நம்ம கட்சி.கைய கொடுங்க

@கார்த்திக்,

அசல் ஆஸ்கார் போலி ஆஸ்கார்ன்னு ஏதாவது இருக்கா என்ன?

ஆயிரத்தில் ஒருவன் போலி ஆஸ்கார் கூட வாங்காது :)))

அப்புறம் ராஜி, அது என்ன Synapse?

Anonymous said...

sari appo padam parkalaama vendaama?

kanagu said...

athu ennamonga.. padam enakku pudichirundhudu... aana naan unga kooda sanda poda virumbala.. :D

Asal.. padathukku bet ellam naan katala... aana thala rasigan apdingrathu naala waiting..

nalla vandhurukku nu solranga... aana paatu sumaar than...

kanagu said...

naan muname sonna maari.. O esa paatu enaku picturizing pudichirundhudu... padathoda ottala..

aana endha padathula than paatu padathoda ottudhu ;)

ப்ரியா said...

நான் அசல் படம் பார்க்கனுமா வேணாமான்னே யோசிச்சுட்டு இருக்கேன் ராஜி...

இய‌ற்கை said...

first synapseku link kudunga madam :-)

இய‌ற்கை said...

eppo..enna than panna...padam pakava...venama?..

enna than sollavarenga neenga?:-))

Karthik said...

@கார்க்கி

ஓ விஜய் கட்சி ஆரம்பிச்சிட்டாரா? சேர்றவங்களாம் கைய கொடுத்துடனுமா? என்னங்க அராஜகமால இருக்கு? :P

கணேஷ் said...

But Opinion differs.

எனக்கு என்னமோ செல்வராகவன் மேல் மரியாதை அதிகமாகியிருக்கிறது.

அவருக்கு டைம், பட்ஜெட், ஃப்ரண்ட்ஸ் அண்ட் பெர்ஸனல் front ப்ராப்ளம்ஸ் போன்ற கட்டுபாடுகளற்று, அவரை அவர் போக்கில் உலவவிட்டிருந்தால் இன்னும் ஆக்கப்பூர்வமாக வந்திரு்க்கும் என்ற பிரயாசை ஏற்படுகிறது.

இந்த மாதிரியான முயற்சிகளில் உள்ள குறைகளை குட்டாமல், தட்டிக் கொடுத்தால், அவரால் இன்னும் மேலே உயரங்கள் தாண்டி செல்ல முடியும். அது பார்வையாளர்களுக்கும் நல்ல தீனியாக கிடைக்கும்.

ஹூம்ம்ம்ம்...

Ashok Prabhu said...

raji, antha porkalam katchi 300'nu oru english padathoda kaapi.. so its not the thinking of selva... and antha nilal kachi 3 to 10 apdi'ngra english padathoda remake....

Karthik said...

அண்ணன் கணேஷுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு போட்டுக்கறேன். :)

Rajalakshmi Pakkirisamy said...

@ மயில்,

இப்போ கிளம்பி வரேன். உங்க ரெண்டு பேரையும் .....

@ Karthik,
உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் தல ரசிகை :)

//அசல் ஆஸ்கார் வெல்லும் என்பதை மட்டும் சொல்லிக்கிறேன். ;)//
எங்களுக்கு அதுலாம் வேணாம்...


@கார்க்கி,

:)

//அப்புறம் ராஜி, அது என்ன Synapse?//

Synapse என்னோட இன்னொரு blog அப்படின்னு சொல்லனும்னு நினைச்சேன். என்ன பண்றது போங்க... அது
ப்ரியா அக்காவோட blog. அந்த blog இன் பரம ரசிகை நான் :)

http://synapse-junctionofthoughts.blogspot.com/

Rajalakshmi Pakkirisamy said...

@ MAHA and இய‌ற்கை,

படம் பாருங்க. நிறை குறைகள் இருக்கு. ஆனா உலக படம்னு மட்டும் சொல்ல முடியல. அத தான் சொல்றேன்.

@ இய‌ற்கை,

Synapse ku லிங்க் குடுத்தாச்சுங்க மேடம்.

@ kanagu ,
இந்த படம் பார்த்த பிறகு செல்வா மீது முதலில் இருந்த கடுப்பு இப்போ இல்லங்க. என் வருத்தம் அவரோட உழைப்பு அவராலேயே வீணா போய்டுச்சு. நிறை குறைகளோட படம் இருக்கு. ஆனா இது உலக படம்னு சொல்றது தான் :(


கண்டிப்பா அசல் நல்லா வரும்ங்க.


@ ப்ரியா அக்கா,
நீங்க பார்க்கலன்னா Synapse ல படத்த upload பண்ணிடுறோம்.

@ கணேஷ் and Karthik,
//இந்த மாதிரியான முயற்சிகளில் உள்ள குறைகளை குட்டாமல், தட்டிக் கொடுத்தால், அவரால் இன்னும் மேலே உயரங்கள் தாண்டி செல்ல முடியும். //
இப்படி குறைகள் தெரிந்தால் அடுத்த படத்தில் இந்த குறைகளை களைந்து அதை உலக படமாக்க அவர் முயற்சிக்கலாம். இந்த படம் உலக படம் இல்லைன்னு தான் சொல்றேன்.

@ Ashok Prabhu,

:) :) :)

Anonymous said...

வாங்க, தாரணி டமில்படம் ரெண்டு டிக்கெட் பார்சல் :))

தாரணி பிரியா said...

//அசல் படம் நல்லா இருந்தா மட்டும் Synapse இல் விமர்சனம் வரும். இல்லேன்னா ப்ரியா அக்கா அத கண்டுக்காம விட்ருவாங்க. //

இந்த தாரணி பிரியா அக்காவும் இதே போலதான் :)

தாரணி பிரியா said...

படம் நல்லா இருக்கு நல்லா இல்லைன்னு அப்படின்னு சொல்லறது எல்லாம் செகண்ட். இந்த படம் சத்தியமா உலகத்தரம் இல்லை. இதுதான் என் கருத்து

தாரணி பிரியா said...

//மயில் said...

வாங்க, தாரணி டமில்படம் ரெண்டு டிக்கெட் பார்சல்//

thanks thanks :)

வித்யா said...

அசல் படம் நல்லாருக்குமா..சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு:)

சிம்பா said...

அப்போ நீங்களும் படம் பார்த்தாச்சு... ஹ்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். நீங்க சொல்றதும் சரி தான், உலக சினிமா வரலாற்றில் அப்படின்னு சொல்ல முடியாது தான், ஒரு சில நெகடிவ் trend ல கதை அமைக்க இவங்கள மாதிரி ஒன்னு ரெண்டு ஆளு தான் இருக்காங்க.

ஆனா அந்த நடராஜர் நிழல் பற்றி சொன்னிங்களே, அது ஒரு பழைய ஆங்கில கௌ-பாய் படம் i think it's Mackenna's Gold (1969), அதில் அரிசோனா பாலைவனத்தில், தங்கத்தை தேடி அலையும் காட்சியில், கடைசி வழிகாட்டி ஒரு மலையின் நிழல், இது அதன் தழுவல் தான். So creativity and praise should go to Heck Allen (novel writer) Carl Foreman.

அது என்னமோ தெரியல தல படத்துக்கு மட்டும் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே எல்லோரும் ரிசல்ட் சொல்லிடுறாங்க. அநேகமா உங்க பெட் அமௌன்ட் அம்பேல் தான். ஹி ஹி..

Rajalakshmi Pakkirisamy said...

@ மயில்,

//வாங்க, தாரணி டமில்படம் ரெண்டு டிக்கெட் பார்சல் :))//

வந்தா அசல் படத்துக்கு கூட்டிட்டு போவீங்களா?

@ தாரணி பிரியா அக்கா,

//இந்த தாரணி பிரியா அக்காவும் இதே போலதான் :)//

அது!

@ வித்யா,
//அசல் படம் நல்லாருக்குமா..சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு:)//

செல்லாது செல்லாது.. இந்த பாயிண்ட் ஒத்துக்க முடியாது..
தல படம் நல்லா தான் ஓடட்டுமே...

@ சிம்பா,
//அநேகமா உங்க பெட் அமௌன்ட் அம்பேல் தான். ஹி ஹி..//
பாருங்க.. கண்டிப்பா படம் நல்லா ஓடும்.

இல்லனா நம்ம தல, அவருக்காக செலவு பண்ணிட்டேனு நினைச்சு கொடுக்க வேண்டியது தான்... டிக்கெட் காசு தான் தரேன்னு சொல்லிருக்கேன்.. அதுனால தப்பிச்சேன் :)

Karthik said...

@raji

//தல ரசிகை :)

whoa great! :)

Anonymous said...

//ப்ரியா அக்காவோட blog. அந்த blog இன் பரம ரசிகை நான் :) //

ஓ.. இதனால தான் அவக்க ப்ளாக் பேரே மாத்தறாங்களா? அப்டி ஒரு அறிவாளிக்கு இப்டி ஒரு ரசிகையா? என்ன கொடுமை அர்ஜுனம்மா இது? :(

மயில், தாரணி அண்ட் கோவிற்கு வேலை வெட்டியே இல்லையா? கும்மி அடிக்க கோவையே திரண்டு வந்திருக்கு..

எவ்ளோ பொட்டி குடுத்த ராஜி ஆண்டி?

SK said...

அசல் வந்த பிறகு நாங்க சொல்றோம்..
ஒரு படத்துக்கு இவ்வளவு ஆராய்ச்சியா ?

சிம்பா said...

இன்னும் அம்மணி அசல் படம் பார்க்களை போல இருக்கு ... ஹிஹி