Thursday, January 21, 2010

கேள்வி மேல கேள்வி...


பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் யாரும் கேட்கவில்லை என்ற பரபரப்புடன் ஐ.பி.எல் பீவர் ஆரம்பித்து விட்டது. March 12 அன்று ஆரம்பிக்கும் போட்டிகள் April 25 அன்று முடிவடையும் அப்பிடின்னு வந்த schedule பார்த்தாச்சு.

அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து விளையாட்டு வீரர்களின் நிறை குறைகள் ஆராயப்பட்டு, இவர் இப்படி ஆடுவாரு, அவர் அப்படி ஆடினா தான் டீம்ல இருக்க முடியும் என்ற அறிவுரைகளும் கொடுக்கப்படும்.

இவர எதுக்கு இத்தனை பணம் கொடுத்து வாங்குனாரு, இந்த வயசுல கூட இவரு என்னமா ஆடுறாரு என்ற பேச்சுகளும், இந்த தடவ ஒழுங்கா ஆடுனா ப்ரீத்தி அவங்கள கட்டிபிடிப்பாங்களா என்ற முக்கியமான அலசல்களும் நடக்கும். இந்த களேபரத்தில் ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் வந்தால் கூட மக்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்.

எப்போதும் போல நம்ம சப்போர்ட் இந்த தடவையும் ஷேன் வார்னேக்கும், கில்கிறிஸ்ட்க்கும் தான். போன தடவ மாதிரி சொதப்பாம கம்பீரும், சேவாக்கும் ஆடணும். மனைவி இறந்த சோகத்தில் இருந்து மீண்டு மெக்ராத் மீண்டும் ஆடுவாரா? மெக்ராத்தும், ஹைடனும் நட்பு பாராட்டும் காட்சிகள் இந்த தடவையும் கிடைக்குமா?

தோனிக்கு மறுபடி அதே டீமா? மனுஷன் என்ன பண்ணுவார் பாவம். ஆனாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கும். இந்த தடவ அதிர்ஷ்டம் யார் ரூபத்தில் வர போகுதோ? இந்த தடவ SRK என்ன பண்ண போறாரோ? யாரு யாருலாம் மக்களை கவர போறாங்க (cheerleaders பத்தி சொல்லல)? நல்லா ஆடுனாலும் அவங்களுக்கு டீம்ல இடம் கிடைக்குமா? சல்மானும், சமீராவும் 2010 ஐ.பி.எல் டீம் வாங்குவாங்கனு நியூஸ் படிச்சோமே. ஆனா நடக்கலையே?

நான் மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சென்னை வந்துடுவேனா? வந்தாலும் மேட்ச் பார்க்க எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியுமா? ஒரு மேட்சாவது நேர்ல பார்க்க முடியுமா? இப்படி ஏகப்பட்ட குத்தல் குடைச்சல் கேள்விகள் எனக்கு.

இதுக்குலாம் பதில் தெரியலனா கூட பரவாயில்லை ஆனா நல்லா ஆடுறவங்க எல்லாம் நம்ம செலக்சன் கமிட்டிக்கு தெரியணும்.


பின்குறிப்பு:

அசல் படத்த நம்பி ஏமாந்தால் அத ஐ.பி.எல் ல கரெக்ட் பண்ணும் எண்ணம் உள்ளது.

17 comments:

kanagu said...

yenga... chennai la indha vaati IPL matches illa nu nenaikeren... Chidambaram stadiyatha renovate pannitu irukkanga world cup-ku..

apram CSK apdi enna weak ah irukku.. nalla players ellam irukkanga... kandippa indha vaatiyum SF urudhi...

enaku KKR cup vaanganum nu aasai.. paapom :)

Karthik said...

பாகிஸ்தான் ப்ளேயர்ஸ் இல்லாதது ரொம்ப டிஸப்பாய்ன்மென்ட்தான். :(

வித்யா said...

சென்னை சென்னை தான்:)

ஓவரோ கேள்வி கேக்கறீங்க. ஒருவேளை கேள்வி கேக்க மட்டும்தான் தெரியுமோ:)

Anonymous said...

நான் நெனைச்சத நீ எழுதிட்டா நான் என்ன எழுதறது? இப்டி சின்னதா எழுது.. படிக நல்லா இருக்கு..

SK said...

வெறும் கேள்வியா கேட்டு ஒரு பதிவா :) ரைட்டு

சிம்பா said...

மாமா கேள்வி கேக்குறது ரொம்ப ஈசி, பதில் சொல்லி பார்த்தா தானே தெரியும்...

//இந்த தடவ ஒழுங்கா ஆடுனா ப்ரீத்தி அவங்கள கட்டிபிடிப்பாங்களா என்ற முக்கியமான அலசல்களும் நடக்கும்.// நக்கல்ல்சு... ஹ்ம்ம் இது கூட நல்லா தான் இருக்கு.

//ஆனா நல்லா ஆடுறவங்க எல்லாம் நம்ம செலக்சன் கமிட்டிக்கு தெரியணும். ///

ஹி ஹி, எப்போ ICL வளர விடகூடாதுன்னு அத்தனை தடை போட்டங்களோ, அப்போவே தெரியலையா, கண்டிப்பா நல்ல நல்ல வீரர்களுக்கு ;) இடம் கிடைக்கும். (கேலரியில்)

மயில் said...

என்னமோ சொல்றீங்க.. என்னானு புரியலை :))

SK said...

Echoos me mayilakkov, enna puriyalai :)

கணேஷ் said...

மனைவி இறந்த சோகத்தில் இருந்து மீண்டு மெக்ராத் மீண்டும் ஆடுவாரா? //

காந்தியை சுட்டுட்டாங்களா?

ரொம்ப சீரியஸா ஃபாலோ பண்றீங்க போல தெரியுதே?

நான் மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சென்னை வந்துடுவேனா? //

இப்ப என்ன US லயா இருக்கீங்க? :)

sweetnsavoury said...

Hey Raji,I'm just happy these IPL matches started after our collegedays..Else how many wars and battled would you have had to wage with our princi and AO ?? :-)
Anyways it was nice reading ur post..!! Keep up the spirits..!! Welcome IPL .!!

R.Gopi said...

பரபரவென்று எழுதி இருக்கும் இந்த பதிவை மூச்சு விடாமல் படித்ததை விட அந்த டெர்ரர் மற்றும் வில்லித்தனமான பின்குறிப்புக்காகவே இந்த பதிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்....

ராஜி.... மற்றுமொரு கலக்கல் பதிவு...

அண்ணாமலையான் said...

அட கலக்குறீங்க

இய‌ற்கை said...

ammadi.. ivlo kelvi ya....

இய‌ற்கை said...

oru kelvi kavathu pathil sollu pakalam... kelvi kekarathu easy..pathil solrathu?

Rajalakshmi Pakkirisamy said...

@ kanagu,
//enaku KKR cup vaanganum nu aasai.. paapom :)//
ஆஹா.. ஏங்க இப்படி. பார்போம் :)

@ Karthik,
எனக்கும் :(

@ வித்யா,
//சென்னை சென்னை தான்:)//
ஆமாங்க :)

//ஓவரோ கேள்வி கேக்கறீங்க. ஒருவேளை கேள்வி கேக்க மட்டும்தான் தெரியுமோ:)//
உங்களுக்கு அப்படியா தோணுது?


@ Anonymous,
Thanks!

@ SK,
:)

@ சிம்பா,
//எப்போ ICL வளர விடகூடாதுன்னு அத்தனை தடை போட்டங்களோ, அப்போவே தெரியலையா, கண்டிப்பா நல்ல நல்ல வீரர்களுக்கு ;) இடம் கிடைக்கும். (கேலரியில்)//

:) இந்த முறை என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

@ மயில்,

சரிங்க :) :) :)

@ கணேஷ்,
//ரொம்ப சீரியஸா ஃபாலோ பண்றீங்க போல தெரியுதே?//

ஆமாங்க .
//இப்ப என்ன US லயா இருக்கீங்க? :)//
:)

Rajalakshmi Pakkirisamy said...

@ sweetnsavoury,

ஆமா, நல்ல வேலை காலேஜ்ல இருக்குறப்போ இப்பிடி நடக்கல. அங்க இருந்தப்போ ஒவ்வொரு வாரமும் நான் அவங்ககிட்ட போட்ட சண்டை போதும். இது வேறயா :)


@ R.Gopi,

Thanks!

@ அண்ணாமலையான்,

Thanks!

@ இய‌ற்கை,
ரெண்டு மூணு கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சுங்க ;)

SK said...

அடங்க இங்கேயும் திரும்ப :) என் பேருக்கு கீழ avvvvvvvvvvvvv