Friday, January 8, 2010

3 idiots - மூவரின் பார்வையில்

அவதார் அலை ஓய்வதற்குள் அமீரின் அலை அடிக்க தொடங்கியது. ஹிந்தி தெரியாது என்றாலும் என் தோழியின் நச்சரிப்பால் "dil chahta hai" மற்றும் "tare zameen par" பார்த்து விட்டு (sub title ஓட) அமீர்கானின் ரசிகையாகி விட்ட எனக்கு 3 idiots பார்க்க வேண்டும் என்ற ஆவல். ஹிந்தி தெரியாது என்றாலும் அமீரை மட்டுமாவது பார்த்து விட்டு வரலாம் என்று தோன்ற, five point someone ஏற்கனவே படித்திருப்பதால் கதை ஓரளவு புரியும் என்ற எண்ணம் துணை நிற்க, நான் நின்றது தியேட்டரில். அதிர்ஷ்ட தேவதை கண்ணை திறக்க படம் sub title உடன் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்து விட்டு வந்து நான் முதலில் படித்த Review பரிசல்காரன் அவர்கள் எழுதியது. அதன் பிறகு எங்கு பார்த்தாலும் 3 idiots தான். அதிலும் உச்சகட்டமாக யூத்புல் விகடனின் "குட் ப்ளாக்ஸ்" வரிசையில் இடம் பெற்ற ஐந்துமே 3 idiots review தான்.

பத்துக்கும் மேற்பட்ட review படித்தாலும், என் மனதில் நின்ற மூன்று review இங்கே.கிரி என்பவரால் எழுத பட்ட விமர்சனம். விகடனின் "குட் ப்ளாக்ஸ்" வரிசையில் இதுவும் ஒன்று. அமீரின் ஆதிக்கம், போமனின் கண்டிப்பு, கரீனாவின் வாய்ஸ் மாடுலேஷன், ஷர்மானின் ஆடைகள் என்று அடித்து ஆடி இருக்கிறார்.

அமீர் பற்றிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது, ஆனால் அதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை என்றும், குழந்தைகளின் விருப்பங்களுக்கு தடையாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது, மாணவர்களை இயந்திரம் போல நடத்தக்கூடாது என்பது நல்ல விசயமாக இருந்தாலும் இது அனைத்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்துமா! என்று தெரியவில்லை குறிப்பாக இந்தியாவில். ஒரு சிலர் பெற்றோரின் வழிகாட்டுதலாலே நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள், ஒரு சிலர் தன் விருப்பமாக செய்வதாக நினைத்து ஒன்றுமில்லாமல் போய் இருக்கிறார்கள் என்றும் கூறும் இவரின் கருத்துடன் எனது கருத்தும் ஒத்து போகிறது.

கரீனாவின் சகோதரிக்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் கண்ணீர் வந்து விட்டதாக எழுதி இருக்கிறார். ஆனால் எனக்கு நீங்க எடுக்குறீங்களா இல்ல நான் வரட்டுமா என்ற சொல்லும் அளவுக்கு இழுத்து விட்டது.

எது எப்படியோ நான் படித்த விமர்சனங்களில் எனக்கு பிடித்த ஒரு விமர்சனம்.


ஆளாளுக்கு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என எழுதி கொண்டிருக்க இவர் பதிவை படித்து விட்டு இப்பிடி கூட ஒரு கண்ணோட்டம் என்று நான் நினைத்தேன்.

சுருக்கமாக சொல்லணும்னா As per everyone "They are right. the system must change". but for her "System is right. we need to change"

சதுர் ராமலிங்கம் சொல்றதா இருந்தா As per everyone "Engineering college is very unrealistic with very tough subjects, strict teachers and deadly exams" but for her "We have to be serious with science. If we feel it boring,it is because we don't know how to love the subject. so the problem is with us and not the education system.!"

எனக்கு ஒரு சில கருத்துகள் இருந்தாலும் உங்களின் பார்வையில் இந்த பதிவு எப்பிடி இருக்கிறது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)

நான் மிகவும் எதிர் பார்த்தது இவருடைய பார்வையில் 3 idiots. தனது 99 வது பதிவாக 2009 வருடத்தை மிக அருமையாக முடித்து வைத்த ஒரு படத்தின் விமர்சனத்தை, மிக அழகாக  கொடுத்திருக்கிறார்.

"Sorry Rancho, you were noway close to Aakash Malhotra" என்று அமீரையே கொஞ்சம் காலி செய்து விட்டார்.

கரீனா, மாதவன், போமன், ஷர்மான், சதுர் ராமலிங்கம் என்று ஒவ்வொருவரையும் அவருக்கே உரிய பாணியில் விமர்சித்து விட்டார்.

இவர் எழுதினால் கண்டிப்பாக எழுதுவார் என்று நான் நினைத்திருந்த சில விஷயங்கள், "film is good not an excellent one, entertainer, sentiments மற்றும் ஷர்மானின் நடிப்பு". நினைத்தபடி கொடுத்திருக்கிறார்.

நான் எதிர்பார்க்காத விஷயங்கள் "இவரின் பார்வையில் சதுர் ராமலிங்கம் மற்றும் மாதவனின் நடிப்பு". சதுர் ராமலிங்கம் பற்றிய இவரின் எழுத்து என்னை அட போட வைத்தது.

நான் எதிர்பார்த்து இவர் சொல்லாத விஷயங்கள் "I QUIT காட்சி பற்றிய இவரின் கருத்து மற்றும் அமீர் படத்தையே மாற்றிய லாஜிக் சொதப்பல்"

இந்த விசயங்களை அவர் சொல்லாமல் விட்டாலும், முதலும் முடிவும் அவர் பாணியில் எழுதி என் முகத்தில் புன்னகை மலர வைத்ததோடு மட்டும் இல்லாமல், சபாஷ் அக்கா என்று சொல்லவும் வைத்து விட்டார்.
எனக்கு பிடித்த மிக மிக அருமையான விமர்சனம் இது.

பின்குறிப்பு:

1. வித்யாவின் பயம் பார்த்து மற்றவரும் பயந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது.

2. ஆளாளுக்கு தமிழில் ரீமேக் செய்தால் சூர்யாவை பரிந்துரை செய்ய, நான் என் மச்சானுக்கு ஜோடியா சமீராவை பரிந்துரை செய்கிறேன். சூர்யாவிற்கு சமீரா அக்கா மாதிரி இருப்பார் என்ற பின்னூட்டம் வேண்டாம் :)

23 comments:

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் ...


அக்காவல்ல ஆண்ட்டின்னு சொல்ல அனுமதி உண்டா

அமீரின் படங்கள் லிஸ்ட் தரவா நல்ல படிங்கள் ...

வித்யா said...

கண்டிப்பா சமீரா சூர்யாக்கு அக்கா மாதிரி தான் இருக்காங்க. ஹைட் பிராப்ளம் யூ நோ:)

ப்ரியா said...

விமர்சனத்துக்கே விமர்சனமா???
Thanks for introducing those write ups.
Keep writing.

Anonymous said...

subtitle vazhka ;-)

Sangkavi said...

நல்ல விமர்ச்சனம்..........

கிரி said...

என் இடுகையை குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றிங்க ராஜலக்ஷ்மி!

கணேஷ் said...

எப்பிடியெல்லாம் போஸ்ட்க்கு மேட்டர் பிடிக்கிறீங்க..

Karthik said...

இது நல்ல ஐடியாவா இருக்கே?! :)

எனக்கு 3 இடியட்ஸ் பிடிக்கல. வேற ஒரு உருப்படியான படமும் இல்லங்கறதால பார்த்து தொலைக்க வேண்டியிருந்தது.

சமீராவுக்கு சூர்யா தம்பி மாதிரி இருப்பார். :)

சிம்பா said...

//எப்பிடியெல்லாம் போஸ்ட்க்கு மேட்டர் பிடிக்கிறீங்க..//

ரிபீட்டு...

ராஜி நீங்க உங்க மச்சானுக்கு வேற ஜோடி தேடலாம்;)

ஆனாலும் ஹிந்தி படத்தை ஹிந்தி படமாவே பார்க்கணும். (பக்கத்துல ஒரு translator வச்சுக்கிட்டுத்தான்.)

Madhu said...

Honoured to see my post linked in ur blog.!! Thanks :-) Keep reviewing..!!

Maddy said...

For a different kind of preview and comment check this

http://blogeswari.blogspot.com/2009/12/3-idiots.html

Princess said...

i am yet to see the movie aprama vandhu review padikren dear..

howz u? tc

சக்தியின் மனம் said...

ya.. its really great movie.. how could the movie fail when the ACE khan plays a roll in a movie..

இய‌ற்கை said...

naan inga comment podala. ithu en comment illaa..

விக்னேஷ்வரி said...

படம் பார்த்து விமர்சனம் எழுதுவீங்கன்னு பார்த்தா, மத்தவங்க விமர்சனத்தை எடுத்து இன்னொரு விமர்சனமா... ரைட்டு.

Rajalakshmi Pakkirisamy said...

@ நட்புடன் ஜமால்,

//அக்காவல்ல ஆண்ட்டின்னு சொல்ல அனுமதி உண்டா//

@ வித்யா,

//கண்டிப்பா சமீரா சூர்யாக்கு அக்கா மாதிரி தான் இருக்காங்க. ஹைட் பிராப்ளம் யூ நோ:)//

@ Karthik,

//சமீராவுக்கு சூர்யா தம்பி மாதிரி இருப்பார். :)//

@ சிம்பா,
//ராஜி நீங்க உங்க மச்சானுக்கு வேற ஜோடி தேடலாம்;)//

ஐயோ ராஜி, நான் தப்பா சொல்லிட்டேன் அப்பிடின்னு நீங்க பீல் பண்ற நாள் வரும்..

Rajalakshmi Pakkirisamy said...

Thanks ப்ரியா அக்கா!

@ Anonymous,

:)

@ கணேஷ்,
he he he

Thanks Madhu!

@ Princess,
How r u mam? Romba naal aachu


@ சக்தியின் மனம்,
Thanks for your comment!

@ இய‌ற்கை,
oii

@ விக்னேஷ்வரி,

he he he

இய‌ற்கை said...

africa lady..r u still in US?
reply to my mail.. lot of .........waiting fr u

R.Gopi said...

அட... விமர்சனத்திலிருந்து ஒரு விமர்சனமா??

இந்த மேட்டர் ரொம்ப நல்லா இருக்கே...

சூர்யா மச்சான் / சமீரா ஆண்ட்டி - இப்படி வேணும்னா சொல்லலாம்... இவர் 5.5, அவர் ஏறக்குறைய 6... அடி உயரமுங்கோ...

ஏற்கனவே நிறைய சீன்ஸ் ஸ்டூல் / குட்டி நாற்காலி எல்லாம் போட்டு தான் எடுக்கறாய்ங்களாம்.

கார்க்கி said...

//சூர்யாவிற்கு சமீரா அக்கா மாதிரி இருப்பார் என்ற பின்னூட்டம் வேண்டாம் //

அக்காவா? ச்சே ச்சே... சூர்யாதான் தம்பி மாதிரி தெரிவார்..

கவனிச்சிங்களா? 25-30 வயதை தாண்டியவர்களுக்கு படம் பிடிச்சிருக்கு. ஆனா ரியல் யூத்களுக்கு பிடிக்கல. உதாரனம் கார்த்திக், வெங்கி, கார்க்கி முதலானோர்

பாத்திமா ஜொஹ்ரா said...

ஏனுங்க அப்படி

ப்ரியா said...

Rajisays வாசகர்கள் கவனிக்கவும்:

ஒருத்தங்க, பதிவு ஆரம்பிச்சு ஒரு வருடம் முடிஞ்சத, வெளில சொல்லாம ரகசியமா வெச்சு இருக்காங்க.

Congratulations Raji and keep blogging.

Rajalakshmi Pakkirisamy said...

@ R.Gopi,

//ஏற்கனவே நிறைய சீன்ஸ் ஸ்டூல் / குட்டி நாற்காலி எல்லாம் போட்டு தான் எடுக்கறாய்ங்களாம்.//
சிம்ரன்னுக்கு கூட இப்பிடி தான் கதை சொன்னாங்க :) :) :)

@ கார்க்கி,

கவனிச்சிங்களா? 25-30 வயதை தாண்டியவர்களுக்கு படம் பிடிச்சிருக்கு. ஆனா ரியல் யூத்களுக்கு பிடிக்கல. உதாரனம் கார்த்திக், வெங்கி, கார்க்கி முதலானோர்//

உங்க வருகைக்கு நன்றிங்க. விக்கியோட போஸ்ட்ல கமெண்ட் delete பண்ணுறதுக்கு முன்னாடியே நாங்க படிச்சிட்டோம் sir. அங்க ஒண்ணு இங்க ஒண்ணுனு மாத்தி பேச கூடாது :)

@ பாத்திமா ஜொஹ்ரா,

நான் என்னங்க பண்றது

Thanks Priya Akka!