Tuesday, January 26, 2010

அர்ஜுன் அம்மா இடத்தை மாத்திட்டாங்க!!!

வாஸ்து சரி இல்லன்னு அர்ஜுன் அம்மா வீட்ட மாத்திட்டாங்க.

இனி அவங்கள இங்க கண்டுக்க முடியாது. ப்ரியா கதிரவன் ன்னு அவங்க பேர்ல இருக்குற வீட்டுக்கு போயாச்சு.

போய் பாருங்களேன் எப்படி இருக்குன்னு....
 
Mrs.Priya, Keep Writing

Readers/Fans, Happy Reading

Thursday, January 21, 2010

கேள்வி மேல கேள்வி...


பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் யாரும் கேட்கவில்லை என்ற பரபரப்புடன் ஐ.பி.எல் பீவர் ஆரம்பித்து விட்டது. March 12 அன்று ஆரம்பிக்கும் போட்டிகள் April 25 அன்று முடிவடையும் அப்பிடின்னு வந்த schedule பார்த்தாச்சு.

அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து விளையாட்டு வீரர்களின் நிறை குறைகள் ஆராயப்பட்டு, இவர் இப்படி ஆடுவாரு, அவர் அப்படி ஆடினா தான் டீம்ல இருக்க முடியும் என்ற அறிவுரைகளும் கொடுக்கப்படும்.

இவர எதுக்கு இத்தனை பணம் கொடுத்து வாங்குனாரு, இந்த வயசுல கூட இவரு என்னமா ஆடுறாரு என்ற பேச்சுகளும், இந்த தடவ ஒழுங்கா ஆடுனா ப்ரீத்தி அவங்கள கட்டிபிடிப்பாங்களா என்ற முக்கியமான அலசல்களும் நடக்கும். இந்த களேபரத்தில் ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் வந்தால் கூட மக்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்.

எப்போதும் போல நம்ம சப்போர்ட் இந்த தடவையும் ஷேன் வார்னேக்கும், கில்கிறிஸ்ட்க்கும் தான். போன தடவ மாதிரி சொதப்பாம கம்பீரும், சேவாக்கும் ஆடணும். மனைவி இறந்த சோகத்தில் இருந்து மீண்டு மெக்ராத் மீண்டும் ஆடுவாரா? மெக்ராத்தும், ஹைடனும் நட்பு பாராட்டும் காட்சிகள் இந்த தடவையும் கிடைக்குமா?

தோனிக்கு மறுபடி அதே டீமா? மனுஷன் என்ன பண்ணுவார் பாவம். ஆனாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கும். இந்த தடவ அதிர்ஷ்டம் யார் ரூபத்தில் வர போகுதோ? இந்த தடவ SRK என்ன பண்ண போறாரோ? யாரு யாருலாம் மக்களை கவர போறாங்க (cheerleaders பத்தி சொல்லல)? நல்லா ஆடுனாலும் அவங்களுக்கு டீம்ல இடம் கிடைக்குமா? சல்மானும், சமீராவும் 2010 ஐ.பி.எல் டீம் வாங்குவாங்கனு நியூஸ் படிச்சோமே. ஆனா நடக்கலையே?

நான் மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சென்னை வந்துடுவேனா? வந்தாலும் மேட்ச் பார்க்க எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியுமா? ஒரு மேட்சாவது நேர்ல பார்க்க முடியுமா? இப்படி ஏகப்பட்ட குத்தல் குடைச்சல் கேள்விகள் எனக்கு.

இதுக்குலாம் பதில் தெரியலனா கூட பரவாயில்லை ஆனா நல்லா ஆடுறவங்க எல்லாம் நம்ம செலக்சன் கமிட்டிக்கு தெரியணும்.


பின்குறிப்பு:

அசல் படத்த நம்பி ஏமாந்தால் அத ஐ.பி.எல் ல கரெக்ட் பண்ணும் எண்ணம் உள்ளது.

Tuesday, January 19, 2010

Thanks to Karki and Tharani akka!!!

பாதி பேர் தோரணம் கட்டுறாங்க, பாதி பேர் கிழிச்சி தொங்க விடுறாங்க இது எப்போதும் நடக்குறது தானே விட்டுடலாம் அப்பிடின்னு நினைச்சா கார்க்கியின் இந்த பதிவு படத்துல செல்வா என்ன தான் பண்ணி இருக்கார்னு பார்க்கணும்னு ஒரு ஆவலை தூண்டி விட்டுச்சு. தாரணி அக்காவோட பதிவ பார்த்த அப்புறம் இந்த படத்த நாம பார்த்தே ஆகணும்னு வெறியே வந்துடுச்சு. (தாரணி அக்கா பிட்டு போதுமா?)

எந்த படத்துக்கும் என்னோட எண்ணங்களை எழுதணும்னு தோணல. ஆனா ஆளாளுக்கு என்கிட்ட பேசினதுக்கு அப்புறம் எனக்கு எழுதணும்னு தோணிடுச்சு. தமிழ் சினிமாவில் இது ஒரு மிக பெரிய முயற்சி, trend மாத்திடும் அப்படி இப்படின்னு ஒரு நாலஞ்சு பேர் என்கிட்ட சண்டை போட்டாங்க அவங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. தசாவதாரம் கூட ஒரு முயற்சி தான். ஏன் பருத்தி வீரன், நாடோடிகள், சுப்ரமணியபுரம் இதுலாம் கூட நல்ல முயற்சிகள் தான். கதை களம் வேற மாதிரி இருக்குனா அன்பே சிவம், ஹேராம் ரெண்டு படமும் வித்தியாசமான கதை களம் இல்லையா? பணத்தை கொட்டி, நெறையயயயயயயய துணை நடிகர்கள வைச்சு, இப்படிலாம் படம் எடுத்தா அது தான் மிக பெரிய முயற்சின்னு என்னால ஒத்துக்க முடியல.

தசாவதாரத்தை கமலுக்காக வீணாக்கிட்டாங்க. அதே மாதிரி செல்வாவோட அபாரமான உழைப்பு அவராலேயே வீணாயிடுச்சுன்னு தான் எனக்கு தோணுது.

இத்தனை பேரோட உழைப்பை கொட்டி, பணத்தை கொட்டி எடுத்த முயற்சியில் லாஜிக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல். மிக பெரிய சொதப்பல் அழைத்தவுடன் வந்திறங்கும் ராணுவ வீர்கள். நாமலே இதை யோசிக்கும் போது செல்வா எப்படி இதை யோசிக்காமல் விட்டார். இல்லை படத்தை பிரம்மாண்டமாக கொடுத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்று நினைத்தாரா.

ரீமா நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா இந்த திமிர் தனத்த வல்லவன் படத்துலையே பார்த்தாச்சு. இதுல அழகா இருக்காங்க. வல்லவன்ல
எப்பிடி இருந்தாங்கன்னு தனியா வேற சொல்லனுமா? அது தான் பெரிய வித்தியாசம்.

பார்த்திபனின் நடிப்பு அபாரம். அவரின் அறிமுகத்தில் இருந்து இறுதி வரை ஆஹா மிக அற்புதம். எதுக்காக ஆண்ட்ரியா? இப்போது வரை புரியவில்லை.

கார்த்தி என் மச்சானோட தம்பியா இருந்துகிட்டு இந்த படத்துக்காக இத்தன நாட்களை வீணாக்கிட்டார். அது செல்வாவை நம்பி என்றால் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

கதை புரியவில்லை என்று நிறைய பேர் சொல்லிட்டாங்க. புரியாம போக அப்படி எதுவும் இல்லையே. அதுவும் இல்லாமல் அந்த கொடுமையான காட்சிகள் எல்லாம் தெள்ள தெளிவாக அவர் எதை பற்றி சொல்கிறார் என்று தெரிகிறதே. எனக்கு அந்த காட்சிகளை பார்த்தப்போ ஏன் கற்பனைன்னு போட்டாங்கன்னு தோணுச்சு?

பாடல்கள் எல்லாம் ரிலீஸ் ஆனப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சது. பாடல்கள் பிடிக்காத என் தோழிகளிடம் படம் வரட்டும் பாரு, கண்டிப்பா நல்லா படமாக்கி இருப்பார் செல்வான்னு சொன்னதும் தப்பா போச்சு. ஒன் மேல ஆசை தான் பாட்டு மட்டும் பார்க்க ஆறுதல்.

பின் பாதியில் சில இடங்களில் எனக்கு G.V. பிரகாஷிடம் கொஞ்சம் நேரம் நிறுத்துப்பா, முடியல என்று சொல்லணும் போல ஆய்டுச்சு.

ரீமாவின் virgin செக்கப், மனம் பிறழ்ந்து நடிக்கும் காட்சி, பார்த்திபனின் முடிவு என ஒவ்வொன்றிலும் இது என் படம் என்று செல்வா சொல்வது தெரிகிறது. பாலாவும் செல்வாவும் இந்த மாதிரி காட்சிகளை எடுப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நான் நினைப்பதுண்டு. மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

ஆனால் இத்தனையையும் மீறி அந்த நடராஜர் நிழல், போர்கள காட்சிகள்ன்னு நல்ல விசயங்கள் இருக்கின்றன. என்ன ஒரு creativity, அட என்று சொல்ல வைத்தது அந்த நடராஜர் நிழல் காட்சி. போர்கள காட்சியில எல்லோரும் சேர்ந்து நின்னு தாக்கும் இடத்தில் அதகளம் பண்ணி இருக்கார். அதே போல எல்லோரும் சொல்வது போல் எனக்கு வன்முறைகள் அதிகம் இருப்பதாக தெரியவில்லை. கதைப்படி பார்த்தால் சரியான படி தான் கொடுத்திருக்கிறார்.

செல்வா எனக்கு பிடிக்காது, இது செல்வாவோட படம் அப்பிடிங்கிற என்னோட எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு தான் இந்த படம் பார்த்தேன். 7G, காதல் கொண்டேன் பார்த்த பிறகு இருந்த கடுப்பு இப்போது இல்லை. ஆனால் படம் அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போல் ஆகி விட்டது. என்னை பொறுத்த வரை, மூன்று இல்லை இன்னும் மூன்று வருடங்கள் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை நேர்த்தியாக கொடுத்திருக்கலாம்.

நேத்து இந்த படத்தை பார்த்து விட்டு அந்த நடராஜர் நிழல் மற்றும் போர் காட்சிகளை நினைத்து எந்த அளவில் பிரம்மிப்பில் இருக்கின்றேனோ அதே போன்று ஒரு வித எரிச்சலையும் கொடுத்து விட்டது இது உலக படத்திற்கான முயற்சி என்ற வார்த்தைகள்.

முயற்சிகளை தட்டி கொடுத்து பாராட்ட வேண்டும், உண்மை தான், ஆனால் இத்தனை விசயங்களை பார்த்து விட்டு இது தான் தமிழ் படத்துக்கு மிக பெரிய மாற்றம், லாஜிக் பார்க்க கூடாது அப்படி இப்படி என்று மறுபடியும் என்கூட சண்டை போடணும்னா வாங்க போடலாம் :)

பின் குறிப்புகள்:
1. இந்த படத்துல பாட்டை நல்லா படமாக்கி இருப்பார்னு சொல்லி வாங்கி கட்டிகிட்டேன். ஆனா தல உங்கள, உங்க அசல் படத்த நம்பி நான் பெட் கட்டி இருக்கேன். நமக்கு புது முயற்சி, உலக படம்லாம் வேணாம் தல. அசல் படம் என் முதல (பெட் கட்டி தொலைச்சிட்டேன்) மோசம் பண்ணாம வந்துச்சுனா போதும் தல.

2. அசல் படம் ஒரு வேலை நல்லா இல்லேன்னா வேட்டைக்காரன் என்ற வார்த்தையை அசல் என்ற வார்த்தையாலும், விஜய் என்ற வார்த்தையை தல என்ற வார்த்தையாலும் replace பண்ணி அனுப்ப நெறைய மெசேஜ் ரெடியா வைச்சிருக்காங்க. ப்ளீஸ் தல ...

3. அசல் படம் நல்லா இருந்தா மட்டும் Synapse இல் விமர்சனம் வரும். இல்லேன்னா ப்ரியா அக்கா அத கண்டுக்காம விட்ருவாங்க.

Friday, January 8, 2010

3 idiots - மூவரின் பார்வையில்

அவதார் அலை ஓய்வதற்குள் அமீரின் அலை அடிக்க தொடங்கியது. ஹிந்தி தெரியாது என்றாலும் என் தோழியின் நச்சரிப்பால் "dil chahta hai" மற்றும் "tare zameen par" பார்த்து விட்டு (sub title ஓட) அமீர்கானின் ரசிகையாகி விட்ட எனக்கு 3 idiots பார்க்க வேண்டும் என்ற ஆவல். ஹிந்தி தெரியாது என்றாலும் அமீரை மட்டுமாவது பார்த்து விட்டு வரலாம் என்று தோன்ற, five point someone ஏற்கனவே படித்திருப்பதால் கதை ஓரளவு புரியும் என்ற எண்ணம் துணை நிற்க, நான் நின்றது தியேட்டரில். அதிர்ஷ்ட தேவதை கண்ணை திறக்க படம் sub title உடன் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்து விட்டு வந்து நான் முதலில் படித்த Review பரிசல்காரன் அவர்கள் எழுதியது. அதன் பிறகு எங்கு பார்த்தாலும் 3 idiots தான். அதிலும் உச்சகட்டமாக யூத்புல் விகடனின் "குட் ப்ளாக்ஸ்" வரிசையில் இடம் பெற்ற ஐந்துமே 3 idiots review தான்.

பத்துக்கும் மேற்பட்ட review படித்தாலும், என் மனதில் நின்ற மூன்று review இங்கே.கிரி என்பவரால் எழுத பட்ட விமர்சனம். விகடனின் "குட் ப்ளாக்ஸ்" வரிசையில் இதுவும் ஒன்று. அமீரின் ஆதிக்கம், போமனின் கண்டிப்பு, கரீனாவின் வாய்ஸ் மாடுலேஷன், ஷர்மானின் ஆடைகள் என்று அடித்து ஆடி இருக்கிறார்.

அமீர் பற்றிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது, ஆனால் அதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை என்றும், குழந்தைகளின் விருப்பங்களுக்கு தடையாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது, மாணவர்களை இயந்திரம் போல நடத்தக்கூடாது என்பது நல்ல விசயமாக இருந்தாலும் இது அனைத்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்துமா! என்று தெரியவில்லை குறிப்பாக இந்தியாவில். ஒரு சிலர் பெற்றோரின் வழிகாட்டுதலாலே நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள், ஒரு சிலர் தன் விருப்பமாக செய்வதாக நினைத்து ஒன்றுமில்லாமல் போய் இருக்கிறார்கள் என்றும் கூறும் இவரின் கருத்துடன் எனது கருத்தும் ஒத்து போகிறது.

கரீனாவின் சகோதரிக்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் கண்ணீர் வந்து விட்டதாக எழுதி இருக்கிறார். ஆனால் எனக்கு நீங்க எடுக்குறீங்களா இல்ல நான் வரட்டுமா என்ற சொல்லும் அளவுக்கு இழுத்து விட்டது.

எது எப்படியோ நான் படித்த விமர்சனங்களில் எனக்கு பிடித்த ஒரு விமர்சனம்.


ஆளாளுக்கு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என எழுதி கொண்டிருக்க இவர் பதிவை படித்து விட்டு இப்பிடி கூட ஒரு கண்ணோட்டம் என்று நான் நினைத்தேன்.

சுருக்கமாக சொல்லணும்னா As per everyone "They are right. the system must change". but for her "System is right. we need to change"

சதுர் ராமலிங்கம் சொல்றதா இருந்தா As per everyone "Engineering college is very unrealistic with very tough subjects, strict teachers and deadly exams" but for her "We have to be serious with science. If we feel it boring,it is because we don't know how to love the subject. so the problem is with us and not the education system.!"

எனக்கு ஒரு சில கருத்துகள் இருந்தாலும் உங்களின் பார்வையில் இந்த பதிவு எப்பிடி இருக்கிறது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)

நான் மிகவும் எதிர் பார்த்தது இவருடைய பார்வையில் 3 idiots. தனது 99 வது பதிவாக 2009 வருடத்தை மிக அருமையாக முடித்து வைத்த ஒரு படத்தின் விமர்சனத்தை, மிக அழகாக  கொடுத்திருக்கிறார்.

"Sorry Rancho, you were noway close to Aakash Malhotra" என்று அமீரையே கொஞ்சம் காலி செய்து விட்டார்.

கரீனா, மாதவன், போமன், ஷர்மான், சதுர் ராமலிங்கம் என்று ஒவ்வொருவரையும் அவருக்கே உரிய பாணியில் விமர்சித்து விட்டார்.

இவர் எழுதினால் கண்டிப்பாக எழுதுவார் என்று நான் நினைத்திருந்த சில விஷயங்கள், "film is good not an excellent one, entertainer, sentiments மற்றும் ஷர்மானின் நடிப்பு". நினைத்தபடி கொடுத்திருக்கிறார்.

நான் எதிர்பார்க்காத விஷயங்கள் "இவரின் பார்வையில் சதுர் ராமலிங்கம் மற்றும் மாதவனின் நடிப்பு". சதுர் ராமலிங்கம் பற்றிய இவரின் எழுத்து என்னை அட போட வைத்தது.

நான் எதிர்பார்த்து இவர் சொல்லாத விஷயங்கள் "I QUIT காட்சி பற்றிய இவரின் கருத்து மற்றும் அமீர் படத்தையே மாற்றிய லாஜிக் சொதப்பல்"

இந்த விசயங்களை அவர் சொல்லாமல் விட்டாலும், முதலும் முடிவும் அவர் பாணியில் எழுதி என் முகத்தில் புன்னகை மலர வைத்ததோடு மட்டும் இல்லாமல், சபாஷ் அக்கா என்று சொல்லவும் வைத்து விட்டார்.
எனக்கு பிடித்த மிக மிக அருமையான விமர்சனம் இது.

பின்குறிப்பு:

1. வித்யாவின் பயம் பார்த்து மற்றவரும் பயந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது.

2. ஆளாளுக்கு தமிழில் ரீமேக் செய்தால் சூர்யாவை பரிந்துரை செய்ய, நான் என் மச்சானுக்கு ஜோடியா சமீராவை பரிந்துரை செய்கிறேன். சூர்யாவிற்கு சமீரா அக்கா மாதிரி இருப்பார் என்ற பின்னூட்டம் வேண்டாம் :)