Wednesday, December 2, 2009

ச்சும்மா...

என் கவிப்புலமை பற்றிய பதிவை படித்து விட்டு எனது பதிவிற்கு வலைச்சரத்தில் அறிமுகம் கொடுத்த தாரணி பிரியா மேடம்க்கு மிக்க நன்றி.

என்னை சிறுகதை எழுத சொல்லி ரொம்ப நாளா நச்சரித்து கொண்டிருந்த நண்பர் ஒருவர், அந்த கவிப்புலமை பதிவை படித்து விட்டு அப்பிடி சொல்லுவதை நிறுத்தி கொண்டார். நிறுத்தி கொண்டதோடு மட்டும் இல்லாமல் ஒரு ஒன் லைன் சொல்லு, அத வச்சு நானே கதை எழுதுறேன், நீ எழுதலன்னா பரவாயில்லை என்று கேட்டார்.

"நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று நான் சொல்ல, கவிப்புலமை பதிவை படிச்சிட்டு துப்பினத விட கொஞ்சம் அதிகமா தான் துப்பிட்டாங்க. இருந்தாலும் இந்த மாதிரி நாலு ஐடியா குடுத்து கதை எழுதி வாங்காம விடுறது இல்லன்னு நான் ஒரு முடிவுல இருக்கேன். சிறுகதைன்னு சொல்லி நான் இன்னும் நாலு பதிவு போடலாம்ல.

-----------------------------------------------------------------------------

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நான் பதிவுகளை படிக்க ஆரம்பித்த பொழுது இவர்கள் எழுதியதற்கும் இப்போது இவர்கள் எழுதி கொண்டு இருப்பதற்கும் எத்தனை மாற்றம். நல்ல ஒரு முன்னேற்றம் என்று என் நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவரும் ஆமாம் என்று ஆமோதித்த அந்த இருவர் - ப்ரியா கதிரவன் மற்றும் நர்சிம்.

-----------------------------------------------------------------------------

FTII Students "Hostel" அப்பிடின்னு ஒரு 10 min short film எடுத்துருக்காங்க, நல்லா இருக்கு பாருன்னு ஒரு மகாராசி லிங்க் அனுப்பி இருந்தாங்க. Hostel ல நடந்த ஒரு உண்மையான சம்பவம் அப்பிடின்னு சொல்லி வேற பார்க்க சொன்னங்க. நைட்ல பார்த்துட்டு பயந்துடாதீங்கன்னு மெயில்ல போட்டிருந்த ஒரு பின் குறிப்ப நைட் ஒரு மணிக்கு short film பார்த்துட்டு தான் படிச்சேன். படம் பார்த்துட்டு எரிச்சலானத விட அந்த குறிப்ப பார்த்துட்டு இன்னும் எரிச்சல் ஆச்சு. அந்த கிளைமாக்ஸ்ல அந்த பொண்ணு இப்பிடி ரியாக்ட் பண்ற அளவு ஒன்னும் பெருசா எதுவும் நடக்கல (என்னை பொறுத்த வரை). ஒரு பத்து நிமிஷம் தான். நீங்களும் பாருங்க.

Part 1 - http://www.youtube.com/watch?v=oZS31xylr-A
Part 2 - http://www.youtube.com/watch?v=WUX7x10pBdw&feature=related

இந்த கதைய பார்த்துட்டு ஒருத்தருக்கு சாட்ல கஷ்டப்பட்டு முழு ஸ்டோரிய டைப் பண்ணினா ஏதோ காமெடி கதை சொன்ன மாதிரி ஹா ஹா ஹான்னு சிரிச்சிட்டு போய்ட்டாங்க :(

-----------------------------------------------------------------------------

என் மச்சான் சூர்யாவை நம்பி ஆதவன் படம் பார்த்தேன். ஏதோ அயன் -2 பார்த்த மாதிரி இருந்தது. சூர்யாக்கு என்ன ஆச்சு. ஏன் இப்பிடி? வடிவேலு இல்லனா இந்த படம் ஒன்னும் இல்ல. அதுவும் "The Children of Heaven" பார்த்த உடனே இந்த படத்த பார்த்தேன். என் நிலைமைய யோசிச்சு பாருங்க :( இந்த படத்த பார்த்துட்டு என் தோழி அடித்த கமெண்ட் "இத பார்த்ததுக்கு நான் தொங்கணும்"

-----------------------------------------------------------------------------

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் மோட்டார் விகடன் சூப்பரோ சூப்பர்.

367 கிலோ எடையுள்ள TRIUMPH ROCKET III Roadster பைக் பற்றியும் (2299 சிசி இன்ஜின்.ஒரே ஒரு தடவையாவது இந்த மாதிரி பைக்ல போகணும்.ஹ்ம்ம்.நீங்க இத வாங்கி இந்தியா கொண்டு வர 20 லட்சம் தான்), பெங்களூரில் நடந்த ஆட்டோ ஷோ, கார் பராமரிப்பு விஷயங்கள், 2010 இல் வர போகும் கார்களை பற்றிய அலசல், சிம்பு ஒரு கோடி கொடுத்து ஒரு வருடம் காத்திருந்து வாங்கிய பிஎம்-டபிள்யூ எக்ஸ்-6 கார் (இது எனக்கு ரொம்ப முக்கியமான்னு திட்டுறது நல்லா கேட்குது) என்று நெறைய நல்ல விஷயங்கள்.

ஆனால் படிக்கும் போது சிந்திக்க வைத்த ஒரு விஷயம் இந்த மாத மோட்டார் விகடனில் இருக்கு.

எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை? என்ற தலைப்பில் வந்திருந்த செய்தி
"1988-ம் ஆண்டே இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தது என்றாலும், இப்போதுதான் இந்த நடவடிக்கை இறுதி வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டு ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால், பெர்மிட் இல்லாமல் ஓட்டினால், சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் (எத்தன பேரு சீட் பெல்ட் போடுறோம் :(), குடித்து விட்டு ஓட்டினால் என்று பல ஓட்டினால்களுக்கு அதிகமாக்கப்பட்ட அபராத தொகை பற்றிய செய்திகள்."
அபராதங்களை அதிகமாக்கினால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட போவதில்லை. அது நம்ம கைல தான் இருக்கு.

மோட்டார் விகடன் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது என்றாலும் நாணயம் விகடன் ஏமாற்றுகிறது.

ஆனால் புத்தகத்தை கையில் பிடித்து படிக்கும் சந்தோசத்தை இந்த ஆன்லைன் விகடன் (விகடன் மட்டும் இல்லை. எந்த ஒரு e-book க்கும் தான்) கொடுப்பதில்லை.

14 comments:

கணேஷ் said...

நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்//

இந்த ஒன்லைன், நல்லாத் தான் இருக்கு :) :)

அந்த HOSTEL குறும்படம், என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை.

ஒரு கோடி ரூபாய் கார், இது எனக்கு ரொம்ப முக்கியமா?????

அபராதங்களை அதிகமாக்கினால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட போவதில்லை. அது நம்ம கைல தான் இருக்கு.//

:) :) :)

வித்யா said...

குறும்படம் பார்த்துடறேன்:)

Truth said...

short film - நல்லா எடுத்திருக்காங்க.

விக்னேஷ்வரி said...

உங்க கவிப்புலமை தான் எனக்குத் தெரியுமே.

இன்னும் ஒன்றரை வருஷம் கழிச்சு உங்க பேரை நாங்க சொல்ற மாதிரி எழுத முயற்சி பண்ணுங்க ராஜி.

ஹாஹாஹா...

தொங்கிட்டாங்களா....

உங்கள் பரிந்துரையின் பேரில் மோட்டார் விகடன் வாங்க போறேன். படிச்சிட்டு சொல்றேங்க.

MAHA said...

:-))))))))))

குறும்ப‌ன் said...

//என் தோழி அடித்த கமெண்ட் "இத பார்த்ததுக்கு நான் தொங்கணும்//

இதுக்கேவா? உங்க‌ தோழி "ஏக‌ன்", "குருவி", "வில்லு"லாம் பாத்துருக்க‌மாட்டாங்க‌ன்னு ந‌ம்ப‌றேன்

த‌ள‌ப‌தி ப‌டங்க‌ள‌ ம‌ட்டும் சொன்னா, த‌ல‌ ர‌சிக‌னான்னு ட‌வுட் ஆகிடுறாங்க‌. அதான் "ஏக‌ன்"ன‌ சேத்துட்டேன். இப்போ மீ த‌ எஸ்கேப்பு!

Karthik said...

அயன் கூட பார்க்காம ஆதவன் போனேன். :( :(

kanagu said...

மோட்டார் விகடன் எல்லாம் படிக்கிறது இல்லீங்க... நமக்கும் அதுக்கும் ஆகல..

ஒன்லி ஆனந்த விகடனின் சில பக்கங்கள்..

அப்புறம் ஆதவன் எல்லாம் போய் நல்லாவே மொக்க வாங்கிட்டு வந்தேன்... ஏங்க உங்க மச்சான் இப்ப்டிபட்ட படங்கள்ல நடிக்கிறாரு??? ;)

butterfly Surya said...

அதுவும் "The Children of Heaven" பார்த்த உடனே இந்த படத்த பார்த்தேன். என் நிலைமைய யோசிச்சு பாருங்க :( ////

ரொம்ப பாவம்...

ரசித்தேன். அருமை.

வாழ்த்துகள்.

நாணயன் விகடன்ல என்ன எதிர்பார்தீர்கள்..? You need stock market tips..??

Princess said...

புத்தகம் போல மென்பொருள் வருமா பின்ன!!


-பதுமை.

நட்புடன் ஜமால் said...

நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்]]

நிதர்சணம்.

Children of Heaven - நம்ம மக்கள் இது போல் எடுக்கமாட்டாங்களான்னு இன்னும் ஏக்கத்துடன் ...

அண்ணாமலையான் said...

hai am new 2 ur blog. u hv done a marvelous writing . keep going. if u hav time pls be visit my blog . all da best
thanku

Rajalakshmi Pakkirisamy said...

THANKS EVERYONE :)

SanjaiGandhi™ said...

ஆமாமா.. ப்ரியா என் பேவரிட் ப்ளாகர்.. ரொம்ப நல்லா எழுதறாங்க..