Friday, October 2, 2009

Dialer Tone!!!

"ஜில்லென்று ஒரு காதல்..." என்று தன்வி பாட ஆரம்பிக்கும் முன் call ஐ கட் செய்து விட்டார்கள்.

சே என்று திட்டி கொண்டே மொபைலை பார்க்க எனது தோழி ஒருத்தி missed call கொடுத்திருந்தாள்.

அவளை திரும்பி கூப்பிட்ட உடனே திட்ட ஆரம்பித்து விட்டேன் "நீ போன் பண்ணினா நான் அட்டென்ட் பண்ண மாட்டேன். திரும்பி கூப்பிடுவேன்னு தெரியும்ல. அப்புறம் என்ன. ஒரு நாலஞ்சு ரிங் விட வேண்டியது தானே"

"ஏன் கத்துற. என்ன ஆச்சு இப்போ"
"பின்ன .. எப்போதும் மியூசிக் மட்டும் தான் கேட்க முடியுது. தன்வி வாய்ஸ்ல "JOK" song கேட்கவே முடிய மாட்டேங்குது"

"நீ திருந்த மாட்டியா. நல்ல வேலை நீ அங்க இருக்கிறதுனால dialer tone/hello tune அப்பிடின்னு எங்க உயிரை வாங்கல."

"ஆமா. ரொம்ப கவலையா இருக்கு. கூடிய சீக்கிரம் இந்தியா வருவோம்ல. அதுவும் இல்லாம என் சென்னை நம்பர் deactivate பண்ணல. அம்மா கிட்ட தான் இருக்கு. நான் டெய்லி dialer tone கேட்டுட்டு தான் இருக்கேன்."

"ஐயயோ"
"சரி உனக்கு ஒரு போட்டி. நான் என்னன்னா பாட்டுலாம் dialer tone ஆ வைச்சிருந்தேன்னு சொல்லு பார்க்கலாம்"

"போடி பொழப்பத்தவளே. ISD பேசிட்டு இருக்க. நியாபகம் வைச்சிக்கோ"
"எனக்கு அது தெரியும். நீ சொல்லு"

"போன் பண்ணி எப்பிடி இருக்க, friends எப்பிடி இருக்காங்க, உன் சென்னை எப்பிடி இருக்கு அப்பிடி எதுவும் கேட்காம, லூசு மாதிரி என்ன dialler டோன், அப்பிடி இப்பிடின்னு கேட்டுட்டு இருக்க"

"ஏய், சொல்லு .. நான் என்ன என்ன tone வைச்சிருந்தேன்னு"

என்னிடம் இருந்து தப்ப முடியாது என்று தெரிந்து கொண்டு"இரு யோசிச்சு சொல்றேன்... hmmmmmmmm
முதல்ல "நியூயார்க் நகரம்... அப்புறம் "என்னை தேடி காதல் ..... "
கொஞ்சம் யோசிச்சிட்டு "விழி மூடி யோசித்தால் ..."

"போடி லூசு.. நீ ஒரு song மறந்துட்ட.. மரியாதையா யோசிச்சு சொல்லு..
கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு "போடி. அவ்வளவு தான்."

"நல்லா யோசிடி"
"தெரியலடி . நீயே சொல்லி தொலை" அவள் குரலில் எரிச்சல். அதெல்லாம் கண்டுக்க முடியுமா. தொடைச்சி போட்டுட்டு சொன்னேனே

First dialer tone "Newyork nagarm.." அடுத்து "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..." அடுத்து "மாப்பிளைக்கு நிச்சயதர்த்தம் .." வைச்சிருந்தேன். அப்புறம் தான் "விழி மூடி யோசித்தால்... "

"மாப்பிளைக்கு நிச்சயதர்த்தம் ..." இது எந்த படம்?"அடி பாவி.. இது கூட தெரியலையா மக்கு மக்கு (எத்தன தடவை எனக்கு படம் தெரியலன்னு திட்டி இருப்பாங்க,.. ).. சரோஜா படம்.. நம்ம சின்ன திரை நட்சத்திரங்கள் ஆடுவாங்களே. நம்ம DD கூட வருவாளே. விஜய் யேசுதாஸ் பாடினது"

"அட ஆமா. மறந்து போச்சு....... நீ அங்க தனியா இருக்கே.. சரி பாவம் பொண்ணு பேசலாம்னு போன் பண்ணினா.. என் உயிரை இப்பிடியா வாங்குற.. இனி போன் பண்ணினா பார்த்துக்கோ."

"ஹலோ ஹலோ வெயிட்.. போன் பண்ணினா இல்ல.. missed call கொடுத்தா"
"உன்னை திருத்தவே முடியாதா"

"எதுக்கு திருத்தணும். எனக்கு என்ன குறைச்சல். சரி இன்னொரு போட்டி... "
"அம்மா தாயே இன்னைக்கு போதும். இன்னொரு நாள் பேசுறேன்.. வைக்கிறேன்.. bye"
"bye" (ஐயோ எஸ் ஆயிட்டாளே. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்)

ஆனா எனக்கு தெரிஞ்ச நெறைய பேருக்கு dialer tone பிடிக்க மாட்டேங்குதே. ஏன்னு எனக்கு தெரியல. என் friends நெறைய பேரு "மாசம் முப்பது ரூபா வெட்டி செலவு" அப்பிடின்னு திட்டுவாங்க.

இன்னும் கொஞ்ச பேரு "வைக்கிறது தான் வைக்கிற. உனக்கு பிடிச்ச பாட்டு ஏன் வைக்கிற."
நாம தான் அறிவாளி ஆச்சே "எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி வைக்க முடியாது, அதுனால எனக்கு பிடிக்கிற மாதிரி வைச்சிருக்கேன்."

ஒரு முறை நம்ம "Project Lead" ஏதோ issue பத்தி பேசணும்னு ரொம்ப அவசரமாக கூப்பிட நம்ம மொபைல் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு... " என்று பாடி கொண்டே இருக்க.. மறுநாள் ஆபீஸில் issue பத்தி கூட பேசாமல், உன் பர்சனல் calls க்கு மட்டும் dialer tone வைக்க வேண்டியது தானே, எதுக்கு எல்லோருக்கும் வைச்சிருக்க என்று அட்வைஸ் பண்ண... எருமை மாட்டு மேல் மழை பெய்த reaction தான்..

ஒரு பக்கம் ஆளுக்கு ஆள் இப்பிடி சொல்லி கொண்டிருக்க, எனக்கு சந்தோசத்தை கொடுத்த ஒரு அம்மணி இருக்காங்க.

முக்கியமாக ஒரு வேலை ஆபிசில் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு கால்.. ஒரு நாலைந்து ரிங் விட்டு எடுக்க
"மேடம், நான் **** bank ல இருந்து பேசுறேன். இப்போ லோன் எடுத்தா 14% interest தான். உங்களுக்கு டைம் இருக்கா. பேசலாமா."
"நான் ஏற்கனவே லோன் வைச்சிருக்கேன் மேடம். வேண்டாம்."

"ஓகே மேடம். ஒரு question. தப்பா நினைக்காதீங்க."
"கேளுங்க"

"இந்த dialer tone எந்த படம்?"
மனதிற்குள் மகிழ்ச்சி போங்க "இது படம் இல்லங்க. விஜய் டிவில "காதலிக்க நேரமில்லை" அப்பிடின்னு ஒரு சீரியல். அந்த சீரியல் டைட்டில் சாங்."
"first line ஒரு முறை சொல்ல முடியுமா"
"என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு.. .."

"மேடம், நான் திரும்பி கால் பண்ணி ஒரே ஒரு தடவ இந்த சாங் கேட்டுகிறேன். நீங்க என் கால் அட்டென்ட் பண்ணாதீங்க"

"ஓகே. no problem. நான் ஒரு question கேட்கட்டுமா"
"கேளுங்க மேடம்"
"உங்க பேரு?"
"ப்ரியா"

சத்தியமாக நான் பேசிய ப்ரியாவிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் கூகிள் பண்ணி பதில் சொல்லும் மக்களே, இந்த "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..." என்ற பாடலை பாடியது யார் என்று கண்டுபிடித்து தாருங்களேன். எப்போதும் பாட்டு பற்றி கேள்வி கேட்கும் ப்ரியா கூட பதில் சொல்லலாம்.

நான் உன்ன post போடுன்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். நானே ஒரு மொக்கைன்னா என்ன விட மொக்கையா இப்பிடி ஒரு போஸ்ட் போடுவன்னு தெரிஞ்சிருந்தா போஸ்ட் போடுன்னே சொல்லி இருக்க மாட்டேன். நீ எந்த dialer tone வைச்சிருந்தா எங்களுக்கு என்ன?

"ஹா ஹா ஹா.. அத பத்தி எனக்கு கவலை இல்ல. நீ ஏதாவது எழுத சொன்ன.. நானும் எழுதிட்டேன். ஒழுங்கு மரியாதையா படிச்சிட்டு கமெண்ட் போடு."

hmmmmmmmmm சரி........ அடுத்து என்ன பாட்டு வைக்கலாம்?

21 comments:

SanjaiGandhi said...

//நான் உன்ன post போடுன்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். நானே ஒரு மொக்கைன்னா என்ன விட மொக்கையா இப்பிடி ஒரு போஸ்ட் போடுவன்னு தெரிஞ்சிருந்தா போஸ்ட் போடுன்னே சொல்லி இருக்க மாட்டேன். நீ எந்த dialer tone வைச்சிருந்தா எங்களுக்கு என்ன?//

என் கமெண்டும் நீயே போட்டுட்டா நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்.. மொக்கை மகாராணி.. :)))

ஆனாலும் படிக்க இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.. சீக்கிறம் அடுத்த பதிவு எழுது...

SanjaiGandhi said...

என் டயலர் ட்யூன் தெரியும்ல..

ஒரு முகமோ இரு முகமோ
முழு முகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ.. :))

இவன் விழிகள் குறிதானோ
கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ..

எப்புடீஈஈஈஈஈ? :))

SanjaiGandhi said...

//இந்த "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..." என்ற பாடலை பாடியது யார் என்று கண்டுபிடித்து தாருங்களேன். எப்போதும் பாட்டு பற்றி கேள்வி கேட்கும் ப்ரியா கூட பதில் சொல்லலாம்.//

சப்பை மேட்டர்.. இதுகெல்லாம் ப்ரியா மாதிரி உலகமகா அறிவு ஜீவி எதுக்கு? என்னை மாதிரி மக்கு பையன் போதும்..

இசை : விஜய் ஆண்டனி
பாடல் : தேன்மொழிதாஸ்
பாடியவர் : சங்கீதா

இது என்னோட ரொம்ப ஃபேவரிட் பாட்டு.. ஆனா இதை நீ காலர் ட்யூனா வச்சிருக்கிறது தான் சகிச்சிக்க முடியலை.. :(

R.Gopi said...

அப்பா...எவ்ளோ நாள் கழிச்சு வந்து இருக்கீங்க.... வாங்க... நலம் நலம் அறிய ஆவல்...

ஆஹா... ஒரு டயல் டோன் வச்சு... இவ்ளோ டெர்ரர் பண்ண முடியுமா.....

யப்பா....ராஜி.... என்னமோ நெனச்சு படிக்க வந்தேன்... உள்ள வந்தா, ஒரு பெரிய டெர்ரர் எபிசோட் ரெடியா இருந்தது....

Princess said...

hi friend,

wow nice.. I thot it was a story but then reality mix panni azhaga ezhuthi irukeenga. naan kooda caller tune priyai.. kitathata intha list songs than naanum vechi irunthen except saroja song and ennai thedi kadhal paatu kedakala ;)

keep writing,
-Aiz.

கார்த்திக் said...

// "மாசம் முப்பது ரூபா வெட்டி செலவு" அப்பிடின்னு திட்டுவாங்க.//

இது கொஞ்சம் அதிகம் தான்.
கம்மிபண்ணினா நல்லாருக்கும்
ஒரு பத்து ருவா வெக்கலாம்.

செல்போன் வெச்சிருக்கவங்க இத பத்தி பேசலாம் இல்லதவங்க என்ன செய்யுரது
வியாபாரகாந்தமே ஒரு யோசன சொல்லுங்க.
ஆனலும் உங்க காலர் டோன் ரொம்ப டெரரா இருக்கு தல.

ப்ரியா said...

Rajee,
Good one.

//SanjaiGandhi said...
என் டயலர் ட்யூன் தெரியும்ல..
....
....
....

"வலி அறியாது இவன் தேகமோ.."
//
எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

Sanjay sir, இது அதானுங்களா?

இய‌ற்கை said...

Really fantastic writing..keep it up:-)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Sanjay,

//எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

Sanjay sir, இது அதானுங்களா?//

நல்லா வாங்கி கட்டிக்கோ.. உனக்கு நல்லா வேணும்..

@ R.Gopi,

வாங்க ஸார். நான் ரொம்ப நல்லா இருக்கேன். உங்க பின்னூட்டதிற்கு நன்றி.

@ Princess,
JOK and என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு - என்னை அறியாமல் என்னை புன்னகை செய்ய வைக்கும் பாடல்கள்.

@கார்த்திக்,

உங்கள் வருகைக்கு நன்றி.
//செல்போன் வெச்சிருக்கவங்க இத பத்தி பேசலாம் இல்லதவங்க என்ன செய்யுரது//

ஓசி போன்ல call பண்ணி மத்த dialer tone கேட்க வேண்டியது தான்

@ இய‌ற்கை,

Welcome madam.
:)
சஞ்சய் கூட சேர்ந்து எதுவும் நக்கல் பண்ணலையே.

SanjaiGandhi said...

////எவ்வளோ அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

Sanjay sir, இது அதானுங்களா?//

நல்லா வாங்கி கட்டிக்கோ.. உனக்கு நல்லா வேணும்.. //

ப்ரியா யக்கா, அந்த வரியை டைப் பண்ணும் போதே நினைச்சேன்.. சூடு சொரணை இல்லைனு எப்டி எல்லாம் சொல்றான் பாருன்னு யாராச்சும் சொல்லிடுவாங்கன்னு.. நல்ல வேளை.. டேமேஜ் கம்மி தான்.. டாங்க்ஸ்கா.. :))

அக்காவும் தங்கச்சியும் சேர்த்து வச்சி நக்கல் அடிக்கிறிங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி..

எலேய் பிரியா.. அதென்ன சஞ்சய் சர்? கொழுப்பா?

SanjaiGandhi said...

//Rajee,
Good one.//

அதென்ன ப்ரியா ராஜிக்கு 2 ஈ? :))
நியூமராலஜியா இல்ல எதும் சிம்பாலிக்கா சொல்றிங்களா? எதுவா இருந்தாலும் நேரடியாவே சொல்லுங்க.. இந்தம்மாவுக்கு அதெல்லாம் ஒன்னும் புரியாது.. :))

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

அக்கா வரட்டும் உன்ன கவனிச்சிக்கிறேன்..

ராஜி. aiz யாராவது சஞ்சய என்னனு கேளுங்களேன்...

////Rajee,
Good one.//

அதென்ன ப்ரியா ராஜிக்கு 2 ஈ? :))//

நீ Raji அப்பிடின்னு கூப்பிடுற... உன்ன மாதிரி கூப்பிட கூடாதுன்னு rajee அப்பிடின்னு கூப்பிடுறாங்க :)

SanjaiGandhi said...
This comment has been removed by the author.
SanjaiGandhi said...
This comment has been removed by the author.
kanagu said...

dialer tome vaikrathum illama atha nyabaga paduthi solla solreengale...

periya terror than neenga...

/*போடி பொழப்பத்தவளே. */

epdi ellathayum nyabagam vachi correct ah apdiye adikreenga... sema memorynga ungalukku :D :D

ச.பிரேம்குமார் said...

என் நண்பன் ஒருத்தன் ‘டேய்! கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா’ பாட்ட வச்சிருந்தான். அவுங்க மேனேஜர் ஒரு நாள் அவனும் பண்ணிட்டு ரொம்ப டேமேஜ் ஆயிட்டாங்க ;)

ச.பிரேம்குமார் said...

//என்னைத்தேடி காதல் என்னும் வார்த்தை அனுப்பு’ பாட்டுக்கு என்னை மாதிரியே மேலும் பல ரசிகர்கள் இருப்பாங்கன்னு தெரியாம போச்சு ;)

சேம் பிஞ்சுங்கோ

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Kanagu,

//epdi ellathayum nyabagam vachi correct ah apdiye adikreenga... sema memorynga ungalukku //

:) :) :) ஆனா இது exam ல work out ஆனது இல்ல.

@ ச.பிரேம்குமார்,

//என்னைத்தேடி காதல் என்னும் வார்த்தை அனுப்பு’ பாட்டுக்கு என்னை மாதிரியே மேலும் பல ரசிகர்கள் இருப்பாங்கன்னு தெரியாம போச்சு ;)//

நான் மட்டும் இல்லங்க, என் பிரண்ட்ஸ் நிறைய பேரு இதுக்கு ரசிகைகள்/ரசிகர்கள் தான்.

Divyapriya said...

idhu enakkum romba pidicha paadal....music vijya antony nu theriyum...but paadinadhu yaarunnu theriyaadhu...
irundhaalum bank caller anubavam super :)

Divyapriya said...
This comment has been removed by the author.
இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Divyapriya,

Thanks for ur comments.
Sangeetha nu solranga. Enakkum sariya theriyala..