Friday, October 30, 2009

என்னத்த சொல்றது போங்க?

ஒரு ஐந்து குடும்பங்களுடன் நானும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தோம்.
அதில் இரு குடும்பத்தை சேர்ந்த ஒரே வயதை ஒத்த இரு குழந்தைகள் (ஒரு பொண்ணு,ஒரு பையன்) இருக்கிறார்கள் (2nd grade படிக்கிறார்கள்)

நாங்கள் வெளியில் செல்லும் போது இருவரும் ஒரே காரில் வருவதை விரும்புவார்கள். எப்போதும் நானும் அவர்கள் இருக்கும் காரில் தான் பயணம் செய்வேன்.

எங்கள் பயண நேரங்கள் முழுவதும் விளையாட்டில் தான் கழியும். அதுவும் எல்லாம் அறிவு பூர்வமா தான் விளையாடுவாங்க. நாம எதுனா சொன்னாலும் மதிக்க மாட்டாங்க. அதுவும் கொடுமைய பாருங்க. Word Building, Missing Letters, Rhyming words இப்பிடி தான். நீங்களே சொல்லுங்க... எனக்கும் இதுக்கும் என்னங்க சம்மந்தம். தப்பா சொன்னா மானம் வேற போய்டும். விளையாட்டில் இருந்து விலகவும் முடியாது. அதுவும் முதல் பயணத்தில் சொன்ன வார்த்தைகள அடுத்த பயணத்தில் use பண்ண கூடாது. கரெக்ட்டா நியாபகம் வச்சு "ஆன்ட்டி (இந்த கொடும வேற. ஆயிரம் தடவ சொல்லி கொடுக்கிறேன் அக்கான்னு கூப்பிட சொல்லி. அந்த குட்டிங்க கூட மதிக்க மாட்டேங்குது) போன தடவ நீங்க இந்த words சொல்லிடீங்க. வேற சொல்லுங்க.

நான் அவங்க வயசுக்கு தெருவுல தான் விளையாடி இருக்கேன். ஜோடி புறா, நாடு பிரித்தல், கில்லி, பாண்டி, நொண்டி இப்பிடி நெறைய. அதே மாதிரி வீட்டுக்குள் விளையாடினால் cards, பல்லாங்குழி, தாயம், இப்பிடி. நான் செஸ், கேரம்லாம் ஆறாவது ஏழாவது படிக்கும் போது தான் விளையாட ஆரம்பித்தேன். அதுல பெருசா விருப்பமும் இல்ல. நான் வெளியில விளையாடின ஒரு விளையாட்டு கூட இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது. ஹ்ம்ம் இத விடுங்க.

அன்றும் வழக்கம் போல் "ஆன்ட்டி Rhyming words விளையாடலாம்"

"எனக்கு தூக்கம் வருதும்மா. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்" (தப்பிக்க வேற வழி?)

"இல்ல ஆன்ட்டி, நீங்க வீட்டுல போய் தூங்கிக்கலாம். இப்போ கண்டிப்பா விளையாடுறோம்"

காரில் இருந்த எல்லோரிடமும் பேசி கடைசியாக வலுகட்டாயமாக என்னையும் சேர்த்து நான்கு பேர் ரெடி பண்ணினாங்க. அந்த குட்டி பொண்ணு,குட்டி பையன், நான், பையனோட அம்மா. பையனோட அப்பா கார்ல ஏறுன உடனே தூங்க ஆரம்பிச்சிட்டதால அவங்கள விட்டுடாங்க.

ஆரம்பமே நமக்கு தான் ஆப்பு.

ஆன்ட்டி ரெடியா?

ஹ்ம்ம். ரெடிமா.

"car"

"bar"

தப்பிச்சேன் என்று மனதிற்குள் சொல்லி கொண்டேன்.
ஒரு நான்கு ஐந்து சுற்று நடந்து முடிந்தது. நாங்க போட்ட சத்தத்துல தூங்கிட்டு இருந்த அந்த பையனோட அப்பா எழுந்தாச்சு. அவங்க அரைகுறை தூக்கத்தில் அமைதியா உக்காந்து நாங்க விளையாடுவதை பார்த்து கொண்டே வர என்னோட முறை இப்போது

ஆன்ட்டி, it is your turn now.. word is "Free"

நான் சொன்ன வார்த்தை "tree"

"ஏற்கனவே சொல்லியாச்சு ஆன்ட்டி. நீங்க வேற சொல்லுங்க"

இன்னும் இரண்டு மூன்று வார்த்தைகள் நான் சொல்ல அனைத்திற்கும் அவர்கள் கூறிய பதில் "ஏற்கனவே சொல்லியாச்சு ஆன்ட்டி. "

"வேற வழி இல்லை. யோசித்தே ஆக வேண்டும். அட போங்க குட்டிங்களா" என்று எண்ணி கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.

அரை குறை தூக்கத்தில் இருந்த அந்த பையனின் அப்பா, அந்த குட்டீஸ் சொன்ன வார்த்தையை சரியாக கவனிக்காமல் "code" என்றார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க சொல்றீங்க என்று கேட்க, அவர் என்னிடம் "road க்கு code"

road ஆ? அப்பிடி எப்போ சொன்னாங்க என்று நான் குழம்பி போய் உட்கார்ந்திருக்க.
road க்கு code அப்பிடின்னு சொன்னத குட்டீஸ் கவனிக்கல, code அப்பிடின்னு சொன்னத மட்டும் தான் கவனிச்சாங்க. அத கேட்டுட்டு அந்த குட்டி பொண்ணு சிரிக்க ஆரம்பிச்சிட்டா.

உடனே அந்த பையன் "Don't feel dad" என்று சொல்ல, எல்லோரும் அவனையே பார்க்க,மறுபடி அவன் "Dont feel dad" என்றான்.

ஒன்றும் புரியாமல் நானும், அவன் அப்பா அம்மாவும் விழித்திருக்க அவனே தொடர்ந்ந்தான்."எல்லோரும் சிரிக்கிறாங்கன்னு (குட்டி பொண்ணு மட்டும் தான் சிரிச்சா) கவலை படாதீங்க டாடி. You need more practice. that's it. Here after we both will play in home. Then you will come to know more words. I ll help you . Dont worry dad." என்று சொல்லி முடிக்க அவரின் முகத்தை பார்க்க வேண்டுமே ஐயோடா.

அதோடு முடியவில்லை. அந்த குட்டி பெண் தொடர்ந்தாள் "பார்க்கலாம் next time. நெறைய words கேட்குறேன். உங்க டாடிக்கு தெரியுதா என்று பார்க்கலாம்"

அவர்கள் இருவரும் ரொம்ப சீரியஸா பேசுவதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தோம்.

இப்போதும் நான் யோசித்து கொண்டிருக்கிறேன். அந்த குழந்தைகளின் வயதில் நான் இருந்த போது இப்பிடி எல்லாம் பேச தெரிந்திருக்கவில்லை. ஏன் இப்போதும் கூட?

இப்போது அவங்கள எங்க பார்த்தாலும் "என்னங்க, training எப்பிடி போகுது" என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது.

20 comments:

கணேஷ் said...

//கரெக்ட்டா நியாபகம் வச்சு "ஆன்ட்டி (இந்த கொடும வேற. ஆயிரம் தடவ சொல்லி கொடுக்கிறேன் அக்கான்னு கூப்பிட சொல்லி. அந்த குட்டிங்க கூட மதிக்க மாட்டேங்குது//


என்னத்த சொல்றது போங்க.. இந்த பதிவுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது, அந்த குட்டீஸ்களின் நேர்மை.

நானா இருந்தா பாட்டின்னு சொல்லி இருப்பேன். ஹி ஹி ஹி..

கணேஷ் said...

//அந்த குழந்தைகளின் வயதில் நான் இருந்த போது இப்பிடி எல்லாம் பேச தெரிந்திருக்கவில்லை. ஏன் இப்போதும் கூட?//

உங்களுக்கு ஹியூமர் சென்ஸ் நிறையவே இருக்கு. குட் காமெடி :) :) :)

அனுபவம் :( :( :(

Maddy said...

ஆண்டி ன்னு சொன்ன ஏன் இப்படி பொங்கணும்?? அக்கான்னு கூப்பிட்டு அவங்க அப்பா அம்மா வை சங்கட படுத்த வேண்டாம்ன்னு நினச்சி இருக்கலாம். அவங்க தான் அதி மேதவிங்கன்னு தெரியுதில்லே!! சப்போஸ் "சரி நான் உங்கள அக்கான்னு கூப்பிட்ட நீங்க எங்க அப்பாவை எப்படி கூபிடுவீங்கன்னு கேட்ட பதில் ரெடி-ஆ வச்சிக்கோ ராஜிக்கா!! நான் அக்கா ன்னு கூப்பிட்டேன், சந்தோசம் தானே!!

R.Gopi said...

இந்த கால குட்டீஸ் படு ஷார்ப்...

ஸோ, வீ ஷுட் ஆல்வேஸ் ஹாவ் அவர் ஓன் வே ஆஃப் "எஸ்கேப்"....

தியாவின் பேனா said...

குழந்தைகளிடம் வாய் குடுத்து மாட்டுறது பெரிய பாடுதான்

kanagu said...

வர வர பசங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறதே பெரிய வேல தான்..

/*ஆன்ட்டி (இந்த கொடும வேற. ஆயிரம் தடவ சொல்லி கொடுக்கிறேன் அக்கான்னு கூப்பிட சொல்லி. அந்த குட்டிங்க கூட மதிக்க மாட்டேங்குது)*/

குழந்தைங்க எவ்ளோ கத்து கொடுத்தாலும், பொய் சொல்லாதுங்க.. ;)

Sammy said...

பயங்கரமோ பயங்கர காமெடி பதிவு.

Truth said...

என்னங்க இது, இதெல்லாமா வெளியில சொல்லிகிட்டு இருப்பாங்க. வெவரமே இல்லாம வளந்திருக்கீங்க...

//Sammy said...
பயங்கரமோ பயங்கர காமெடி பதிவு

Sammy காமீடி கீமெடி பண்ணாதீங்க. பாவம் ஆன்டி

Princess said...

அறிவாளி பிள்ளைங்க தான் எப்பவுமே தோஸ்த்தா! பலே..

ப்ரியமானவள் said...

பெண்களே.. இதுவும் சரிதானே

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

SanjaiGandhi™ said...

:)

Rajalakshmi Pakkirisamy said...

@ கணேஷ்,

//நானா இருந்தா பாட்டின்னு சொல்லி இருப்பேன்//

யாரோ லூசு பையன்னு திட்டியும் ஹ்ம்ம்

@ Maddy,

//ராஜிக்கா!! நான் அக்கா ன்னு கூப்பிட்டேன்//

Ok thambi :)

@ R.Gopi,
//இந்த கால குட்டீஸ் படு ஷார்ப்...//

ரொம்பபபபபபப....

@ தியாவின் பேனா,

நன்றி

@ kanagu ,
//குழந்தைங்க எவ்ளோ கத்து கொடுத்தாலும், பொய் சொல்லாதுங்க.. ;)//

:( :(

@ Sammy,
:) :) :)

@ Truth,
//Sammy காமீடி கீமெடி பண்ணாதீங்க. பாவம் ஆன்டி//
வாங்க சார். ஆள காணோமேன்னு பார்த்தேன்

@ Princess,

//அறிவாளி பிள்ளைங்க தான் எப்பவுமே தோஸ்த்தா! பலே..//
நாம தான் அப்பிடி இல்ல. நம்ம தோஸ்துங்கலாவது அப்பிடி இருக்கட்டுமே

@ SanjaiGandhi,

:) :)

@ ப்ரியமானவள்,
உங்கள் பதிவுகளை படிக்கிறேன்

தாரணி பிரியா said...

hi neegalum bulb vangara groupa :) ok appa namma rendu perum ini friends sariya

Rajalakshmi Pakkirisamy said...

@ தாரணி பிரியா

//namma rendu perum ini friends sariya//

neenga sonna sari thala...

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நீங்க மாட்டினதை விட அவங்கப்பா மாட்டினது தான் கொடுமை. குறும்பு குட்டீஸ்.

இய‌ற்கை said...

/கரெக்ட்டா நியாபகம் வச்சு "ஆன்ட்டி (இந்த கொடும வேற. ஆயிரம் தடவ சொல்லி கொடுக்கிறேன் அக்கான்னு கூப்பிட சொல்லி. அந்த குட்டிங்க கூட மதிக்க மாட்டேங்குது) /


பூச்சாண்டின்னு பயப்படாம உங்களை ஆன்ட்டின்னு கூப்டறதே பெரிய விஷயம்.இதுல அக்கா வேறயா? ஓவராத் தெரியில?

இய‌ற்கை said...

/இப்போது அவங்கள எங்க பார்த்தாலும் "என்னங்க, training எப்பிடி போகுது" என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது. /

நீங்கெல்லாம் டிரெயின் பண்ணா கூடத் தேற மாட்டீங்கன்னுதான் அந்தப் பையன் அவங்க அப்பாவை மட்டும் டிரெயின் பண்றான்.இதுல நீங்க அவர கிண்டல் பண்றீங்களா? என்ன உலகமடா இது

MAHA said...

:))))))))))))))))))))))
by aunty

MAHA said...

cha bye auntynu podurathukku pathila by auntynu pottu tholachittene.

ennaikku enna achunu theriyala eppadi thappu thappa comment pottukkitte erukken

Mathu Krishna said...

so cute akka, but that "aunty" thing was realy funny!!!
;-)
Appo, Rajikka aunty aahitteengalaa?

Chinese'l a aunty'a "aayi"nnu solluvaanga, once oru kutty chinese ponnukku "hi,hello" solli summa kathaikka ponen, avanga amma udanaye chinese'la "aayi'kku hi sollu, hello sollu" endu enda maanatha kooru pottu vithuttaanga, chee, veruthe pochu!!
ithellaam namakku thevaiyaa??
:))