Thursday, October 22, 2009

மீண்டும் வேண்டும்

Chennai Hostel TV hall - ஒரு பத்து பேரு உட்கார்ந்து சன் மியூசிக் பார்த்துட்டு இருந்தோம். ரூம்ல இருந்து டிவி ஹால்க்கு என் தோழி ஒருத்தி வந்தா.அந்த நேரம் பார்த்து "அடியே கொல்லுதே" பாடல்.

அவள் வந்து உட்காரும் முன், என் பக்கத்துல இருந்து ஒருத்தி "டீ, சவுண்ட் வைச்சிட்டு வா" என்று அவளிடம் சொல்ல அவள் சவுண்ட் அதிகபடுத்துவதற்கு பதில், சேனலை மாற்றி விட்டாள்.

"உனக்கு என்ன மாலைக்கண் நோயா. ஏன் டீ. ஒரு சவுண்ட் அதிகமாக்க தெரியாதா"

நான் "ஏன்டீ தெரியாம சேனல் மாத்தினதுக்கு இப்பிடி பொங்குற?"

உனக்கு என்ன தெரியும் என்று அசிங்கமா திட்ட ஆரம்பிக்க, நான் நம்ம மச்சான் பக்கம் (நம்ம சூர்யா தான்) கவனத்தை திருப்பி விட்டேன்.

சேனலை சரியாக வைத்து விட்டு என் இன்னொரு பக்கத்தில் வந்து அமர்ந்த அவள் "என்ன ராஜி, விசா வந்துடுச்சாம். எப்போ கிளம்புற"

"ஹ்ம்ம் வந்துடுச்சு. ஆனா இன்னும் date தெரியல. கிளம்புற வரை கண்டிப்பா சொல்ல முடியாது. பார்க்கலாம்"

"நான் கூட switzerland பார்க்கணும்."

"அடிப்பாவி. நானே US போறேன். என்கிட்டே எதுக்கு switzerland பத்தி சொல்ற"

"இல்ல சும்மா சொன்னேன்"

சவுண்ட் அதிகமா வைக்க சொன்ன தோழி இவளை பார்த்து "ஒரு bet டீ. நீ மட்டும் switzerland அ கரெக்ட்டா spell பண்ணிடு. நீ அங்க போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்."

அப்பிடியா என்று சொல்லி கொண்டே இவள் ஆரம்பித்தாள் "சு" "வி" "ட்" "ச' "ர்" "லா" "ந்" "து"

கேட்டவளின் முகத்தை பார்க்கணுமே. "அடிங்க ... ஒழுங்கா மரியாதையா இங்கிலீஷ்ல சொல்லு."

என்ன நினைத்தாலோ அவள் தெரியவில்லை "எனக்கு மாலை கண் நோய் மாதிரியே, மாலை மொழி (??!!??) நோயும் இருக்கு. சாயந்தரம் ஆறு மணியில இருந்து காலையில எட்டு மணி வரைக்கும் இங்கிலீஷ் பேசினாலும் புரியாது. பேசவும் தெரியாது. அதுனால நீ morning 8 - eve 6 குள்ள கேளு. சொல்றேன்."

கேட்ட அம்மணி பீட்டர் அம்மணி. ஒண்ணும் சொல்ல முடியல அவளால. அன்னைல இருந்து கொஞ்சம் பீட்டர் குறைந்து இருக்கு.
--------------------------------------------
நான் டிவி ஹாலில் இருந்து எழுந்து உள்ளே சென்றேன் சாப்பிட தட்டு எடுத்து வர.

நான் ரூம்குள்ள நுழைந்த உடன் டிவி ஹால்ல இருந்து ஒரு நாலைந்து குரல் "ராஜி. உன் அக்கா மச்சான் ..ஓடி வா டீ"

நான் ஓடி வந்து கண்ணு மண்ணு தெரியாம என் தோழியின் மடியில் உட்கார அவள் "ஐயோ என் கால் உடைஞ்சிடுச்சு. எருமைமாடு கண்ணு தெரியல. ஜோ, சூர்யாவ நீ பார்க்க என் கால ஏன்டீ உடைக்கிற"

எரும மாடுன்னு அவளே சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் நாம feel பண்ண கூடாது. சோ வேலையில் கவனம்.
நான் உருகி போய் "சூர்யா கண் மாதிரி ஒரு expressive, powerful ஆ வேற யாருக்குமே இல்ல."

என் பக்கத்துல இருந்த ஒருத்தி "என் கண்ணு கூடவா" என்று அவ கண்ணை என்னிடம் காண்பிக்க, தூக்கி போட்டு மிதிப்பேன் என்று அவளிடம் சொன்னேன்.

அதற்குள் இன்னொருத்தி "வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி இப்போ அவ கண்ண காமிச்சா" என்று சொல்ல "யார யார் கூட compare பண்ற என்று விட்டேன் ஒரு உதை"

"hostel இட்லிய வச்சு கண்ண குத்தினா என்ன ஆகும் தெரியும்ல. மாலைக்கண் நொள்ள கண் ஆய்டும் (அதே அம்மணி தான்)."

அதற்குள் இன்னொருத்தி "ஜோவ பார்க்குறதுக்கு முன்னால என்ன மட்டும் சூர்யா பார்த்துருக்கணும். அப்புறம் ஜோவ பார்த்து இருக்க மாட்டான்"

"ஜோவா பார்த்திருக்க மாட்டான் உண்மை தான். ஆனா ஒண்ணு sucide. இல்லனா சாமியார்"

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லோரும். பிச்சிபுடுவேன் பிச்சு.
-------------------------------
இந்த மாதிரி ஆயிரம் நிகழ்வுகள் எங்கள் அழகான மாலை/இரவு பொழுதுகளில் நான் சென்னையில் இருந்த வரை.

இப்போது மீண்டும் அந்த நாட்களை எதிர்பார்த்து மாலை/இரவு பொழுதுகளில் இந்த நினைவுகளோட மட்டும் ...

20 comments:

SanjaiGandhi said...

//இப்போது மீண்டும் அந்த நாட்களை எதிர்பார்த்து மாலை/இரவு பொழுதுகளில் இந்த நினைவுகளோட மட்டும் //

உன்கிட்ட இருந்து தப்பிச்சவங்க இந்த நினைவே வரக் கூடாதுன்னு நடந்தே திருப்பதி போனாங்கன்னு என்கிட்ட சொன்னதை எழுதாம விட்டுட்டியே.. :)

ப்ரியா said...

Nostalgia...hmm.

இய‌ற்கை said...

/மீண்டும் வேண்டும்
/

paavam pa..4 varusha punishment avangalukku ellam..

இய‌ற்கை said...

/அடிப்பாவி. நானே US போறேன். என்கிட்டே எதுக்கு switzerland பத்தி சொல்ற"
/
US க்கும் switzerlandக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாதுன்னு தான்

இய‌ற்கை said...

/நான் ரூம்குள்ள நுழைந்த உடன் டிவி ஹால்ல இருந்து ஒரு நாலைந்து குரல் "ராஜி. உன் அக்கா மச்சான் ..ஓடி வா டீ"/


ஜோ உனக்கு அக்காவா?..ம்ம்.. அப்போ நக்மா பெரியக்காவா? ஓய்...உன்னைக் கேக்க ஆள் இல்லையா

Truth said...

ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியுது, என்னான்னு தான் தெரியல.

Rajalakshmi Pakkirisamy said...

@ SanjaiGandhi,

Thirupathiku athvum ivalunga nadanthe ponangala.. saringa sir...

@ இய‌ற்கை,
//ஜோ உனக்கு அக்காவா?..ம்ம்.. அப்போ நக்மா பெரியக்காவா? ஓய்...உன்னைக் கேக்க ஆள் இல்லையா//

ippidi illa... Karthik enakku innoru machan appidinu sollanum.

@ Truth,

//ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியுது, என்னான்னு தான் தெரியல.//

No no :) :) :)

R.Gopi said...

பசுமை நிறைந்த நினைவுகளே...

நல்லா இருக்கு ராஜி... ரீவைண்ட் "இப்போது மீண்டும் அந்த நாட்களை எதிர்பார்த்து மாலை/இரவு பொழுதுகளில் இந்த நினைவுகளோட மட்டும் ... "

அந்த‌ நாள், இனிய‌ நாள்...

kanagu said...

adengappa.. oru violent aana aala irupeenga pola irukku...

kuthu udai ellam sarva saatharnama vuidureenga :P :P

kanagu said...

viruthu vaanga, vaanga raaji..

http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.html

Karthik said...

ஹாஹா நு போய் கடைசி லைன்ல ஃபீலிங்ஸ் ஆயிடுச்சு. மிஸ் பண்றது பழகிடும். எனக்கு பழகிடுச்சு. :)

Rajalakshmi Pakkirisamy said...

@ R.Gopi,

//அந்த‌ நாள், இனிய‌ நாள்...// :)

@ kanagu,
//viruthu vaanga, vaanga raaji..//

pullarikuthunga.. Anyway Thanks a lot :)

Rajalakshmi Pakkirisamy said...

@ Karthik,

//ஹாஹா நு போய் கடைசி லைன்ல ஃபீலிங்ஸ் ஆயிடுச்சு. மிஸ் பண்றது பழகிடும். எனக்கு பழகிடுச்சு. :)//

Yenakkum :) :)

வித்யா said...

:)

விக்னேஷ்வரி said...

மச்சான் பக்கம் (நம்ம சூர்யா தான்) //

ரைட்டு. இது அக்காவுக்குத் தெரியுமா...

எனக்கும் என் ஹாஸ்டல் நினைவு வந்து விட்டது. நண்பர்களுடன் களித்த பொழுதுகளைத் தவிர நல்ல தருணம் எதுவும் உண்டா...

r.selvakkumar said...

//hostel இட்லிய வச்சு கண்ண குத்தினா என்ன ஆகும் தெரியும்ல//

இப்போ அந்த ஹாஸ்டல் இட்லி கிடைச்சா கூட நல்லாதான் இருக்கும்..இல்லையா?

அப்புறம் . . .
உங்க மச்சான் நடிச்ச ஆதவன் படம் பார்த்தீங்களா?

RAMYA said...

யம்மா தானே நான் ஹாச்டேல்லே அடிச்ச கோட்டம் அவ்வளவும் நினைவிற்கு வந்துடுச்சே :((


நீங்க மச்சான் கூப்பிடறது நம்ம ஜோ அக்காவுக்கு தெரிஞ்சி போச்சாம்
உங்களை தேடிகிட்டு இருக்காங்களாம் :-)


//hostel இட்லிய வச்சு கண்ண குத்தினா என்ன ஆகும் தெரியும்ல//


அதான் குத்திட்டீங்களே அப்புறம் என்ன தெரயும்லே!

கண்ணே தெரியல:)


//
அதற்குள் இன்னொருத்தி "வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி இப்போ அவ கண்ண காமிச்சா" என்று சொல்ல "யார யார் கூட compare பண்ற என்று விட்டேன் ஒரு உதை"
//


அட்டகாசத்தின் உச்சம்!

ஹி ஹி நானு கூட இந்த மாதிரி எல்லாம் அடிச்சிருக்கேன்
அடியும் வாங்கி இருக்கேன் (அடிதான் அதிகம் நமக்குத்தான் அடுத்தவங்களை சீண்டுரதுதானே அதிகம்)

Rajalakshmi Pakkirisamy said...

@ வித்யா,

:)

@ விக்னேஷ்வரி,

//ரைட்டு. இது அக்காவுக்குத் தெரியுமா...//

Akka solli thaan naan machannu koopiduren. :)

@ r.selvakkumar,

Welcome sir!
//இப்போ அந்த ஹாஸ்டல் இட்லி கிடைச்சா கூட நல்லாதான் இருக்கும்..இல்லையா?//
aiyayo illa illa.. naane konjam nalla samaikiren.

//உங்க மச்சான் நடிச்ச ஆதவன் படம் பார்த்தீங்களா?//

intha weekend thaan parkanum..

Rajalakshmi Pakkirisamy said...

@ Ramya,

Welcome Mam!
//நீங்க மச்சான் கூப்பிடறது நம்ம ஜோ அக்காவுக்கு தெரிஞ்சி போச்சாம்
உங்களை தேடிகிட்டு இருக்காங்களாம் :-)//

Akka solli thaan naan machannu koopiduren. :) so no worries...

//அட்டகாசத்தின் உச்சம்!//

:) :) :)

//அடியும் வாங்கி இருக்கேன்//

ithaan matter..

Princess said...

ஹாஸ்டல் லைஃப் எனக்கு தெரியாது ஆனா அது அழகானது அது மட்டும் தெரியும்..

-பதுமை.