பிரியா: ஏதாவது போஸ்ட் போடுடி.
நான்: Synapse ல முதல்ல ஒரு போஸ்ட போடு. ஒரு மாசமாச்சு.
பிரியா: @#$%&*(&( ^*((*^()#@(அசிங்கமாக திட்டப்படும் வார்த்தைகளுக்கு வேற எந்த மாதிரி போடலாம்னு சொல்லுங்களேன்)
சஞ்சய்: அதிசயமா போஸ்ட்லாம் போட்டுருக்க. அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்க?
நான்: யோசிச்சிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம்னு சொல்லு.
சஞ்சய்: எதையாவது எழுது போ. (என்ன ஒரு பொறுப்பான பதில். உன்ன கலாய்ச்சு ஒரு போஸ்ட் போட்ட தான் நீ அடங்குவ. )
இயற்கை: அடுத்த போஸ்ட் சீக்கிரம் போடுங்களேன்.
நான்: என்ன போஸ்ட் போடலாம்னு யோசிச்சிட்டேன்.ஆனா டைப் பண்ண தான் சோம்பேறித்தனமா இருக்கு. யாராவது டைப் பண்ணி குடுத்தா நல்லா இருக்கும். நீங்க டைப் பண்ணி தரீங்களா.
இயற்கை: ஐயோ. மறந்துட்டேன். வெளியில போகணும். போயிட்டு வந்து ping பண்றேன்.
(ஒரு ஸாரி கூட சொல்லாம எஸ்கேப் ஆய்ட்டாங்களே. வரட்டும் கவனிச்சிக்கிறேன்.)
கணேஷ்: அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்கீங்க.
நான்: இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். டைப் பண்ணனும்.
கணேஷ்: ஒரு கவிதை எழுதுங்களேன்.
நான்: ஐயயோ அதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
கணேஷ்: நீங்க ரொம்ப நல்லா போஸ்ட் போடுறீங்க. உங்களுக்கு கண்டிப்பா கவிதை எழுத வரும். எழுதி பாருங்களேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.
நான்: உண்மையா தான் சொல்றீங்களா. நிஜமா? அப்போ ஓகே. நான் ட்ரை பண்றேங்க,
அன்று முழுவதும் தூக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்து எதை பற்றி கவிதை எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
அம்மா பத்தி எழுதலாம்னு யோசிச்சா பார்த்திபன் கிறுக்கல்கள் புக்ல எழுதின கவிதை ஒரு வரி விடாம மனசுல ஓடுது, அம்மா பத்தி எழுதினா பார்த்திபன் தாக்கம் இருக்கும். அதுனால இது வேணாம்.
வேற இயற்கை (இந்த இயற்கை இல்லங்க) பத்தி எழுதலாம். நீர், நிலம், காற்று அப்பிடி ஏதாவது. ஐயோ நம்ம கவிப்பேரரசு ரிதம் படத்துல எல்லாத்தையும் பத்தி எழுதிட்டார். அதுனால இயற்கை பத்தி எழுதினா அவரோட தாக்கம் வந்துடும்.
காதல் பத்தி எழுதலாம். காதல் பத்தி நினைத்தவுடன், தபூசங்கரின் "தேவதைகளின் தேவதை" நியாபகம். எப்போதும் நியாபகம் வராத வரிகள், அப்போது தான் நியாபகம் வர தொடங்கியது.
இவங்க யார் தாக்கமும் இல்லாம நாமலே நம்ம originality படி எழுதணும். கொஞ்சம் டைம் எடுத்து நல்லா யோசிச்சு ஒழுங்கா எழுதணும் என்று மனசை தேற்றியபடி தூங்கி போனேன்.
மறுநாள் ஆபீஸ் போய் உட்கார்ந்து client க்கு மெயில் அனுப்ப டைப் பண்ண ஆரம்பித்தேன். ஏதோ கவிதை டைப் பண்ணுவது போல் ஒரு பீலிங். தலையை உதறி கொண்டு சுய நினைவிற்கு வந்தவளாய் ஒழுங்காக மெயில் அனுப்பினேன். அதன் பிறகு கணினி திரையை வெறித்து பார்த்து கொண்டு, மரங்களை உற்று நோக்கி கொண்டு, லஞ்ச் டேபிளில் தோசையை கையில் வைத்து கொண்டு சாப்பிடாமல், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் எதை பற்றி கவிதை எழுதலாம் என்று ஒரே யோசனை.
எதை பார்த்தாலும் அதை பற்றி கவிதை எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம்.
கடைசியாக மனதிற்குள் ஒரு மின்னல் அடிக்க கை பர பரவென இயங்க தொடங்கிவிட்டது.
"புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த
சிரிப்பில் சிக்கியது
ஒரு வழியாக
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக இளமையாக
அழகிய தாவணியுடன்
வந்ததும் அதன்
அவள் மடிப்பில்
மடிந்தது
*
*
*
இப்படியான எனது
பதின் பருவத்து
காதல் நெருப்பு
ஒருவர் கை மாறி
ஒருவர் கை செல்லும்
ஒலிம்பிக் தீபம்போல் அணையாமல்"
கவிதை எழுத சொன்னவரிடம் இந்த பதிவை காண்பிக்க, அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இந்த கவிதையினால் என்று நினைத்து கொண்டால், மிக சரியே.
இந்த கவிதை நல்லா இருக்குன்னு ஆச்சரியத்துல இல்ல, இந்த கவிதை அவரோடதுங்குற அதிர்ச்சியில்.
ரொம்ப யோசிச்சு நம்மளால ஒரு கவிதை எழுத முடியல. அதுனால மான ரோசமெல்லாம் துடைத்து போட்டு விட்டு அவோரட கவிதையை எடுத்து இங்கு போட்டு விட்டேன்.
12 comments:
மண்டபத்து சரக்குக்கு எல்லாம் இவ்ளோ பில்டப்பு குடுக்கிறது உனக்கே ஓவரா இல்லையா?
//கணேஷ்: அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்கீங்க.
நான்: இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். டைப் பண்ணனும்.
கணேஷ்: ஒரு கவிதை எழுதுங்களேன்.
நான்: ஐயயோ அதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
கணேஷ்: நீங்க ரொம்ப நல்லா போஸ்ட் போடுறீங்க. உங்களுக்கு கண்டிப்பா கவிதை எழுத வரும். எழுதி பாருங்களேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.//
இது நிஜமாவே கணேஷ் தான் சொன்னார்னு நம்பிட்டேன்..
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. சொல்லிடு உன் நண்பர் கிட்ட.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு!
இதெல்லாம் எப்ப நடந்துச்சி????
எனிவே, தேங்க்ஸ்ஸ்!!
தேங்க்ஸ் சஞ்சய், ப்ரியா! :)
கவிதைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதனால அதை பத்தி சொல்லத் தெரியல.
ஆனா
//கணேஷ்: நீங்க ரொம்ப நல்லா போஸ்ட் போடுறீங்க. உங்களுக்கு கண்டிப்பா கவிதை எழுத வரும். எழுதி பாருங்களேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.
இந்த இடத்துல நான் சிரிச்சுட்டேன். நல்லா காமெடி வருது உங்களுக்கு, அத அடுத்த போஸ்டுல ட்ரை பண்ணலாமே! :-)
கவிதை நல்லாருக்கு..
நான் டைப் பண்ணித் தராம இருந்து இந்த வலையுலக காப்பாத்தலாம்ன்னு இரு நல்ல எண்ணம் தான்..:-)
அட...
இப்படி கூட கவிதை எழுதலாமா?? சூப்பர் டெக்னிக்கா இருக்கே??
நல்லா இருக்குங்கோ...
/*கணேஷ்: அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்கீங்க.
நான்: இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். டைப் பண்ணனும்.
கணேஷ்: ஒரு கவிதை எழுதுங்களேன்.
நான்: ஐயயோ அதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
கணேஷ்: நீங்க ரொம்ப நல்லா போஸ்ட் போடுறீங்க. உங்களுக்கு கண்டிப்பா கவிதை எழுத வரும். எழுதி பாருங்களேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.
நான்: உண்மையா தான் சொல்றீங்களா. நிஜமா? அப்போ ஓகே. நான் ட்ரை பண்றேங்க,*/
இப்ப யோசிச்சு இருப்பாரு.. இனிமேல் ஐடியாவே கொடுக்க கூடாதுனு...
@கணேஷ்: விதி வலியதே.... :))))
@ Truth,
//இந்த இடத்துல நான் சிரிச்சுட்டேன். நல்லா காமெடி வருது உங்களுக்கு, அத அடுத்த போஸ்டுல ட்ரை பண்ணலாமே//
இதே மாதிரி இன்னொரு பதிவு போட்டா அதுக்கு நீங்க தான் பொறுப்பு.
Thanks Sanjay, Priya, Iyarkai Gopi.
@ Kanagu,
//@கணேஷ்: விதி வலியதே.... :))))//
ha ha ha..
கஷ்டபட்டு உன்ன நம்பி படிச்சேன், எனக்கு தேவைதான், but nice kavithai :D
எப்படியோ ஒரு போஸ்ட் ஒப்பேத்திட்டீங்க.
@ பதுமை ,
//கஷ்டபட்டு உன்ன நம்பி படிச்சேன், எனக்கு தேவைதான்//
@ விக்னேஷ்வரி,
//எப்படியோ ஒரு போஸ்ட் ஒப்பேத்திட்டீங்க.//
ha ha ha
Post a Comment