Tuesday, October 6, 2009

என் பார்வையில் பாம்புகள்

நான் நேத்து கோயிலுக்கு போய் இருந்தேன். ஒரு 5 தலை பாம்பு பார்த்தேன். நாம தப்பு பண்ணினா அது நம்மள கொத்திடுமாம். பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. என் நினைவில் இருக்கும் இந்த உரையாடல் தான் பாம்பு பத்திய எனது வாழ்கையின் முதல் உரையாடலாக இருந்திருக்க வேண்டும். அந்த கதைய கேட்டுட்டு உண்மையான்னு கூட கேட்க தெரியாத வயசுல பயந்துகிட்டு வேப்பிலை ஒடித்து பாக்கெட்ல வச்சிகிட்டு ஊரு சுத்தினோம். வேப்பிலை வைச்சிருந்தா பாம்பு, பேய்லாம் நம்மகிட்ட வராதுன்னு நம்ம தோழிகள் சொன்னது தான் இதுக்கு காரணம்.

கொஞ்சம் நான் வளர்ந்ததுக்கு அப்புறம் பாம்பு அப்பிடின்னு கேட்டா "பாம்பு ஊர்வன வகையை சேர்ந்தது. பாம்புக்கு கால்கள் கிடையாது...." படிச்சத மாத்தாம ஒப்பிபோம்ள. பாம்புனா ஒரு நாலஞ்சு வகை தான் அப்போ தெரியும். நாக பாம்பு.. அப்பிடி சொல்ல கூடாது, ராஜ நாகம் அப்பிடின்னு தான் சொல்லணும்னு என் தோழிகள் சொல்லி கொடுத்தாங்க. இது தான் எல்லா பாம்புக்கும் ராஜா. அப்புறம் எங்களுக்கு தெரிஞ்ச பாம்புகள் கட்டு விரியன், தண்ணி பாம்பு, பச்ச பாம்பு, அப்புறம் ஒரு பறக்கும் பாம்பு. பச்ச பாம்பு செடில மட்டும் தான் இருக்கும். பறக்குற பாம்பு பறந்து வந்து கண்ணை கொத்திடும். இப்படி எல்லாம் எனக்கு வகுப்பு எடுத்தாங்க எனதருமை தோழிகள்.

சின்ன பொண்ணுங்கன்னு சொல்லி எங்க ஸ்கூல்ல சிறுவர் சிறுமிகள் பார்க்கும் படத்துக்கு வருடம் ஒரு முறை கூட்டிட்டு போவாங்க. அந்த மாதிரி ஒரு படத்துக்கு போனோம் "அன்பின் அலைகள்". இப்பிடி ஒரு படம் இருக்கான்னு கூட யாருக்கும் இப்போ தெரியாது. அதுல நாகேஷ் நடிச்சி இருப்பாரு. ஒரு சிறுவனும் அவனோட நாயும் ஒரு பாலைவனத்துல மாட்டிப்பாங்க. அவங்கள அவன் குடும்பம் எப்புடி கண்டுபிடிச்சு காப்பாத்துறாங்க அதான் கதை. அதுல ஒரு விஷ பாம்புகிட்ட இருந்து அந்த குட்டி நாய் அந்த சிறுவனை காப்பாற்றும். அத பார்த்து நான் அழுதது தனி கதை. பாம்பு ஒரே ஒரு சீன்ல தான் வரும்னாலும் பாம்பு படம்னா எனக்கு நியாபகம் வரும் படங்களில் இதுவும் ஒன்று.

இன்று வரை எனக்கு ஒரு புன்னகையை கொண்டு வரும் பாம்பு படங்களில் முதலிடம் துர்கா தான். படம் பார்த்த பிறகு ஏனோ ஒரு இனம் புரியாத பாச உணர்வு பாம்புகளின் மேல்.

எங்க தாத்தா பாட்டி ஊரு ஒரு கிராமம். என் எல்லா வார விடுமுறைகளும் அவங்க கூட தான். வீடு ரொம்ப பெருசு. அத விட தோட்டம் பெருசு. அது போல பாம்புகளும் அதிகம். அதுவும் வெயில் காலம்னா வெயில் தாங்காம நெறைய பாம்பு வெளியில வரும்னு என் பாட்டி சொல்லுவாங்க. அந்த வயசுல நான் பார்த்த பாம்புகள் ரொம்ப அதிகம். என் கருப்பு ரிப்பன் பக்கத்துல ஒரு பாம்பு, கழுவி கவிழ்த்து வச்ச என் தட்டுக்கு கீழ ஒரு பாம்பு, பிறந்து சில மாதங்களே ஆன எனது தம்பிக்கு தலைக்கு வைத்திருந்த துணிக்கு கீழே ஒரு குட்டி பாம்பு, வடகம் காய வைக்கும் துணியில வடகத்தை சுத்தி கொண்டு ஒண்ணு, எனது சித்தியின் கைகளுக்கு மிக அருகில், இப்படி சொல்லி கொண்டே போகலாம். இன்று வரை மறக்கவில்லை. இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கின்றன அத்தனை பாம்புகளும்..

இத்தனை பாம்புகளை பார்த்து விட்டதாலோ என்னோவோ பாம்பை பற்றிய பயம் சிறிது இருந்தும் பாம்புகள் மீதான ஆர்வம் அதிகமாகி விட்டது. அதன் பிறகு பாம்பை பற்றி யாரு என்ன பேசினாலும் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். அதில் என்னை இன்று வரை யோசிக்க வைப்பது என் பாட்டி சொன்ன வார்த்தைகள். "குழந்தைகள் இருக்குற வீடு சுத்தமா இருக்கணும். இல்லனா தாய்ப்பால் வாசனைக்கு பாம்பு வந்துடும்."அது உண்மையா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இது உண்மையோ என்று என்னும் வகையில் சில சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை ஸ்கூலில் என் சைக்கிள் சீட்டில் ஒரு பாம்பு. அப்போது எங்க ஸ்கூலில் வேலை பார்த்த ஒரு அண்ணன், அதன் வால் பகுதியை பிடித்து அதன் தலையை மரத்தில் அடித்து கொன்றார். இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விட்டது. அதன் பிறகு சில மாதங்கள் அந்த அண்ணன் பாம்பை கொன்ற புராணம் தான் பார்க்கும் எல்லோரிடமும்.

கனவில் பாம்பு வந்துச்சுன்னு சொன்னா எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி, அது கொத்துச்சா இல்லையானு தான். எனக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். 10 தடவ வந்துச்சுனா ஒரு தடவை போனா போதுனு கொத்திட்டு போகும். மத்தபடி ஓட ஓட விரடிட்டு கொத்தாம போய்டும்.

நான் காலேஜ் முதல் வருடம் படித்து கொண்டிருந்த போது, ஒரு நாள் மாலையில் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்து என் தோழிகளிடம் பேசிட்டு இருந்தேன். பக்கத்து ரூமில் இருந்து சத்தம் "பாம்பு, பாம்பு".... நான் அந்த ரூம்க்கு ஓடி பார்த்தால் ஒரு பாம்பு தரையில் அங்கும் இங்கும் ஓடிட்டு இருந்தது. ரொம்ப பெருசும் இல்ல, ரொம்ப குட்டியும் இல்ல. அந்த ரூம்ல இருந்த பொண்ணுங்க எல்லாம் கட்டில் மேல நின்னுட்டு இருந்தாங்க. பாம்பு போயிட்டு இருந்த ஸ்பீட் பார்த்தா கண்டிப்பா எங்கயாவது கண்ணுக்கு தெரியாம ஓடி ஒளிஞ்சிடும்னு பயம்.

எப்பிடி பண்ணினேன்னு இப்போ வரைக்கும் தெரியாது. ஒரு பக்கெட் எடுத்து பாம்பு மேல தலை கீழா கவிழ்த்து போட்டு உட்கார்ந்துட்டேன். எல்லோரும் பார்த்து பார்த்துன்னு கத்துனாங்க. அதுக்குள்ளே ஒரு பத்து பேர் சேர்ந்துட்டாங்க. நானோ "ஓடி போய் செக்யூரிட்டி அண்ணாவ கூட்டிட்டு வாங்க இல்லன ஒரு கம்பு எடுத்துட்டு வாங்க" அப்பிடின்னு கத்துறேன்.

நான் சொன்னத கேட்டுட்டு ரெண்டு, மூணு பேர் ஓடினாங்க. ஆனா அதுக்குள்ள பக்கெட்குள்ள பாம்பு எல்லா பக்கமும் ஓட ஆரம்பிச்சிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. ஏதோ ஒரு தைரியம் வர, ஒரே ஒரு பக்கம் மட்டும் பக்கெட்டை ரொம்ப ரொம்ப கொஞ்சமா திறந்தேன். அது தலையை நீட்டி வெளியே வர முயற்சிக்க, பக்கெட்டின் விளிம்பை வைத்து தலையை நன்றாக நசுக்கி கொன்று விட்டேன். அதை பார்த்த என் தோழிகள் எல்லாம் இன்று வரை கிண்டல் செய்வார்கள். பாம்பை நான் கொன்றது ஆச்சர்யம் இல்லை. அந்த பக்கெட் எப்பிடி என் வெயிட் தாங்குசுன்னு தான். அப்பிடி வெயிட் தாங்காம பக்கெட் உடைந்திருந்தாலும் நான் பாம்பு மேல் விழுந்து பாம்பு செத்திருக்குமாம்.

பாம்பு பற்றி படமோ, இல்லை நினைப்போ அதிகமாக இல்லை, சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கிய "நடந்தது என்ன- குற்றமும் பின்னணியும்" நிகழ்ச்சியில், ஒரு சிறுவன் பாம்பை போலவே இருக்கின்றான், ஒரு பெண்மணியை பதினெட்டு முறை பாம்பு கடித்து இருக்கிறது என்ற செய்திகளை கேட்கும் வரை.அதன் பிறகு ஒரு முறை அனகொண்டா படம் பாத்தேன்.

இப்போது ஏனோ பாம்புகளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்திருக்கிறது. எத்தனை நாள் இந்த ஆர்வம் இருக்கும் என்று தெரியவில்லை. அதே போல் பாம்பு பற்றி நான் தெரிந்து கொள்ள எந்த அளவு முயல்வேன் என்றும் தெரியவில்லை.ஆனாலும் பாம்பு என்று யார் சொன்னாலும், இல்லை நான் நினைத்தாலும், பயம் சிறிது வந்தாலும் ஒரு இனம் புரியாத பாசம் தான் அதிகமாக இருக்கிறது.

10 comments:

R.Gopi said...

ராஜி

என்ன திடீர்னு "பாம்பு பதிவு" போட்டு டெர்ரர் ஆக்கறீங்க...

நல்ல வேளை ஃபோட்டோஸ் எதுவும் போடல...

// ஒரு 5 தலை பாம்பு பார்த்தேன். நாம தப்பு பண்ணினா அது நம்மள கொத்திடுமாம். பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. என் நினைவில் இருக்கும் இந்த உரையாடல் தான் பாம்பு பத்திய எனது வாழ்கையின் முதல் உரையாடலாக இருந்திருக்க வேண்டும்.//

ஹா....ஹா... உங்களுக்கு மட்டும் இல்ல... நிறைய பேருக்கு இப்படிதான் இருக்கும்...

//வேப்பிலை வைச்சிருந்தா பாம்பு, பேய்லாம் நம்மகிட்ட வராதுன்னு நம்ம தோழிகள் சொன்னது //

வேப்பிலை வைத்திருந்தால் காத்து கருப்பு அண்டாதுன்னு தான் சொல்ல கேள்வி.. இது என்ன, உங்கள் தோழிகள் இப்படி சொல்லி இருக்காங்க...

//படம் பார்த்த பிறகு ஏனோ ஒரு இனம் புரியாத பாச உணர்வு பாம்புகளின் மேல்.//

அய்யோ.. அட‌ என்ன‌ங்க‌... பெரிய‌ டெர்ர‌ர் மேட்ட‌ர‌ இவ்ளோ சாதார‌ண‌மா சொல்றீங்க‌...

//என் கருப்பு ரிப்பன் பக்கத்துல ஒரு பாம்பு, கழுவி கவிழ்த்து வச்ச என் தட்டுக்கு கீழ ஒரு பாம்பு, பிறந்து சில மாதங்களே ஆன எனது தம்பிக்கு தலைக்கு வைத்திருந்த துணிக்கு கீழே ஒரு குட்டி பாம்பு, வடகம் காய வைக்கும் துணியில வடகத்தை சுத்தி கொண்டு ஒண்ணு, எனது சித்தியின் கைகளுக்கு மிக அருகில், இப்படி சொல்லி கொண்டே போகலாம்.//

என்ன‌ சொல்றீங்க‌... இவ்ளோ பாம்பு பார்த்து இருக்கீங்க‌ளா?? ப‌ய‌மா இல்லையா?? சாதார‌ண‌மா பாம்புன்னா ப‌டையும் ந‌டுங்கும்னு சொல்வாங்கா... இங்க‌ ரிவ‌ர்ஸ்ல‌ இருக்கே... உங்க‌ளை பார்த்து நாங்க‌ள் ந‌டுங்க‌ணும் போல‌ இருக்கே...

//"குழந்தைகள் இருக்குற வீடு சுத்தமா இருக்கணும். இல்லனா தாய்ப்பால் வாசனைக்கு பாம்பு வந்துடும்."//

இருக்க‌லாம்... இல்லேன்னா, பூனை கூட‌ வந்து டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண‌ சான்ஸ் இருக்கு..

//ஒரு முறை ஸ்கூலில் என் சைக்கிள் சீட்டில் ஒரு பாம்பு. //

ஆஹா... ம‌றுப‌டியும் வேற‌ லொக்கேஷ‌ன்ல‌யா? இன்னுமா??

//10 தடவ வந்துச்சுனா ஒரு தடவை போனா போதுனு கொத்திட்டு போகும். மத்தபடி ஓட ஓட விரடிட்டு கொத்தாம போய்டும்.//

ஹ‌லோ..ஹ‌ல்ல‌ல்லோ... ஸ்டீல் பாடிதான்...

//ஒரு பக்கெட் எடுத்து பாம்பு மேல தலை கீழா கவிழ்த்து போட்டு உட்கார்ந்துட்டேன். //

ப‌டிக்க‌ற‌ச்சே த‌மாஷா இருந்தா கூட‌, நென‌ச்சு பார்த்தா, டெர்ர‌ரா இருக்குங்கோ...

//வெயிட் தாங்காம பக்கெட் உடைந்திருந்தாலும் நான் பாம்பு மேல் விழுந்து பாம்பு செத்திருக்குமாம்.//

அந்த‌ க‌ல‌வ‌ர‌த்துல‌யும் ஒரு "க‌ல‌க‌ல‌ப்பு"...ம்ம்ம்... ந‌ட‌த்துங்க‌...

//பாம்பு என்று யார் சொன்னாலும், இல்லை நான் நினைத்தாலும், பயம் சிறிது வந்தாலும் ஒரு இனம் புரியாத பாசம் தான் அதிகமாக இருக்கிறது. //

அப்ப‌டியா மேட‌ம்... ந‌ம்ப‌வே முடிய‌லியே...

எது எப்ப‌டியோ... ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌... ப‌டிக்க‌ சுவார‌சிய‌மா, கொஞ்ச‌ம் ப‌ய‌மா இருந்த‌து... இருங்க‌, என் க‌ழுத்து ப‌க்க‌மா ஏதோ ஊருவ‌து போல் இருக்கு... நல்ல வேளை, அது கர்ட்டன்... அப்பா.... தப்பிச்சேன்...

SanjaiGandhi said...

எனக்கும் பாம்பு கனவு அடிக்கடி வரும்.. மாசத்துக்கு நாலு வாட்டியாச்சும்.. ஆனா ஒன்னு ரெண்டெல்லாம் இல்லை.. நூத்துக் கணக்குல என்னைக் கொத்த விரட்டும். நான் பறந்துட்டே இருப்பேன்.. இதுவரை கொத்தினதில்லை.. நானும் பறக்கறதை நிறுத்தினதில்லை..( இதுக்கு என்ன பலன் அப்டின்னு பார்த்து சொல்லுங்கப்பு..:) )

என்னக் காரணமா இருந்தாலும் பாம்பைக் கொல்றது எனக்குப் பிடிக்காது. ஆனால் அறியாத வயதில் நிறையவே கொன்றிருக்கிறேன். ஒருவேளை அவைகள் தான் கனவில் விரட்டுதோ என்னவோ?

வேப்பிலை மேட்டர் எல்லாம் நமக்கும் பொதுவானது தான்..

இண்ட்ரஸ்டிங்க் தான்.. ஆனா மூச்சு வாங்குது.. கொஞ்சம் சின்ன பதிவா ட்ரை பண்ணுங்க.

Princess said...

wow, snake story,

padangala pakradhoda sari, enaku per ketale bayam than, not like u,
and romba brave attempt at college hostel, thayiriyamana ponnu,

be brave as u were,
Aiz

kanagu said...

adengappa... oru padivu.. dedicated to pambu..

paambu mela ivlo paasama... neengal snake welfare associationin thalaivar aavatharkku ella thaguthigalum ullana.. LOL...

/*என் கருப்பு ரிப்பன் பக்கத்துல ஒரு பாம்பு, கழுவி கவிழ்த்து வச்ச என் தட்டுக்கு கீழ ஒரு பாம்பு, பிறந்து சில மாதங்களே ஆன எனது தம்பிக்கு தலைக்கு வைத்திருந்த துணிக்கு கீழே ஒரு குட்டி பாம்பு, வடகம் காய வைக்கும் துணியில வடகத்தை சுத்தி கொண்டு ஒண்ணு, எனது சித்தியின் கைகளுக்கு */

enaku padikave thala suthuthu... paathutu epdi than bayapadama irundheengalo...

/*/*கனவில் பாம்பு வந்துச்சுன்னு சொன்னா எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி, அது கொத்துச்சா இல்லையானு தான். எனக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். 10 தடவ வந்துச்சுனா ஒரு தடவை போனா போதுனு கொத்திட்டு போகும். மத்தபடி ஓட ஓட விரடிட்டு கொத்தாம போய்டும்*/

epdinga paamba pathi nenachite thoonguveengala...???
nalla kaalam enakellam andha maathiri kanavellam varathilla apdingratha vida.. kanave varathu illa nu sollalam...

வித்யா said...

உங்க காலேஜ் மேட்டர் LOL:)

நாமக்கல் சிபி said...

ANBIN ALAIGAL padam naanum parthirukken!

Enga Schoolla project panninanga! 2Shows parthen!

Nice Story!

oru sinna ponnu iruppa : Cauvery, and another one rough guy called Karumbootham!

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=anbin%20alaigal

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@R.Gopi,

:):) :) :) :) :) :) :) :) :)

@SanjaiGandhi,

/நான் பறந்துட்டே இருப்பேன்/

பறக்குற ஆள பாருங்கப்பா.

@Princess,

Thanks madam!

@ kanagu,

நேத்து கூட கனவுல ஒரு பாம்புங்க. வழக்கம் போல கடிக்கல :(

@ வித்யா,

:) (Truth ரொம்ப feel பண்ணி இருக்கார் போல இந்த ஸ்மைலிக்கு)

@ நாமக்கல் சிபி,

Thanks for the link :)

இய‌ற்கை said...

ahaa..bayama irukke..inniku night enakku pambu kanavu varama iruntha sari...

இய‌ற்கை said...

unga college hostel la oru thaadavai than pambu vanthicha..anga 1000 kanakula pambunga irukume... naala thairiyasali than..

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//unga college hostel la oru thaadavai than pambu vanthicha..anga 1000 kanakula pambunga irukume... naala thairiyasali than//

நான் ஒரு நாலஞ்சு பாம்பு தான் பார்த்துருப்பேன். ஆனா நிறைய இருக்குன்னு சொல்வாங்க.