Friday, October 30, 2009

என்னத்த சொல்றது போங்க?

ஒரு ஐந்து குடும்பங்களுடன் நானும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தோம்.
அதில் இரு குடும்பத்தை சேர்ந்த ஒரே வயதை ஒத்த இரு குழந்தைகள் (ஒரு பொண்ணு,ஒரு பையன்) இருக்கிறார்கள் (2nd grade படிக்கிறார்கள்)

நாங்கள் வெளியில் செல்லும் போது இருவரும் ஒரே காரில் வருவதை விரும்புவார்கள். எப்போதும் நானும் அவர்கள் இருக்கும் காரில் தான் பயணம் செய்வேன்.

எங்கள் பயண நேரங்கள் முழுவதும் விளையாட்டில் தான் கழியும். அதுவும் எல்லாம் அறிவு பூர்வமா தான் விளையாடுவாங்க. நாம எதுனா சொன்னாலும் மதிக்க மாட்டாங்க. அதுவும் கொடுமைய பாருங்க. Word Building, Missing Letters, Rhyming words இப்பிடி தான். நீங்களே சொல்லுங்க... எனக்கும் இதுக்கும் என்னங்க சம்மந்தம். தப்பா சொன்னா மானம் வேற போய்டும். விளையாட்டில் இருந்து விலகவும் முடியாது. அதுவும் முதல் பயணத்தில் சொன்ன வார்த்தைகள அடுத்த பயணத்தில் use பண்ண கூடாது. கரெக்ட்டா நியாபகம் வச்சு "ஆன்ட்டி (இந்த கொடும வேற. ஆயிரம் தடவ சொல்லி கொடுக்கிறேன் அக்கான்னு கூப்பிட சொல்லி. அந்த குட்டிங்க கூட மதிக்க மாட்டேங்குது) போன தடவ நீங்க இந்த words சொல்லிடீங்க. வேற சொல்லுங்க.

நான் அவங்க வயசுக்கு தெருவுல தான் விளையாடி இருக்கேன். ஜோடி புறா, நாடு பிரித்தல், கில்லி, பாண்டி, நொண்டி இப்பிடி நெறைய. அதே மாதிரி வீட்டுக்குள் விளையாடினால் cards, பல்லாங்குழி, தாயம், இப்பிடி. நான் செஸ், கேரம்லாம் ஆறாவது ஏழாவது படிக்கும் போது தான் விளையாட ஆரம்பித்தேன். அதுல பெருசா விருப்பமும் இல்ல. நான் வெளியில விளையாடின ஒரு விளையாட்டு கூட இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது. ஹ்ம்ம் இத விடுங்க.

அன்றும் வழக்கம் போல் "ஆன்ட்டி Rhyming words விளையாடலாம்"

"எனக்கு தூக்கம் வருதும்மா. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்" (தப்பிக்க வேற வழி?)

"இல்ல ஆன்ட்டி, நீங்க வீட்டுல போய் தூங்கிக்கலாம். இப்போ கண்டிப்பா விளையாடுறோம்"

காரில் இருந்த எல்லோரிடமும் பேசி கடைசியாக வலுகட்டாயமாக என்னையும் சேர்த்து நான்கு பேர் ரெடி பண்ணினாங்க. அந்த குட்டி பொண்ணு,குட்டி பையன், நான், பையனோட அம்மா. பையனோட அப்பா கார்ல ஏறுன உடனே தூங்க ஆரம்பிச்சிட்டதால அவங்கள விட்டுடாங்க.

ஆரம்பமே நமக்கு தான் ஆப்பு.

ஆன்ட்டி ரெடியா?

ஹ்ம்ம். ரெடிமா.

"car"

"bar"

தப்பிச்சேன் என்று மனதிற்குள் சொல்லி கொண்டேன்.
ஒரு நான்கு ஐந்து சுற்று நடந்து முடிந்தது. நாங்க போட்ட சத்தத்துல தூங்கிட்டு இருந்த அந்த பையனோட அப்பா எழுந்தாச்சு. அவங்க அரைகுறை தூக்கத்தில் அமைதியா உக்காந்து நாங்க விளையாடுவதை பார்த்து கொண்டே வர என்னோட முறை இப்போது

ஆன்ட்டி, it is your turn now.. word is "Free"

நான் சொன்ன வார்த்தை "tree"

"ஏற்கனவே சொல்லியாச்சு ஆன்ட்டி. நீங்க வேற சொல்லுங்க"

இன்னும் இரண்டு மூன்று வார்த்தைகள் நான் சொல்ல அனைத்திற்கும் அவர்கள் கூறிய பதில் "ஏற்கனவே சொல்லியாச்சு ஆன்ட்டி. "

"வேற வழி இல்லை. யோசித்தே ஆக வேண்டும். அட போங்க குட்டிங்களா" என்று எண்ணி கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.

அரை குறை தூக்கத்தில் இருந்த அந்த பையனின் அப்பா, அந்த குட்டீஸ் சொன்ன வார்த்தையை சரியாக கவனிக்காமல் "code" என்றார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க சொல்றீங்க என்று கேட்க, அவர் என்னிடம் "road க்கு code"

road ஆ? அப்பிடி எப்போ சொன்னாங்க என்று நான் குழம்பி போய் உட்கார்ந்திருக்க.
road க்கு code அப்பிடின்னு சொன்னத குட்டீஸ் கவனிக்கல, code அப்பிடின்னு சொன்னத மட்டும் தான் கவனிச்சாங்க. அத கேட்டுட்டு அந்த குட்டி பொண்ணு சிரிக்க ஆரம்பிச்சிட்டா.

உடனே அந்த பையன் "Don't feel dad" என்று சொல்ல, எல்லோரும் அவனையே பார்க்க,மறுபடி அவன் "Dont feel dad" என்றான்.

ஒன்றும் புரியாமல் நானும், அவன் அப்பா அம்மாவும் விழித்திருக்க அவனே தொடர்ந்ந்தான்."எல்லோரும் சிரிக்கிறாங்கன்னு (குட்டி பொண்ணு மட்டும் தான் சிரிச்சா) கவலை படாதீங்க டாடி. You need more practice. that's it. Here after we both will play in home. Then you will come to know more words. I ll help you . Dont worry dad." என்று சொல்லி முடிக்க அவரின் முகத்தை பார்க்க வேண்டுமே ஐயோடா.

அதோடு முடியவில்லை. அந்த குட்டி பெண் தொடர்ந்தாள் "பார்க்கலாம் next time. நெறைய words கேட்குறேன். உங்க டாடிக்கு தெரியுதா என்று பார்க்கலாம்"

அவர்கள் இருவரும் ரொம்ப சீரியஸா பேசுவதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தோம்.

இப்போதும் நான் யோசித்து கொண்டிருக்கிறேன். அந்த குழந்தைகளின் வயதில் நான் இருந்த போது இப்பிடி எல்லாம் பேச தெரிந்திருக்கவில்லை. ஏன் இப்போதும் கூட?

இப்போது அவங்கள எங்க பார்த்தாலும் "என்னங்க, training எப்பிடி போகுது" என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது.

Thursday, October 22, 2009

மீண்டும் வேண்டும்

Chennai Hostel TV hall - ஒரு பத்து பேரு உட்கார்ந்து சன் மியூசிக் பார்த்துட்டு இருந்தோம். ரூம்ல இருந்து டிவி ஹால்க்கு என் தோழி ஒருத்தி வந்தா.அந்த நேரம் பார்த்து "அடியே கொல்லுதே" பாடல்.

அவள் வந்து உட்காரும் முன், என் பக்கத்துல இருந்து ஒருத்தி "டீ, சவுண்ட் வைச்சிட்டு வா" என்று அவளிடம் சொல்ல அவள் சவுண்ட் அதிகபடுத்துவதற்கு பதில், சேனலை மாற்றி விட்டாள்.

"உனக்கு என்ன மாலைக்கண் நோயா. ஏன் டீ. ஒரு சவுண்ட் அதிகமாக்க தெரியாதா"

நான் "ஏன்டீ தெரியாம சேனல் மாத்தினதுக்கு இப்பிடி பொங்குற?"

உனக்கு என்ன தெரியும் என்று அசிங்கமா திட்ட ஆரம்பிக்க, நான் நம்ம மச்சான் பக்கம் (நம்ம சூர்யா தான்) கவனத்தை திருப்பி விட்டேன்.

சேனலை சரியாக வைத்து விட்டு என் இன்னொரு பக்கத்தில் வந்து அமர்ந்த அவள் "என்ன ராஜி, விசா வந்துடுச்சாம். எப்போ கிளம்புற"

"ஹ்ம்ம் வந்துடுச்சு. ஆனா இன்னும் date தெரியல. கிளம்புற வரை கண்டிப்பா சொல்ல முடியாது. பார்க்கலாம்"

"நான் கூட switzerland பார்க்கணும்."

"அடிப்பாவி. நானே US போறேன். என்கிட்டே எதுக்கு switzerland பத்தி சொல்ற"

"இல்ல சும்மா சொன்னேன்"

சவுண்ட் அதிகமா வைக்க சொன்ன தோழி இவளை பார்த்து "ஒரு bet டீ. நீ மட்டும் switzerland அ கரெக்ட்டா spell பண்ணிடு. நீ அங்க போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்."

அப்பிடியா என்று சொல்லி கொண்டே இவள் ஆரம்பித்தாள் "சு" "வி" "ட்" "ச' "ர்" "லா" "ந்" "து"

கேட்டவளின் முகத்தை பார்க்கணுமே. "அடிங்க ... ஒழுங்கா மரியாதையா இங்கிலீஷ்ல சொல்லு."

என்ன நினைத்தாலோ அவள் தெரியவில்லை "எனக்கு மாலை கண் நோய் மாதிரியே, மாலை மொழி (??!!??) நோயும் இருக்கு. சாயந்தரம் ஆறு மணியில இருந்து காலையில எட்டு மணி வரைக்கும் இங்கிலீஷ் பேசினாலும் புரியாது. பேசவும் தெரியாது. அதுனால நீ morning 8 - eve 6 குள்ள கேளு. சொல்றேன்."

கேட்ட அம்மணி பீட்டர் அம்மணி. ஒண்ணும் சொல்ல முடியல அவளால. அன்னைல இருந்து கொஞ்சம் பீட்டர் குறைந்து இருக்கு.
--------------------------------------------
நான் டிவி ஹாலில் இருந்து எழுந்து உள்ளே சென்றேன் சாப்பிட தட்டு எடுத்து வர.

நான் ரூம்குள்ள நுழைந்த உடன் டிவி ஹால்ல இருந்து ஒரு நாலைந்து குரல் "ராஜி. உன் அக்கா மச்சான் ..ஓடி வா டீ"

நான் ஓடி வந்து கண்ணு மண்ணு தெரியாம என் தோழியின் மடியில் உட்கார அவள் "ஐயோ என் கால் உடைஞ்சிடுச்சு. எருமைமாடு கண்ணு தெரியல. ஜோ, சூர்யாவ நீ பார்க்க என் கால ஏன்டீ உடைக்கிற"

எரும மாடுன்னு அவளே சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் நாம feel பண்ண கூடாது. சோ வேலையில் கவனம்.
நான் உருகி போய் "சூர்யா கண் மாதிரி ஒரு expressive, powerful ஆ வேற யாருக்குமே இல்ல."

என் பக்கத்துல இருந்த ஒருத்தி "என் கண்ணு கூடவா" என்று அவ கண்ணை என்னிடம் காண்பிக்க, தூக்கி போட்டு மிதிப்பேன் என்று அவளிடம் சொன்னேன்.

அதற்குள் இன்னொருத்தி "வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி இப்போ அவ கண்ண காமிச்சா" என்று சொல்ல "யார யார் கூட compare பண்ற என்று விட்டேன் ஒரு உதை"

"hostel இட்லிய வச்சு கண்ண குத்தினா என்ன ஆகும் தெரியும்ல. மாலைக்கண் நொள்ள கண் ஆய்டும் (அதே அம்மணி தான்)."

அதற்குள் இன்னொருத்தி "ஜோவ பார்க்குறதுக்கு முன்னால என்ன மட்டும் சூர்யா பார்த்துருக்கணும். அப்புறம் ஜோவ பார்த்து இருக்க மாட்டான்"

"ஜோவா பார்த்திருக்க மாட்டான் உண்மை தான். ஆனா ஒண்ணு sucide. இல்லனா சாமியார்"

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லோரும். பிச்சிபுடுவேன் பிச்சு.
-------------------------------
இந்த மாதிரி ஆயிரம் நிகழ்வுகள் எங்கள் அழகான மாலை/இரவு பொழுதுகளில் நான் சென்னையில் இருந்த வரை.

இப்போது மீண்டும் அந்த நாட்களை எதிர்பார்த்து மாலை/இரவு பொழுதுகளில் இந்த நினைவுகளோட மட்டும் ...

Friday, October 9, 2009

எனது கவிப்புலமை

பிரியா: ஏதாவது போஸ்ட் போடுடி.
நான்: Synapse ல முதல்ல ஒரு போஸ்ட போடு. ஒரு மாசமாச்சு.
பிரியா: @#$%&*(&( ^*((*^()#@(அசிங்கமாக திட்டப்படும் வார்த்தைகளுக்கு வேற எந்த மாதிரி போடலாம்னு சொல்லுங்களேன்)

சஞ்சய்: அதிசயமா போஸ்ட்லாம் போட்டுருக்க. அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்க?
நான்: யோசிச்சிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம்னு சொல்லு.
சஞ்சய்: எதையாவது எழுது போ. (என்ன ஒரு பொறுப்பான பதில். உன்ன கலாய்ச்சு ஒரு போஸ்ட் போட்ட தான் நீ அடங்குவ. )

இயற்கை: அடுத்த போஸ்ட் சீக்கிரம் போடுங்களேன்.
நான்: என்ன போஸ்ட் போடலாம்னு யோசிச்சிட்டேன்.ஆனா டைப் பண்ண தான் சோம்பேறித்தனமா இருக்கு. யாராவது டைப் பண்ணி குடுத்தா நல்லா இருக்கும். நீங்க டைப் பண்ணி தரீங்களா.
இயற்கை: ஐயோ. மறந்துட்டேன். வெளியில போகணும். போயிட்டு வந்து ping பண்றேன்.
(ஒரு ஸாரி கூட சொல்லாம எஸ்கேப் ஆய்ட்டாங்களே. வரட்டும் கவனிச்சிக்கிறேன்.)

கணேஷ்: அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்கீங்க.
நான்: இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். டைப் பண்ணனும்.
கணேஷ்: ஒரு கவிதை எழுதுங்களேன்.
நான்: ஐயயோ அதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
கணேஷ்: நீங்க ரொம்ப நல்லா போஸ்ட் போடுறீங்க. உங்களுக்கு கண்டிப்பா கவிதை எழுத வரும். எழுதி பாருங்களேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.
நான்: உண்மையா தான் சொல்றீங்களா. நிஜமா? அப்போ ஓகே. நான் ட்ரை பண்றேங்க,

அன்று முழுவதும் தூக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்து எதை பற்றி கவிதை எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

அம்மா பத்தி எழுதலாம்னு யோசிச்சா பார்த்திபன் கிறுக்கல்கள் புக்ல எழுதின கவிதை ஒரு வரி விடாம மனசுல ஓடுது, அம்மா பத்தி எழுதினா பார்த்திபன் தாக்கம் இருக்கும். அதுனால இது வேணாம்.

வேற இயற்கை (இந்த இயற்கை இல்லங்க) பத்தி எழுதலாம். நீர், நிலம், காற்று அப்பிடி ஏதாவது. ஐயோ நம்ம கவிப்பேரரசு ரிதம் படத்துல எல்லாத்தையும் பத்தி எழுதிட்டார். அதுனால இயற்கை பத்தி எழுதினா அவரோட தாக்கம் வந்துடும்.

காதல் பத்தி எழுதலாம். காதல் பத்தி நினைத்தவுடன், தபூசங்கரின் "தேவதைகளின் தேவதை" நியாபகம். எப்போதும் நியாபகம் வராத வரிகள், அப்போது தான் நியாபகம் வர தொடங்கியது.

இவங்க யார் தாக்கமும் இல்லாம நாமலே நம்ம originality படி எழுதணும். கொஞ்சம் டைம் எடுத்து நல்லா யோசிச்சு ஒழுங்கா எழுதணும் என்று மனசை தேற்றியபடி தூங்கி போனேன்.

மறுநாள் ஆபீஸ் போய் உட்கார்ந்து client க்கு மெயில் அனுப்ப டைப் பண்ண ஆரம்பித்தேன். ஏதோ கவிதை டைப் பண்ணுவது போல் ஒரு பீலிங். தலையை உதறி கொண்டு சுய நினைவிற்கு வந்தவளாய் ஒழுங்காக மெயில் அனுப்பினேன். அதன் பிறகு கணினி திரையை வெறித்து பார்த்து கொண்டு, மரங்களை உற்று நோக்கி கொண்டு, லஞ்ச் டேபிளில் தோசையை கையில் வைத்து கொண்டு சாப்பிடாமல், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் எதை பற்றி கவிதை எழுதலாம் என்று ஒரே யோசனை.

எதை பார்த்தாலும் அதை பற்றி கவிதை எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம்.
கடைசியாக மனதிற்குள் ஒரு மின்னல் அடிக்க கை பர பரவென இயங்க தொடங்கிவிட்டது.
"புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த‌
சிரிப்பில் சிக்கியது
ஒரு வ‌ழியாக‌
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக‌ இள‌மையாக‌
அழகிய தாவணியுடன்
வந்ததும் அத‌ன்
அவ‌ள் ம‌டிப்பில்
ம‌டிந்தது
*
*
*
இப்ப‌டியான‌ என‌து
ப‌தின் ப‌ருவ‌த்து
காத‌ல் நெருப்பு
ஒருவ‌ர் கை மாறி
ஒருவ‌ர் கை செல்லும்
ஒலிம்பிக் தீப‌ம்போல் அணையாம‌ல்"

கவிதை எழுத சொன்னவரிடம் இந்த பதிவை காண்பிக்க, அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இந்த கவிதையினால் என்று நினைத்து கொண்டால், மிக சரியே.

இந்த கவிதை நல்லா இருக்குன்னு ஆச்சரியத்துல இல்ல, இந்த கவிதை அவரோடதுங்குற அதிர்ச்சியில்.

ரொம்ப யோசிச்சு நம்மளால ஒரு கவிதை எழுத முடியல. அதுனால மான ரோசமெல்லாம் துடைத்து போட்டு விட்டு அவோரட கவிதையை எடுத்து இங்கு போட்டு விட்டேன்.

Tuesday, October 6, 2009

என் பார்வையில் பாம்புகள்

நான் நேத்து கோயிலுக்கு போய் இருந்தேன். ஒரு 5 தலை பாம்பு பார்த்தேன். நாம தப்பு பண்ணினா அது நம்மள கொத்திடுமாம். பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. என் நினைவில் இருக்கும் இந்த உரையாடல் தான் பாம்பு பத்திய எனது வாழ்கையின் முதல் உரையாடலாக இருந்திருக்க வேண்டும். அந்த கதைய கேட்டுட்டு உண்மையான்னு கூட கேட்க தெரியாத வயசுல பயந்துகிட்டு வேப்பிலை ஒடித்து பாக்கெட்ல வச்சிகிட்டு ஊரு சுத்தினோம். வேப்பிலை வைச்சிருந்தா பாம்பு, பேய்லாம் நம்மகிட்ட வராதுன்னு நம்ம தோழிகள் சொன்னது தான் இதுக்கு காரணம்.

கொஞ்சம் நான் வளர்ந்ததுக்கு அப்புறம் பாம்பு அப்பிடின்னு கேட்டா "பாம்பு ஊர்வன வகையை சேர்ந்தது. பாம்புக்கு கால்கள் கிடையாது...." படிச்சத மாத்தாம ஒப்பிபோம்ள. பாம்புனா ஒரு நாலஞ்சு வகை தான் அப்போ தெரியும். நாக பாம்பு.. அப்பிடி சொல்ல கூடாது, ராஜ நாகம் அப்பிடின்னு தான் சொல்லணும்னு என் தோழிகள் சொல்லி கொடுத்தாங்க. இது தான் எல்லா பாம்புக்கும் ராஜா. அப்புறம் எங்களுக்கு தெரிஞ்ச பாம்புகள் கட்டு விரியன், தண்ணி பாம்பு, பச்ச பாம்பு, அப்புறம் ஒரு பறக்கும் பாம்பு. பச்ச பாம்பு செடில மட்டும் தான் இருக்கும். பறக்குற பாம்பு பறந்து வந்து கண்ணை கொத்திடும். இப்படி எல்லாம் எனக்கு வகுப்பு எடுத்தாங்க எனதருமை தோழிகள்.

சின்ன பொண்ணுங்கன்னு சொல்லி எங்க ஸ்கூல்ல சிறுவர் சிறுமிகள் பார்க்கும் படத்துக்கு வருடம் ஒரு முறை கூட்டிட்டு போவாங்க. அந்த மாதிரி ஒரு படத்துக்கு போனோம் "அன்பின் அலைகள்". இப்பிடி ஒரு படம் இருக்கான்னு கூட யாருக்கும் இப்போ தெரியாது. அதுல நாகேஷ் நடிச்சி இருப்பாரு. ஒரு சிறுவனும் அவனோட நாயும் ஒரு பாலைவனத்துல மாட்டிப்பாங்க. அவங்கள அவன் குடும்பம் எப்புடி கண்டுபிடிச்சு காப்பாத்துறாங்க அதான் கதை. அதுல ஒரு விஷ பாம்புகிட்ட இருந்து அந்த குட்டி நாய் அந்த சிறுவனை காப்பாற்றும். அத பார்த்து நான் அழுதது தனி கதை. பாம்பு ஒரே ஒரு சீன்ல தான் வரும்னாலும் பாம்பு படம்னா எனக்கு நியாபகம் வரும் படங்களில் இதுவும் ஒன்று.

இன்று வரை எனக்கு ஒரு புன்னகையை கொண்டு வரும் பாம்பு படங்களில் முதலிடம் துர்கா தான். படம் பார்த்த பிறகு ஏனோ ஒரு இனம் புரியாத பாச உணர்வு பாம்புகளின் மேல்.

எங்க தாத்தா பாட்டி ஊரு ஒரு கிராமம். என் எல்லா வார விடுமுறைகளும் அவங்க கூட தான். வீடு ரொம்ப பெருசு. அத விட தோட்டம் பெருசு. அது போல பாம்புகளும் அதிகம். அதுவும் வெயில் காலம்னா வெயில் தாங்காம நெறைய பாம்பு வெளியில வரும்னு என் பாட்டி சொல்லுவாங்க. அந்த வயசுல நான் பார்த்த பாம்புகள் ரொம்ப அதிகம். என் கருப்பு ரிப்பன் பக்கத்துல ஒரு பாம்பு, கழுவி கவிழ்த்து வச்ச என் தட்டுக்கு கீழ ஒரு பாம்பு, பிறந்து சில மாதங்களே ஆன எனது தம்பிக்கு தலைக்கு வைத்திருந்த துணிக்கு கீழே ஒரு குட்டி பாம்பு, வடகம் காய வைக்கும் துணியில வடகத்தை சுத்தி கொண்டு ஒண்ணு, எனது சித்தியின் கைகளுக்கு மிக அருகில், இப்படி சொல்லி கொண்டே போகலாம். இன்று வரை மறக்கவில்லை. இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கின்றன அத்தனை பாம்புகளும்..

இத்தனை பாம்புகளை பார்த்து விட்டதாலோ என்னோவோ பாம்பை பற்றிய பயம் சிறிது இருந்தும் பாம்புகள் மீதான ஆர்வம் அதிகமாகி விட்டது. அதன் பிறகு பாம்பை பற்றி யாரு என்ன பேசினாலும் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். அதில் என்னை இன்று வரை யோசிக்க வைப்பது என் பாட்டி சொன்ன வார்த்தைகள். "குழந்தைகள் இருக்குற வீடு சுத்தமா இருக்கணும். இல்லனா தாய்ப்பால் வாசனைக்கு பாம்பு வந்துடும்."அது உண்மையா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இது உண்மையோ என்று என்னும் வகையில் சில சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை ஸ்கூலில் என் சைக்கிள் சீட்டில் ஒரு பாம்பு. அப்போது எங்க ஸ்கூலில் வேலை பார்த்த ஒரு அண்ணன், அதன் வால் பகுதியை பிடித்து அதன் தலையை மரத்தில் அடித்து கொன்றார். இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விட்டது. அதன் பிறகு சில மாதங்கள் அந்த அண்ணன் பாம்பை கொன்ற புராணம் தான் பார்க்கும் எல்லோரிடமும்.

கனவில் பாம்பு வந்துச்சுன்னு சொன்னா எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி, அது கொத்துச்சா இல்லையானு தான். எனக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். 10 தடவ வந்துச்சுனா ஒரு தடவை போனா போதுனு கொத்திட்டு போகும். மத்தபடி ஓட ஓட விரடிட்டு கொத்தாம போய்டும்.

நான் காலேஜ் முதல் வருடம் படித்து கொண்டிருந்த போது, ஒரு நாள் மாலையில் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்து என் தோழிகளிடம் பேசிட்டு இருந்தேன். பக்கத்து ரூமில் இருந்து சத்தம் "பாம்பு, பாம்பு".... நான் அந்த ரூம்க்கு ஓடி பார்த்தால் ஒரு பாம்பு தரையில் அங்கும் இங்கும் ஓடிட்டு இருந்தது. ரொம்ப பெருசும் இல்ல, ரொம்ப குட்டியும் இல்ல. அந்த ரூம்ல இருந்த பொண்ணுங்க எல்லாம் கட்டில் மேல நின்னுட்டு இருந்தாங்க. பாம்பு போயிட்டு இருந்த ஸ்பீட் பார்த்தா கண்டிப்பா எங்கயாவது கண்ணுக்கு தெரியாம ஓடி ஒளிஞ்சிடும்னு பயம்.

எப்பிடி பண்ணினேன்னு இப்போ வரைக்கும் தெரியாது. ஒரு பக்கெட் எடுத்து பாம்பு மேல தலை கீழா கவிழ்த்து போட்டு உட்கார்ந்துட்டேன். எல்லோரும் பார்த்து பார்த்துன்னு கத்துனாங்க. அதுக்குள்ளே ஒரு பத்து பேர் சேர்ந்துட்டாங்க. நானோ "ஓடி போய் செக்யூரிட்டி அண்ணாவ கூட்டிட்டு வாங்க இல்லன ஒரு கம்பு எடுத்துட்டு வாங்க" அப்பிடின்னு கத்துறேன்.

நான் சொன்னத கேட்டுட்டு ரெண்டு, மூணு பேர் ஓடினாங்க. ஆனா அதுக்குள்ள பக்கெட்குள்ள பாம்பு எல்லா பக்கமும் ஓட ஆரம்பிச்சிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. ஏதோ ஒரு தைரியம் வர, ஒரே ஒரு பக்கம் மட்டும் பக்கெட்டை ரொம்ப ரொம்ப கொஞ்சமா திறந்தேன். அது தலையை நீட்டி வெளியே வர முயற்சிக்க, பக்கெட்டின் விளிம்பை வைத்து தலையை நன்றாக நசுக்கி கொன்று விட்டேன். அதை பார்த்த என் தோழிகள் எல்லாம் இன்று வரை கிண்டல் செய்வார்கள். பாம்பை நான் கொன்றது ஆச்சர்யம் இல்லை. அந்த பக்கெட் எப்பிடி என் வெயிட் தாங்குசுன்னு தான். அப்பிடி வெயிட் தாங்காம பக்கெட் உடைந்திருந்தாலும் நான் பாம்பு மேல் விழுந்து பாம்பு செத்திருக்குமாம்.

பாம்பு பற்றி படமோ, இல்லை நினைப்போ அதிகமாக இல்லை, சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கிய "நடந்தது என்ன- குற்றமும் பின்னணியும்" நிகழ்ச்சியில், ஒரு சிறுவன் பாம்பை போலவே இருக்கின்றான், ஒரு பெண்மணியை பதினெட்டு முறை பாம்பு கடித்து இருக்கிறது என்ற செய்திகளை கேட்கும் வரை.அதன் பிறகு ஒரு முறை அனகொண்டா படம் பாத்தேன்.

இப்போது ஏனோ பாம்புகளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்திருக்கிறது. எத்தனை நாள் இந்த ஆர்வம் இருக்கும் என்று தெரியவில்லை. அதே போல் பாம்பு பற்றி நான் தெரிந்து கொள்ள எந்த அளவு முயல்வேன் என்றும் தெரியவில்லை.ஆனாலும் பாம்பு என்று யார் சொன்னாலும், இல்லை நான் நினைத்தாலும், பயம் சிறிது வந்தாலும் ஒரு இனம் புரியாத பாசம் தான் அதிகமாக இருக்கிறது.

Friday, October 2, 2009

Dialer Tone!!!

"ஜில்லென்று ஒரு காதல்..." என்று தன்வி பாட ஆரம்பிக்கும் முன் call ஐ கட் செய்து விட்டார்கள்.

சே என்று திட்டி கொண்டே மொபைலை பார்க்க எனது தோழி ஒருத்தி missed call கொடுத்திருந்தாள்.

அவளை திரும்பி கூப்பிட்ட உடனே திட்ட ஆரம்பித்து விட்டேன் "நீ போன் பண்ணினா நான் அட்டென்ட் பண்ண மாட்டேன். திரும்பி கூப்பிடுவேன்னு தெரியும்ல. அப்புறம் என்ன. ஒரு நாலஞ்சு ரிங் விட வேண்டியது தானே"

"ஏன் கத்துற. என்ன ஆச்சு இப்போ"
"பின்ன .. எப்போதும் மியூசிக் மட்டும் தான் கேட்க முடியுது. தன்வி வாய்ஸ்ல "JOK" song கேட்கவே முடிய மாட்டேங்குது"

"நீ திருந்த மாட்டியா. நல்ல வேலை நீ அங்க இருக்கிறதுனால dialer tone/hello tune அப்பிடின்னு எங்க உயிரை வாங்கல."

"ஆமா. ரொம்ப கவலையா இருக்கு. கூடிய சீக்கிரம் இந்தியா வருவோம்ல. அதுவும் இல்லாம என் சென்னை நம்பர் deactivate பண்ணல. அம்மா கிட்ட தான் இருக்கு. நான் டெய்லி dialer tone கேட்டுட்டு தான் இருக்கேன்."

"ஐயயோ"
"சரி உனக்கு ஒரு போட்டி. நான் என்னன்னா பாட்டுலாம் dialer tone ஆ வைச்சிருந்தேன்னு சொல்லு பார்க்கலாம்"

"போடி பொழப்பத்தவளே. ISD பேசிட்டு இருக்க. நியாபகம் வைச்சிக்கோ"
"எனக்கு அது தெரியும். நீ சொல்லு"

"போன் பண்ணி எப்பிடி இருக்க, friends எப்பிடி இருக்காங்க, உன் சென்னை எப்பிடி இருக்கு அப்பிடி எதுவும் கேட்காம, லூசு மாதிரி என்ன dialler டோன், அப்பிடி இப்பிடின்னு கேட்டுட்டு இருக்க"

"ஏய், சொல்லு .. நான் என்ன என்ன tone வைச்சிருந்தேன்னு"

என்னிடம் இருந்து தப்ப முடியாது என்று தெரிந்து கொண்டு"இரு யோசிச்சு சொல்றேன்... hmmmmmmmm
முதல்ல "நியூயார்க் நகரம்... அப்புறம் "என்னை தேடி காதல் ..... "
கொஞ்சம் யோசிச்சிட்டு "விழி மூடி யோசித்தால் ..."

"போடி லூசு.. நீ ஒரு song மறந்துட்ட.. மரியாதையா யோசிச்சு சொல்லு..
கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு "போடி. அவ்வளவு தான்."

"நல்லா யோசிடி"
"தெரியலடி . நீயே சொல்லி தொலை" அவள் குரலில் எரிச்சல். அதெல்லாம் கண்டுக்க முடியுமா. தொடைச்சி போட்டுட்டு சொன்னேனே

First dialer tone "Newyork nagarm.." அடுத்து "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..." அடுத்து "மாப்பிளைக்கு நிச்சயதர்த்தம் .." வைச்சிருந்தேன். அப்புறம் தான் "விழி மூடி யோசித்தால்... "

"மாப்பிளைக்கு நிச்சயதர்த்தம் ..." இது எந்த படம்?"அடி பாவி.. இது கூட தெரியலையா மக்கு மக்கு (எத்தன தடவை எனக்கு படம் தெரியலன்னு திட்டி இருப்பாங்க,.. ).. சரோஜா படம்.. நம்ம சின்ன திரை நட்சத்திரங்கள் ஆடுவாங்களே. நம்ம DD கூட வருவாளே. விஜய் யேசுதாஸ் பாடினது"

"அட ஆமா. மறந்து போச்சு....... நீ அங்க தனியா இருக்கே.. சரி பாவம் பொண்ணு பேசலாம்னு போன் பண்ணினா.. என் உயிரை இப்பிடியா வாங்குற.. இனி போன் பண்ணினா பார்த்துக்கோ."

"ஹலோ ஹலோ வெயிட்.. போன் பண்ணினா இல்ல.. missed call கொடுத்தா"
"உன்னை திருத்தவே முடியாதா"

"எதுக்கு திருத்தணும். எனக்கு என்ன குறைச்சல். சரி இன்னொரு போட்டி... "
"அம்மா தாயே இன்னைக்கு போதும். இன்னொரு நாள் பேசுறேன்.. வைக்கிறேன்.. bye"
"bye" (ஐயோ எஸ் ஆயிட்டாளே. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்)

ஆனா எனக்கு தெரிஞ்ச நெறைய பேருக்கு dialer tone பிடிக்க மாட்டேங்குதே. ஏன்னு எனக்கு தெரியல. என் friends நெறைய பேரு "மாசம் முப்பது ரூபா வெட்டி செலவு" அப்பிடின்னு திட்டுவாங்க.

இன்னும் கொஞ்ச பேரு "வைக்கிறது தான் வைக்கிற. உனக்கு பிடிச்ச பாட்டு ஏன் வைக்கிற."
நாம தான் அறிவாளி ஆச்சே "எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி வைக்க முடியாது, அதுனால எனக்கு பிடிக்கிற மாதிரி வைச்சிருக்கேன்."

ஒரு முறை நம்ம "Project Lead" ஏதோ issue பத்தி பேசணும்னு ரொம்ப அவசரமாக கூப்பிட நம்ம மொபைல் "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு... " என்று பாடி கொண்டே இருக்க.. மறுநாள் ஆபீஸில் issue பத்தி கூட பேசாமல், உன் பர்சனல் calls க்கு மட்டும் dialer tone வைக்க வேண்டியது தானே, எதுக்கு எல்லோருக்கும் வைச்சிருக்க என்று அட்வைஸ் பண்ண... எருமை மாட்டு மேல் மழை பெய்த reaction தான்..

ஒரு பக்கம் ஆளுக்கு ஆள் இப்பிடி சொல்லி கொண்டிருக்க, எனக்கு சந்தோசத்தை கொடுத்த ஒரு அம்மணி இருக்காங்க.

முக்கியமாக ஒரு வேலை ஆபிசில் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு கால்.. ஒரு நாலைந்து ரிங் விட்டு எடுக்க
"மேடம், நான் **** bank ல இருந்து பேசுறேன். இப்போ லோன் எடுத்தா 14% interest தான். உங்களுக்கு டைம் இருக்கா. பேசலாமா."
"நான் ஏற்கனவே லோன் வைச்சிருக்கேன் மேடம். வேண்டாம்."

"ஓகே மேடம். ஒரு question. தப்பா நினைக்காதீங்க."
"கேளுங்க"

"இந்த dialer tone எந்த படம்?"
மனதிற்குள் மகிழ்ச்சி போங்க "இது படம் இல்லங்க. விஜய் டிவில "காதலிக்க நேரமில்லை" அப்பிடின்னு ஒரு சீரியல். அந்த சீரியல் டைட்டில் சாங்."
"first line ஒரு முறை சொல்ல முடியுமா"
"என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு.. .."

"மேடம், நான் திரும்பி கால் பண்ணி ஒரே ஒரு தடவ இந்த சாங் கேட்டுகிறேன். நீங்க என் கால் அட்டென்ட் பண்ணாதீங்க"

"ஓகே. no problem. நான் ஒரு question கேட்கட்டுமா"
"கேளுங்க மேடம்"
"உங்க பேரு?"
"ப்ரியா"

சத்தியமாக நான் பேசிய ப்ரியாவிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் கூகிள் பண்ணி பதில் சொல்லும் மக்களே, இந்த "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..." என்ற பாடலை பாடியது யார் என்று கண்டுபிடித்து தாருங்களேன். எப்போதும் பாட்டு பற்றி கேள்வி கேட்கும் ப்ரியா கூட பதில் சொல்லலாம்.

நான் உன்ன post போடுன்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். நானே ஒரு மொக்கைன்னா என்ன விட மொக்கையா இப்பிடி ஒரு போஸ்ட் போடுவன்னு தெரிஞ்சிருந்தா போஸ்ட் போடுன்னே சொல்லி இருக்க மாட்டேன். நீ எந்த dialer tone வைச்சிருந்தா எங்களுக்கு என்ன?

"ஹா ஹா ஹா.. அத பத்தி எனக்கு கவலை இல்ல. நீ ஏதாவது எழுத சொன்ன.. நானும் எழுதிட்டேன். ஒழுங்கு மரியாதையா படிச்சிட்டு கமெண்ட் போடு."

hmmmmmmmmm சரி........ அடுத்து என்ன பாட்டு வைக்கலாம்?