Tuesday, June 30, 2009

Children of Heaven - இந்த ஈரானிய படத்தை பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது. நல்ல படம் என்று எனது நண்பர் ஒருவர் சொல்லி இதை பார்த்தேன். இந்த மாதிரி மிக அழகாக ஒரு படம் எடுக்க முடியுமா என்று நான் வியந்து போய் அமர்ந்திருக்கிறேன்.

இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 9 வயது சிறுவன் ஒருவன் தனது தங்கையின் ஷூ வை தொலைத்து விட்டு வீட்டின் ஏழ்மை சுழ்நிலை காரணமாக பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தங்கையுடன் சேர்ந்து எப்பிடி சமாளிக்கிறான், எப்பிடி தன் தங்கைக்கு ஷூ வாங்க முயற்சிக்கிறான் என்பது தான்.

அந்த படத்தின் உயிர் நாடியே அந்த இரு குட்டீஸ் தான் என்று நான் சொல்ல நினைக்கையில் அந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளாக என் கண்முன் வந்து எதை விடுவது மற்றும் எதை சொல்வது என்று யோசிக்க வைத்து ஒட்டு மொத்தமாக மிகவும் அருமையான கதை என்று சொல்ல வைக்கிறது.

அந்த இரு குட்டீசும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். தங்கையின் ஷூ வை தொலைத்து விட்டு பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று தங்கைக்கு பென்சில் கொடுப்பதாகட்டும், ஷூ தொலைத்து விட்ட சோகத்திலும் சோப்பு நுரையை பார்த்த உடன் அதை ஊதி விளையாடுவது ஆகட்டும், காட்சிகள் மிக அழகாக, இயல்பாக இருக்கின்றன. இப்படி சொல்ல ஆரம்பித்தால் அனைத்து காட்சிகளையும் விவரிக்க வேண்டி இருக்கும்.

விஜய், பேரரசு எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஏற்கனவே பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் இப்படி நடிக்கவோ, இல்லை இயக்கவோ மாட்டார்கள். விஜய் ரசிகர்கள் இதை படித்து விட்டு எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம். ஆட்டோவில் வருபவர்களிடம் இந்த படத்தை காண்பித்தால், கண்டிப்பாக திரும்பி வந்து உங்களை தான் அடிப்பார்கள். அப்பிடி ஒரு அழகு படம்.

இந்த படம் பார்த்து முடித்தவுடன் இதன் நினைவுகள் நம்மையும் அறியாமல் நம் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இந்த படத்தை இத்தனை நாட்களாக பார்க்காமல் விட்டு விட்டோமே என்று நான் மிகவும் கவலைப்பட்டேன். நான் கவலையாய் இருக்கும் போதோ இல்லை சந்தோசமாக இருக்கும் போது, நான் பார்க்க வேண்டிய படம் இது தான் என்று முடிவெடுத்து விட்டேன். இந்த படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து பாருங்கள். ஒரு நல்ல படத்தை விட்டு விடாதீர்கள். பார்க்கும் எல்லோரிடமும் இதை தான் சொல்லி கொண்டிருக்கிறேன்.

----------------------------------------------------------------------------------

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக மோசமாக இருந்துதுன்னு சாமிகிட்ட சொன்னேன்ல. அதான் இந்த வாரம் சாமி அருள் புரிந்து விட்டார். நான் இருக்குற இடத்துல இருந்து பக்கத்துல ஒரு கோவில் இருக்கு (ஒரு 40 மைல் தான்). என்னோடு வேலை பார்க்கிற மற்றும் சில அபார்ட்மென்ட் நண்பர்களும் கோவிலுக்கு சென்றோம். ஏதோ கும்பாபிஷேகம் என்ற அளவில் மட்டும் கேள்வி பட்டு அங்கு சென்றால், அப்பப்பா எவ்வளவு கூட்டம். எத்தனை இந்தியர்கள். நம்ம ஊரு மக்களை பார்த்தாலே ஒரே ஜாலி தான். மதியம் 11 மணிக்கு ஆரம்பித்த பூஜை முடிய மூன்று மணி ஆகி விட்டது. மிகவும் மன நிறைவுடன் இருக்கிறேன்.----------------------------------------------------------------------------------

இந்த பதிவிட்ட சஞ்சய்க்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. பிறந்தநாள் அன்று இனிப்பு சாப்பிட சொல்லி எனது அக்காவும், நண்பர் ஒருவரும் மிக அக்கறையுடன் சொன்னார்கள்.ஆனால் இந்த பல்வலி பாடாய் படுத்துகிறது. சாப்பிடவே முடியவில்லை. அவர்களின் பேச்சை அடுத்த பிறந்த நாளிலாவது கேட்கிறேன் :)

ஆபீஸில் நான் "ரொம்ப பல் வலிக்குது. சாப்பிட முடியல. என்ன பண்றது. எரிச்சலா இருக்கு. பசிக்குது"

நண்பர் ஒருவர் "கண்ணை மூடிக்கோ"

"ஏன்"

"ஒரே குத்து. பல் வந்துடும். வலியே இருக்காது"

"பொக்கவாய் ஆக்கலாம்னு ஐடியாவா?"

"சரி, இடுக்கி இருந்த பிடிங்கிடலாம். அதுவும் நீயே பண்ணிக்கோ"

"அப்பிடியே எதையாவது சேர்த்து பிடிங்கிட்டேன்னா பேச முடியாம கொஞ்ச நாள் கஷ்டப்படணும்"

"அது தான் எங்களுக்கு வேணும். உன் தொல்லை தாங்கல. பாரு இப்போ கூட இந்த வலியோட எத்தன பேசுற"

"ராஜி இல்லனா தான் அவ அருமை தெரியும். பேசுறது ஒரு கலை. எல்லோருக்கும் வராது. அதுனால குறை சொல்லாதீங்க"

பின்ன என்ன மானம் ரோசம்லாம் பார்த்து பேசாம இருக்க முடியுமா?

விட்டு தள்ளிட்டு பல்லு வலிக்கிற பக்கம் தாடைய பிடிச்சிட்டு பேச ஆரம்பிச்சாச்சு.

11 comments:

R.Gopi said...

//விஜய், பேரரசு எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஏற்கனவே பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் இப்படி நடிக்கவோ, இல்லை இயக்கவோ மாட்டார்கள். விஜய் ரசிகர்கள் இதை படித்து விட்டு எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம். ஆட்டோவில் வருபவர்களிடம் இந்த படத்தை காண்பித்தால், கண்டிப்பாக திரும்பி வந்து உங்களை தான் அடிப்பார்கள்.//

************

ha ha ha super......... But, avanga thirundha maattanga...

//"ராஜி இல்லனா தான் அவ அருமை தெரியும். பேசுறது ஒரு கலை. எல்லோருக்கும் வராது. அதுனால குறை சொல்லாதீங்க"//

********

Evlo periya UNMAIya ivlo saadhaaranamaa solliteenga..... Adheane, NIZHALIN ARUMAI, VEYIL THAANE THERIYUM.......

வெட்டிப்பயல் said...

டவுன்லோடை போட்டுட வேண்டியது தான் :)

....

ஞானப்பல் வந்ததற்கு வாழ்த்துகள்!!! ட்ரீட் எப்ப?

சந்தனமுல்லை said...

//பின்ன என்ன மானம் ரோசம்லாம் பார்த்து பேசாம இருக்க முடியுமா?//

ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க போலிருக்கே ராஜி! :-)

சந்தனமுல்லை said...

//விஜய், பேரரசு எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஏற்கனவே பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் இப்படி நடிக்கவோ, இல்லை இயக்கவோ மாட்டார்கள்.//

ஹிஹி

kanagu said...

/*விஜய், பேரரசு எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஏற்கனவே பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் இப்படி நடிக்கவோ, இல்லை இயக்கவோ மாட்டார்கள். விஜய் ரசிகர்கள் இதை படித்து விட்டு எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம். ஆட்டோவில் வருபவர்களிடம் இந்த படத்தை காண்பித்தால், கண்டிப்பாக திரும்பி வந்து உங்களை தான் அடிப்பார்கள். அப்பிடி ஒரு அழகு படம்.*/

இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி :)

/*"அது தான் எங்களுக்கு வேணும். உன் தொல்லை தாங்கல. பாரு இப்போ கூட இந்த வலியோட எத்தன பேசுற"*/

பரவாயில்லையே சொன்னத அப்பிடியே போடுரீங்களே :)

பாலமுருகன் said...

ராஜலட்சுமி இந்த மாதிரி உலக தரத்திலான படங்கள் நிறைய இருக்கு நிறைய பாருங்க . வேணும்னா நான் சொல்ற சில படங்கள ட்ரை பண்ணி பாருங்க .
LIFE IS BEATIFUL
PIANIST
APPLE
EVELYN

Mathu Krishna said...

akkaa... epdi irukkireenga??
I too watched this film recently, really a wonderful movie, specially, the relationship between the siblings, I remember these kind of scenes at my home too:)

//பின்ன என்ன மானம் ரோசம்லாம் பார்த்து பேசாம இருக்க முடியுமா?//
naama ellaam yaaru??!! hahaha!
rajikkaa, join the club!!!
:))

வண்ணத்துபூச்சியார் said...

http://butterflysurya.blogspot.com/search/label/The%20Keys%20To%20The%20House

இந்த சினிமாவும் பார்க்கலாம்.

Princess said...

children of heaven is a really beautiful movie.. :D

and belated birthday wishes to you

sakthi said...

இன்னும் இந்த படத்த பாக்கல.. டவுன்லோட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்..!

Thenral said...

Ama Children of heaven super padam!Aduvum andha paiyan running race odra oru scene podhum;oru paanai sotruku oru soru padham!