Thursday, June 25, 2009

நன்றி கடன்

என் கல்லூரி தோழிகள் எல்லோரும் பெரிய படிப்ஸ். அதுங்க கூட நான் எப்பிடி ஜாயின்ட் அடிச்சேன்னு எனக்கு தெரியல. அதுலயும் ஒருத்தி இருக்கிறா கிர்த்திகான்னு, ரேங்க் ஹோல்டர். அவ ரேங்க் ஹோல்டர் ஆனதுக்கு கூட அவ்வளவு சந்தோஷ படல. நானும் அவளும் வேற வேற டிபார்ட்மென்ட்ன்னு தான் அவளுக்கு சந்தோசம். அவ ECE, நான் IT. சிலபஸ் வந்த உடனே நான் பார்க்கிற முதல் வேலை, ECE க்கும் IT க்கும் ஏதாவது common paper இருக்கான்னு தான். ஏன்னா மேடம் ஒரு வரி விடாம படிச்சி நமக்கு கதை சொல்லிடுவாங்க. நாம அந்த கதைய கேட்டுட்டு போய் எங்க dept ல இருக்குற பொண்ணுங்க கிட்ட கதைய விடுவோம்ல. அவ சொல்லி குடுத்தா நாம அந்த சப்ஜெக்ட்ல கண்டிப்பா 80% வாங்கிடுவோம். ஆனா நமக்கு தான் நம்ம லக் நமக்கு முன்னாடி போய் நிக்குமே. ஒரு மூணு பேப்பர் தான் common ஆ வந்துச்சு. எவ்வளவு பாவம் நான்.

அவளுடைய bed எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ bed ல படுத்துகிட்டு அவள கிண்டல் பண்ணுற சுகம் இருக்கே அது தனி சுகம். நான் ஹாஸ்டலில் இருக்கும் நேரங்களில் முக்கால்வாசி நேரம் அவளுடைய bed இல் படுத்துக்கொண்டு அவளை கிண்டல் பண்ணி கொண்டோ இல்லை படித்து கொண்டோ இருப்பேன். சத்தியமா பாட புத்தகம் இல்லங்க. நமக்கு ராஜேஷ் குமார், சுஜாதா, வைரமுத்து இப்படிங்கற பேரு தான் நல்லா தெரியும்.

அவளும் என் பக்கத்துல உட்கார்ந்து படிச்சிட்டு இருப்பா. அவ கைல பாட புத்தகம் தான்னு தனியாலாம் சொல்ல மாட்டேன். அவ நமக்கு புரியாத மாதிரி Denis Ritchie, Kenneth Thompson அப்பிடின்னு பேசி நம்ம வயித்தெரிச்சல கொட்டிப்பா. அவ படுக்கணும்னு நினைச்சா கூட முடியாது. நாங்க தான் அவ bed ல ஒய்யாரமா படுத்துகிட்டு படிச்சிட்டு இருப்போம்ல. அவளுக்கு ரொம்ப நல்ல மனசு. நானா எழுந்துரிச்சு போகுற வரைக்கும் எழுந்திரினு சொல்லாம ரொம்ப சின்சியரா படிப்பா.

ஆனா மேடம் சூப்பரா கவிதை எழுதுவா. ரொம்ப செலக்டிவா ஸ்டோரி புக்ஸ் படிப்பா. அதுவும் செமஸ்டர் ஆரம்பிக்கும் போது முதல் ஒரு மாசம் தான். அப்புறம் பாட புத்தகம் தான். அவளுக்கும் எனக்கும் இருக்குற ஒரே ஒற்றுமை என்னனா நாங்க ரெண்டு பேரும் ரமணி சந்திரன் புக் பார்த்தாலே தெறிச்சு ஓடிடுவோம். எங்க காலேஜ்ல ரமணி சந்திரன்னா உயிரை விடுற நெறைய பேரு இருக்காங்க. ஆனா நாங்க அந்த புக் பார்த்தாலே அந்த இடத்துல இருந்து தெறிச்சுடுவோம். இல்லனா அந்த இடத்துல அந்த புக் வைச்சுருக்கவங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சின்ன சண்டை வந்து விடும்.

அவள் மற்றவர்களிடம் இதை பற்றி கோவமாக பேசும் போது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக கூட இருக்கும். ஆனா அப்போ வேற யாராவது சப்ஜெக்ட் பத்தி பேசுனா அவளோட கவனம் படிப்பு பத்தி திரும்பிடும். நான் எப்போதும் சொல்லுவேன் "உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்"

எப்பிடியோ நானும் நாலு வருசமும் அவ உயிரை வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ அவளும் நம்மள மாதிரி software ல தான் குப்பை கொட்டிட்டு இருக்கா. இப்போவும் அவள பார்க்கிறப்போ, இல்ல பேசுறப்போ அவள கிண்டல் பண்ணாம விடுறது இல்ல. ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம். அவளும் நானும் ஒரே ஆபிஸ்ல இல்ல குறைஞ்சது ஒரே domain ல இருந்திருந்த நான் கவலையே இல்லாமா ஜாலியா என் வாழ்க்கைய என்ஜாய் பண்ணுவேன். அவ என் வேலைய செஞ்சு கொடுத்துருப்பா. பாருங்க இப்போவும் நான் தான் பாவம்.

நான் அவகிட்ட எப்போதும் சொல்ற விஷயம் என்னனா, அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது.

அந்த நன்றி கடன் இருக்கணும்ல. கொஞ்சம் கூட அந்த நன்றி கடனே இல்ல. என்ன உலகமடா சாமி. இத படிசிட்டாவது எனக்கு அவ பணம் டிரான்ஸ்பர் பண்ணட்டும். பார்க்கலாம்.

இத நான் சொன்ன உடனே அவ சொன்ன டயலாக் என்ன தெரியுமா. இப்படியெல்லாம் கேடி தனமா நீ யோசிக்கிறியே உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்.

20 comments:

ஆயில்யன் said...

//நான் அவகிட்ட எப்போதும் சொல்ற விஷயம் என்னனா, அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது.//


கரீக்ட்டா டீல் பண்ணியிருக்கீங்க!
நீங்க சொல்றது ரொம்ப சரி வுடாதீங்க முடிஞ்சா எதாச்சும் கேஸ் போட்டாச்சும் சம்பளத்துல ஒரு பாதி பிச்சு வாங்கிடுங்க பாஸ் :)))

ஆயில்யன் said...

//அந்த நன்றி கடன் இருக்கணும்ல. கொஞ்சம் கூட அந்த நன்றி கடனே இல்ல. என்ன உலகமடா சாமி. இத படிசிட்டாவது எனக்கு அவ பணம் டிரான்ஸ்பர் பண்ணட்டும். பார்க்கலாம்.//


மீ த வெயிட்டிங்க்!

நாங்களும் பார்க்க குந்தியிருக்கோம் பணம் டிரான்ஸ்பர் ஆன செய்தியை கூடிய விரைவில் சொல்லுங்க :)))

ஆயில்யன் said...

//உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்//


சான்ஸ்லெஸ்

உங்க ப்ரெண்டோட கலக்கல் கமெண்ட் :))))))

kanagu said...

/*எப்பிடியோ நானும் நாலு வருசமும் அவ உயிரை வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ அவளும் நம்மள மாதிரி software ல தான் குப்பை கொட்டிட்டு இருக்கா. */

பல பேரு அப்படி தானுங்க :)

/*நான் அவகிட்ட எப்போதும் சொல்ற விஷயம் என்னனா, அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது*/

அட கடவுளே.. தொந்தரவு பண்ணதும் இல்லாம இது வேறயா !!!!

/*அந்த நன்றி கடன் இருக்கணும்ல. கொஞ்சம் கூட அந்த நன்றி கடனே இல்ல. என்ன உலகமடா சாமி. இத படிசிட்டாவது எனக்கு அவ பணம் டிரான்ஸ்பர் பண்ணட்டும். பார்க்கலாம்.*/

ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

உங்க ப்ரெண்ட் சொன்னதும் சரி தான் :)

G3 said...

//நான் அவகிட்ட எப்போதும் சொல்ற விஷயம் என்னனா, அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது.//

இம்மாம் பெரிய உதவி செஞ்சிருக்கீங்க.. இதுக்கு நாலுல ஒரு பங்குனு ரொம்ப கம்மியா கேக்கறீங்களே.. முழு சம்பளமும் உங்களுக்கே சொந்தம்னு கேளுங்க :)))

இப்படிக்கு ஓவரா உசுப்பேத்துவோர் சங்கம் ;)

$anjaiGandh! said...

இப்டியே போச்சினா என் லட்சியம் நிறைவேறாது போல இருக்கே.. அழகா ஒரு கதை மாதிரி முடிச்சிருக்கிங்க.. வர வர ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சிட்டிங்க.. வாழ்த்துகள்..

$anjaiGandh! said...

//அவ படுக்கணும்னு நினைச்சா கூட முடியாது. நாங்க தான் அவ bed ல ஒய்யாரமா படுத்துகிட்டு படிச்சிட்டு இருப்போம்ல. //

ஒடம்ப கொறைங்க மேடம்.. :))

( ஒய்யாரமா நிற்கலாம்.. ஒய்யார எப்டி படுப்பிங்க? :( )

வெட்டிப்பயல் said...

என்னா வில்லத்தனம் :)

உங்களுக்கு காமெடி நல்லா எழுத வருதுங்க.. அப்படியே கண்டினியூ பண்ணுங்க :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//கரீக்ட்டா டீல் பண்ணியிருக்கீங்க!
நீங்க சொல்றது ரொம்ப சரி வுடாதீங்க முடிஞ்சா எதாச்சும் கேஸ் போட்டாச்சும் சம்பளத்துல ஒரு பாதி பிச்சு வாங்கிடுங்க பாஸ் :)))//

நீங்களே சொல்லிடீங்க. கண்டிப்பா வாங்கிடுவோம். :) :):)

//சான்ஸ்லெஸ்

உங்க ப்ரெண்டோட கலக்கல் கமெண்ட் :))))))//

அது நம்ம கமெண்ட். நம்மகிட்ட இருந்து வாங்கி நமக்கே திருப்பி கொடுத்தாங்க.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ kanagu,

ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

உங்க ப்ரெண்ட் சொன்னதும் சரி தான் :)//

he he he

@ G3,

உங்கள மாதிரி ஆளுங்கள தான் தேடிட்டு இருக்கேன் support ku.

@ $anjaiGandh!,

//இப்டியே போச்சினா என் லட்சியம் நிறைவேறாது போல இருக்கே.. அழகா ஒரு கதை மாதிரி முடிச்சிருக்கிங்க.. வர வர ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சிட்டிங்க.. வாழ்த்துகள்..//

நான் நல்ல எழுதுறேன்னு நீங்க நினைச்சா அந்த பெருமை Synapse க்கே. நன்றி

@வெட்டிப்பயல்,
//என்னா வில்லத்தனம் :)//
he he he

//உங்களுக்கு காமெடி நல்லா எழுத வருதுங்க.. அப்படியே கண்டினியூ பண்ணுங்க :)//
என்னங்க என்னனவோ சொல்றீங்க

கட்டபொம்மன் said...

அழகான கல்லூரி நாட்கள்


ஹிம்..........

கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com

R.Gopi said...

//சத்தியமா பாட புத்தகம் இல்லங்க. நமக்கு ராஜேஷ் குமார், சுஜாதா, வைரமுத்து இப்படிங்கற பேரு தான் நல்லா தெரியும். //

idhuthaan sollaamaye theriyume... NEXT.....

//அவளும் நானும் ஒரே ஆபிஸ்ல இல்ல குறைஞ்சது ஒரே domain ல இருந்திருந்த நான் கவலையே இல்லாமா ஜாலியா என் வாழ்க்கைய என்ஜாய் பண்ணுவேன். அவ என் வேலைய செஞ்சு கொடுத்துருப்பா. பாருங்க இப்போவும் நான் தான் பாவம்.//

Adhu sari........ idha paarraa....

//அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது. //

Idhu SUPER CONCEPT...... Aana, naan ESCAPE.......

//இப்படியெல்லாம் கேடி தனமா நீ யோசிக்கிறியே உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்//

Kadaisila, sariyaa thaaney solli irukkaanga........ Ayyo Ayyo...

இராயர் அமிர்தலிங்கம் said...

yepaadi yellam girls um panam melaye kuriya irukkinga madam??

இய‌ற்கை said...

:-))

சந்தனமுல்லை said...

நல்ல காமெடியா இருக்குங்க...என்னோட காலேஜ் டேஸ் நினைவுக்கு வந்துடுச்சு...:-) //அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது.//

கொஞ்சம் டெரராத்தான் இருக்கு :-)

சந்தனமுல்லை said...

//நான் எப்போதும் சொல்லுவேன் "உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்"//

LOL!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ கட்டபொம்மன்,
உங்கள் வருகைக்கும், பின்னூட்டதிருக்கும் நன்றி

@ R.Gopi,
//Kadaisila, sariyaa thaaney solli irukkaanga........ Ayyo Ayyo...//

உண்மைய சொன்ன ஒத்துக்கணுமா? முடியாது முடியாது :) :)

@ இராயர் அமிர்தலிங்கம்,
பணமா அது யாருக்கு சார் வேணும்?

@ இய‌ற்கை,
he he he

@ சந்தனமுல்லை,

//கொஞ்சம் டெரராத்தான் இருக்கு :-)//
நான்லாம் ரொம்ப அமைதியான பொண்ணுங்க. வேணும்னா நாலு பேர்கிட்ட கேட்டு பாருங்க

kunthavai said...

//நான் அவகிட்ட எப்போதும் சொல்ற விஷயம் என்னனா, அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது.

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிரீங்க. ரெம்பவே ரசித்து சிரித்தேன்.

Mathu Krishna said...

ha ha ha... mudiyala rajikkaa...
sambalathula 1/4th vaangitteengalaa???

Madhu said...

OMG ! Did she manage to top the class inspite of so many interruptions??? She's defly great :-)
Room pottu yosippiyaa raji ipdi ideavelaam??? :-)