Wednesday, June 24, 2009

வெறுமை

ஏதோ வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்த வெறுமை இன்று வரை தொடர்கிறது. வெள்ளிக்கிழமை ஆபீஸில் பெரிதாக ஆணியும் இல்லை. மதியம் எனக்கு பிடித்த சாண்ட்விட்ச் சாப்பிடலாம் என்று லஞ்சுக்கு வெளியே சென்றாலும் சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை. வெள்ளிக்கிழமை இரவு சனி, ஞாயிறு என்ன பண்ணலாம் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கி விட்டேன்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு போன் செய்து எழுப்பி விட்ட எங்க அம்மா வாழ்க. அதுவும் போன் செய்து எழுப்பி விட்டு விட்டு "தூங்குறியமா தூங்கு தூங்கு. நான் அப்புறம் பேசுறேன்னு" வச்சதுக்கு பதிலா வேற நாலு வார்த்தை பேசி இருந்த மனசு கொஞ்சம் சாந்தமாய் இருந்திருக்கும்.

என்ன பண்ணலாம்னு படுக்கையில இப்பிடி அப்பிடி திரும்பி திரும்பி படுத்தப்போ அக்கா நியாபகம் வந்தாச்சு. ஒரு பதிவும் போட்டாச்சு. பொழுது போகலன்னு நான் நினைச்சது எப்பிடி தான் நம்ம மக்களுக்கு தெரியுமோ. சஞ்சய், நாமக்கல் சிபி, தமிழ் பிரியன், வெட்டிப்பயல் பாலாஜி எல்லோரும் அவங்க அவங்க குடும்பத்தோட வந்து கும்மி அடிச்சிட்டு போயாச்சு. அவங்கள கண்காணிக்கவே சனிக்கிழமை பாதி நாள் காலி. கும்மி அடிச்சாலும் நம்ம பொழுது கொஞ்சம் நல்லாவே.

ஒரு வழியா இந்த களேபரம் முடிஞ்சு சரி காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடுல, ஏதாவது செய்யலாம்னு நினைத்தேன். ஆனா நானே செஞ்சு சாப்பிடுற அந்த கொடுமையான சாப்பாட்ட நினைச்சு சோகமா இருந்தேன். என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் இருந்து லஞ்சுக்கு வர சொல்லி அழைப்பு. கூப்பிட்டு ஓசில சாப்பாடு அதுவும் ஒரு சூப்பர் சாப்பாடு போடுறேன்னு சொன்னாங்க, போகாம விட்டுடுவோமா. போய் ஏதோ என்னால முடிஞ்ச அளவு நல்லா சாப்பிட்டு, கொஞ்சம் நேரம் cards விளையாடிட்டு கிளம்பலாம்னு நினைச்சா, ஏதாவது படம் பார்க்கலாம்னு சொன்னாங்க.

சரி என்று "ஆண் பாவம்" "அரங்கேற்ற வேளை" பார்த்தோம். மிக சந்தோசமாக என்ஜாய் பண்ணி பார்த்தோம். அப்புறம் என்ன டின்னர் போட்டே ஆகணும்ல. போட்டாங்க. இன்னொரு முறை நம்மள லஞ்சுக்கு கூப்பிடுவாங்க?

வீட்டுக்கு வர மனசே இல்லாம வந்து சேர்ந்தேன். ஒரு 2 மணிக்கு படுத்தாச்சு. ஞாயிற்றுக்கிழமை காலையில் (??) ஒரு 11.30 மணிக்கு எழுந்தாச்சு. முதல் நாள் எங்க அம்மாகிட்ட பேசுன பேச்சுல அவங்க போன் பண்ணவே இல்ல (நம்ம அம்மா தானே நாம திட்டாம யாரு திட்டுவா). ஆரம்பிச்சது இம்சை அங்க தான். தூக்கம் வரல, தோழிகளுக்கு போன் பண்ண பிடிக்கல. அப்புறம் என்ன 12 மணிக்கு blog படிக்க ஆரம்பிச்சேன். ஆயில்யன், நர்சிம், சந்தனமுல்லை, தமிழ் பிரியன் blog அப்பிடின்னு பொழுது கொஞ்சம் போச்சு.

சரி படமாவது பார்க்கலாம்னு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பார்த்தேன். எப்போதும் மிக சந்தோசமாக பார்க்கும் அந்த படத்தை ஏதோ மிக சோகமான படம் போல பார்த்து முடித்தேன். மொழி படம் பார்க்கலாமா என்று யோசித்தேன். இருந்த கடுப்புல படம் பார்த்து அழுதுட கூடாதேன்னு அந்த ஐடியாவ விட்டுட்டேன்.

அப்புறம் மீதி இருந்த ஞாயிற்றுக்கிழமை, என் கண் முன்னே நின்று பயமுறுத்தியது. மிகவும் கஷ்டப்பட்டு தள்ளினேன்.இனி இன்னும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இது போன்று அமைய கூடாது என்று சாமிகிட்ட சொல்லி வச்சேன்.

இந்த வாரமோ ஆபீஸ்ல நிறைய ஆணி. எதை பற்றியும் யோசிக்க நேரம் இல்லை. ஆனாலும் அனைத்தையும் மீறி ஒரு வெறுமை, ஒரு எரிச்சல். யாரோடும் ஒழுங்காக பேச கூட பிடிக்கவில்லை.ஆன்லைன்ல வர்ற friends கிட்ட கூட ஒழுங்கா பேசுறது இல்ல. என்னைக்கு என்னை தூக்கி போட்டு (ரொம்ப கஷ்டம் தான்) மிதிக்க போறாங்களோ தெரியல.

ஆனா இதுக்கு நடுவுல அப்பபோ நம்மள கொஞ்சம் பேரு சிரிக்க வச்சாங்க.

"அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!!" அப்பிடின்னு ஒரு பதிவுல சந்தனமுல்லை.

//ஆயில்யன் said... ங கேள்விப்பட்டிருக்கேன் இது //ஞே// கொஞ்சம் வித்தியாசமால்ல இருக்கு :) என்ன பாஸ், ஆச்சி சாப்பாட்டு விஷயத்தை பத்தி நடுவுல போட்டு இருக்காங்க, கண்டுக்காம போயிருக்கீங்க.//
அப்பிடின்னு ஒரு comment ல அமிர்தவர்ஷினி அம்மா.

//நான் சோற்று பண்டாரம் அதனாலோ தின்பதில் எப்போதும் ஒரு ஆர்வம் முட்டும்/
முட்ட முந்துவது பந்தியா இல்லை தொந்தியா பாஸ் ???????//
ஆயில்யன் பண்ணுன கொடுமைக்கு அமிர்தவர்ஷினி அம்மா கொடுத்த பதிலடி. இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லலாம்.

நேற்று இந்தியன் ஹோட்டல் போய் நாக்குக்கு ருசியா ஏதாவது சாப்பிடலாம் என்று போனா, ஹோட்டல் செவ்வாய்க்கிழமை இல்லையாம். அப்புறம் என்ன வேற ஹோட்டல்க்கு போய் சப்பாத்தி தான்.

நேற்று முத்துச்சரத்தில் இந்த பதிவை படித்து விட்டு இப்போது வரை நான் அதை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன். தனியார் பள்ளிகளில் இந்த மாதிரி நிறைய நடக்கின்றன. ஆனால் நான் பார்த்த ஆசிரியர்கள் எல்லாம் அப்பிடி இல்லை. அதுவரை நலமே.

எனது அப்பா ஒரு ஆசிரியர் என்பதாலோ என்னவோ எனக்கு சிறு வயதில் இருந்தே ஆசிரியர்கள் மேல் ஒரு பாசம் கலந்த மரியாதை உண்டு. எனது அண்ணன் திருமணத்தின் போது தாம்பூலம் கொடுப்பதற்காக அடிக்கப்பட்ட பைகளையும், சாக்லேட்களையும் எங்க அப்பா, அவங்க பள்ளிகூட பிள்ளைகளுக்காக தனியாக எடுத்து வைத்தது எனக்கு நியாபகம் வந்தது.

எனது ஒரு டிரஸ் கூட வீணாகாமல் எனது தந்தையின் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு சென்றடையும். எனது அப்பாவின் நண்பர்களும் எதையும் எதிர்ப்பார்க்காமல் இந்த மாதிரி நிறைய செய்வார்கள். இந்த மாதிரி ஆசிரியர்கள் தான் கிராமத்து பள்ளிகளுக்கு கண்டிப்பாக தேவை. எனது அப்பாவின் உடல் நலத்தை பார்த்து வேலையை விட்டுவிட சொல்லி நானும் எனது அண்ணாவும் பலமுறை சொல்லி உள்ளோம். ஆனால் பள்ளிக்கு போனா தான் இன்னும் நல்லா இருப்பாங்களோன்னு எனக்கு தோன்றும்.

இன்னும் இரண்டு நாட்கள் ஆபீஸ்க்கு போகணுமே என்ற கவலை வேறு. இந்த வார இறுதியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது எனது laptop hang ஆகி விட்டது. ஹ்ம்ம் எல்லாம் நம்ம நேரம். லேப்டாப் சரியாகி நான் இந்த வரியை டைப் செய்யும் போது ஒரு மணி நேரம் ஓடி விட்டது.
இந்த
வார இறுதியையும் எனது மனதிற்கு நெருங்கிய ஒருவரையும் எதிர்நோக்கி .......

14 comments:

வெட்டிப்பயல் said...

//இந்த வார இறுதியையும் எனது மனதிற்கு நெருங்கிய ஒருவரையும் எதிர்நோக்கி .......//

வாழ்த்துகள்!!! ;)

Truth said...

avlo bore adicha idha padinga, sirippu vara konjam chance iruku :-)

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க

ராமலக்ஷ்மி said...

உங்கள் தந்தையைப் போன்ற நல்லாசிரியர்கள் பலபேருக்கு நடுவில் களையப் பட வேண்டிய சிலரும் உன்னதமான ஆசிரியர் தொழிலில் இருப்பது வேதனையான விஷயமே.

//தனியார் பள்ளிகளில் இந்த மாதிரி நிறைய நடக்கின்றன.//

நிஜம், நான் அக்கதையைப் பதிவிட்ட ஒரு வாரம் கழித்து கூட 13 ஜூன் TOI-ல் இது போன்ற ஒரு சம்பவம் செய்தியாக வந்திருந்தது. பள்ளிக்கு சுத்தமாக வராததால் 3 மாணவர்களின் தலை முடியை வழித்தெடுத்து, டாய்லெட்டில் அடைத்து வைக்கப் பட்டதாக. இருதினம் கழித்து பெற்றோர் ஒருவழியாக துணிந்து போலிசில் புகார் செய்ய சம்பந்தப் பட்ட மூன்று ஆசிரியர்கள் மேலும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பரவலாக இப்படி நடந்தபடியேதான் உள்ளது:(!

[இதை ஒரு தகவலாகத்தான் தருகிறேன், நீங்கள் என்னை குறை சொன்னதாக நினைக்கவில்லை:)!]

பதிவை ரசித்தேன். வெறுமையை விரட்டிட ட்ரூத்தின் அழைப்பை ஏற்று அவரிடம் நாம் சமையல் கற்று வரலாம்:))!

$anjaiGandh! said...

நர்சிம், லக்‌ஷ்மி அக்கா எல்லாம் பாராட்டிட்டாங்க.. பெரிய எழுத்தாளினி ஆய்ட்டிங்க..

பாலாஜி மாம்ஸ் கூட சேர்ந்து நானும் வாழ்த்திக்கிறேன். :)

கணேஷ் said...

My Best wishes :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ வெட்டிப்பயல், நர்சிம், $anjaiGandh!, கணேஷ்

ரொம்ப நன்றிங்க!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Truth,

மேல இருக்குற சிரிப்பு லிஸ்ட்ல உங்கள விட்டுட்டேனே!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ ராமலக்ஷ்மி,

//[இதை ஒரு தகவலாகத்தான் தருகிறேன், நீங்கள் என்னை குறை சொன்னதாக நினைக்கவில்லை:)!]//
:) :) :)

//பதிவை ரசித்தேன்//
நன்றி.

//வெறுமையை விரட்டிட ட்ரூத்தின் அழைப்பை ஏற்று அவரிடம் நாம் சமையல் கற்று வரலாம்:))!//
நீங்க பார்த்தீங்களா. செம சிரிப்பு.

kanagu said...

நல்ல பதிவு... சிரிப்பும் கலந்து இருந்தது.. :)

/*ஏதாவது செய்யலாம்னு நினைத்தேன். ஆனா நானே செஞ்சு சாப்பிடுற அந்த கொடுமையான சாப்பாட்ட நினைச்சு சோகமா இருந்தேன்*/

உண்மைய ஒத்துகிறீங்களே... இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களே ;)

/*இன்னொரு முறை நம்மள லஞ்சுக்கு கூப்பிடுவாங்க*/

அது லஞ்ச் முடிச்சிட்டு வந்திருந்தா கூப்பிட்டு இருப்பாங்க.. இப்ப சான்ஸே இல்ல ;)

☼ வெயிலான் said...

கழித்த ஞாயிறை கலைத்துப் போட்டு அருமையான பதிவாக்கியிருக்கிறீர்கள்!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ kanagu,

//நல்ல பதிவு... சிரிப்பும் கலந்து இருந்தது.. :)//

நன்றி

//உண்மைய ஒத்துகிறீங்களே... இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களே ;)//

he he he

@☼ வெயிலான்,

நன்றி

சந்தனமுல்லை said...

ஆகா..வாரயிறுதியை இப்படிக்கூட சூப்பரா பதியலாமா..நல்லா இருந்துச்சுங்க..அய்யோ..இந்த சின்னபாண்டியும் பெரியபாண்டியும் கொடுக்கற கமெண்ட்ஸ் கலாட்டா இருக்கே..செம கலக்கலா இருக்கும்! நான் நிறைய தடவை போஸ்டேக் கூட படிக்காம ஆயில்ஸ் கானாபிரபா கமெண்ட்ஸ் படிச்சிருக்கேன்! :-))

//இந்த வார இறுதியையும் எனது மனதிற்கு நெருங்கிய ஒருவரையும் எதிர்நோக்கி .......//

இது மேட்டரு! வாழ்த்துகள்!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ சந்தனமுல்லை,

//இந்த சின்னபாண்டியும் பெரியபாண்டியும் கொடுக்கற கமெண்ட்ஸ் கலாட்டா இருக்கே..செம கலக்கலா இருக்கும்! நான் நிறைய தடவை போஸ்டேக் கூட படிக்காம ஆயில்ஸ் கானாபிரபா கமெண்ட்ஸ் படிச்சிருக்கேன்! :-))//

he he he

//இது மேட்டரு! வாழ்த்துகள்!//
ரொம்ப நன்றிங்க. ஆனால் வேலை பளுவின் காரணத்தினால் பேச கூட முடியவில்லை :( அட விட்டு தள்ளுங்க. பார்த்துக்கலாம்.