Saturday, June 20, 2009

என் பிரியமான அக்கா...

கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவள்னு எங்க அப்பா, அம்மா, அண்ணா பத்தி மட்டும் சொல்லிட்டேன். அதுனால கடவுளே என் கனவுல வந்து நிஜமா உனக்கு நான் வேற யாரையும் கொடுக்கலையான்னு சண்டை போட்டார். அப்புறம் தான் இந்த மரமண்டைக்கு உறைத்தது. இன்னும் நிறைய பேரை எனக்காக கொடுத்து இருந்தாலும் அதில் மிக முக்கியமான ஒரு உறவை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அண்ணனின் பாசம் மிக மிக அருமையானது. எனக்கும் எனது அண்ணனுக்குமான பாசத்தையும், புரிதலையும் பார்த்து பொறாமை கொள்ளும் எனது தோழிகள் சிலர் இன்றும் இருக்கிறார்கள். அந்த அளவு என் மீது பாசத்தை கொட்டி என்னை என் வழியில் நடக்க விட்டு, அதற்கு ஒரு உறுதுணையாய் நிற்கும் எனது அண்ணனை பார்த்தால் யாருக்கு தான் பொறாமை கொள்ள தோன்றாது.

என்னை பொறுத்த வரை இப்போது கடவுளே வந்து கேட்டாலும் எனது பெற்றோர் தான் எனக்கு எல்லாமே. அப்புறம் தான் கடவுளே. எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளை விட என் பெற்றோருக்கு நன்றாக தெரியும் என்பது எனது நம்பிக்கை.

நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது தோழிகளுக்கும், அவர்களின் அக்காவிற்கும் இருக்கும் பாசத்தை பார்த்து நமக்கு ஒரு அக்கா இருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றும். அவர்கள் தோழிகள் போல் பழகி கொள்வதை பார்த்து எனக்கு அக்கா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்ததுண்டு.

சிறு வயதில் என் அண்ணன் செய்த அத்தனையும் எனக்காக அவள் செய்திருப்பாள். என்னோடு விளையாடி இருப்பாள், பள்ளிக்கோ கடைக்கோ பொறுப்பாக கூட்டி சென்றிருப்பாள், மிகவும் பொறுப்பாக கவனித்து கொண்டிருப்பாள், தனக்கானதையும் என்னிடம் கொடுத்து சந்தோஷ பட்டிருப்பாள், அவளால் இன்னும் ஒரு நாலைந்து அக்காக்கள் கிடைத்து இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்து இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் நமக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் என்று நினைத்து கொள்வேன். ஆனால் இதுவெல்லாம் அக்கா இருந்தால் கண்டிப்பாக நடந்திருக்குமா என்று ஒரு ஐயம் வரும்.

ஆனால் ஒரு உண்மை எப்போதும் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்கும். நீ மனம் வாடி நின்றால் ஒரு வயதிற்கு பின் அப்பாவும் அண்ணாவும் நமது கலாச்சாரத்தின் படி பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்ல முடியுமே தவிர அரவணைத்து ஆறுதல் சொல்ல முடியாது. பெற்ற அப்பாவும், கூட பிறந்த அண்ணாவும் நமது துயரத்தை நினைத்து ரத்த கண்ணீர் வடித்தாலும் அவர்களால் இந்த கலாச்சாரத்தின் விதியை மீற முடியாது. ஆம் எத்தனை உண்மை. ஆனால் அம்மாவோ, அக்காவோ நம்மை அரவணைத்து ஆறுதல் சொல்லும் போதே, ஏதோ நமது சுமையை நாம் இறக்கி வைத்து விட்டது போல தோன்றும்.

இது மட்டும் இல்லாமல் அப்பா- மகள் உறவிலோ, அண்ணன் - தங்கை உறவிலோ பரிமாறி கொள்ள இயலாத சில விஷயங்கள் இருக்கும். ஆனால் அம்மா - மகள், அக்கா - தங்கை உறவில் ஒளிவு மறைவின்றி இருக்க முடியும் என்றே எனக்கு தோன்றும். எந்த சந்தோசம் வந்தாலும் பகிர்ந்து கொள்ள, சோகம் வந்தால் நம்மை தூக்கி நிறுத்த, என்னோடு விளையாட, என்னோடு அவளின் வாழ்கையை பகிர்ந்து கொள்ள, இன்னும் பல காரணங்களுக்காக எனக்கு ஒரு அக்கா இருந்தால் நன்றாக இருக்குமோ என்று யோசிப்பது உண்டு. இன்னும் சொல்ல போனால், எனக்கு மற்றும் ஒரு தாயாக இருந்திருப்பாளோ என்று எனக்கு தோன்றுவது உண்டு.

கல்லூரியிலும், வேலை பார்க்கும் இடத்திலும் என்னை விட வயதில் மூத்தவரை பார்த்திருந்தாலும், அவர்களை அக்கா என்று அழைத்திருந்தாலும், என்னோடு பல வருடங்கள் கூட இருந்திருந்தாலும், ஏனோ எனக்கு எனது அக்கா என்று சொல்லிக்கொள்ள தோன்றியது இல்லை.

ஆனால் சென்ற ஆண்டில் எனக்கு அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே அக்கா என உரிமை கொள்ள வைத்திருக்கிறார். எனது அக்கா என்று பெருமைப்படும் நான், அவரின் பக்குவமான பாசத்தை பார்த்து, அக்கா - தங்கை என்றால் இப்படி தான் இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை விட்டு விட்டேன்.

நம்மோடு ஓடி விளையாடினால் தான் அக்கா, நமக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவள் தான் அக்கா, நாம் கேட்பதை வாங்கி கொடுப்பவள் தான் அக்கா, இன்னும் இன்னும் பல செய்ய கூடியவள் தான் அக்கா என்ற எண்ணத்தை தூள் தூளாக நொறுக்கி பக்குவமான பாசம் மட்டும் போதும் அதுவே உனது மீதான அக்கறை, கவனிப்பு எல்லாவற்றையும் கொண்டு வந்து விடும் என்று புரிய வைத்தவள்.

நான் பலமுறை பக்குவம் இல்லாமல் பாசத்தை கொட்டினாலும் அவளின் பக்குவத்தால் என் பாசத்தை இரட்டிப்பாகி விடுவாள். பக்கத்தில் இல்லை என்றாலும் நமது தூரம் தூரமில்லை என்று உணர்த்தி கொண்டிருப்பவள். நான் பேச நினைப்பது அத்தனையும் பேச உரிமை கொடுத்து இருப்பவள்.

அவளின் பல கோரிக்கைகளை நான் செவி மடுத்தது கூட இல்லை. என்ன சொன்னாலும் அதற்கு ஒரு பதிலை வைத்து கொண்டு அவளை பேச விடாமல் செய்து இருக்கிறேன். அவளின் இந்த அமைதி கூட என் நன்மைக்காக தான் இருக்கும்.

எனது நன்மைக்காக ஏதாவது அவள் சொல்லும் போது அவள் மீது தேவை இல்லாமல் கோவம் சில நிமிடங்கள் வந்து போகும். நான் என்ன சொன்னாலும் இதுவரை அவள் கோவப்பட்டு நான் பார்த்து இல்லை. அவளின் பாசம் அத்தனை பக்குவமானது.

எனது பாசத்தை புரிந்து கொண்டு, எனது கோரிக்கைகளுக்கு செவி மடுப்பவள். அவளின் வாழ்கையில் priorities வேற இருந்தாலும் என்னை விட்டு கொடுக்காமல் பார்த்து கொண்டிருப்பவள். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

இத்தனை முக்கியத்துவும் வாய்ந்த ஒரு உறவை சொல்ல மறந்த என்னிடம் கடவுள் சண்டை போடாமல் என்ன செய்வார்.இத்தனையும் எனக்காக கொடுத்து என்னிடம் இன்னொரு அம்மாவாக அன்பை காட்டி கொண்டிருக்கும் எனது பிரியமான அக்காவிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

தேவதையே,

"மறுபிறவி உண்டென்றால் இந்த தாய்க்கோ, மகளுக்கோ மகனாக வேண்டும்" என்ற வரிகளை கேட்கும் போதெல்லாம் மறுபிறவி உண்டென்றால் இந்த மூவரில் ஒருவருக்கு மகளாக வேண்டும் என்று தோன்றும். அந்த மூன்று பேர் - எனது அம்மா, சித்தி மற்றும் நீ.

44 comments:

$anjaiGandh! said...

ஃப்ரியா விடு மச்சி.. வாழ்க்கை வாழ்வதற்கே.. :))

நீ ரொம்ப குடுத்து வச்சவதான்.. இவ்ளோ நல்ல அக்கா கிடைக்க.. உங்கள் உறவு எப்போதும் நிலைத்திருக்க வாழ்த்துகள். கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.

நிஜமா நல்லவன் said...

உங்கள் உறவு என்றும் நீடித்திருக்க வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

அந்த அக்காவின் பாசமும், அன்பும் எப்போதும் உமக்கு இருக்கும்!

ஆயில்யன் said...

//$anjaiGandh! said...

ஃப்ரியா விடு மச்சி.. வாழ்க்கை வாழ்வதற்கே.. :))

நீ ரொம்ப குடுத்து வச்சவதான்.. இவ்ளோ நல்ல அக்கா கிடைக்க.. உங்கள் உறவு எப்போதும் நிலைத்திருக்க வாழ்த்துகள். கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.
///


ரிப்பிட்டிக்கிறேன்! :)

VIKNESHWARAN said...

//ரிப்பிட்டிக்கிறேன்! :)//

ரிப்பீட்டிக்கிறேன்...

சென்ஷி said...

////ரிப்பிட்டிக்கிறேன்! :)//

ரிப்பீட்டிக்கிறேன்...//

ரிப்பீட்டிக்கிறேன்...

அக்கா said...

தம்பீஈஈஈ!

என் மேல அம்புட்டு பாசமாடா உனக்கு!
பாசக்கார பயபுள்ளையா இருக்கியே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

மங்களூர் சிவா said...

அந்த அக்காவின் பாசமும், அன்பும் எப்போதும் உமக்கு இருக்கும்!

வாழ்த்துக்கள்!

இய‌ற்கை said...

உங்கள் உறவு எப்போதும் நிலைத்திருக்க வாழ்த்துகள்

வெண்பூ said...

வாழ்த்துகள்..

Saravan said...

romba feel pannatha raji....she will be der forever...

இளைய தளபதி விஜய் said...

அடுத்த ஜென்மத்துலயாவது நானும் இந்த அக்காவுக்கு தம்பியா பிறக்கணும்னு இறைவனை வேண்டிக்கிறேன்!

எனக்கு உன் மேல பொறாமையா இருக்கு தம்பி!

அபிஅப்பா said...

ராஜிம்மா! நான் பல தடவை சொன்ன அதே பதில் தான். ஒரு 50 வருஷம் வெயிட் பண்ணுவோம் பின்ன பேசுவோம்!

சண்முக சுந்தரம் said...

தம்பீ!

எனக்கும் இப்படித்தான் ஒரு அக்கா இருந்தாங்க!

அக்கா தம்பி பாசம்னா எனக்கும் தெரியும்!

நல்லா இருங்க தம்பி! நல்லா இருங்க!


(நான் கரகாட்டக் காரன்ல கனகாவோட அப்பாவா நடிச்சிருக்கேன்)

சூர்யா said...

உன்மையிலேயே நல்ல பதிவு. உங்கள் நட்பு எப்போவும் இப்டியே இருக்கட்டும். வாழ்த்துகிறேன் தோழி.

விஜய டி.ஆர் said...

நான் என் படங்களில் எத்தனையோ தங்கச்சிங்கள வளர்த்திருக்கேன்!

இம்புட்டு பாசத்தோட ஒரு அக்காவை இன்னிக்குத்தான் பார்க்கிறேன்!

வாழ்த்துக்கள் தம்பி!

ஏய் டண்டனக்கா! ஏய் டணக்குனக்கா!

ரோஜா மதுபாலா said...

எனக்கு பாசமிகு வைஷ்ணவி அக்கா போல உங்களுக்கு இந்த அக்கா போலும்!

வாழ்த்துக்கள்!

ராதா said...

என் அக்கா அம்பிகா கூட என்மேல இம்புட்டு பாசமா இருந்ததில்லே!

வாழ்த்துக்கள் அக்கா!

வெட்டிப்பயல் பாலாஜி said...

உங்க அக்கா தங்கச்சி பாசம் எனக்கு புல்லரிக்கு வைக்குது!

வாழ்த்துக்கள்!

Athiya said...

Wow Raji! Your blog is awesome. Was really moved reading this. Hope you and akka share this wonderful realationship forever. My best wishes to u both.

சிவாஜி கணேசன் said...

கண்ணுங்களா!

நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி பாசத்தோடயும் பரிவோடவும் இருக்கணும்! அம்புட்டுதேன்!

வெட்டிப்பயல் said...

உங்கள் உறவு இப்படியே தொடர என் வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் பாலாஜி said...

ஏற்கனவே ரெண்டு முறை சொல்லிட்டேன்!

திரும்ப ஒருக்கா வாழ்த்திக்கிறேன்!

வாழ்க! வாழ்க! வாழ்க!

ஊர்வசி said...

என் அக்கா கல்பனா கூட என் மேல பாசமாத்தான் இருப்பாங்க!

உங்களைப் பார்த்தாலும் எனக்கு அவங்க ஞாபகம்தான் வருது!

சுபா said...

//தேவதையே,

"மறுபிறவி உண்டென்றால் இந்த தாய்க்கோ, மகளுக்கோ மகனாக வேண்டும்" என்ற வரிகளை கேட்கும் போதெல்லாம் மறுபிறவி உண்டென்றால் இந்த மூவரில் ஒருவருக்கு மகளாக வேண்டும் என்று தோன்றும். அந்த மூன்று பேர் - எனது அம்மா, சித்தி மற்றும் நீ. //

Ithuthan highlight !

Rombhavum pidichirunthathu.

வெட்டிப்பயல் பாலாஜி said...

அட என்ன இது!
ஒரு கமெண்ட்ல என் ஃபோட்டோ வருது! ஒரு கமெண்ட்ல வரமாட்டேங்குது!

என்ன கொடுமை சார்/மேடம் இது?

பேரு வேற முழுசா வருதே!

மாநக்கல் சிபி said...

எனக்கு நயன்தாரா கிடைச்ச மாதிரி உங்களுக்கு இப்படி ஒரு அக்கா கிடைச்சிருக்காங்க...

வாழ்த்துகள்!!!

நயன்தாரா said...

ஐயயோ!

நான் சிபிக்கு அக்கா இல்லை!
அவரோட மச்சான்(அதான் என் தம்பி பாலாஜி)க்குதான் அக்கா!

நமீதா said...

நான்தான் சிபியோட அக்கா!

சிபித்தம்பி ரொம்ப நல்லவரு!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

கப்பி வாழ்க!

மாநக்கல் சிபி said...

நயன்,
பாலாஜி எனக்கு தம்பி. நீ பாலாஜிக்கும் அக்கா, எனக்கும் அக்கா. இப்ப புரியுதாமா நம்ம உறவு.

பாலச்சந்தர் படம் பார்க்காதனு சொன்னா கேட்கறியா அக்கா?

அபி (த்ரிஷா) said...

நான் ஒரே பொண்ணா பிறந்துட்டேன்!

எனக்கும் இதே மாதிரி ஒரு அக்கா இருந்தா நல்லா இருக்கும்ல!

- அபி(த்ரிஷா)

(அபி அப்பாவோட பொண்ணு இல்லை)

அபி (த்ரிஷா) said...

அந்த குறையை சிபிக்கு அக்காவா இருந்து தீர்த்துக்கறேன்.

சிபி மாதிரி பாசமான ஒரு தம்பி இந்த உலகத்துலயே கிடையாது.

நாமக்கல் சிபி said...

அபி(த்ரிஷா) அக்கா என் மேல ரொம்ப பாசமாத்தான் இருப்பாங்க!

ஜெயமாலினி said...

பாலாஜி மச்சான் இங்கன வந்து கும்மி அடிக்கிறாரா?

என் மச்சானைப்(பாலாஜி)பார்த்தீங்களா?

சச்சின் டெண்டுல்கர் said...

பாசக்கார அக்கா, தங்கச்சிங்க போல!

வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள்!

அந்த அக்காவின் பாசமும், அன்பும் எப்போதும் உமக்கு இருக்கும்!

தமிழ் பிரியன் said...

நல்ல பாசக்கார பயபுள்ளக போல இருக்கு... வாழ்க வளமுடன்!

தமிழ் பிரியன் said...

///நயன்தாரா said...
ஐயயோ!
நான் சிபிக்கு அக்கா இல்லை!
அவரோட மச்சான்(அதான் என் தம்பி பாலாஜி)க்குதான் அக்கா!//
இப்ப பிரச்சினை யாருக்கு? சிபிக்கா, இல்ல அவங்க அக்கா நயந்தாராவுக்கா? புதசெவி

நாமக்கல் சிபி said...

//இப்ப பிரச்சினை யாருக்கு? சிபிக்கா, இல்ல அவங்க அக்கா நயந்தாராவுக்கா? புதசெவி//

இப்போ பிரச்சினை எனக்கும், தமிழ் பிரியனுக்கும்தான்!

பிச்சிப்பிடுவேன் பிச்சி!

ஷகிலா said...

ஐ! என் மாமா தமிழ் பிரியனும் வந்துட்டாரு!

தமிழ் பிரியன் said...

///ஷகிலா said...

ஐ! என் மாமா தமிழ் பிரியனும் வந்துட்டாரு!///
வாம்மா மருமகளே! நல்லா இருக்கியாம்மா.. இங்க உங்க மாமியார் ஸ்ரேயா ரொம்ப நல்லா இருக்காங்க.. அங்க உங்க ஆத்துக்காரர் சிபி நல்லா இருக்காரா?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அடுத்த ஜென்மத்துலயாவது நானும் இந்த அக்காவுக்கு தம்பியா பிறக்கணும்னு இறைவனை வேண்டிக்கிறேன்!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ! very touchy!

Mathu Krishna said...

really touching:)