Wednesday, June 17, 2009

போன பதிவு தல சொல்லி, இந்த பதிவு தலைமை பத்தி

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஏனோ தோனியை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஏனோ பிறகு எழுதலாம் என்று தள்ளி வைத்து விட்டேன். திடீரென்று ஏதோ மனதிற்குள் ஒரு மின்னல் அடிக்க ச.ந.கண்ணன் பதிவை பார்த்தால் அங்கு நான் நினைத்தது போல் தோனியை பற்றிய பதிவு.

சில வருடங்களுக்கு முன்பு வரை சிறந்த தலைமை யாருடையது என்று என்னை கேட்டால் சிறிதும் யோசிக்காமல் அசாருதீன் என்பேன். எனக்கு ஏனோ அசாருதீன் தலைமை மிகவும் பிடிக்கும். ஆனால் அசாருதீன் செய்த தவறு என் மனதை உறுத்தி கொண்டே இருக்கும். தோனி வந்த பிறகு அசாருதீன் என் நியாபகத்தில் இருப்பதில்லை.

ஐ.பி.எல் போதே தோனி மீது கொண்ட பாசத்தால் எனக்கு தெரிந்த நிறைய பேர் சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஹைய்டன், ரெய்னா ஆட்டத்தை கண்டு பெருமை கொள்வதற்கு பதில் சென்னை அணியின் பீல்டிங் மற்றும் தோனியின் தலைமையை பார்த்து நான் நொந்து போய் விட்டேன். எனக்கு ஏனோ தோனி முழு மனதாக விளையடவில்லையோ என்று தோன்றியது. என்ன தான் ஊர் பாசம் இருந்தாலும் தோனி அணி கோப்பையை வென்று விடுமோ, அவர்கள் அதற்கு தகுதி இல்லையே என்று தான் எனக்கு தோன்றியது. ஏன் என்றால் ஹெய்டன், ரெய்னா தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு ஒருவரும் விளையாடவில்லை. தோனி என்ற யானைக்கு ஒரு சறுக்கல்.

என்னை பொறுத்த வரை சீனியர், ஜூனியர் அனைவரையும் அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்பளித்து இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றி கொண்டிருப்பதில் தோனிக்கு நிகர் தோனியே. ஆனால் ஐ.பி.எல் தான் தோனிக்கும், நமக்கும் ஏமாற்றம். சரி, உலக கோப்பையில் கண்டிப்பாக கோப்பையை கொண்டு வந்து விடுவார் என்று நம்பிக்கை எல்லோரிடமும். அதுவும் ஐ.பி.எல் இல் மிக சிறப்பாக விளையாடிய எல்லோரும் இந்த அணியிலும் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் சேர்ந்து கொண்டது.
ஆனால் தோனியின் தலைமை ஏன் இப்படி மாறியது என்று தெரியவில்லை. ஏன் இத்தனை குழப்பம் என்றும் புரியவில்லை. தேவை இல்லாமல் தோற்று விட்டோம் என்ற ஆதங்கம் தான் எல்லோரிடமும். தோனிக்கு தான் நமது அணி வீரர்களை பற்றி தெரியுமே. எல்லோரும் அனைத்து ஆட்டத்திலும் விளையாட மாட்டார்கள் என்று. எத்தனை நாள் தான் யுவராஜ் சிங்கை மட்டும் நம்ப முடியும். தோனிக்கு அடுத்த சறுக்கல்.

தோனியை பற்றி பேசும் போது, என்னால் ஷேன் வார்னே பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. ஒருவருக்குள் இருக்கும் தனித்திறமையை கண்டறிவது, தட்டி கொடுத்து வேலை வாங்குவது, திறமைக்கு உரிய வாய்ப்பு கொடுப்பது, உறுதுணையாய் நின்று வெற்றிக்கு போராடுவது என்று இத்தனை பண்புகளை கொண்ட ஷேன் வார்னே தான் என்னை பொறுத்தவரை மிக சிறந்த தலைமை. ஆஸ்திரேலியா அணிக்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஷேன் வார்னே ஓரம்கட்டப்பட்டு தோனியால் முன்னே வர முடியும், . அந்த திறமை அவரிடம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த தலைமை இந்த அணிக்கு கண்டிப்பாக தேவை என்று எண்ண வைத்த இருவர் ஷேன் வார்னே மற்றும் தோனி. அதே நேரத்தில் இந்த தலைமை கண்டிப்பாக தேவை தானா என்று என்னை யோசிக்க வைத்த இருவர் பாண்டிங் மற்றும் கங்குலி. இந்த இருவரும் வாய் பேசுவதை கொஞ்சம்(?!?) குறைத்திருக்கலாம்.

தோனி ஷேன் வார்னை பின்னுக்கு தள்ளுவார் என்ற நம்பிக்கை உள்ள எனக்கு கீப்பிங்கில் கில்கிறிஸ்டை பின்னுக்கு தள்ளுவார் என்ற நம்பிக்கை இல்லை. அவர் கீப்பிங்கிலோ, பேட்டிங்கிலோ ஜொலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் இந்திய அணியை அரவணைத்து வெற்றிக்கு அழைத்து சென்றால் போதும். இந்திய அணி வீரர்களுக்கு அவர்களின் ஒற்றுமையை புரிய வைத்தால் போதும். பின்பு இந்திய அணியின் வெற்றிக்கு முன் அவரின் சொதப்பலான பேட்டிங் எல்லாம் நம்மை உறுத்தாது.

இருந்தாலும் இந்த இரு அடிகளும் அவருக்கே அவரை புரிய வைத்திருக்க வேண்டும். அவர் செய்த தப்புகளை உணர வைத்திருக்க வேண்டும். எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் இனி இந்திய அணியை எப்பிடி முன்னேற்றலாம் என்று யோசிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். எனது சந்தோசம் தோனியின் மீது பாசம் கொண்ட எனது தோழிகள், தோனியை எப்போதும் தலையில் தூக்கி வைத்து ஆடும் எனது நண்பர்கள் அனைவரும் மீடியா போல் அவரை தூற்றாமல் அவரால் முடியும், அடுத்த அடுத்த வெற்றிகளை பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். தோனி இந்த நம்பிக்கைகளை காப்பாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் இந்திய அணி உலக கோப்பையை ஜெயிக்கவில்லை என்று நான் கவலையுடன் இருந்தால் ஏற்கனவே தோனி தோனின்னு அளப்பறை பண்ணி தன் கணவர் காதுல ஒரு chimney மாட்டுன (???) ஒருத்தவங்க இந்திய அணி தோல்வியை பற்றி கவலைப்படாமல் தோனி சீக்கிரம் இந்தியாவிற்கு வரான் என்று சந்தோசப்பட்டு கொண்டு என் வயித்தெரிச்சலை கொட்டிட்டு இருக்காங்க.

ச.ந.கண்ணனுக்கு ஒரு வேண்டுகோள். தோனியை பற்றி பெருமையாக எழுதும் பொது கொஞ்சம் பிரியா அக்காவின் கண்ணில் படாமல் பார்த்து கொள்ளுங்களேன். இப்போது என் காதிலும் chimney போடலாம் :) :) :)

6 comments:

கணேஷ் said...

நீங்க கிரிக்கெட் பார்ப்பீங்களா!

ஒரு சந்தோஷமான விஷயம்.. நைட் 1.30 வரைக்கும் முழிச்சி இருந்து மேட்ச் பார்க்க வேண்டியதில்லை..

anbudan vaalu said...

எல்லாருக்குமே தோனியோட சொதப்பல் ரொம்ப ஏமாற்றம் தான்...சீக்கிரமா அவர் தன்னை சரிசெஞ்சுக்கனும்.....

$anjaiGandh! said...

தோனி ஒரு சுயநலவாதி.. சர்வாதிகாரமனப்பான்மை.. சீனியர் வீரர்களை சதி செய்து ஓரம்கட்டிவிட்டான். இப்போ அணியை காப்பாத்த ஆள் இல்லை.

ஷேன் வார்ன் கூட தோனியா? வார்னை இதை விட மோசமா யாரும் அவமானப் படுத்த முடியாது. ஒரு தொடரில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் தான் பரிசோதனை முயற்சி செய்வார்கள். ஆனால் ஒவ்வொருப் போட்டியிலும் பரி”சோதனை” செய்ற ஒரே கேப்டன் இந்த தோனி தான். தோனி - கிரிக்கெட் அழிக்க வந்த பிணி.

........இதற்கு தானே ஆசைப்பட்டாய் ராஜி.. போதுமா? :))

Maddy said...

Marking present!!

R.Gopi said...

மேடம்.....

தோனியின் மேல் பல புகார்கள் உள்ளன... விரைவில் தலைமை மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டில் / இந்தியாவில் தான் தலைமை மாற்றம் வரவில்லை...... குறைந்தபட்சம் இங்காவது எதிர்பார்க்கலாம்.

நேரம் கிடைக்கும்போது இங்கேயும் வருகை தாருங்கள்..

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ கணேஷ்,

//நீங்க கிரிக்கெட் பார்ப்பீங்களா!//

என்னங்க இப்பிடி கேட்டுபுட்டீங்க

@ anbudan vaalu,
//எல்லாருக்குமே தோனியோட சொதப்பல் ரொம்ப ஏமாற்றம் தான்...சீக்கிரமா அவர் தன்னை சரிசெஞ்சுக்கனும்.....//

நம்புவோமாக :)

@ சஞ்சய்,
அப்பபா போதும் போதும். யார்கிட்டயோ வாங்கி கட்டிக்க போறீங்கனு நல்லா தெரியுது.

@ Maddy,
அண்ணா வாங்க வாங்க.

@ R.Gopi,
உங்கள் வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றி.