Thursday, June 11, 2009

தல சொல்லை தட்டாத!

என் தல என்னையும் மதிச்சு ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டுருக்காங்க. தல சொல்லி தட்ட முடியுமா? அதாங்க இந்த பதிவு

என் தலய ஒரு பதிவு எழுத வச்ச ச.ந.கண்ணனுக்கு ஒரு பெரிய நன்றிங்க.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
எங்க அப்பாவுக்கு "லெட்சுமி" அப்பிடிங்கற பேரு ரொம்ப பிடிக்கும். அதுனால அந்த பேரு வைக்கலாம் அப்பிடின்னு முடிவு எடுக்க போறப்போ யாரோ குறுக்க புகுந்து எங்க அப்பாவ யோசிக்க வைச்சிட்டாங்க. அதாவது இந்த பேரு வச்சா "போயிட்டு வா லெட்சுமி, போறியா லெட்சுமி" அப்பிடின்னு சொல்ல வேண்டி இருக்குமாம். யாரவது "லெட்சுமிய" போன்னு சொல்லுவாங்களான்னு ரொம்ப அறிவு பூர்வமா எங்க அப்பாகிட்ட சொல்லி இருக்காங்க.

அப்புறம் என்ன "லெட்சுமி" மட்டும் வைக்காம ஏதாவது கூட சேர்த்து வைக்கலாம்னு யோசிச்சாங்க. எங்க தாத்தாவுக்கு முதல் பேத்தின்னு ரொம்ப சந்தோசமாம். அவங்க பேரு "ராஜகோபால்". அதுனால அவங்க முதல் பாதிய தூக்கி "லெட்சுமி" கூட சேர்த்து "ராஜலெட்சுமி" ஆக்கிட்டாங்க.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அது ஏனோ தெரியல. எனக்கு "ராஜலெட்சுமி பக்கிரிசாமி" இல்ல "ராஜி" அப்பிடின்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும். ஆனா "ராஜலெட்சுமி" அப்பிடின்னு கூப்பிட்டா அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க கூப்பிட்டா ரொம்ப கடுப்பு வரும்

கடைசியாக அழுதது எப்போது?
நியாபகம் இல்லைங்களே. என்னையெல்லாம் மதிச்சி எழுத சொல்லி இருக்காங்களேன்னு பிரியா அக்காவ நினைச்சி வேணும்னா அழலாம்.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும்ங்க. school படிக்கிறப்போ கொஞ்சம் extra mark வாங்கி கொடுத்ததுக்காகவது நன்றி மறக்காம இருக்கணும்.

பிடித்த மதிய உணவு?
எங்க அம்மா செஞ்ச எது வேணும்னாலும் குடுத்து பாருங்க. குறிப்பிட்டுனா தோசையும், அரிசி பருப்பு சாதமும் போதுங்க. வேற எதுவுமே வேண்டாம்.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
கேள்வி கொஞ்சம் குழப்புது. அதுனால அடுத்த கேள்விக்கு போகலாம்.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
குளிக்க பிடிக்குமான்னு கேளுங்க முதல்ல.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
நாம பண்ணுற திருட்டுத்தனம் தெரிஞ்சு இருக்குமோ? எப்பிடி சமாளிக்கலாம்? அப்பிடின்னு யோசிப்பேன் அப்புறம் தான் கவனிக்கறது எல்லாம் :) :) :)

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது - என் மேல எனக்கு இருக்கும் நம்பிக்கை
பிடிக்காதது - அது கிடக்குது கழுதை. விட்டு தள்ளுங்க. (நிறைய இருக்கு. அதான்)

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
எனது சித்தப்பா

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எல்லாமே பிடிக்கும். அவங்களுடைய பதிவுகள படிக்கிறப்போ ஒரு பதிவாவது அவங்கள மாதிரி எழுதுவோமா அப்பிடின்னு தோணும். அதுவும்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி பதிவ ஒரு ஐம்பது தடவையாவது படிச்சிருப்பேன். இன்னும் நிறைய பேருக்கு அவங்க பதிவுகள் சென்றடையட்டும்.

பிடித்த விளையாட்டு?
விளையாட்டுனாலே ரொம்ப பிடிக்கும். பாரபட்சமே கிடையாது. சிலம்பம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். இத விளையாட்டுன்னு சொல்ல கூடாது. இருந்தாலும் பரவாயில்லை நான் சொன்னதுக்காக இருந்துட்டு போகட்டும்.

கண்ணாடி அணிபவரா?
இந்த மாதிரி தொடர் பதிவு (அதுவும் இத்தன கேள்வி) ஒரு நாலு எழுதுனா கூடிய சீக்கிரம் போட்டுடுவேன்.

எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
மொழி,மௌன ராகம் - இந்த இரு படங்களும் ஏற்படுத்திய தாக்கத்தை என்னால சொல்லவே முடியாது.அப்புறம் நமக்கு படம்னா ரொம்ப ஜாலியா, காமெடியா இருக்கணும். hostel friends கூட கூட்டமா உட்கார்ந்து பார்த்தா எந்த படம்னாலும் எங்களுக்கு ஓகே.

கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க - சூப்பரான படம். திரும்பி பார்க்கணும் (அதுவும் அந்த குட்டியோட "எப்புடி" கேட்கவே பார்க்கணும்)

என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
என்ன இன்னும் கொஞ்சம் positive think பண்ண வைக்குற புக் - சொல்லாததும் உண்மை. எத்தன தடவை படிச்சி இருப்பேன்னு என்னால கூட சொல்ல
முடியாது.
முதல் முறை படிக்கிற புக் - Three mistakes of my life.

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வீட்ட விட்டுட்டு வெளியில வந்துட்டா அது எவ்வளவு பக்கமா இருந்தாலும் தூரமா தான் தெரியும்.

உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லைங்க.

உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
ஊரு சுத்துறது ரொம்ப பிடிக்கும். என்ன reason தெரியாது, ஆனா ஜப்பான் போனா நல்லா இருக்கும்னு தோணும்.

எப்படி இருக்கணும்னு ஆசை?
யாருக்கும் உதவி செய்ய முடியலைனாலும் உபத்திரவம் செய்யாம இருக்கணும்னு தான் ஆசை

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
சின்ன பொண்ணுங்க கிட்ட கேட்குற கேள்வியா இது?

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
இன்னைய வரைக்கும் ஒரு புரியாத புதிராகவே இருக்கு. எந்த நிமிஷம் என்ன நடக்கும்னே தெரிய மாட்டேங்குதே. அதுவும் எதுக்கு, எப்பிடி ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதே

வெட்டிபயல்னு சொல்லிக்கிட்டு வெட்டியா இல்லாம ரொம்ப நல்ல பதிவுகள போடுற ஒரு பெரிய தலய இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.
ஒரு பெரிய தல நம்மள மாட்டி விட்டதுக்கு நாம ஒரு பெரிய தலய மாட்டி விட்டாச்சு. இப்போ தான் நிம்மதி!

6 comments:

ப்ரியா said...

Thanks.

ஆயில்யன் said...

/வீட்ட விட்டுட்டு வெளியில வந்துட்டா அது எவ்வளவு பக்கமா இருந்தாலும் தூரமா தான் தெரியும்.///

சூப்பர் பதில் :)

$anjaiGandh! said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?
யாருக்கும் உதவி செய்ய முடியலைனாலும் உபத்திரவம் செய்யாம இருக்கணும்னு தான் ஆசை//

Same pinch.. :)
இந்தக் கேள்விக்கு நானும் இந்த பதில் தான் சொல்லு இருந்தேன்.

$anjaiGandh! said...

//கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
குளிக்க பிடிக்குமான்னு கேளுங்க முதல்ல.//

ஹிஹி.. One more Same Pinch.. :)

R.Gopi said...

//கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
குளிக்க பிடிக்குமான்னு கேளுங்க முதல்ல.//

சூப்பர் பதில்...........

//வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வீட்ட விட்டுட்டு வெளியில வந்துட்டா அது எவ்வளவு பக்கமா இருந்தாலும் தூரமா தான் தெரியும்.//

அபாரமான பதில்......... நான் கண்டிப்பாக இப்படித்தான் எண்ணிக்கொள்ள வேண்டும்..... ஏனெனில் நான் இருப்பது துபாயில், என் குடும்பம் சென்னையில்......

//வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
இன்னைய வரைக்கும் ஒரு புரியாத புதிராகவே இருக்கு. எந்த நிமிஷம் என்ன நடக்கும்னே தெரிய மாட்டேங்குதே. அதுவும் எதுக்கு, எப்பிடி ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதே//

இது எல்லாருக்கும் இருக்கறதுதான்......அதுவும் ரொம்ப யோசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இதுபோல் இருக்கும்........

சந்தனமுல்லை said...

ரசித்தேன்!

//கண்ணாடி அணிபவரா?
இந்த மாதிரி தொடர் பதிவு (அதுவும் இத்தன கேள்வி) ஒரு நாலு எழுதுனா கூடிய சீக்கிரம் போட்டுடுவேன்.//

:-))))