Friday, May 1, 2009

Mac Mac Macorina

Office tea break இல் ஒரு 10 பேரு நின்று பேசி கொண்டிருந்தோம். எப்படியோ எங்க பேச்சு எங்க காலேஜ் பக்கம் திரும்பி விட்டது. என்னுடைய காலேஜ் ஐ எல்லோரும் நன்றாக ஓட்டுவாங்க. சரி நம்ம பக்கம் பேச்சு திரும்பிட கூடாதுன்னு நான் வேற பக்கம் பேச்ச மாதி விடணும்னு நினைத்து கொண்டு இருக்கும் போதே புதுசா எங்க team ல சேர்ந்திருக்கும் பொண்ணு, என்னை பார்த்து நீங்க எந்த காலேஜ் என்று கேட்க, "ஆப்பு நம்ம பக்கம் திரும்புது போல இருக்கே" என்று நான் நினைத்து கொள்ள, அதற்குள் தோழி ஒருத்தி "அவ எங்க காலேஜ் ல படிச்சா, அவ engineering ஸ்கூல் ல தானே படிச்சா"

"Oii, என்ன ரொம்ப ஓட்டுற. எங்க காலேஜ் ஒன்னும் school கிடையாது" (ஆமாம்னு ஒத்துக்கவா முடியும். நல்லா ஒட்டி எடுத்துடுவாங்க)

"ஆமா காலேஜ் 8 மணிக்கு. 8.01 கு போனா கூட attendance கிடைக்காது, ஒவ்வொரு hour கும் attendance எடுப்பாங்க, எல்ல லேப் hours ளையும் viva இருக்கும், அத வைச்சு தான் semester internals போடுவாங்க, every month ஒரு டெஸ்ட், பசங்க பொண்ணுங்க பேசிக்க கூடாது, செல் போன் hostle ல வைச்சிக்க கூடாது, b'day parties கொண்டாட கூடாது, 3 year வரைக்கும் வீட்டுல இருந்து யாராவது வந்து leave கு வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்.... இன்னும் நிறைய சொல்லலாம்... இதுக்கு பேரு ஸ்கூல் இல்ல college aa ... நீங்களே சொல்லுங்க"

"இன்னும் சொல்லனும்னா ராஜி percentage தான் சொல்லணும். அவ 80% வைச்சிருக்கா. அப்பிடினா அவ எப்பிடி படிச்சிருக்கணும்"

நான் "ஏய் நீ அடங்க மாட்டியா. கொஞ்சம் அமைதியா இரு."

"ஆனா அந்த ஸ்கூல் ல கூட ராஜி அராஜகம் பண்ணி சஸ்பெண்ட் ஆகிற வரைக்கும் போயிருக்கா"

கடவுளே வந்து தடுத்தாலும் மானம் போக போறது உறுதி ஆய்டுச்சு. அதுனால அந்த சம்பவத்த நானே சொல்லிடலாம்னு நானே சொல்லி விட்டேன்.

எங்க College Hostel ல Every Saturday நைட் 8 மணிக்கு ஒரு படம் போடுவாங்க. அதுவும் projector லம் வைச்சு ஒரு 300 பேரு உட்கார்ந்து பார்ப்போம். அது Students டிவி ஹால். Staff கு தனியா டிவி ஹால் இருக்கு. அவங்களுக்கு வேற ஒரு டே ல அதே படத்தை போடுவாங்க. இருந்தாலும் Staff உம் எங்க கூட உட்கார்ந்து டிவி பார்ப்பாங்க. (யாரு யாரு ரொம்ப ஆடுறாங்க. யாருக்கு internal ல குத்தலாம்னு பார்கனும்ள)

First and Second year Students கொஞ்சம் அமைதியா தான் படம் பார்த்தாகணும். Third years நல்லா ஆட்டம் போடுவாங்க . Final Years ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா ஆட்டம் போடுவாங்க (இது எல்லாம் எங்க IT dept staff வார்டன் எ இருக்குற வரைக்கும் தாங்க. அவங்க தான் எங்களுக்கு தெய்வம் மாதிரி .. எங்கள புரிஞ்சி கிட்டு எங்கள ஆட விடுற ஆளுங்க)

நாங்க Third Years படிச்சப்போ எங்க immediate seniors கு நாங்க ரொம்ப close. அதுவும் இல்லாம அவங்க Girls Strength ரொம்ப கம்மி. So Third Year ல நாங்கல்லாம் Final Year மாதிரி ஆட ஆரம்பிச்சாச்சு. (உண்மைய சொல்லணும்னா அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க. ரொம்ப அமைதிங்க)

Film போடுறப்போ Screen கு பக்கத்துல ஒரு 10 row எங்க மக்கள் தான். Third அண்ட் Final year நான் படிக்கிறப்போ அந்த place ல எங்கள தவிர வேற யாரும் உட்கார்ந்து இல்ல. உட்கார விட்டது இல்லங்க. (இத்தனையும் staff கு தெரியாம செய்யணும். நம்மள staff கிட்ட மாட்டி விடமா அவங்கள மிரட்டுரதுக்குல போதும் போதும்னு ஆய்டும்)

எல்லோரும் பார்க்கிறப்போ Color Color ஆ எல்லோருடைய துப்பட்டாவை பறக்க விடுவோம். Train ஓட்டுவோம். விசில் வாங்கி வச்சுக்கிட்டு விசில் அடிப்போம் (விசில் அடிக்க கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா இன்னைய வரைக்கும் நான் கத்துக்கல). போதாத குறைக்கு பாட்டு டான்ஸ் வேற. (ஒரு நல்ல voice ல பாட்டு ஓடிட்டு இருக்குறப்போ நாங்க ஒரு gang ஆ சேர்ந்து பாடுனா எப்பிடி இருக்கும்னு யோசிச்சிச்சு பாருங்க.)

அதே மாதிரி ஒரு Department குள்ள Frineds Gang அப்பிடி எல்லாம் இருந்தது இல்ல. ஒரு Gang ல minimum 3 department பொண்ணுங்களாவது இருப்பாங்க. நாங்க Third இயர் படிக்கிற வரைக்கும் எங்க dept mam தான் Hostle வார்டன். நாங்க ஒரு 3 பேரு தான் Hostel Rep. எந்த problem இல்லாம என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்.

Final Year ல இனி 2 வார்டன் நு சொல்லி EEE Staff ஒருத்தவங்களையும் சேர்த்து வார்டன் ஆக்கிட்டாங்க. ஆப்பு அங்க தான் அடிச்சாங்க. என்னனா எல்லா dept பொண்ணுங்களும் சொல்லுறத கேட்காம ஆடுறதுக்கு first reason IT dept பொண்ணுங்க தான் EEE, ECE staff எல்லோரும் நினைச்சிட்டு இருந்தாங்க. காலேஜ், School மாதிரி இருந்தா நாங்க என்ன தாங்க பண்ணுறது. College Life waste ஆ போயடும்லங்க. அதுக்குலாம் நாங்க கவலை பட்டது இல்ல.

ஒரு நாள் குஷி படம் போட்டுருந்தாங்க. "Mac Mac Macorina" song வந்ததும் எல்லோரும் எழுந்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க எப்போது போல துப்பட்டா பறக்க விட்டு, train ஒட்டி அதுவும் hall ல இருந்த பொண்ணுங்க நடுவுல எல்லாம் train ஓட்டிட்டு திரும்பி எங்க place ல வந்து நின்னு, நல்லா டான்ஸ் அடி, விசில் அடிச்சு அந்த song முடியுறதுக்குள்ள டிவி hall ஒரு வழி பண்ணியாச்சு.

ஒரு வழியா படம் முடிஞ்சு, hostel ரூம் குள்ள நுழைஞ்சா, பின்னாடியே ஒரு பொண்ணு வந்து "ராஜி, IT Dept பொண்ணுங்க எல்லோரையும் வார்டன் (EEE) hostel கு வெளியே வர சொன்னாங்க"
"பிரச்சனை ஆரம்பிக்குது. சரி நீ போ நான் வரேன்"நான் போவதற்குள் எங்க dept பொண்ணுங்க எல்லாம் அங்க வந்து இருந்தாங்க (film பார்க்க வராதவர்கள் உட்பட)

வார்டன் "IT Rep யாரு"

தோழி ஒருத்தி நக்கலாக சிரித்து கொண்டே "ராஜி"

என்னை பார்த்து முறைத்து "நீயே முதல் ஆளா ஆடுற. அப்புறம் class எப்பிடி இருக்கும்"

நான் "ஏன் mam, எங்கள வர சொன்னீங்க"

"டிவி hall ல இப்படி தான் ஆடுவீங்களா. உங்களால வேற யாரும் படம் பார்க்க முடியல"

நான் "நாங்க மட்டும் ஆடலை mam. எல்லா dept பொண்ணுங்களும் தான் ஆடுனாங்க"

"நீங்க ஆரம்பிச்துனால தான் எல்லோரும் ஆடுனாங்க"

"அப்பிடி எல்லாம் இல்ல mam, எல்லோரும் தான் ஆடுனாங்க. நீங்க ஏன் எங்கள மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க?" (நாங்க ஆடுன ஆட்டத்தை பார்து உங்களுக்கே ஆடனும் போல இருந்துருக்கனுமே என்று நினைத்து கொள்ள தான் முடிந்தது)

"என்ன ரொம்ப question கேட்கிற?"

"அப்பிடி எல்லாம் இல்ல mam. ஆனா நீங்க ஏன் எங்கள மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க?"

"நீங்க தான் ஆட start பண்ணுனீங்க"

"சரி mam, ஆனா tv hall கு வராத பொண்ணுங்களை எல்லாம் ஏன் கூப்பிட்டு இருக்கீங்க. அவங்க என்ன பண்ணுனாங்க"

"அவங்க IT தானே"

"ஆடுன மத்த dept பொண்ணுங்களை விட்டுட்டு ஆடாத எங்க dept பொண்ணுங்களையும் கூப்பிட்டு இருக்கீங்க"
(மத்த dept பொண்ணுங்களை மாடி விட்டுடாத ராஜி என்று மனசுக்குள் ஒரு குரல். Future ல நமக்கு support போய்ட கூடாதுன்னு ஒரு பயம் thaan)
என்னைமுறைத்து கொண்டே "சரி film கு வராத எல்லோரும் போங்க"
"சரிங்க mam. நாங்க தான் start பண்ணினோம்."
" ஒரு apology letter எழுதி கொடுங்க"

"நாங்க என்ன தப்பு பண்ணினோம் mam, apology letter எழுதி கொடுக்குற அளவுக்கு"

"மத்தவங்கள படம் பார்க்க விடாம பண்ணினதுக்கு"

"எல்லோரும் எல்லா வருசமும் இப்படி தானே ஆடுறாங்க. இதுல என்ன தப்பு இருக்கு?"

"நீ என்ன இப்படி rowdy தனம் பண்ணுறதுக்கு gang leader ஆ"

"எல்லோரும் தான் ஆடுனாங்க. நீங்க எங்கள மட்டும் தான் கூப்டீங்க. எல்ல வருசமும் எப்போதும் டான்ஸ் ஆடுறது தான். அதுக்கு எதுக்கு apology லெட்டர்?"

"ரொம்ப திமிரா பேசுற. லெட்டர் எழுதி கொடுத்துட்டு போங்க"

"Students டிவி ஹால் தானே mam. Staff லம் ஏன் வந்தீங்க"

"உங்கள எல்லாம் சஸ்பெண்ட் பண்ணினா தான் புத்தி வரும்"
பக்கத்தில் இருந்த தோழியிடம் "உனக்கு லம் புத்தி வருமா என்ன?"
பக்கத்தில் இருந்த தோழி "ரொம்ப முக்கியம். apology letter நு பேசிட்டு இருந்தவங்கள சஸ்பெண்ட் நு பேச வைச்சிட்டியே. நீ எதுவும் பேசாத. நாங்க பேசிகிறோம்"

தோழி "mam, இனி இப்படி பண்ண மாட்டோம். sorry mam"
நான் அவ காதில் "வெட்காம இல்ல. இப்படி கெஞ்சுற"
திரும்பி திரும்பி அவங்க சஸ்பெண்ட் பத்தியே பேசிட்டு இருந்தாங்க.
அங்கு நின்றிருந்த ஒரு 15 பேரும் அதே அடுத்த 30 நிமிடத்திருக்கு அதே புராணத்தை பாட (நாங்க ஒரு 3 பேரு வாய திறக்கவே இல்ல), கொஞ்சம் மனம் இறங்கி சரி சரி apology letter எழுதி குடுத்துட்டு போங்க என்று சொல்ல, ஒருவரும் எழுதி கொடுக்க ready ஆ இல்ல.

அப்போதே மணி ஒன்று ஆகி விட்டது. (நாங்க ஆடுன ஆட்டத்துக்கு கொஞ்சம் tired ஆகி தூக்கம் வேற வந்துடுச்சு)
அவங்களும் திரும்பி திரும்பி apology letter கேட்டு கேட்டு எங்களை hostel குல போக கூடாதுன்னு சொல்லிடாங்க.
நாங்களும் எழுதி தரவே முடியாதுன்னு நின்னுட்டு இருந்தோம்..

நான் தோழியிடம் "சீக்கிரம் கெஞ்சி முடிங்கடி. தூக்கம் வருது" என்று சொல்லி விட்டு வேற பக்கம் திரும்பி கொண்டேன்
4 மணி வரைக்கும் நாங்க நின்னுட்டே இருந்தோம். (சாரி சாரி ... நின்று கொண்டே தூங்கிட்டு இருந்தோம்)

அவங்க ரொம்ப irritate ஆகி சரி நீங்க போங்க, நாளைக்கு princi எ பார்க்க போகணும் நு சொல்லிட்டு போய்ட்டாங்க. (அங்க இருந்ததுல வார்டன் மட்டும் தான் தூங்கலைன்னு நினைக்கிறேன்)
என்ன தான் பண்ணுறாங்க பார்ப்போம்னு சொல்லிட்டு, எங்க dept மேடம் கு போன் பண்ணி சொன்னோம். (இவ்வளவு நடந்ததும் அவங்களுக்கு தெரியல)


morning 8 மணிக்கு அவங்களே princi கிட்ட பேசி இனி இப்படி பண்ண மாட்டோம்னு சொல்லி எங்கள காப்பாத்திட்டாங்க. (princi லம் இந்த மாதிரி சப்ப matter கு திட்ட மாட்டார்)
அவங்கள பத்தி தெரிஞ்சே அவங்க கிட்ட இப்படியா பேசுவனு எங்க staff என்ன கிண்டல் பண்ணினது தனி கதை (note this. எங்க staff என்னை thittala.)

இன்று வரை "Macorina" song யார் எங்கே கேட்டாலும் உடனே எனக்கு ஒரு msg வரும்.
வேற எதாவது விசயத்துல நாங்க மாட்டுவோமன்னு அந்த staff நாங்க final year முடிக்கிற வரை எங்களை watch பண்ணினது எங்களால மறக்கவே முடியாது.
இன்று வரை எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுகிறார்கள். ஒரு 4 கேள்வி கேட்டதுக்கு. என்ன உலகமடா :) :) :)

13 comments:

maha said...

me the 1st

maha said...

padicitu vanthu kavanichukkeren

maha said...

onnum solrathukku ella raji.
eenna nanum eppadithan oru collegela sorry schoolla padichen.

same blood.
same feelings of india..

maha said...

corecta thairiyama pesi erukkinga.
good raji.

அபி அப்பா said...

ராஜி நெம்பத்தான் ஆட்டம் போட்டிருக்கேப்பா! இதை 1 மாசம் முன்ன எழுதி சங்கமம் போட்டில அனுப்பி இருந்தா கண்டிப்பா பரிசு என் தங்காச்சிக்கு தான்!

Gayathri said...

raji team irukara antha 10 per la naanum oruthi...enga poonalum unga maanam kappl yerum nu ellarkum theriyum pola... ;)

விஜய் said...

சில காலேஜ் இந்த மாதிரி கீழ்த்தரமா மாணவர்களை ஏதோ கைதிகள் போல் நடத்துகிறார்கள். கேட்டால் டிஸிப்ளின் அது இதுன்னு கதை விடுவார்கள். இப்படி நடத்தப்படும் மாணவர்கள் நடத்துவதால், படித்து முடித்துவிட்டு வெளியே வேலைக்கு வரும் போதும் அவர்களை கண்காணித்துக் கொண்டேயிருந்தால் தான் வேலை செய்வார்கள். அவர்களது மெண்டாலிடி அப்படியாகிவிடும்.

எப்போத்தான் இந்த மாதிரியான கால்லூரி நிர்வாகிகள் திருந்துவார்களோ???

ஆமாம், நீங்க எந்த காலேஜ். சிவகாசி காலேஜா. நான் படிச்ச காலத்துல அங்க தான் இந்த மாதிரியான கெடுபிடிகளெல்லாம் உண்டு.

SAP said...

raji...
Onga ranguku screena kilichirakum but just dancing ooda nirithiteenga.... konjam kammi than innum naeraya yaethir paakurein..

Mathu Krishna said...

Rajikkaa...
naama ellaam ore jaathi!!!
he he he!!!
enga uni kooda pdi thaan, aniyaya alapparai!!!
hmmm!!!

by ta way, romba naalaa intha pakkame vara mudiyala ka, epdi irukkeenga??;-)

Maddy said...

அப்போ கொஞ்ச நாளைக்கு முன்னே போட்ட வீடியோ உண்மை தானா?? நாலே நாலு கேள்வி கேட்டததுக்க?? என்ன கொடுமை இது!! சரி சரி கண்ணா தொடச்சிக்கோ இனி அந்த ஸ்குலுக்கு!! சே!!!! காலேஜ் க்கு போக வேணாம்!!

மணிகண்டன் said...

நீங்க ரவுடியா ?

ஏங்க எந்த ஸ்கூல்ல இந்தளவு தொல்லை பண்ணறாங்க ? தமிழ்நாட்டுல உள்ள பொறியியல் கல்லூரிகளோட ஸ்கூல் ஒப்பிடவே முடியாது !

Madhu said...

Unmaiya sollanumnaa Raji ...naan andha hostel la orae oru padam dhaan paarthaen..Annikku neenga potta aattathula thalaivali vandhu kilambinadhu dhaan...adhukapram I've never set foot on the TV hall..!! Long live IT dancers..!!

ஜோசப் பால்ராஜ் said...

நானென்ல்லாம் ஸ்கூல் படிக்கிறப்பவோ வார்டன அடிச்சவன். அதுவும் எப்டி, நைட் சாப்புட்டு முடிச்சதும் அரை மணி நேரம் ஃப்ரீயா க்ரவுண்டுல விடுவாய்ங்க, அப்ப க்ரவுண்ட் கடைசில நின்னுக்கிட்டு இருந்தோம். வார்டன் டெய்லி நைட் க்ரவுண்ட்ல ரவுண்டு போவாரு. கும் இருட்டுல அடி பின்னிட்டோம்ல. சத்தமேயில்லாம அடிச்சும், அடிச்சது நான் தான்னு கண்டுபுடிச்சுட்டாரு. அதுக்காக அடுத்த வாரம் டைனிங் ஹால்ல கரண்ட் கட் ஆனப்ப ஊத்தப்பம் & சாம்பார் அபிஷேகம் நடத்துனோம்.
அதுல இருந்து அவரு ஈவ்னிங் 6 - மார்னிங் 6 கையில டார்ட் இல்லாம வெளில வரவே மாட்டாரே .