Thursday, May 28, 2009

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள்!


அந்த தனியார் மருத்துவமனையில் ஜூன் மாதத்தின் ஒரு நாள் இரவில் இரவின் நிசப்தத்தை மீறிய அழுகையுடன் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த அம்மாவிற்கு மூன்று வயதில் ஒரு மகன் உண்டு. பெண் குழந்தை பிறந்த ஒரு வார மருத்துவமனை வாசத்திற்கு பின் வீட்டுக்கு கிளம்ப

அந்த மகன் அம்மாவிடம் "யாரும்மா இது?" என்று கேட்க

"உன் தங்கச்சி"

"இந்த பாப்பா வேண்டாம்மா, இங்கேயே விட்டுட்டு போய்டலாம்"

"அப்பிடிலாம் சொல்ல கூடாதுப்பா. இது உன் தங்கச்சிப்பா"

அந்த பையனுக்கு ஏனோ அவன் தங்கையை வீட்டுக்கு அழைத்து போக கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பாப்பா வேண்டாம் வேண்டாம் என்று அவன் அம்மாவிடம் திரும்பி திரும்பி சொல்லி கொண்டிருந்தான்.

ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பின் தங்கையின் மேல் பாசம் வந்து விட்டது. ஏன் என்ற காரணம் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். தன் தங்கையை அழாமல் பார்த்து கொண்டும், தன் தங்கையுடன் விளையாடியும் சந்தோசப்பட்டு கொள்ளுவான்.

அந்த பெண் குழந்தை அப்பா துணை இல்லாமல் தன் அண்ணனின் துணையுடன் பள்ளி செல்ல துவங்கிய நாட்களில், அந்த பெண் குழந்தையின் கையை பத்திரமாக பற்றி பள்ளிக்கு அழைத்து செல்லுவான். ஆனால் அந்த பெண் குழந்தையோ அண்ணனின் கையை தட்டி விட்டோ இல்லை கடித்து விட்டோ அவளின் அண்ணனை விட்டு தள்ளி செல்லுவாள். ஆனால் அந்த பெண்ணின் அண்ணன் எதையும் பொருட்படுத்தாமல் திரும்பி போய் கையை பற்றி பத்திரமாக அழைத்து செல்ல முற்படுவான். ஆனால் அந்த பெண்ணின் அராஜகம் தாங்க முடியாது. ஆனாலும் அந்த பையன் அவர்களின் பெற்றோரிடம் சொல்லி கொடுக்க மாட்டான். தங்கை என்ன செய்தாலும் பொறுத்து கொள்ளுவான்.

வெளியில் தான் இப்படி என்றால் வீட்டில் அதற்கும் மேல். தன் அண்ணனை அடித்து விட்டு எங்கயாவது அம்மாகிட்ட மாட்டிப்போமோ என்று பயந்து அண்ணனை அடித்து முடித்த அதே வேகத்தில் அழவும் ஆரம்பித்து விட வேண்டியது. அம்மா கேட்டால் அண்ணா தான் அடித்தான் என்று சொல்லி தர வேண்டியது. இருந்தாலும் அவளின் அண்ணன் அவளை காட்டி கொடுத்தது கிடையாது.

அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அப்பாவிடம் சென்று "அப்பா, எனக்கு சைக்கிள் வேணும்ப்பா" என்று கேட்க, அவளின் அப்பா எந்த மறுப்பும் சொல்லாமல் சைக்கிள் வாங்கி கொடுத்தார். வாங்கி கொடுத்ததோ முழு ஆண்டு தேர்வு விடுமுறையில். விடுமுறை முழுவதும் தன் மகளை நன்றாக ஓட்ட செய்து, ஆறாம் வகுப்பிற்கு சைக்கிளில் அனுப்பி வைத்தார்.

ஆறாம் வகுப்பில் தன் பெற்றோரிடம் சென்று "நான் ball-badminton விளையாட போகட்டுமா. எங்க school ல என்னையும் select பண்ணி இருக்காங்க. நான் அடுத்த வாரம் school ல name கொடுக்கணும்"பெற்றோரோ "போலாம்மா. ஆனா டெய்லி நீ காலைல கோச்சிங் போகணும். போகலன்னா உங்க school ல திட்டுவாங்க. எங்க போட்டி நடந்தாலும் போகணும். இது எல்லாம் ஸ்கூல் hours ல பண்ண முடியாது. நல்லா யோசிச்சு பாரு" என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் அவளை டெய்லி காலையில் சீக்கிரம் எழுப்பி விட்டு ஒரு வாரத்திற்கு பின் "இப்போ பேர் குடுக்குறதுன்னா கொடு" என்று சொல்லி விட, அவளும் சந்தோசமாக சேர்ந்து கொண்டாள்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு "எங்க school ல கராத்தே, சிலம்பம் கத்து தராங்களாம். நான் சேரட்டுமா?"

"உன்னால manage பண்ண முடியுமாமா?"

"முடியும்பா. நான் சேர்ந்துகிட்டுமா? ப்ளீஸ் ப்ளீஸ்" (படிக்கிறது தவிர எல்லாம் பண்ண முடியும்)

அவள் பத்தாம் வகுப்பிற்கு வந்து விட்டாள். ரொம்ப நன்றாக படிக்கவில்லை என்றாலும் எப்பிடியாவது ஒரு ஏழு ரேங்கிற்குள் வந்து விடுவாள். ஆனால் அவளின் அண்ணனோ எப்போதும் முதல் ரேங்க். முதல் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாவது வரை எப்போதும் பள்ளியில் முதலிடம். ஆனால் அவர்களின் பெற்றோர் இருவரையும் ஒப்பிட்டு பேசியது இல்லை. அவர்களுக்கு பிடித்த வழியில் அவர்களை வளர்த்தார்கள்.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக 460/500 வாங்கி விட்டாள். அவங்க அண்ணன் ஒரு இரண்டு மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவப்படிப்பை கோட்டை விட்டு விட்டு இன்ஜினியரிங் சேர்ந்து விட்டான்.அவர்களின் பெற்றோருக்கு யாரவது ஒருவரை மருத்துவம் படிக்க வைக்க ரொம்ப ஆசை. அதனால் அவளை Biology group சேர்த்து விடலாம் என்று நினைக்க, அவளுக்கோ கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று சொல்ல, எப்போதும் போல் பெற்றோர் அவளின் விருப்பத்திற்காக ஒத்து கொண்டு biology group இல் சேர்ந்து கொள். ஆனால் biology படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். (Computer Science group அந்த பள்ளியில் அப்போது இல்லை). அவளது அண்ணனும் தங்கையின் மேல் பாசத்தை கொட்டி பார்த்து கொண்டான். தங்கைக்கு நல்ல ஒரு வழிகாட்டுதலை கொடுத்தான்.

ஒரு வழியாக பன்னிரெண்டாவது முடித்தாயிற்று. அவளை EEE or ECE சேர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு ஆசை. ஆனால் அவளுக்கோ IT மேல் காதல். இப்போதும் அவளின் ஆசையே வென்றது.

காலங்கள் வேகமாக ஓடி கொண்டு இருக்கிறது. இன்று வரை அவளின் விருப்பபடியே அவள் சம்மந்தபட்ட அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. அவள் எந்த விஷயம் சொன்னாலும் அதை கேட்டு அவளுக்கு தங்களுடைய யோசனைகளை சொல்லி விட்டு அவளை முடிவு எடுக்க விட்டு விடுகிறர்கள் அவளின் பெற்றோரும், அண்ணனும்.

எந்த ஒரு சோகத்திலும் அவளை அவர்கள் சோர்ந்து போக விடவில்லை.

எதிலும் அவர்களின் எண்ணங்களின் தாக்கம் இல்லாமல் அவள் அவளாக வாழ வழி செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த கடவுளால் ஆசிர்வடிக்கப்பட்டிருக்கும் பெண் நான் தான். இங்கு நான் சொல்லி இருக்கும் நிகழ்வுகள் மிக மிக மிக குறைவு. என் பெற்றோரையும், அண்ணனையும் நினைக்கும் போது, வேறு எதுவும் எனக்கு தேவை இல்லை என்று தோன்றுகிறது.

அந்த கடவுளால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்குறேன்.

இன்றும் எனது அண்ணன் சொல்லுவான் "நான் வேண்டாம்னு சொன்னப்பவே இவள விட்டுட்டு வந்து இருந்தா இன்னைக்கு நமக்கு இவ்வளவு இம்சை இல்லைன்னு" அதற்கு நான் என்ன பண்ண முடியும். கடவுள் அவனை அந்த மாதிரி ஆசிர்வதித்து விட்டார்.

16 comments:

விஜய் said...

ரொம்பவும் நெகிழ்ச்சியாயிருந்தது :-)

Ramya said...

Kandipa imsai irukadhu...unga anna sonnadha keturundha..
Naangalum thappichirupom.. hey hey

Truth said...

பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே, இது உங்கள் சொந்த கதையாகத் தான் இருக்குமென நினைத்தேன். ஆனால், "அழகான பெண் குழந்தை பிறந்தது" என்று சொல்லி அழகாக ட்விஸ்ட் தந்தது உங்களின் சிறப்பு :P

// ஆனால் அந்த பெண்ணின் அண்ணன் எதையும் பொருட்படுத்தாமல் திரும்பி போய் கையை பற்றி பத்திரமாக அழைத்து செல்ல முற்படுவான்.

இங்க பெண் க்கு பதிலாக சிறுமின்னு போட்டிருக்கலாம். சரிதானே? நாம நம்மல பத்தி எழுதும் போது செய்ற தப்பு இதுதான். நாம் இப்போ எப்படி இருக்கிறோம்ன்னு நினைச்சி எழுதுறதுனால வர்றது. :-)

//அதனால் அவளை Biology group சேர்த்து விடலாம் என்று நினைக்க, அவளுக்கோ கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று சொல்ல, எப்போதும் போல் பெற்றோர் அவளின் விருப்பத்திற்காக ஒத்து கொண்டு biology group இல் சேர்ந்து கொள். ஆனால் biology படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.

same blood :-)

நல்ல பதிவு

$anjaiGandh! said...

முதல் சில வரிகள் படிச்சதுமே அந்த அறுந்த வால் யார்ன்னு தெரிஞ்சிடிச்சி.. எப்போதும் சந்தோஷமாய் வாழ என் வாழ்த்துகள்..!

அபி அப்பா said...

ராஜி! ஜூன் மாசம் பர்த்டேயா? அப்ப சரி!

முதல் வரியிலேயே எனக்கும் தெரிஞ்சிடுச்சு!

கணேஷ் said...

கராத்தே வா..??????

கொஞ்சம் ஜாக்கிரதை கணேஷா.. இனிமேல் ஆன்லைனில் மொக்கை போடும்போது உஷார்..

வெட்டிப்பயல் said...

செம டேலண்டடா இருந்திருக்கீங்க போல :)

☼ வெயிலான் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

Mathu Krishna said...

awww... Rajikkaa, I too guessed that it must be you!
:)
lovely one:)

kanagu said...

நீங்க ரொம்ப லக்கிங்க... :) இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் இருப்பதற்கு :)

SAP said...

intha ellam thanguna onga annan than aasirvathika pattavarnu naa feel parein :))))

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Thanks Everyone!

ஆயில்யன் said...

// தனியார் மருத்துவமனையில் ஜூன் மாதத்தின் ஒரு நாள் இரவில் இரவின் நிசப்தத்தை மீறிய அழுகையுடன் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.//

அப்ப பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒண்ணு சொல்லிக்கிலாம் போல :))))

ஆயில்யன் said...

//வெளியில் தான் இப்படி என்றால் வீட்டில் அதற்கும் மேல். தன் அண்ணனை அடித்து விட்டு எங்கயாவது அம்மாகிட்ட மாட்டிப்போமோ என்று பயந்து அண்ணனை அடித்து முடித்த அதே வேகத்தில் அழவும் ஆரம்பித்து விட///

வெரிகுட் கேரக்டர் !

கேக்கவே ரொம்ப இண்ட்ரஸ்டிங்க இருக்கே :)))))

ஆயில்யன் said...

/பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக 460/500 வாங்கி விட்டாள்.///

வாவ் சூப்பர்ர்ர்ர்!

ஆயில்யன் said...

//காலங்கள் வேகமாக ஓடி கொண்டு இருக்கிறது. இன்று வரை அவளின் விருப்பபடியே அவள் சம்மந்தபட்ட அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. அவள் எந்த விஷயம் சொன்னாலும் அதை கேட்டு அவளுக்கு தங்களுடைய யோசனைகளை சொல்லி விட்டு அவளை முடிவு எடுக்க விட்டு விடுகிறர்கள் அவளின் பெற்றோரும், அண்ணனும். //

வாழ்த்துக்கள்!

ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமும் கூட..! :))