Thursday, May 28, 2009

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள்!


அந்த தனியார் மருத்துவமனையில் ஜூன் மாதத்தின் ஒரு நாள் இரவில் இரவின் நிசப்தத்தை மீறிய அழுகையுடன் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த அம்மாவிற்கு மூன்று வயதில் ஒரு மகன் உண்டு. பெண் குழந்தை பிறந்த ஒரு வார மருத்துவமனை வாசத்திற்கு பின் வீட்டுக்கு கிளம்ப

அந்த மகன் அம்மாவிடம் "யாரும்மா இது?" என்று கேட்க

"உன் தங்கச்சி"

"இந்த பாப்பா வேண்டாம்மா, இங்கேயே விட்டுட்டு போய்டலாம்"

"அப்பிடிலாம் சொல்ல கூடாதுப்பா. இது உன் தங்கச்சிப்பா"

அந்த பையனுக்கு ஏனோ அவன் தங்கையை வீட்டுக்கு அழைத்து போக கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பாப்பா வேண்டாம் வேண்டாம் என்று அவன் அம்மாவிடம் திரும்பி திரும்பி சொல்லி கொண்டிருந்தான்.

ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பின் தங்கையின் மேல் பாசம் வந்து விட்டது. ஏன் என்ற காரணம் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். தன் தங்கையை அழாமல் பார்த்து கொண்டும், தன் தங்கையுடன் விளையாடியும் சந்தோசப்பட்டு கொள்ளுவான்.

அந்த பெண் குழந்தை அப்பா துணை இல்லாமல் தன் அண்ணனின் துணையுடன் பள்ளி செல்ல துவங்கிய நாட்களில், அந்த பெண் குழந்தையின் கையை பத்திரமாக பற்றி பள்ளிக்கு அழைத்து செல்லுவான். ஆனால் அந்த பெண் குழந்தையோ அண்ணனின் கையை தட்டி விட்டோ இல்லை கடித்து விட்டோ அவளின் அண்ணனை விட்டு தள்ளி செல்லுவாள். ஆனால் அந்த பெண்ணின் அண்ணன் எதையும் பொருட்படுத்தாமல் திரும்பி போய் கையை பற்றி பத்திரமாக அழைத்து செல்ல முற்படுவான். ஆனால் அந்த பெண்ணின் அராஜகம் தாங்க முடியாது. ஆனாலும் அந்த பையன் அவர்களின் பெற்றோரிடம் சொல்லி கொடுக்க மாட்டான். தங்கை என்ன செய்தாலும் பொறுத்து கொள்ளுவான்.

வெளியில் தான் இப்படி என்றால் வீட்டில் அதற்கும் மேல். தன் அண்ணனை அடித்து விட்டு எங்கயாவது அம்மாகிட்ட மாட்டிப்போமோ என்று பயந்து அண்ணனை அடித்து முடித்த அதே வேகத்தில் அழவும் ஆரம்பித்து விட வேண்டியது. அம்மா கேட்டால் அண்ணா தான் அடித்தான் என்று சொல்லி தர வேண்டியது. இருந்தாலும் அவளின் அண்ணன் அவளை காட்டி கொடுத்தது கிடையாது.

அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அப்பாவிடம் சென்று "அப்பா, எனக்கு சைக்கிள் வேணும்ப்பா" என்று கேட்க, அவளின் அப்பா எந்த மறுப்பும் சொல்லாமல் சைக்கிள் வாங்கி கொடுத்தார். வாங்கி கொடுத்ததோ முழு ஆண்டு தேர்வு விடுமுறையில். விடுமுறை முழுவதும் தன் மகளை நன்றாக ஓட்ட செய்து, ஆறாம் வகுப்பிற்கு சைக்கிளில் அனுப்பி வைத்தார்.

ஆறாம் வகுப்பில் தன் பெற்றோரிடம் சென்று "நான் ball-badminton விளையாட போகட்டுமா. எங்க school ல என்னையும் select பண்ணி இருக்காங்க. நான் அடுத்த வாரம் school ல name கொடுக்கணும்"பெற்றோரோ "போலாம்மா. ஆனா டெய்லி நீ காலைல கோச்சிங் போகணும். போகலன்னா உங்க school ல திட்டுவாங்க. எங்க போட்டி நடந்தாலும் போகணும். இது எல்லாம் ஸ்கூல் hours ல பண்ண முடியாது. நல்லா யோசிச்சு பாரு" என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் அவளை டெய்லி காலையில் சீக்கிரம் எழுப்பி விட்டு ஒரு வாரத்திற்கு பின் "இப்போ பேர் குடுக்குறதுன்னா கொடு" என்று சொல்லி விட, அவளும் சந்தோசமாக சேர்ந்து கொண்டாள்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு "எங்க school ல கராத்தே, சிலம்பம் கத்து தராங்களாம். நான் சேரட்டுமா?"

"உன்னால manage பண்ண முடியுமாமா?"

"முடியும்பா. நான் சேர்ந்துகிட்டுமா? ப்ளீஸ் ப்ளீஸ்" (படிக்கிறது தவிர எல்லாம் பண்ண முடியும்)

அவள் பத்தாம் வகுப்பிற்கு வந்து விட்டாள். ரொம்ப நன்றாக படிக்கவில்லை என்றாலும் எப்பிடியாவது ஒரு ஏழு ரேங்கிற்குள் வந்து விடுவாள். ஆனால் அவளின் அண்ணனோ எப்போதும் முதல் ரேங்க். முதல் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாவது வரை எப்போதும் பள்ளியில் முதலிடம். ஆனால் அவர்களின் பெற்றோர் இருவரையும் ஒப்பிட்டு பேசியது இல்லை. அவர்களுக்கு பிடித்த வழியில் அவர்களை வளர்த்தார்கள்.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக 460/500 வாங்கி விட்டாள். அவங்க அண்ணன் ஒரு இரண்டு மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவப்படிப்பை கோட்டை விட்டு விட்டு இன்ஜினியரிங் சேர்ந்து விட்டான்.அவர்களின் பெற்றோருக்கு யாரவது ஒருவரை மருத்துவம் படிக்க வைக்க ரொம்ப ஆசை. அதனால் அவளை Biology group சேர்த்து விடலாம் என்று நினைக்க, அவளுக்கோ கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று சொல்ல, எப்போதும் போல் பெற்றோர் அவளின் விருப்பத்திற்காக ஒத்து கொண்டு biology group இல் சேர்ந்து கொள். ஆனால் biology படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். (Computer Science group அந்த பள்ளியில் அப்போது இல்லை). அவளது அண்ணனும் தங்கையின் மேல் பாசத்தை கொட்டி பார்த்து கொண்டான். தங்கைக்கு நல்ல ஒரு வழிகாட்டுதலை கொடுத்தான்.

ஒரு வழியாக பன்னிரெண்டாவது முடித்தாயிற்று. அவளை EEE or ECE சேர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு ஆசை. ஆனால் அவளுக்கோ IT மேல் காதல். இப்போதும் அவளின் ஆசையே வென்றது.

காலங்கள் வேகமாக ஓடி கொண்டு இருக்கிறது. இன்று வரை அவளின் விருப்பபடியே அவள் சம்மந்தபட்ட அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. அவள் எந்த விஷயம் சொன்னாலும் அதை கேட்டு அவளுக்கு தங்களுடைய யோசனைகளை சொல்லி விட்டு அவளை முடிவு எடுக்க விட்டு விடுகிறர்கள் அவளின் பெற்றோரும், அண்ணனும்.

எந்த ஒரு சோகத்திலும் அவளை அவர்கள் சோர்ந்து போக விடவில்லை.

எதிலும் அவர்களின் எண்ணங்களின் தாக்கம் இல்லாமல் அவள் அவளாக வாழ வழி செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த கடவுளால் ஆசிர்வடிக்கப்பட்டிருக்கும் பெண் நான் தான். இங்கு நான் சொல்லி இருக்கும் நிகழ்வுகள் மிக மிக மிக குறைவு. என் பெற்றோரையும், அண்ணனையும் நினைக்கும் போது, வேறு எதுவும் எனக்கு தேவை இல்லை என்று தோன்றுகிறது.

அந்த கடவுளால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்குறேன்.

இன்றும் எனது அண்ணன் சொல்லுவான் "நான் வேண்டாம்னு சொன்னப்பவே இவள விட்டுட்டு வந்து இருந்தா இன்னைக்கு நமக்கு இவ்வளவு இம்சை இல்லைன்னு" அதற்கு நான் என்ன பண்ண முடியும். கடவுள் அவனை அந்த மாதிரி ஆசிர்வதித்து விட்டார்.

Friday, May 1, 2009

Mac Mac Macorina

Office tea break இல் ஒரு 10 பேரு நின்று பேசி கொண்டிருந்தோம். எப்படியோ எங்க பேச்சு எங்க காலேஜ் பக்கம் திரும்பி விட்டது. என்னுடைய காலேஜ் ஐ எல்லோரும் நன்றாக ஓட்டுவாங்க. சரி நம்ம பக்கம் பேச்சு திரும்பிட கூடாதுன்னு நான் வேற பக்கம் பேச்ச மாதி விடணும்னு நினைத்து கொண்டு இருக்கும் போதே புதுசா எங்க team ல சேர்ந்திருக்கும் பொண்ணு, என்னை பார்த்து நீங்க எந்த காலேஜ் என்று கேட்க, "ஆப்பு நம்ம பக்கம் திரும்புது போல இருக்கே" என்று நான் நினைத்து கொள்ள, அதற்குள் தோழி ஒருத்தி "அவ எங்க காலேஜ் ல படிச்சா, அவ engineering ஸ்கூல் ல தானே படிச்சா"

"Oii, என்ன ரொம்ப ஓட்டுற. எங்க காலேஜ் ஒன்னும் school கிடையாது" (ஆமாம்னு ஒத்துக்கவா முடியும். நல்லா ஒட்டி எடுத்துடுவாங்க)

"ஆமா காலேஜ் 8 மணிக்கு. 8.01 கு போனா கூட attendance கிடைக்காது, ஒவ்வொரு hour கும் attendance எடுப்பாங்க, எல்ல லேப் hours ளையும் viva இருக்கும், அத வைச்சு தான் semester internals போடுவாங்க, every month ஒரு டெஸ்ட், பசங்க பொண்ணுங்க பேசிக்க கூடாது, செல் போன் hostle ல வைச்சிக்க கூடாது, b'day parties கொண்டாட கூடாது, 3 year வரைக்கும் வீட்டுல இருந்து யாராவது வந்து leave கு வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்.... இன்னும் நிறைய சொல்லலாம்... இதுக்கு பேரு ஸ்கூல் இல்ல college aa ... நீங்களே சொல்லுங்க"

"இன்னும் சொல்லனும்னா ராஜி percentage தான் சொல்லணும். அவ 80% வைச்சிருக்கா. அப்பிடினா அவ எப்பிடி படிச்சிருக்கணும்"

நான் "ஏய் நீ அடங்க மாட்டியா. கொஞ்சம் அமைதியா இரு."

"ஆனா அந்த ஸ்கூல் ல கூட ராஜி அராஜகம் பண்ணி சஸ்பெண்ட் ஆகிற வரைக்கும் போயிருக்கா"

கடவுளே வந்து தடுத்தாலும் மானம் போக போறது உறுதி ஆய்டுச்சு. அதுனால அந்த சம்பவத்த நானே சொல்லிடலாம்னு நானே சொல்லி விட்டேன்.

எங்க College Hostel ல Every Saturday நைட் 8 மணிக்கு ஒரு படம் போடுவாங்க. அதுவும் projector லம் வைச்சு ஒரு 300 பேரு உட்கார்ந்து பார்ப்போம். அது Students டிவி ஹால். Staff கு தனியா டிவி ஹால் இருக்கு. அவங்களுக்கு வேற ஒரு டே ல அதே படத்தை போடுவாங்க. இருந்தாலும் Staff உம் எங்க கூட உட்கார்ந்து டிவி பார்ப்பாங்க. (யாரு யாரு ரொம்ப ஆடுறாங்க. யாருக்கு internal ல குத்தலாம்னு பார்கனும்ள)

First and Second year Students கொஞ்சம் அமைதியா தான் படம் பார்த்தாகணும். Third years நல்லா ஆட்டம் போடுவாங்க . Final Years ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா ஆட்டம் போடுவாங்க (இது எல்லாம் எங்க IT dept staff வார்டன் எ இருக்குற வரைக்கும் தாங்க. அவங்க தான் எங்களுக்கு தெய்வம் மாதிரி .. எங்கள புரிஞ்சி கிட்டு எங்கள ஆட விடுற ஆளுங்க)

நாங்க Third Years படிச்சப்போ எங்க immediate seniors கு நாங்க ரொம்ப close. அதுவும் இல்லாம அவங்க Girls Strength ரொம்ப கம்மி. So Third Year ல நாங்கல்லாம் Final Year மாதிரி ஆட ஆரம்பிச்சாச்சு. (உண்மைய சொல்லணும்னா அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க. ரொம்ப அமைதிங்க)

Film போடுறப்போ Screen கு பக்கத்துல ஒரு 10 row எங்க மக்கள் தான். Third அண்ட் Final year நான் படிக்கிறப்போ அந்த place ல எங்கள தவிர வேற யாரும் உட்கார்ந்து இல்ல. உட்கார விட்டது இல்லங்க. (இத்தனையும் staff கு தெரியாம செய்யணும். நம்மள staff கிட்ட மாட்டி விடமா அவங்கள மிரட்டுரதுக்குல போதும் போதும்னு ஆய்டும்)

எல்லோரும் பார்க்கிறப்போ Color Color ஆ எல்லோருடைய துப்பட்டாவை பறக்க விடுவோம். Train ஓட்டுவோம். விசில் வாங்கி வச்சுக்கிட்டு விசில் அடிப்போம் (விசில் அடிக்க கத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா இன்னைய வரைக்கும் நான் கத்துக்கல). போதாத குறைக்கு பாட்டு டான்ஸ் வேற. (ஒரு நல்ல voice ல பாட்டு ஓடிட்டு இருக்குறப்போ நாங்க ஒரு gang ஆ சேர்ந்து பாடுனா எப்பிடி இருக்கும்னு யோசிச்சிச்சு பாருங்க.)

அதே மாதிரி ஒரு Department குள்ள Frineds Gang அப்பிடி எல்லாம் இருந்தது இல்ல. ஒரு Gang ல minimum 3 department பொண்ணுங்களாவது இருப்பாங்க. நாங்க Third இயர் படிக்கிற வரைக்கும் எங்க dept mam தான் Hostle வார்டன். நாங்க ஒரு 3 பேரு தான் Hostel Rep. எந்த problem இல்லாம என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்.

Final Year ல இனி 2 வார்டன் நு சொல்லி EEE Staff ஒருத்தவங்களையும் சேர்த்து வார்டன் ஆக்கிட்டாங்க. ஆப்பு அங்க தான் அடிச்சாங்க. என்னனா எல்லா dept பொண்ணுங்களும் சொல்லுறத கேட்காம ஆடுறதுக்கு first reason IT dept பொண்ணுங்க தான் EEE, ECE staff எல்லோரும் நினைச்சிட்டு இருந்தாங்க. காலேஜ், School மாதிரி இருந்தா நாங்க என்ன தாங்க பண்ணுறது. College Life waste ஆ போயடும்லங்க. அதுக்குலாம் நாங்க கவலை பட்டது இல்ல.

ஒரு நாள் குஷி படம் போட்டுருந்தாங்க. "Mac Mac Macorina" song வந்ததும் எல்லோரும் எழுந்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க எப்போது போல துப்பட்டா பறக்க விட்டு, train ஒட்டி அதுவும் hall ல இருந்த பொண்ணுங்க நடுவுல எல்லாம் train ஓட்டிட்டு திரும்பி எங்க place ல வந்து நின்னு, நல்லா டான்ஸ் அடி, விசில் அடிச்சு அந்த song முடியுறதுக்குள்ள டிவி hall ஒரு வழி பண்ணியாச்சு.

ஒரு வழியா படம் முடிஞ்சு, hostel ரூம் குள்ள நுழைஞ்சா, பின்னாடியே ஒரு பொண்ணு வந்து "ராஜி, IT Dept பொண்ணுங்க எல்லோரையும் வார்டன் (EEE) hostel கு வெளியே வர சொன்னாங்க"
"பிரச்சனை ஆரம்பிக்குது. சரி நீ போ நான் வரேன்"நான் போவதற்குள் எங்க dept பொண்ணுங்க எல்லாம் அங்க வந்து இருந்தாங்க (film பார்க்க வராதவர்கள் உட்பட)

வார்டன் "IT Rep யாரு"

தோழி ஒருத்தி நக்கலாக சிரித்து கொண்டே "ராஜி"

என்னை பார்த்து முறைத்து "நீயே முதல் ஆளா ஆடுற. அப்புறம் class எப்பிடி இருக்கும்"

நான் "ஏன் mam, எங்கள வர சொன்னீங்க"

"டிவி hall ல இப்படி தான் ஆடுவீங்களா. உங்களால வேற யாரும் படம் பார்க்க முடியல"

நான் "நாங்க மட்டும் ஆடலை mam. எல்லா dept பொண்ணுங்களும் தான் ஆடுனாங்க"

"நீங்க ஆரம்பிச்துனால தான் எல்லோரும் ஆடுனாங்க"

"அப்பிடி எல்லாம் இல்ல mam, எல்லோரும் தான் ஆடுனாங்க. நீங்க ஏன் எங்கள மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க?" (நாங்க ஆடுன ஆட்டத்தை பார்து உங்களுக்கே ஆடனும் போல இருந்துருக்கனுமே என்று நினைத்து கொள்ள தான் முடிந்தது)

"என்ன ரொம்ப question கேட்கிற?"

"அப்பிடி எல்லாம் இல்ல mam. ஆனா நீங்க ஏன் எங்கள மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க?"

"நீங்க தான் ஆட start பண்ணுனீங்க"

"சரி mam, ஆனா tv hall கு வராத பொண்ணுங்களை எல்லாம் ஏன் கூப்பிட்டு இருக்கீங்க. அவங்க என்ன பண்ணுனாங்க"

"அவங்க IT தானே"

"ஆடுன மத்த dept பொண்ணுங்களை விட்டுட்டு ஆடாத எங்க dept பொண்ணுங்களையும் கூப்பிட்டு இருக்கீங்க"
(மத்த dept பொண்ணுங்களை மாடி விட்டுடாத ராஜி என்று மனசுக்குள் ஒரு குரல். Future ல நமக்கு support போய்ட கூடாதுன்னு ஒரு பயம் thaan)
என்னைமுறைத்து கொண்டே "சரி film கு வராத எல்லோரும் போங்க"
"சரிங்க mam. நாங்க தான் start பண்ணினோம்."
" ஒரு apology letter எழுதி கொடுங்க"

"நாங்க என்ன தப்பு பண்ணினோம் mam, apology letter எழுதி கொடுக்குற அளவுக்கு"

"மத்தவங்கள படம் பார்க்க விடாம பண்ணினதுக்கு"

"எல்லோரும் எல்லா வருசமும் இப்படி தானே ஆடுறாங்க. இதுல என்ன தப்பு இருக்கு?"

"நீ என்ன இப்படி rowdy தனம் பண்ணுறதுக்கு gang leader ஆ"

"எல்லோரும் தான் ஆடுனாங்க. நீங்க எங்கள மட்டும் தான் கூப்டீங்க. எல்ல வருசமும் எப்போதும் டான்ஸ் ஆடுறது தான். அதுக்கு எதுக்கு apology லெட்டர்?"

"ரொம்ப திமிரா பேசுற. லெட்டர் எழுதி கொடுத்துட்டு போங்க"

"Students டிவி ஹால் தானே mam. Staff லம் ஏன் வந்தீங்க"

"உங்கள எல்லாம் சஸ்பெண்ட் பண்ணினா தான் புத்தி வரும்"
பக்கத்தில் இருந்த தோழியிடம் "உனக்கு லம் புத்தி வருமா என்ன?"
பக்கத்தில் இருந்த தோழி "ரொம்ப முக்கியம். apology letter நு பேசிட்டு இருந்தவங்கள சஸ்பெண்ட் நு பேச வைச்சிட்டியே. நீ எதுவும் பேசாத. நாங்க பேசிகிறோம்"

தோழி "mam, இனி இப்படி பண்ண மாட்டோம். sorry mam"
நான் அவ காதில் "வெட்காம இல்ல. இப்படி கெஞ்சுற"
திரும்பி திரும்பி அவங்க சஸ்பெண்ட் பத்தியே பேசிட்டு இருந்தாங்க.
அங்கு நின்றிருந்த ஒரு 15 பேரும் அதே அடுத்த 30 நிமிடத்திருக்கு அதே புராணத்தை பாட (நாங்க ஒரு 3 பேரு வாய திறக்கவே இல்ல), கொஞ்சம் மனம் இறங்கி சரி சரி apology letter எழுதி குடுத்துட்டு போங்க என்று சொல்ல, ஒருவரும் எழுதி கொடுக்க ready ஆ இல்ல.

அப்போதே மணி ஒன்று ஆகி விட்டது. (நாங்க ஆடுன ஆட்டத்துக்கு கொஞ்சம் tired ஆகி தூக்கம் வேற வந்துடுச்சு)
அவங்களும் திரும்பி திரும்பி apology letter கேட்டு கேட்டு எங்களை hostel குல போக கூடாதுன்னு சொல்லிடாங்க.
நாங்களும் எழுதி தரவே முடியாதுன்னு நின்னுட்டு இருந்தோம்..

நான் தோழியிடம் "சீக்கிரம் கெஞ்சி முடிங்கடி. தூக்கம் வருது" என்று சொல்லி விட்டு வேற பக்கம் திரும்பி கொண்டேன்
4 மணி வரைக்கும் நாங்க நின்னுட்டே இருந்தோம். (சாரி சாரி ... நின்று கொண்டே தூங்கிட்டு இருந்தோம்)

அவங்க ரொம்ப irritate ஆகி சரி நீங்க போங்க, நாளைக்கு princi எ பார்க்க போகணும் நு சொல்லிட்டு போய்ட்டாங்க. (அங்க இருந்ததுல வார்டன் மட்டும் தான் தூங்கலைன்னு நினைக்கிறேன்)
என்ன தான் பண்ணுறாங்க பார்ப்போம்னு சொல்லிட்டு, எங்க dept மேடம் கு போன் பண்ணி சொன்னோம். (இவ்வளவு நடந்ததும் அவங்களுக்கு தெரியல)


morning 8 மணிக்கு அவங்களே princi கிட்ட பேசி இனி இப்படி பண்ண மாட்டோம்னு சொல்லி எங்கள காப்பாத்திட்டாங்க. (princi லம் இந்த மாதிரி சப்ப matter கு திட்ட மாட்டார்)
அவங்கள பத்தி தெரிஞ்சே அவங்க கிட்ட இப்படியா பேசுவனு எங்க staff என்ன கிண்டல் பண்ணினது தனி கதை (note this. எங்க staff என்னை thittala.)

இன்று வரை "Macorina" song யார் எங்கே கேட்டாலும் உடனே எனக்கு ஒரு msg வரும்.
வேற எதாவது விசயத்துல நாங்க மாட்டுவோமன்னு அந்த staff நாங்க final year முடிக்கிற வரை எங்களை watch பண்ணினது எங்களால மறக்கவே முடியாது.
இன்று வரை எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுகிறார்கள். ஒரு 4 கேள்வி கேட்டதுக்கு. என்ன உலகமடா :) :) :)