Wednesday, March 11, 2009

கோயம்புத்தூர் தாத்தா

சென்ற வார இறுதியில் எனது நெருங்கிய தோழியின் திருமணம் மேட்டுப்பாளையத்தில் இனிதே நடந்து முடிந்தது.
புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Saturday Morning கோயம்புத்தூர் சென்று என் தோழி ஒருத்தியின் வீட்டில் தங்கி விட்டு மாலை நானும் எனது தோழியும் மேட்டுப்பாளையத்தில் நடந்த வரவேற்புக்கு சென்றோம்.

நாங்கள் கோவையில் இருந்து மேட்டுப்பாளயம் சென்ற அதே பேருந்தில் ஒரு 55 வயது பெரியவரும் (அவரு வயசு எனக்கு எப்பிடி தெரியும்னு பின்னாடி உங்களுக்கு புரியும்) அவரது மனைவியும் வந்தார்கள். திருமண மண்டபம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு 3 km தொலைவில் சிறுமுகை செல்லும் ரோட்டில் இருக்கிறது. நாங்கள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி சிறுமுகை செல்லும் பேருந்தில் ஏறினோம். பஸ் கிளம்ப 15 நிமிடங்கள் இருந்தது.

நானும் என் தோழியும் இருவர் அமரும் சீட்டில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்னால் ஒரு 29-30 வயசு (My Guess :)) பையனும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.எங்கள் பஸ்சில் வந்த பெரியவரும் அவரது மனைவியும் ஜன்னல் பக்கமாக வந்து நின்று, எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த பையனிடம் "இந்த பஸ் சிறுமுகை போகுமா?" என்று கேட்டார்.

"போகுங்க ஏறிக்கோங்க" என்றார்.

பெரியவரும் அவரது மனைவியும் பஸ்சில் ஏறி அந்த பையன் அமர்ந்திருந்த சீட்டுக்கு நேராக இருந்த 3 பேர் அமரும் சீட்டில் அமர்ந்தனர்.

பெரியவர் அந்த பையனை நோக்கி "நீ சிறுமுகை போறியாப்பா?"

"இல்லைங்க. நான் அதுக்கு முன்னாடியே இறங்கிடுவேன்"

"ஏம்ப்பா சிறுமுகை பக்கத்தில் தானே இருக்கு?"

"ஆமாங்க பக்கம் தான்"

"பக்கம்னா, அடுத்த stop ஆ"

"இல்லைங்க, இன்னும் கொஞ்சம் போகணும்"

"இன்னும் கொஞ்சம்னா?"

பையன் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

"ஒரு 5 or 6 Stop போகணும்"

"அப்ப 5 இல்ல ஆறாவது Stop ல நான் இறங்கட்டுமா"

"என்னங்க இப்படி சொல்லுறீங்க. பக்கம் தான் அப்படிங்கறதுக்காக நான் அப்படி சொன்னேன்"

"என்னப்பா உன் பேச்சை நம்பி நான் 5 இல்லனா ஆறாவது Stop ல இறங்கினா, 55 வயசு ஆன உனக்கு அறிவில்லாம ஏதோ ஒரு இடத்துல இறக்கி விட்டுடீங்கன்னு என் பொண்டாட்டி திட்டுவாள்ல"

அந்த பையனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"கண்டக்டர் கிட்ட சொல்லி இறங்கிக்கோங்க"

"அவரு மறந்துட்டார்னா என்ன பண்ணுறது. நீயே யோசிச்சு Correct ஆ சொல்லுப்பா"

இதுக்கு மேலயும் இந்த பையன் அசராம பதில் சொல்லுவானா என்று நான் எதிர்பார்க்க "ஒரு நிமிசங்க. யோசிச்சு சொல்லுறேன்" என்று அந்த பையன் யோசிக்க, நானும் என் தோழியும் என் பதில் வர போகிறது என்று ஆர்வமுடன் காத்திருக்க..

"நல்லா யோசிச்சு சொல்லுப்பா"

"தெரியலைங்க" என்று அந்த பையன் சொன்னான்.

"அப்படா பையன் தப்பிச்சிட்டான்" என்று நான் என் தோழியிடம் சொன்னேன்.

அதற்குள் பெரியவர் "என்னப்பா பொறுப்பு இல்லாம பதில் சொல்லுற. கோயம்புத்தூர் வந்து எங்ககிட்ட வடவள்ளி எப்பிடி போகணும்னு கேட்டா, பஸ் நம்பர், எந்த ஸ்டாப் எல்லாம் விவரமா சொல்லுவோம். நீ என்னனா correct ஆ சொல்ல மாட்டேங்கிற"

அந்த பையன் முகம் பேய் அறைந்தது போலானது.

என் தோழி என்னிடம் "இது தான் கோயம்புத்தூர் குசும்பு" என்றாள்.

அவளே தொடர்ந்தாள் "இவரு வடவள்ளியா இருக்கும். அதுனால வடவள்ளி பஸ் நம்பர், ஸ்டாப் எல்லாம் சொல்லுவாரு. அந்த பையன் சிறுமுகை ஆ இருந்திருந்தா அவனும் சொல்லிஇருப்பான். பாவம். ஏதாவது ஒரு ஸ்டாப் ல சிறுமுகைன்னு சொல்லி அந்த பையன் அவர இறக்கி விட்டுடலாம்."

நான் "கோயம்புத்தூர் குசும்புன்னு சொன்னியே அது உனக்கா இல்லை பெரியவருக்கா" என்று கேட்க, என் தோழி என்னை முறைத்தாள்.

அதற்குள் அந்த பையன் கண்ணை மூடி தூங்குவது போல் அமர்ந்து கொண்டான்.

ஆனா கண்டிப்பா அந்த பையன் வாழ்க்கைல இனி யாருக்குமே வழி சொல்ல மாட்டான் என்று மட்டும் தெளிவாக புரிந்தது.

13 comments:

Maddy said...

29-30 வயசு ஆனா கூட பையன் தானா? அப்போ 55 வயசு காரர் எப்படி தாத்தா ஆகா முடியும்?? வேற ஒன்னும் இல்லே, கோயம்புத்தூர் காத்து நம்ம பக்கம் கொஞ்சம் அடிக்குதா அந்த குசும்பும் வந்துடும் போல.

மகா said...

ஹாஹா
நல்லா இருக்கு ராஜீ. பாவம் அந்த பையன். சரி நீங்க வழி சொல்லி இருக்கலாம்ல.

நிலாவும் அம்மாவும் said...

மகா said...
ஹாஹா
நல்லா இருக்கு ராஜீ. பாவம் அந்த பையன். சரி நீங்க வழி சொல்லி இருக்கலாம்ல.
\\\\*****

அதானே.....பெரியவரே...நாங்க அங்க தான் இறங்க போறோம்....அப்போ சொல்றோம்னு சொல்லிருக்கலாம்ல...

இதுக்கு பேரு தான் கோயம்புத்தூர் லொள்ளு

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@நிலாவும் அம்மாவும்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//அதானே.....பெரியவரே...நாங்க அங்க தான் இறங்க போறோம்....அப்போ சொல்றோம்னு சொல்லிருக்கலாம்ல...
இதுக்கு பேரு தான் கோயம்புத்தூர் லொள்ளு//

திருமண மண்டபம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு 3 km தொலைவில் சிறுமுகை செல்லும் ரோட்டில் இருக்கிறது. எங்க stop தான் முதல் ஸ்டாப். உண்மைய சொல்லணும்னா எங்களுக்கும் சிறுமுகை எத்தனாவது stop நு தெரியாதுங்க.

@ மகா,

வாங்க மேடம். தெரிஞ்சா சொல்லி இருப்போம்ல. நாங்கலாம் ரொம்ப நல்லவங்க. :) :) :)

@ Maddy,

:):):)

MayVee said...

sema bulb vangitar pol irukke antha paiyan....
intha madiri thaan trichy kku bus la pogum pothu niraiya bulb vangi irukken

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ MayVee,

பாவம்ங்க அந்த பையன். Oh நீங்களுமா? எங்கள மாதிரி எத்தனை பேரு உங்கள பார்த்து பாவபட்டாங்களோ :) :) :)

மகா said...

//"நாங்கலாம் ரொம்ப நல்லவங்க. :) :) :) "//

அதான் எனக்கு தெரியுமே. நீங்க என்னோட பிரண்ட் ஆச்சே. என்னை மாதிரி தான இருப்பீங்க.

மகா said...

//"தெரிஞ்சா சொல்லி இருப்போம்ல."//

சோ நீங்களும் வழி தெரியாம தான் பஸ்ல ஏறி இட்கார்ந்து இருக்கீங்க. எனக்கு ஒரு போன் பண்ணிக் கேட்டிருந்தா நான் என்னோட ஹிஸ்டரி புக்குல இருக்கற மேப்ப பார்த்து வழி சொல்லிருப்பேன்ல.

ஓ.கே. ஓ.கே பி கூல். டென்சன் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன். பக்கத்துல இருக்கற ப்ரிஜ்ஜத் திறந்து ஒரு கிளாஸ் தண்ணிக் குடிச்சு கூல் ஆகிடுங்க.

சீக்கிரம் அடுத்தப் பதிவப் போடுங்க ராஜி. ஐயாம் வெயிட்டிங்

R.Gopi said...

ஹலோ

அது போகட்டும், பின்னாடிதான் இருந்தீங்க. பாவம், அந்த பையன அவஸ்தைப்பட விட்டுட்டு, நீங்க என்ன பண்ணினீங்க.

யப்பா, என்னா வில்லத்தனம்?? (வில்லித்தனம்).

திஸ் மேட்டர் ஒகே. நெக்ஸ்ட் என்ன??

R.Gopi said...

ஹலோ

அது போகட்டும், பின்னாடிதான் இருந்தீங்க. பாவம், அந்த பையன அவஸ்தைப்பட விட்டுட்டு, நீங்க என்ன பண்ணினீங்க.

யப்பா, என்னா வில்லத்தனம்?? (வில்லித்தனம்).

திஸ் மேட்டர் ஒகே. நெக்ஸ்ட் என்ன??

சுரேஷ் குமார் said...

நல்லா சொல்லிருகிங்க அம்முனி..

ஆனா, இந்த template'a நைட் நேரத்துல, உங்க ரூம் லைட்ட எல்லாம் ஆப் பண்ணிட்டு, அரைமணிநேரம் (வேணா, ஒரு பத்து நிமிஷம் போதும்) பாத்துட்டு, அதுக்கப்புறம் உங்க கண் பார்வை எப்படி இருக்குன்னு சொல்லுங்க தாயீ.. (கிட்டத்தட்ட பகல்ல பாத்தாலும் அதே effect தாங்குகிறது வேற விஷயம்..)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

கோவை வந்தா முக்கியமான்வங்களை பார்த்துட்டுப் போகனும்னு யாரும் சொல்லித் தரலையா? :)

Sakthi said...

Nice write up
Keep on going :)