Wednesday, March 11, 2009

கோயம்புத்தூர் தாத்தா

சென்ற வார இறுதியில் எனது நெருங்கிய தோழியின் திருமணம் மேட்டுப்பாளையத்தில் இனிதே நடந்து முடிந்தது.
புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Saturday Morning கோயம்புத்தூர் சென்று என் தோழி ஒருத்தியின் வீட்டில் தங்கி விட்டு மாலை நானும் எனது தோழியும் மேட்டுப்பாளையத்தில் நடந்த வரவேற்புக்கு சென்றோம்.

நாங்கள் கோவையில் இருந்து மேட்டுப்பாளயம் சென்ற அதே பேருந்தில் ஒரு 55 வயது பெரியவரும் (அவரு வயசு எனக்கு எப்பிடி தெரியும்னு பின்னாடி உங்களுக்கு புரியும்) அவரது மனைவியும் வந்தார்கள். திருமண மண்டபம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு 3 km தொலைவில் சிறுமுகை செல்லும் ரோட்டில் இருக்கிறது. நாங்கள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி சிறுமுகை செல்லும் பேருந்தில் ஏறினோம். பஸ் கிளம்ப 15 நிமிடங்கள் இருந்தது.

நானும் என் தோழியும் இருவர் அமரும் சீட்டில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்னால் ஒரு 29-30 வயசு (My Guess :)) பையனும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.எங்கள் பஸ்சில் வந்த பெரியவரும் அவரது மனைவியும் ஜன்னல் பக்கமாக வந்து நின்று, எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த பையனிடம் "இந்த பஸ் சிறுமுகை போகுமா?" என்று கேட்டார்.

"போகுங்க ஏறிக்கோங்க" என்றார்.

பெரியவரும் அவரது மனைவியும் பஸ்சில் ஏறி அந்த பையன் அமர்ந்திருந்த சீட்டுக்கு நேராக இருந்த 3 பேர் அமரும் சீட்டில் அமர்ந்தனர்.

பெரியவர் அந்த பையனை நோக்கி "நீ சிறுமுகை போறியாப்பா?"

"இல்லைங்க. நான் அதுக்கு முன்னாடியே இறங்கிடுவேன்"

"ஏம்ப்பா சிறுமுகை பக்கத்தில் தானே இருக்கு?"

"ஆமாங்க பக்கம் தான்"

"பக்கம்னா, அடுத்த stop ஆ"

"இல்லைங்க, இன்னும் கொஞ்சம் போகணும்"

"இன்னும் கொஞ்சம்னா?"

பையன் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

"ஒரு 5 or 6 Stop போகணும்"

"அப்ப 5 இல்ல ஆறாவது Stop ல நான் இறங்கட்டுமா"

"என்னங்க இப்படி சொல்லுறீங்க. பக்கம் தான் அப்படிங்கறதுக்காக நான் அப்படி சொன்னேன்"

"என்னப்பா உன் பேச்சை நம்பி நான் 5 இல்லனா ஆறாவது Stop ல இறங்கினா, 55 வயசு ஆன உனக்கு அறிவில்லாம ஏதோ ஒரு இடத்துல இறக்கி விட்டுடீங்கன்னு என் பொண்டாட்டி திட்டுவாள்ல"

அந்த பையனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"கண்டக்டர் கிட்ட சொல்லி இறங்கிக்கோங்க"

"அவரு மறந்துட்டார்னா என்ன பண்ணுறது. நீயே யோசிச்சு Correct ஆ சொல்லுப்பா"

இதுக்கு மேலயும் இந்த பையன் அசராம பதில் சொல்லுவானா என்று நான் எதிர்பார்க்க "ஒரு நிமிசங்க. யோசிச்சு சொல்லுறேன்" என்று அந்த பையன் யோசிக்க, நானும் என் தோழியும் என் பதில் வர போகிறது என்று ஆர்வமுடன் காத்திருக்க..

"நல்லா யோசிச்சு சொல்லுப்பா"

"தெரியலைங்க" என்று அந்த பையன் சொன்னான்.

"அப்படா பையன் தப்பிச்சிட்டான்" என்று நான் என் தோழியிடம் சொன்னேன்.

அதற்குள் பெரியவர் "என்னப்பா பொறுப்பு இல்லாம பதில் சொல்லுற. கோயம்புத்தூர் வந்து எங்ககிட்ட வடவள்ளி எப்பிடி போகணும்னு கேட்டா, பஸ் நம்பர், எந்த ஸ்டாப் எல்லாம் விவரமா சொல்லுவோம். நீ என்னனா correct ஆ சொல்ல மாட்டேங்கிற"

அந்த பையன் முகம் பேய் அறைந்தது போலானது.

என் தோழி என்னிடம் "இது தான் கோயம்புத்தூர் குசும்பு" என்றாள்.

அவளே தொடர்ந்தாள் "இவரு வடவள்ளியா இருக்கும். அதுனால வடவள்ளி பஸ் நம்பர், ஸ்டாப் எல்லாம் சொல்லுவாரு. அந்த பையன் சிறுமுகை ஆ இருந்திருந்தா அவனும் சொல்லிஇருப்பான். பாவம். ஏதாவது ஒரு ஸ்டாப் ல சிறுமுகைன்னு சொல்லி அந்த பையன் அவர இறக்கி விட்டுடலாம்."

நான் "கோயம்புத்தூர் குசும்புன்னு சொன்னியே அது உனக்கா இல்லை பெரியவருக்கா" என்று கேட்க, என் தோழி என்னை முறைத்தாள்.

அதற்குள் அந்த பையன் கண்ணை மூடி தூங்குவது போல் அமர்ந்து கொண்டான்.

ஆனா கண்டிப்பா அந்த பையன் வாழ்க்கைல இனி யாருக்குமே வழி சொல்ல மாட்டான் என்று மட்டும் தெளிவாக புரிந்தது.

Wednesday, March 4, 2009

No Words! See this Video

Tuesday, March 3, 2009

தொடர் பதிவு - வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

மகா மேடம் என்ன "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" தொடர் பதிவை எழுதச் சொல்றாங்க. நானே யோசிச்சு எழுதணும்னு பார்த்தேன். ஆனா மகா மேடமே எனக்கு ஐடியா கொடுத்தாங்க, என் hostel மக்கள்கிட்ட கேட்டு எழுத சொல்லி. நானும் போய் கேட்டேனே... ஒரு 2 நிமிஷம் தாங்க. அள்ளி கொட்டிட்டாங்க.

தாய் - அம்மா
மார்க்கம் - வழி
கழனி - வயல்
எழுதுகோல் - பேனா
குருதி - இரத்தம்
அகப்பை - கரண்டி
அன்னம் - சாதம்
காதணி - தோடு
கரம் - கை
சிரம் - தலை
திறவுகோல் - சாவி
சித்தம் - விருப்பம்
நித்தம் - தினம்
நித்திரை -தூக்கம்
மெய் - உண்மை
சிநேகம் - நேசம்

போதும்னு நினைக்கிறேன்... அப்புறம் நான் யாரையாவது மாட்டி விடணுமாமே... யார மாட்டி விடலாமுன்னு யோசிச்சேன்...

பிரியா அக்கா - வேண்டாம்...தலய மாட்டி விட கூடாது...

கிடைச்சிட்டாங்க
1. maddy
2. mathukrishna
3. ananthi