Sunday, February 22, 2009

அப்பாphobia

நான், எங்க அப்பா அம்மா, அண்ணா, அண்ணி, அண்ணியின் அப்பா அம்மா எல்லோரும் உட்கார்ந்து TV பார்த்திட்டு இருந்தோம். remote என் கைல ... நான் vijay tv, jetix tv ன்னு ரெண்டையும் மாத்தி மாத்தி பார்த்துட்டு இருந்தேன்.

எங்க அண்ணா "ஏய் எண்டல் மாடு, remote குடு"
நான் "ஏய் அப்பிடி கூப்பிடாத... அடிச்சிடுவேன்... "
எங்க அப்பா அம்மா சிரித்தார்கள்... அண்ணி - "எண்டல் மாடுன்னா?"

அண்ணன் "இவளுக்கு சின்ன வயசுல 'எருமை மாடுன்னு' கூப்பிட தெரியாது. எண்டல் மாடுன்னு தான் கூப்பிடுவா. எண்டல் மாடுன்னு அவள கூப்பிட்டா அவளுக்கு பிடிக்காது "

நான் "அதான் பிடிக்காதுன்னு தெரியுதுல்ல. அப்புறம் என்ன? மழலை மொழியில (?!?) எவ்வளவு அழகா நான் பேசி இருப்பேன்னு நினைச்சி பார்த்தாலே எவ்வளவு நல்லா இருக்கு?"

அண்ணன் "மழலை பேச்சா ... அதுலாம் குழந்தைங்க பேசுறதுமா. நீ குட்டி சாத்தானா தான் இருந்த... குழந்தையா இல்ல. சரியா."

நான் "ஏய் வேண்டாம் உன் மானம் கப்பல் ஏறிடும்"
அண்ணன் "இப்படியே scene போடாத. சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் என்ன அடிச்சிட்டு நான் ஏதாவது react பண்ணுறதுக்கு முன்னாடி ஏதோ நான் தான் உன்ன அடிச்சா மாதிரி அழ வேண்டியது இல்ல கத்த வேண்டியது... எண்டல் மாடு எண்டல் மாடு"

அண்ணி, அவங்க அப்பா அம்மா எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். மானம் எல்லோர் முன்னாடியும் போகுதே,
நான் "வேணாம் அப்புறம் உன்ன பத்தி சொல்ல வேண்டியது இருக்கும்"

அண்ணன் "என்ன பத்தி சொல்லுறதுக்கு என்ன இருக்கு. எல்லா அடாவடி தனமும் நீ தானே பண்ணுவ. இதுல உங்க அப்பா செல்லம் கொடுத்தே உன்னை கெடுத்து வைச்சிருக்காங்க"

ஆஹா அவனே point எடுத்து கொடுத்துட்டானே.

"அப்பாவுக்கு நீ பயந்த லட்சணத்த நான் சொல்லட்டுமா?"

"சொல்லு பார்க்கலாம்"

"அண்ணி நான் சொல்லுறத கேளுங்களேன். என்னை school ல சேர்த்த புதுசு. என்னை cycle ல முன் கம்பிலயும், எங்க அண்ணன பின்னாடியும் உட்கார வச்சு எங்க அப்பா எங்கள school க்கு கூட்டிட்டு போவாங்க. ஒரு நாள் late ஆய்டுச்சுன்னு எங்க அப்பா கொஞ்சம் fast ஆ போய் இருக்காங்க. பின்னாடி உட்கார்ந்திருந்த இவன் கீழ விழுந்துட்டான். எங்க அப்பாவுக்கு அது தெரியல. இவன் எங்க அப்பாவ கூப்பிட பயந்துகிட்டு cycle பின்னாடியே ஓடி வந்துருக்கான். எங்க அப்பா இன்னும் fast ஆ போக ஆரம்பிச்சிட்டாங்க. school கு போய் cycle நிறுத்திட்டு நானும் எங்க அப்பாவும் கீழ இறங்கினா எங்க அண்ணன காணும். எங்க அப்பா சுத்தி பார்க்குறாங்க, நாங்க வந்த பாதைய பார்த்தா தலைவர் மூச்சு வாங்க ஓடி வந்தாரு. எங்க அப்பா என்னடா ஆச்சுன்னு கேட்டா இல்லபா கீழ விழுந்துட்டேன்னு சொன்னான். என்ன கூப்பிட வேண்டியது தானேனு எங்க அப்பா கேட்டதுக்கு திருட்டு முழி முழிக்கிறான். எங்க அப்பாகிட்ட இவனுக்கு அவ்வளவு பயம். ஆனா இவன் ஒரு ஓட்ட பந்தயத்துல கூட கலந்துகிட்டு prize வாங்குனது இல்ல. அன்னைக்கு ஓடுன ஓட்டத்த இவன் continue பண்ணி இருந்தா இன்னைக்கு நம்ம வீட்டுல ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் இருந்துருப்பான். "

அண்ணியோட அப்பாவும் அம்மாவும் சிரித்து கொண்டே வெளியில் கிளம்ப, எங்க அண்ணி என்னிடம் "இன்னும் அப்பாக்கு உங்க அண்ணா பயபடுவாங்களா"

"கொஞ்சம் அண்ணி, இப்போ உங்க பக்கம் அந்த பயம் திரும்பி இருக்கும்னு நினைக்கிறேன்"

"ஏய்" என்று எங்க அண்ணி கத்த, எங்க அண்ணன் "போதும் என் மானத்த வாங்குனது . நீ அமைதியா இரு"

"அது எப்பிடி. ஆரம்பிச்சது யாரு?"

"தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடும்மா."

அது. நாம நினைச்சது நடந்துடுச்சு என்ற நிம்மதியுடன் vijay டிவியை பார்க்க தொடங்கினேன்.

11 comments:

Truth said...

நீங்க இவ்ளோ நல்லவங்களா?
:-)

Razigan said...

China vayasil irundhu, Naan ippa varayum kathirika (brinjal) sapitrathe illai. En theriyuma, Aennna, enga appavuku kathirika romba pidickum :)

கணேஷ் said...

:) :)

Good timing!

பொண்ணுங்க கிட்ட argue பண்ணி ஜெயிக்க முடியாதுன்னு பாதி பசங்களுக்கு புரிய மாட்டேங்குது, even அது தங்கச்சியா இருந்தாலும்!

MayVee said...

idhe madiri than naanum enga anni kitta annanyai patri potu kuudupen....


he he
sema padivu....

Maddy said...

அய்யோ நமக்கு ஒரு அக்காவோ தங்கையோ இல்லையேன்னு அப்பபோ நினைக்க தோணும்!! இத படிச்சதுக்கு அப்புறம்.........................எந்த ஜென்மத்திலோ நான் புண்ணியம் பண்ணி இருக்கேன்ன்னு தோணுது!!!! இருந்தாலும் இப்படி கலாட்டா பண்ண ஆள் இருந்தா நல்லா தான் இருக்கும் வாழ்க்கை!!

கே.ரவிஷங்கர் said...

நல்ல காமெடியான அனுபவம்.

anbudan vaalu said...

பாவம் உங்க அண்ணன்....என் தம்பியும் இப்படிதான் தேவையில்லாத இடத்துல தேவையில்லாததைப் பேசி என் மானத்த வாங்குவான்....வீட்டுல சின்னதுகள்ளாம் very dangerous creatures........

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Truth...
ஆமாங்க.. he he he

@Razigan,
ஏங்க இப்படி

@ கணேஷ்,

he he he.. உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா

@MayVee,
oh...நீங்களும் நம்மள மாதிரி
தானா ...

@Maddy and anbudan vaalu...
பிரச்சனைய ஆரம்பிச்சது யாருன்னு பார்த்திங்கல்ல...

@கே.ரவிஷங்கர்,
:)

மகா said...

வெரிகுட் ராஜி நீங்க செஞ்சதுதான் சரி. நான் உங்க பக்கம்.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ மகா,

Thanks a lot! Big Support for me :) :) :)

Anonymous said...

எவன் மாட்டி கஷ்டப் பட போறானோ? :))