Saturday, February 28, 2009

சினி நியூஸ், மனிதாபிமானம்

என்னடா சினி நியூஸ் கூட மனிதாபிமானம்னு போட்டுருக்கேன்னு நினைக்கிறீங்களா. அதுக்கு இந்த பதிவோட கடைசில காரணம் இருக்கு.

நான் அனுப்புன forwards வச்சி என்னை பத்தியெல்லாம் அவங்க பதிவுல எழுதி என்னை பெருமை படுத்திட்டாங்க பிரியா அக்கா. கொஞ்சம் ஓவரா தான் நினைச்சிகிட்டேனோ... பரவாயில்லை விடுங்க. இப்போ என் வண்டவாளம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சு. அப்போ சினி நியூஸ்/ photos எல்லாம் எங்க இருந்து ஆட்டைய போட்டு அனுப்புறேன்னு சொல்லுற கடமை எனக்கு இருக்குல்லங்க. அதுனால அந்த பொறுப்ப உணர்ந்து இந்த பதிவ நான் எழுதுறேங்க.
First photos க்கு வருவோம்... நான் அனுப்புற பாதி photos நம்ம கூட work பண்ணுற மக்கள் அனுப்புறது. daily task mail ஒழுங்கா படிக்குறோமோ இல்லையோ எல்லா forward mail யும் ஒழுங்கா படிச்சிடுவோம்க. நம்மள நம்பி அனுப்புற பயபுள்ளைக மனசு நாம படிக்கலன்னா எவ்வளவு கஷ்டப்படும். அந்த நல்ல எண்ணம் தான்.


அப்புறம் மீதி photos நாம download பண்ணுறது. நம்ம ஆபீஸ்ல net connection இல்லங்க. Project மேனேஜர் கண்ணுல மண்ணை தூவிட்டு திருட்டுத்தனமா client machine ல நெட் access பண்ணி download பண்ணுற திரில்லே தனிங்க. client machine ல work பண்ணுறோமோ இல்லையோ, கண்டிப்பா songs/pictures ன்னு டவுன்லோட் பண்ணிடுவோம். Effective Resource Utilization :) :)
உங்களுக்கு Cine photos வேணும்ன்னா பிரியா அக்காவ contact பண்ணுங்க. நம்ம கிட்ட இருக்குற எல்லா photos உம் அங்க போயாச்சு.

சினி நியூஸ் பொருத்த வரை என் hostel தான் எனக்கு source. முடிந்த வரை எல்லா வார, மாத இதழ்களை படித்து விடும் எனக்கு புக் படிக்கும் முன்பே hostel இல் சினி நியூஸ் கிடைத்து விடும். எங்க இருந்து தான் அவங்களுக்கு நியூஸ் கிடைக்குமோ எனக்கு தெரியாது. எங்க hostel ல இருக்குற ஒரு நாலஞ்சு பேரு, ஒரு நடமாடும் சினி library தான்.
அதுவும் சினி நியூஸ் பத்தி ஒரு பெரிய discussion எங்க hostel tv hall ல நடக்கும். TV hall தான் நாங்க சாப்பிடுற place கூட. அது எங்களுக்கு பெரிய பிளஸ். எங்க hostel ல ஒரே ஒரு TV தாங்க. ஆனா tv பார்க்குறதுக்கு பெருசா பிரச்சனை எதுவும் வராது. அவ்வளவு நல்லவங்க நாங்க.

அன்று நான் hostel ஐ நெருங்கும் போதே ஒரே சத்தம். ஆஹா இன்னைக்கு எல்லா அராத்துங்களும் hostel க்கு சீக்கிரம் வந்துடுச்சுங்க போல இருக்கே என்று நினைத்து கொண்டே உள்ளே நுழைந்தேன். நினைச்சது சரி தாங்க. ஒரு 20 பேர் உட்கார்ந்து tv பார்த்துட்டு இருந்தாங்க (tv சத்தத்த விட பேச்சு சத்தம் தான் ரொம்ப அதிகம்)
என்னை பார்த்தவுடன்,"hi de" "hello" "என்ன சீக்கிரம் வந்துட்ட?" (என்ன கொடுமைடா சாமி, காலைல 7.15 க்கு போயிட்டு நைட் 8.30 க்கு வரேன். நக்கலுக்கு குறைச்சல் இல்ல)
"ராஜி இல்லாம ரொம்ப bore. உட்காரு ராஜி." (ஏதோ ஆப்பு ரெடி பண்ணுறாங்க)
"ரொம்ப பசிக்குது, face wash பண்ணிட்டு plate எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி கொண்டே நான் escape.

நான் room இல் நுழைந்த உடன், "ஏய் ராஜி, இங்க வாடி" என்று ஒருத்தி கத்தினாள்."சீக்கிரம் வாடி" என்று மற்றொரு குரல். "ஏய்" என்று மறுபடியும்."ஏண்டி இப்பிடி கத்துறீங்க" என்று நான் என் ரூமில் இருந்து கத்த, பதிலுக்கு "உன் பாட்டு" என்று பதில் வந்தது.நான் அவசர அவசரமாக ஓடி வர "அடியே கொல்லுதே" என்று சூர்யா என்னை பார்த்து இல்லை இல்லை சமீராவை பார்த்து பாடி கொண்டு இருந்தார்.

என் தோழி "அப்பிடி என்ன தான் இந்த படத்துல்ல இருக்கோ, எப்ப பாரு VA,VA (வாரணம் ஆயிரம்) ன்னு உயிரை விடுற"
நான் "ஏய், பாருடி நல்ல பாரு, சமீராவ பார்த்தா 32 வயசுன்னு சொல்ல முடியுமா?"
"சொல்லலாமே"
"உனக்கு பொறாமை. எனக்கு தெரியல"
"ப்ரீத்தி ஜிந்தா பார்த்தா உனக்கு 34 வயசு மாதிரி இருக்கா?"
நான் "தெரியுது"
"போடி, போ. ஏய் ப்ரீத்தி 34 b'day வ friends கூட சேர்ந்து ப்ரீத்தி வீட்டுல ஆட்டம் பாட்டதோட கொண்டாடி இருக்காங்க. இவங்க தொல்லை தாங்காம பக்கத்து வீட்டுல இருக்குறவங்க போலீஸ் கிட்ட சொல்ல்லி போலீஸ் வந்து ப்ரீத்திய warn பண்ணிட்டு போயிருக்காங்க"

அதற்குள் ஒரு 2, 3 குழுக்களாக பிரிந்து அனைவரும் பேசி கொண்டிருக்க, என் காதில் விழுந்ததை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
போன வாரம் "boys vs girls" என்னாச்சு?"
"போடி ரொம்ப bore அடிக்குது"
நான்- "DD,PD இவங்க ரெண்டு பேருக்காக பார்க்கலாம்"
அதற்குள் மற்றொரு தோழி "சின்ன திரை" ல எல்லோரும் மலேசியா ல ஒரு கலைநிகழ்ச்சி நடத்த போறாங்க. உன் DD, PD எல்லோரும் போறாங்க.
நான் "வேற யாருல்லாம் போறாங்க"
"எனக்கு தெரிஞ்சு இவங்க ரெண்டு பேரு, ஸ்ரீ, தேவ், வந்தனா, தேவி பிரியா, அர்ச்சனா, தீபக்...போடி மொத்தம் ஒரு 28 பேர் போறாங்க."
--------------------------------------------------
அதற்குள் மற்றொரு கூட்டத்தில்"VTV (விண்ணை தாண்டி வருவாயோ) stills பார்த்தியா?"
"ம்ம். ஆனா படத்த கௌதம்க்காக பார்த்தா தான் உண்டு. எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது. vtv august release de."
திரிஷாக்கு நிறைய படம் கைல இருக்கு "சர்வம்" "VTV" "சென்னையில் ஒரு மழைக்காலம்"....
-----------------------------------------------
அதற்குள் என் தோழி "ஏய் நதியா நம்ம KKK (கனா காணும் காலங்கள்) பசங்க எல்லாம் நடிச்ச "பட்டாளம்" படம் எப்போ release?"
மார்ச்ல exam இருக்குறதுனால april ல தான் release.
"பசங்க" அப்பிடின்னு ஏதோ ஒரு படம் பத்தி எங்கயோ படிச்சேன். சசி குமாரோட அடுத்த படம். இதுக்கும் ஜேம்ஸ் தான் music. பால முரளிகிருஷ்ணா கூட ஒரு பாட்டு பாடி இருக்கார்.

மார்ச்ல MM சஞ்சீவ்க்கும் jodi # 1 ப்ரீத்திக்கும் கல்யாணம் தான?
"போடி, இது எப்போவே எனக்கு தெரியும்"

"ஜெயம்" ரவி அவர பத்தி வந்த நியூஸ் எல்லோரையும் மறுத்துட்டாராமே. ரெண்டு வீட்டுலயும் ஒத்துகிட்டாங்கலாம். எந்த பிரச்சனையும் இல்லையாம். "ஜெயம்" ராஜாக்கு ரெண்டாவதா ஆண் குழந்தையாமாம்.

இப்படி எல்லோரும் ஏதோதோ சொல்ல நான் "ஏய் அந்த ஆறு வயசு பையன் செத்தத பத்தி கேள்வி பட்டேன். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று சொல்ல ஒட்டு மத்த hostel கவனமும் என் பக்கம் திரும்பியது.
ஒருத்தி "கேட்ட உனக்கே இப்பிடி இருக்கே. நாங்க நியூஸ் ல பார்த்தோம். எங்களுக்கு கண் முன்னாடியே இருக்கு"
எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.
சிலரின் பேச்சு கோவமாக வெளிப்பட்டது.
சிலரின் பேச்சில் ஆதங்கம் தெரிந்தது.
சிலரின் பேச்சில் இனி இந்த மாதிரி வேற எந்த சம்பவம் நடக்க கூடாது என்ற பயம் இருந்தது.
ஒரு தோழியின் கண்கள் கலங்கி விட்டது.
என்னால் அவர்களின் உணர்வுகளை இங்கே கொண்டு வர இயலவில்லை. ஆனால் ஒட்டு மொத்த மனமும் கவலை பட்டது. அந்த அம்மாவிற்காக வருந்தியது. சொல்ல தெரியாத கஷ்டத்துடன் எல்லோரும் எழுந்து சென்றார்கள்.

14 comments:

Ananthi said...

raji
enna oru emotional blog
thinking oda irrukama be in action

MayVee said...

super aa irukkunga......

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ MayVee,

Thanks!

Maddy said...

அடடே நல்ல இருக்கே!!! பிரியா சொன்ன மாதிரி சினிமா மலர் தொடங்காட்டாலும் இந்த hostel நடப்பையே வார வாரம் இங்கே போடலாம்ன்னு நினைக்கிறன்! ரொம்ப ஸுவரிஸ்யமா இருக்கு. வேலை நேரத்தில இதெல்லாம் யார் செய்ய கூடாதுன்னு சொன்னாங்க?? client network வாழ்கன்னு சொல்றது கேட்குது.

பய்யன் மேட்டர் என்னன்னு தெரியல எனக்கு.

Anonymous said...

ஆஹா சன்டிவி, வின்டிவி எல்லாம் இனிதேவையில்ல. உங்க அரட்டைய கவனிச்சாலே போதும். ஒட்டுமொத்த சின்னத்திரையும், பெரியத்திரையும் ஒரு ஹாஸ்டலுக்குள்ள இருக்கு.

Raji said...

@ Maddy,

வாங்க தலைவா. ஹி ஹி ஹி

//பய்யன் மேட்டர் என்னன்னு தெரியல எனக்கு//
சீக்கிரம் என்னன்னு சொல்லிடுவோம் :) :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

தேங்க்ஸ் maha. ஆனா இதுலாம் ரொம்ப கம்மி. நம்ம மக்கள் பேசுறத போடணும்னா டெய்லி ஒரு பதிவு போட்டா தான் உண்டு.

Anonymous said...

i invite u 2 my blog
http://mahawebsite.blogspot.com/2009/03/blog-post.html

Anonymous said...

உங்களை வழக்கொழிந்த தமிழ்ச் சொல் தொடருக்கு அன்புடன் அழைக்கிறேன்.( ஆப்பு ரெடி )
என்னை 2 பேர் மாட்டிவிட்டாங்க. நான் உங்கள அன்புடன் அழைக்கிறேன்.(இப்படி சொல்லி நல்ல பேர் எடுத்துக்க வேண்டியது தான்)
உங்களுக்கென்ன கவலை. அள்ளிக் கொடுக்க உங்களுக்கு தான் சகாக்கள் இருக்காங்கல்ல

anbudan vaalu said...

ஹாஸ்டல்னாலே ஜாலிதான்....
அது என்ன 6 வயசு பையன்???

விஜய் said...

\\ எங்க hostel ல ஒரே ஒரு TV தாங்க. ஆனா tv பார்க்குறதுக்கு பெருசா பிரச்சனை எதுவும் வராது. அவ்வளவு நல்லவங்க நாங்க.\\
”ஏன்னா எல்லாருமே சீரியல் தான் பார்ப்போம்”ங்கறதை எழுதிட்டு delete பண்ணிட்டீங்களா??? :-)

\\"ரொம்ப பசிக்குது, face wash பண்ணிட்டு plate எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி கொண்டே நான் escape.\\
ஹாஸ்டல்னு தானே சொன்னீங்க. அப்புறம் என்ன பிளேட். இதென்ன ஜெயிலா?? :-)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ anbudan vaalu said...
//அது என்ன 6 வயசு பையன்???//

Goto http://valibarsangam.wordpress.com and ஆழ்குழி விபரீதங்கள் - என்று மாறுவீர்கள்?

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ விஜய்,
//”ஏன்னா எல்லாருமே சீரியல் தான் பார்ப்போம்”ங்கறதை எழுதிட்டு delete பண்ணிட்டீங்களா??? :-)//

எங்களுக்கு பிடிக்காத வார்த்தை "சீரியல்" ... எங்க hostel ல எல்லோரும் songs பைத்தியம். நாங்க "vijay tv" பார்போம். இல்லனா இருக்கவே இருக்கு sun music/jaya max/ss music...

//ஹாஸ்டல்னு தானே சொன்னீங்க. அப்புறம் என்ன பிளேட். இதென்ன ஜெயிலா?? :-)//

என்னங்க இப்படி சொல்லிடீங்க. hostel இல்ல வீடு எங்கனாலும் plate ல தானே சாப்பிடணும்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

சூரியன் எப் எம் ல கிசுகிசு கீதா & ரேடியோ மிர்ச்சில கோலிவுடான்ஸ் கேட்ட மாதிரி இருக்கு. :)