Tuesday, February 3, 2009

விளையும் பயிர் முளையிலேயே தெரியுமோ?

இன்னைக்கு office ல யாரோ school days பத்தி பேச்சு எடுத்தாங்க. என் image damage ங்க (என்ன இவ்வளவு நாள் இதுல்லாம் இருந்துச்சான்னு கேட்காதீங்க). ஒரு காலத்துல என் friend கிட்ட என் சின்ன வயசு அறிவ பத்தி சொல்லிடேங்க. அத எல்லோர் முன்னாடியும் சொல்லி என் image spoil ;) ஆய்டுச்சு. office லையே மானம் போச்சு சரி உங்க எல்லோருக்கும் சொன்னா என்னான்னு தாங்க இந்த பதிவு.

அப்போ நான் first standard படிச்சிட்டு இருந்தேன் (போதும் அலப்பறை. matter க்கு வான்னு சொல்லுறது கேட்குது). எங்க ஊருல அப்போலாம் 2 theatre தாங்க. (இப்போ மட்டும் எத்தனை இருக்குன்னு கேக்குறீங்களோ? இப்போ மூணு). அப்போலாம் சினிமாக்கு கூட்டிட்டு போனா அது ரொம்ப பெரிய விஷயம். என்ன படம்னு நியாபகம் இல்லை. ஆனா எங்க வீட்டுல என்னையும் ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனாங்க.

மறுநாள் நான் தான் என் தோழிங்க முன்னாடி ஒரு heroine. ஏன்னா நாங்க தான் சினிமாவுக்கு போயிட்டு வந்தோம்ல. சினிமா எப்பிடி theatre ல ஓட்டுறாங்கன்னு ஒரு பெரிய discussion (அந்த வயசுலேயே ????) நடந்துச்சுங்க. அதோட conclusion சொன்னது நாம தாங்க ... நாங்க சொன்ன அந்த statement வைச்சு தான் விளையும் பயிர் முளையிலேயே தெரிஞ்சிருக்கு ன்னு சொன்னாங்க.

அது என்னனாங்க "Theatre க்கு பின்னாடி ஒரு கதவு இருக்கும். அந்த கதவை திறந்துட்டு உள்ள போய் நடிச்சிட்டு வருவாங்க. எல்லோரும் அதுக்குள்ள போக முடியாது. அங்க ஆளுங்க காவலுக்கு நின்னுகிட்டே இருப்பாங்க"

பாத்திங்களா என் அறிவ... ஏன் எங்களுக்கு இப்படி தோணுச்சுன்னு நான் நினைச்சி பார்ப்பேன் ... அப்போலாம் theatre பின்னாடி ஒரே குப்பையா இருக்கும். அதுனால எங்கள அந்த பக்கம் விட மாட்டாங்க. அதுக்காக இப்படிலாம் யோசிச்சி இருக்கோம் பாருங்க.

ஆனா சினிமான்னா என்னன்னு எனக்கு எப்போ தெரிஞ்சிதுன்னு நிஜமா தெரியலங்க ....

22 comments:

கே.ரவிஷங்கர் said...

Innocence is a kind of beauty என்று
சொல்லுவார்கள்.

“வசந்த மாளிகை” படத்தில் “மயக்கமென்ன மெளனமென்ன” பாட்டில் ஸ்லோ மோஷனில் சிவாஜி/வாணிஸ்ரீ ஓடுவார்கள்(முதல் ஸ்லோமோஷன் காட்சி?).

எப்படி இந்த ஸ்லோ மோஷன் எடுக்கப்படுகிறது என்பதற்கு நான் கொடுத்த விளக்கம்.

“ஆபரேட்டர் சினிமா ரீலை அப்போது மெதுவாகச் சுத்துவார்”

Truth said...

இத விட படு பயங்கர விஷயமா எல்லாம் நாங்க யோசிச்சிருக்கோம். சொன்னா பயந்து போவீங்க. :-)

Ananthi said...

hi raji dear,
your message is very sweet like you
cha nee enga irruka vendiyae aalae ella. what a talent ma.

Notes: Raji nee kodutha 100 rubaiku evalo than elutha mudiyum dear:)
jus for fun

nijamavae super d

Raich said...

Raji,
Your blogs are short and crisp and it always leaves a mark on my heart.

ரொம்ப நல்லா இருக்கு. Keep on blogging

Raji said...

@
ரவிஷங்கர்,

//“ஆபரேட்டர் சினிமா ரீலை அப்போது மெதுவாகச் சுத்துவார்”//

ரொம்ப பயங்கரமா யோசிச்சு இருக்கீங்க போல. but good one :) :) :)

@ Truth,
//இத விட படு பயங்கர விஷயமா எல்லாம் நாங்க யோசிச்சிருக்கோம். சொன்னா பயந்து போவீங்க. :-)//

நான் பயப்படமாட்டேன். நீங்க என்ன தான் யோசிச்சி இருக்கீங்கன்னு சொல்லுங்களேன் பார்க்கலாம் ..

Raji said...

@ Ananthi,

//cha nee enga irruka vendiyae aalae ella. what a talent ma.//

உள்குத்து வச்சு தான் பேசுவீங்களோ?

Raji said...

@ Raich,

//Raji,
Your blogs are short and crisp and it always leaves a mark on my heart.

ரொம்ப நல்லா இருக்கு. Keep on blogging//

என்ன வச்சு காமடி எதுவும் பண்ணலையே? ;) ;)

Thanks a lot mam. Will try to give my best. :):)

ராம்சுரேஷ் said...

:)

Maddy said...

ஆனா சினிமான்னா என்னன்னு எனக்கு எப்போ தெரிஞ்சிதுன்னு நிஜமா தெரியலங்க ....

இதோடா!! எப்போ தெரிஞ்சதுன்னு ப்லோக் போட்டுட்டு இப்படி பால் வடிய மூஞ்சியா வச்சிருக்கறதா பாரேன்!! பலே கில்லாடி தான்!!!

MayVee said...

"மறுநாள் நான் தான் என் தோழிங்க முன்னாடி ஒரு heroine. ஏன்னா நாங்க தான் சினிமாவுக்கு போயிட்டு வந்தோம்ல."
அந்த சரித்திர நிகழ்வ ஓலை சுவடில எழுதி வைங்க......

"அது என்னனாங்க "Theatre க்கு பின்னாடி ஒரு கதவு இருக்கும். அந்த கதவை திறந்துட்டு உள்ள போய் நடிச்சிட்டு வருவாங்க. எல்லோரும் அதுக்குள்ள போக முடியாது. அங்க ஆளுங்க காவலுக்கு நின்னுகிட்டே இருப்பாங்க""
இத தான் இங்கிலீஷ்கரன் அப்பவே சொன்னான் " great people think alike" னு....
நான் சின்ன வயசுல (இப்ப கூட தான்) கூட இப்படி தான் கொக்கு மாக்குயாக யோசிப்பேன்.....

சிரித்து விட்டேன் உங்கள் பதிவை படித்துவிட்டு

Razigan said...

Nalla irundhadu. Keep it up.

Raji said...

@ Maddy,

//இதோடா!! எப்போ தெரிஞ்சதுன்னு ப்லோக் போட்டுட்டு இப்படி பால் வடிய மூஞ்சியா வச்சிருக்கறதா பாரேன்!! பலே கில்லாடி தான்!!!//


he he he :)

Raji said...

@ MayVee,

உங்கள் வருகைக்கு நன்றி.

//அந்த சரித்திர நிகழ்வ ஓலை சுவடில எழுதி வைங்க......//

கண்டிப்பாங்க ... he he he

//நான் சின்ன வயசுல (இப்ப கூட தான்) கூட இப்படி தான் கொக்கு மாக்குயாக யோசிப்பேன்.....//

நாமலாம் correct ஆ யோசிச்சா தான் தப்புங்க ;)

//சிரித்து விட்டேன் உங்கள் பதிவை படித்துவிட்டு//
என்னை வச்சு காமெடி பண்ணிட்டு மத்தவங்கள சிரிக்க வச்சிடாதிங்க :) :) :)

Raji said...

@ Razigan,

//Nalla irundhadu. Keep it up.//

Thanks for your visit and for your comments :) :) :)

priya said...

:-))))))))))))))))))))))
Good one.

Raji said...

//:-))))))))))))))))))))))
Good one.//

ஹையோ.....நம்ம தலயே சொல்லிட்டாங்கோ :) :) :)

நட்புடன் ஜமால் said...

தெரியுமே ...

Raji said...

@ நட்புடன் ஜமால்,

உங்கள் வருகைக்கு நன்றி.

//தெரியுமே ...//

:) :) :) :)

மகா said...

நைஸ் ராஜீ, நானும் சின்ன வயசுல படத்துல நடக்கறது எல்லாம் உண்மைனு நம்பி, ஏதோ ஒரு படத்துல சீத்தா செத்துப் போயிட்டானு சொல்லி அழுத்து மட்டும் இல்லாம, ஊர் பூராம் சொல்லி ஒரு கலவரத்தை உண்டு பண்ணிட்டேன். அப்பறம் என் அப்பா சீத்தா செத்துட்டான்னு உனக்கு யார் சொன்னதுன்னு கேட்க நான் பார்த்த படத்தோட டைடிலை சொன்னேன். அதுக்கப்புறம் என்னோட அறியாமையை நினைத்து நொந்து எனக்கு ஒரு அரை மணி நேரம் லெட்சர் கொடுத்தார்.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Maha,

Very nice maha. Thanks for ur visit :) :) ஒரே களேபரம் தான்னு சொல்லுங்க

anbudan vaalu said...

உங்க யதார்த்தமான எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
வாழ்த்துக்கள்....நிறைய எழுதுங்க..........

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ anbudan vaalu,

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :) :)
நிறைய எழுத முயற்சிக்கிறேன் :) :)