Sunday, January 18, 2009

என் காதில் விழுந்த Conversation...

என் தோழி வராத சென்ற வாரத்தின் ஒரு நாள். யாருமின்றி தனியாக lunch க்கு செல்ல வேண்டிய கட்டாயம். ஒரு வித எரிச்சலுடன் canteen க்கு சென்றேன். உடல் நிலை வேறு சரி இல்லாததால் ரசம் மட்டுமே சாப்பிட வேண்டிய கட்டாயம். ரசம் சாதம் எங்கே தனியாக கிடைக்கிறது. முப்பத்தி இரண்டு ரூபாய் கொடுத்து meals கூப்பன் வாங்கி வெறும் ரசம் சாதம் வாங்கி கொண்டு திரும்பினால் உட்கார இடம் தேட வேண்டிய நிலைமை. ஒரு வழியாக இடத்தை கண்டுபிடித்து நான்கு பேர் உட்கார கூடிய table இல் நான் மட்டும் தனியாக அமர்ந்தேன். மீதி மூன்று இருக்கைகளும் காலியாக இருக்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தால் ஏதோ நான் மட்டும் தான் தனியாக உட்கார்ந்திருப்பது போல் ஒரு feeling. எரிச்சலின் அளவு கூடியது. இவ்வளவு நேரம் இருந்த கூட்டம் இப்போ எங்கடா போச்சு என்று நினைத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். அட சே தனியா சாப்பிடுறதே கொடுமைனா இந்த சாப்பாட சாப்பிடுறது அத விட ஒரு கொடுமை. சாப்பாட்டில் இருந்து கவனத்தை திருப்ப project பத்தி யோசிக்க ஆரம்பித்தேன். இன்றாவது ஆறு மணிக்கு கிளம்ப முடியுமா முடியாதா? என்று யோசிக்க யோசிக்க முடியும் என்று ஒரு முறையும் முடியாது என்று ஒரு முறையும் தோன்ற ஆரம்பித்தது...

"Excuse me, anybody is coming here?" என்று ஒரு பெண்ணின் குரல் என் யோசனையை கலைக்க, "no" என்று வாயசைத்து தலையை இடமும் வலமுமாக ஆட்டினேன். அவர் திரும்பி அவருடைய தோழிகள் இருவரையும் அழைக்க, அவர்கள் மூவரும் மீதி இருந்த மூன்று காலி இருக்கைகளையும் ஆக்கிரமித்தனர்.

என்னிடம் கேள்வி கேட்ட பெண்மணி என் எதிரில் அமர்ந்தார். நான் சாப்பிட்டு கொண்டிருந்த ரசம் சாதத்தையும் என்னையும் அவங்க பார்த்த அர்த்தம் எனக்கு புரிய வில்லை. என்னை பாவம் என்று நினைத்தாரோ என்று கூட தோன்றியது. அவங்க lunch box ஐ அவங்க திறக்க அங்கேயும் ரசம். அப்போது தான் தோன்றியது நம்மை நக்கலாக பார்தாங்கலோன்னு. நான் அவங்க யாரையும் கண்டு கொள்ளாமல் வேறு பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்து கொண்டே என் வேலையை (அதாங்க சாப்பிடுறது...) தொடர்ந்தேன்.

அவர்களும் சாப்பிட ஆரம்பிக்க அவர்களின் உரையாடலும் தொடங்கியது.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி எதிரில் இருந்தவரிடம் "என்னமா நேத்து interview என்னாச்சு" என்று கேட்டார்
என் எதிரில் இருந்த பெண்மணி "கிளிக் ஆய்டுச்சு"

"அப்படியா. congrats treat எப்போ"
"சீக்கிரம் கொடுத்துட்டா போச்சு"
(பரவா இல்லையே. இந்த வருடத்தில் ஒரு நல்ல விஷயம் கேட்கிறோமே. client interview இல்லனா visa interview ஏதோ ஒன்னு கிளிக் ஆய்டுச்சு அவங்களுக்கு. ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் எனக்கும் வந்தது)

"அப்புறம் உனக்கு interview எப்போ?"
"எனக்கு நாளைக்கு?"
எனது சந்தேகம் எந்த interview என்று....

"ok all the best. எத்தனை மணிக்கு?"
"morning 11 o clock. ஆனா என் husband க்கு client call இருக்கு. அவரால வர முடியாதாம். என்ன பண்ணுறதுன்னு தெரியல"
(கண்டிப்பாக இது visa interview தான் என நான் நினைத்து கொண்டேன்)

"அப்புறம் என்ன questions கேட்டாங்க?"
"name, address, parents name.... அவ்வளவு தான்"
(என்ன visa interview ல இதான் கேட்டாங்களா)

"அவ்வளவு தான. கஷ்டமா இல்லையே. வேற என்ன சொன்னாங்க"
"வேற என்ன வீட்டுல ஒருத்தவங்க இருந்தா பரவா இல்லைன்னு நினைக்கிறாங்க. அப்புறம் வீடு எந்த area ன்னு பார்க்கிறாங்க"
(சத்தியமா எனக்கு ஒன்னும் புரியலடா சாமி)

"அப்படியா பார்க்கலாம்"
"அப்புறம் இன்னொரு விஷயம். இந்த management க்கு கீழ five branches இருக்காம்"
(!!!!!!!@@@@@@@@@#########)

"அப்படியா. எந்த எந்த இடத்துல?"
"வேளச்சேரி, அண்ணா நகர், X, Y, Z"
(ஏதோ புரிவது போல இருக்கே)

"அப்படியா. என்ன பண்ணுறது? நம்ம பசங்கள pre K.G. சேர்க்க எவ்வளவு கஷ்டமா இருக்கு"
"ஆமா ஆமா என்ன பண்ணுறது"
(அட பாவமே இந்த school interview matter யா இவ்வளவு நேரம் கேட்டுகிட்டு இருந்தோம் என்று என்று நினைத்து கொண்டே எழுந்து சென்று விட்டேன். ஒரு நல்லது என்னவென்றால் இந்த பேச்சு சுவாரசியத்தில் ரசம் சாதத்தை சாப்பிட்டு முடித்து விட்டேன்)

இன்று மதியம் திரும்பவும் அந்த பெண்மணியை canteen இல் பார்த்தேன். interview என்ன ஆச்சோ என்று நினைத்து கொண்டேன். கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டே மறுபடியும் meals வாங்கி கொண்டு (ரசம் இல்லைங்க) வேறு table இல் என் தோழியுடன் அமர்ந்தேன் . . .

7 comments:

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்குங்க.சுவராஸ்யமான
narration.

அது ஏன் ஜூரம் வந்தால் ரசம் சாதம்.
அது வேற ரசம் “கல கலன்னு” சாப்பிடனம்ன்னு சொல்லுவாங்க.விஞ்ஞானமா? பாட்டி வ்ழியா?

அடுத்து-

நல்லா இருக்குங்க.உண்மையிலேயே
ஒரு சிறு கதைக்கு உண்டான மேட்டர் இருக்கு.ஒரு சின்ன தாழ்மையான வேண்டுகோள்.

//(அட பாவமே இந்த school intervieந்......//

உண்மை சம்பவம் என்பதால் இந்த பாரா வருகிறது. இந்த இடத்தில் லைட்டாக ஒரு கற்பனையை கலங்க.
(உம்மாச்சி கோச்சுக்க மாட்டாரு)


எப்படி?


இந்த பாரா எடுத்து விடுங்கள். அடுத்து இது KG admission என்பதையும் எடுத்து விடுங்கள். suspenseஅ build up பண்ணிட்டு ஒரு cliff hanger finishக்கு கொண்டுப் போய் நிறுத்தி..

அடுத்த பாரா இப்படி ஆரம்பியுங்கள்:-

//அந்தப் பெண்ணுக்கு செல் வந்தது.பேசிக் கொண்டிருந்தவர்கள் தீடிரென்று பாதியிலேயே சாப்பாட்டை மூடி எழுந்து போனார்கள்.

என்ன interview?.எனக்கு ஜூரம் ஜாஸ்தியாயிற்று.//சுஜாதா ஸ்டைல்?

Raji said...

உங்கள் கருத்துக்கு நன்றி.

யோசித்து பார்க்கிறேன் :) :) :)

AD said...

Awesome blog ...!! hehe :)

Maddy said...

இங்கேயும் அதே கதை தான். முதல் நாளே வரிசையில நின்னு token வாங்க சிலபேர் பட்ட பாடு கேட்கவே பரிதாமா இருக்கு!!

Truth said...

இப்போ எப்படி இருக்கீங்க?
btw, Pre-KG சேக்றதுக்கு இண்டர்வ்யூ-அ? என்ன அல்ஜீப்ராவும், ட்ரிக்னாமெட்ரியும் சொல்லித்தருவாங்களா Pre-KGல? அப்படிப் பட்ட பள்ளில சேத்து என்ன பண்றது?

Raji said...

நேற்று நான் "காமராஜர்" படம் பார்த்தேன் .... அதில் வந்த வசனத்தை கேட்ட போது என்ன சொல்வது என்று தெரியவில்லை

இதோ அந்த வசனம் ..
அதிகாரி ஒருவர் காமராஜரிடம் "எல்லோருக்கும் இலவச கல்வி கொடுக்க வேண்டும் என்றால் நிறைய செலவாகும் ... நமது நிதித்துறை மீது அதிக சுமை ஏறுமே?"

அதற்கு காமராஜர் "ஏறட்டுமே ... நாம் தொழில் துறை மற்றும் பிற துறைகளில் லாபத்தை பெருக்கி அதை கல்வி துறைக்கு பயன்படுத்துவோம்"

இப்போதுள்ள நிலைமையை நினைத்து பார்த்தேன் :(

வெயிலான் said...

அவர் ஸ்டைல் - இவர் ஸ்டைல்னு குழப்பிக்காதீங்க.

நீங்கள் நீங்களாகவே எழுதுங்கள். அதுவே கூட ஒரு ஸ்டைலாகக் கூடும்.

இல்லையெனில் நாளடைவில் எழுத எழுத மாற்றம் ஏற்படும்.