Saturday, January 24, 2009

SMS

Local SMS free ன்னு சொல்லிட்டு என் friends எனக்கு அனுப்புற forward msgs இருக்கே.... அப்பப்பா ஒண்ணு நம்மள கலாய்ச்சு காலி பண்ணுறதுக்கு இல்லன்னா வெறுப்பேத்தி உசுபேத்தி விடுறதுக்கு .... எனக்கு வந்த சில SMS நீங்களும் படியுங்களேன்

SMS 1
The best excercise to reduce ur weight
First turn your head to the right and then turn it towards your left.
Do it everytime when you are offered anything to eat.

பார்த்தீங்களா என்னா வில்லத்தனம்னு.... இந்த msg அனுப்புன என் நண்பன நேர்ல பார்த்தேன் கொலையே பண்ணிடுவேன்.... last aa ஒரு பஞ்ச் வேற கொடுத்தானே ... இந்த msg யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லைன்னு......

SMS 2
Innovation isn't made by hardworkers, but by lazy people, trying to find easier ways to do the same... so be proud to be lazy...

இந்த msg எங்க சங்கத்துல இருந்து அனுப்புனது...
So I am proud ..............
இந்த msg படிச்சதுக்கு அப்புறமாவது எங்கள யாரும் திட்டாம இருக்காங்களான்னு பார்ப்போம்.....

SMS 3
A motor bike hit a bird.. He took the unconscious bird & put in a cage with some food. Bird wakes up, looks around & screams
"Ayyo Jail! Bike - Kaaran Sethuttaana"

இதுக்கு என்னால comments போட முடியாதுங்க ... எப்படி தான் யோசிக்கறாங்களோ

SMS 4
Psychological Fact
When a person cries due to happiness , the first drop of tear comes from the right eye.
But when it first comes from the left eye, its pain!!!

இந்த msg அனுப்பிட்டு இது உண்மையான்னு கேட்டாங்க ... எனக்கு என்ன தெரியும்னு நானும் திருப்பி கேட்டேன்.... இல்ல சந்தோசம்னு வந்தாலும் சோகம்னு வந்தாலும் நீங்க தான் அழுது scene போடுவீங்க அதான் உன் கிட்ட கேட்டோம்னு என் friend சொல்ல... அப்பப்பா argument ஆரம்பிச்சாச்சு... அதுவும் office ல... ஒரு 5 பேர் discussion பண்ண ஆரம்பித்து ஒரு ஒரு மணி நேரம் வரை சென்றது... அதை ஒரு தனி பதிவாக பிறகு போடுகிறேன்....

Sunday, January 18, 2009

என் காதில் விழுந்த Conversation...

என் தோழி வராத சென்ற வாரத்தின் ஒரு நாள். யாருமின்றி தனியாக lunch க்கு செல்ல வேண்டிய கட்டாயம். ஒரு வித எரிச்சலுடன் canteen க்கு சென்றேன். உடல் நிலை வேறு சரி இல்லாததால் ரசம் மட்டுமே சாப்பிட வேண்டிய கட்டாயம். ரசம் சாதம் எங்கே தனியாக கிடைக்கிறது. முப்பத்தி இரண்டு ரூபாய் கொடுத்து meals கூப்பன் வாங்கி வெறும் ரசம் சாதம் வாங்கி கொண்டு திரும்பினால் உட்கார இடம் தேட வேண்டிய நிலைமை. ஒரு வழியாக இடத்தை கண்டுபிடித்து நான்கு பேர் உட்கார கூடிய table இல் நான் மட்டும் தனியாக அமர்ந்தேன். மீதி மூன்று இருக்கைகளும் காலியாக இருக்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தால் ஏதோ நான் மட்டும் தான் தனியாக உட்கார்ந்திருப்பது போல் ஒரு feeling. எரிச்சலின் அளவு கூடியது. இவ்வளவு நேரம் இருந்த கூட்டம் இப்போ எங்கடா போச்சு என்று நினைத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். அட சே தனியா சாப்பிடுறதே கொடுமைனா இந்த சாப்பாட சாப்பிடுறது அத விட ஒரு கொடுமை. சாப்பாட்டில் இருந்து கவனத்தை திருப்ப project பத்தி யோசிக்க ஆரம்பித்தேன். இன்றாவது ஆறு மணிக்கு கிளம்ப முடியுமா முடியாதா? என்று யோசிக்க யோசிக்க முடியும் என்று ஒரு முறையும் முடியாது என்று ஒரு முறையும் தோன்ற ஆரம்பித்தது...

"Excuse me, anybody is coming here?" என்று ஒரு பெண்ணின் குரல் என் யோசனையை கலைக்க, "no" என்று வாயசைத்து தலையை இடமும் வலமுமாக ஆட்டினேன். அவர் திரும்பி அவருடைய தோழிகள் இருவரையும் அழைக்க, அவர்கள் மூவரும் மீதி இருந்த மூன்று காலி இருக்கைகளையும் ஆக்கிரமித்தனர்.

என்னிடம் கேள்வி கேட்ட பெண்மணி என் எதிரில் அமர்ந்தார். நான் சாப்பிட்டு கொண்டிருந்த ரசம் சாதத்தையும் என்னையும் அவங்க பார்த்த அர்த்தம் எனக்கு புரிய வில்லை. என்னை பாவம் என்று நினைத்தாரோ என்று கூட தோன்றியது. அவங்க lunch box ஐ அவங்க திறக்க அங்கேயும் ரசம். அப்போது தான் தோன்றியது நம்மை நக்கலாக பார்தாங்கலோன்னு. நான் அவங்க யாரையும் கண்டு கொள்ளாமல் வேறு பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்து கொண்டே என் வேலையை (அதாங்க சாப்பிடுறது...) தொடர்ந்தேன்.

அவர்களும் சாப்பிட ஆரம்பிக்க அவர்களின் உரையாடலும் தொடங்கியது.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி எதிரில் இருந்தவரிடம் "என்னமா நேத்து interview என்னாச்சு" என்று கேட்டார்
என் எதிரில் இருந்த பெண்மணி "கிளிக் ஆய்டுச்சு"

"அப்படியா. congrats treat எப்போ"
"சீக்கிரம் கொடுத்துட்டா போச்சு"
(பரவா இல்லையே. இந்த வருடத்தில் ஒரு நல்ல விஷயம் கேட்கிறோமே. client interview இல்லனா visa interview ஏதோ ஒன்னு கிளிக் ஆய்டுச்சு அவங்களுக்கு. ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் எனக்கும் வந்தது)

"அப்புறம் உனக்கு interview எப்போ?"
"எனக்கு நாளைக்கு?"
எனது சந்தேகம் எந்த interview என்று....

"ok all the best. எத்தனை மணிக்கு?"
"morning 11 o clock. ஆனா என் husband க்கு client call இருக்கு. அவரால வர முடியாதாம். என்ன பண்ணுறதுன்னு தெரியல"
(கண்டிப்பாக இது visa interview தான் என நான் நினைத்து கொண்டேன்)

"அப்புறம் என்ன questions கேட்டாங்க?"
"name, address, parents name.... அவ்வளவு தான்"
(என்ன visa interview ல இதான் கேட்டாங்களா)

"அவ்வளவு தான. கஷ்டமா இல்லையே. வேற என்ன சொன்னாங்க"
"வேற என்ன வீட்டுல ஒருத்தவங்க இருந்தா பரவா இல்லைன்னு நினைக்கிறாங்க. அப்புறம் வீடு எந்த area ன்னு பார்க்கிறாங்க"
(சத்தியமா எனக்கு ஒன்னும் புரியலடா சாமி)

"அப்படியா பார்க்கலாம்"
"அப்புறம் இன்னொரு விஷயம். இந்த management க்கு கீழ five branches இருக்காம்"
(!!!!!!!@@@@@@@@@#########)

"அப்படியா. எந்த எந்த இடத்துல?"
"வேளச்சேரி, அண்ணா நகர், X, Y, Z"
(ஏதோ புரிவது போல இருக்கே)

"அப்படியா. என்ன பண்ணுறது? நம்ம பசங்கள pre K.G. சேர்க்க எவ்வளவு கஷ்டமா இருக்கு"
"ஆமா ஆமா என்ன பண்ணுறது"
(அட பாவமே இந்த school interview matter யா இவ்வளவு நேரம் கேட்டுகிட்டு இருந்தோம் என்று என்று நினைத்து கொண்டே எழுந்து சென்று விட்டேன். ஒரு நல்லது என்னவென்றால் இந்த பேச்சு சுவாரசியத்தில் ரசம் சாதத்தை சாப்பிட்டு முடித்து விட்டேன்)

இன்று மதியம் திரும்பவும் அந்த பெண்மணியை canteen இல் பார்த்தேன். interview என்ன ஆச்சோ என்று நினைத்து கொண்டேன். கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டே மறுபடியும் meals வாங்கி கொண்டு (ரசம் இல்லைங்க) வேறு table இல் என் தோழியுடன் அமர்ந்தேன் . . .

Thursday, January 15, 2009

எனது முதல் பதிவு

எனது Blog ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறி விட்டது. சின்மயி blog தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமான blog. நிறைய மாதங்கள் வெறும் silent member ஆக படித்து கொண்டு இருந்தேன். comments கூட போட வேண்டும் என்று தோன்றியது இல்லை. சின்மயி blog வழியாக எனக்கு அறிமுகமானது தான் பிரியா அக்கா blog.

நான் இன்று blog ஆரம்பிக்க ஒரு முக்கிய தூண்டுகோல் ஆக இருந்தது அவர்களின் writing தான். பிரியா அக்கா blog படிக்க ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் என்னால் வேறு எதையும் படிக்க முடியவில்லை. அவர்கள் எழுதிய அனைத்தையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆர்வம். ஆபீஸ் இல் ஐந்து நிமிட break கிடைத்தால் கூட பிரியா அக்காவின் blog படிக்க ஆரம்பித்தேன். அனைத்தையும் படித்து முடித்தவுடன் தான் எனக்கு ஒரு சந்தோசம், நிம்மதி. கொஞ்ச நாள் இங்கேயும் நான் silent member தான். comments எழுத வேண்டும் என்ற ஆர்வம் இங்கு தான் தலை தூக்கியது. இப்போது blog எழுத வேண்டும் என்ற ஆர்வமும் வந்து விட்டது.

முதல் பதிவில் அவர்களின் writing வேண்டும் என்று நான் கேட்டு கொண்டதற்காக எனக்காக அவர்கள் எழுதி கொடுத்த ஒரு சில வரிகள் கீழே

"Nothing like an appreciating word for any kinda work.இதுல ராஜி ய அடிச்சுக்க ஆளே கெடயாது. ஏதாவது ஒரு 'சப்ப' போஸ்ட் போட்டா கூட 'அக்கா நல்லா இருக்கு..super' ன்னு நம்மள உசுப்பேத்தி விட்ருவாங்க....:-) இவ்ளோ நாளும் கமெண்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தவங்க, இப்போ ஒரு முடிவோட களமிறங்கி இருக்காங்க. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள். This is a great and warm welcome for her entry in Tamil blogging world and wishing for her, fun and learning."
Thanks பிரியா அக்கா.

அடுத்து பிரியா அக்காவின் blog மூலமாக அறிமுகமான writing maddy அண்ணா மற்றும் mathukrishna.


Maddy anna வும் நம்மள பத்தி நாலு வரி எழுதி நம்மள சந்தோசமாக்கிட்டாங்க.. அதையும் படியுங்களேன்
"ஒரு வழியா கமெண்ட் மட்டுமே போட்டுட்டு இருந்த ராஜி களம் இறங்கியாச்சு!! என்னோட ஒரு பெயண்டிங்க்க்கு ஓராயிரம் தலைப்பை யோசிச்சு ரயில் ஒற்ற அளவுக்கு தலைல புகை வந்துடுச்சின்னு கம்ப்ளைன்ட் வந்தது!!! இங்கே எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் பேர்ல ஒரு முக்கியமான ஆளு ராஜி. வாழ்த்துக்கள்!! நிறைய எழுதணும்ன்னு வாழ்த்தறேன்!! "


மது மேடம் "unga bloga romba ethirpaarthukkittu irukkaen, quickaa start pannunga, pleaseeeeeee...:)" அப்படின்னு சொல்லி நம்மள ரொம்ப உசுப்பேத்தி விட்டுடாங்க. அவங்கள ரொம்ப நாளா காணோம். exam ல ரொம்ப busy ஆ இருக்குறாங்க போல.


அப்புறம் நான் ஆர்வத்துடன் படிக்கும் சிலரின் பதிவுகள் - Truth, Butterfly சூர்யா.

sa.na.kannan - இவங்க ரொம்ப பெரிய ஆளு. இவங்கள அறிமுக படித்திய பிரியா அக்காவிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

Happy Reading :) :) :)