Wednesday, December 2, 2009

ச்சும்மா...

என் கவிப்புலமை பற்றிய பதிவை படித்து விட்டு எனது பதிவிற்கு வலைச்சரத்தில் அறிமுகம் கொடுத்த தாரணி பிரியா மேடம்க்கு மிக்க நன்றி.

என்னை சிறுகதை எழுத சொல்லி ரொம்ப நாளா நச்சரித்து கொண்டிருந்த நண்பர் ஒருவர், அந்த கவிப்புலமை பதிவை படித்து விட்டு அப்பிடி சொல்லுவதை நிறுத்தி கொண்டார். நிறுத்தி கொண்டதோடு மட்டும் இல்லாமல் ஒரு ஒன் லைன் சொல்லு, அத வச்சு நானே கதை எழுதுறேன், நீ எழுதலன்னா பரவாயில்லை என்று கேட்டார்.

"நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று நான் சொல்ல, கவிப்புலமை பதிவை படிச்சிட்டு துப்பினத விட கொஞ்சம் அதிகமா தான் துப்பிட்டாங்க. இருந்தாலும் இந்த மாதிரி நாலு ஐடியா குடுத்து கதை எழுதி வாங்காம விடுறது இல்லன்னு நான் ஒரு முடிவுல இருக்கேன். சிறுகதைன்னு சொல்லி நான் இன்னும் நாலு பதிவு போடலாம்ல.

-----------------------------------------------------------------------------

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நான் பதிவுகளை படிக்க ஆரம்பித்த பொழுது இவர்கள் எழுதியதற்கும் இப்போது இவர்கள் எழுதி கொண்டு இருப்பதற்கும் எத்தனை மாற்றம். நல்ல ஒரு முன்னேற்றம் என்று என் நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவரும் ஆமாம் என்று ஆமோதித்த அந்த இருவர் - ப்ரியா கதிரவன் மற்றும் நர்சிம்.

-----------------------------------------------------------------------------

FTII Students "Hostel" அப்பிடின்னு ஒரு 10 min short film எடுத்துருக்காங்க, நல்லா இருக்கு பாருன்னு ஒரு மகாராசி லிங்க் அனுப்பி இருந்தாங்க. Hostel ல நடந்த ஒரு உண்மையான சம்பவம் அப்பிடின்னு சொல்லி வேற பார்க்க சொன்னங்க. நைட்ல பார்த்துட்டு பயந்துடாதீங்கன்னு மெயில்ல போட்டிருந்த ஒரு பின் குறிப்ப நைட் ஒரு மணிக்கு short film பார்த்துட்டு தான் படிச்சேன். படம் பார்த்துட்டு எரிச்சலானத விட அந்த குறிப்ப பார்த்துட்டு இன்னும் எரிச்சல் ஆச்சு. அந்த கிளைமாக்ஸ்ல அந்த பொண்ணு இப்பிடி ரியாக்ட் பண்ற அளவு ஒன்னும் பெருசா எதுவும் நடக்கல (என்னை பொறுத்த வரை). ஒரு பத்து நிமிஷம் தான். நீங்களும் பாருங்க.

Part 1 - http://www.youtube.com/watch?v=oZS31xylr-A
Part 2 - http://www.youtube.com/watch?v=WUX7x10pBdw&feature=related

இந்த கதைய பார்த்துட்டு ஒருத்தருக்கு சாட்ல கஷ்டப்பட்டு முழு ஸ்டோரிய டைப் பண்ணினா ஏதோ காமெடி கதை சொன்ன மாதிரி ஹா ஹா ஹான்னு சிரிச்சிட்டு போய்ட்டாங்க :(

-----------------------------------------------------------------------------

என் மச்சான் சூர்யாவை நம்பி ஆதவன் படம் பார்த்தேன். ஏதோ அயன் -2 பார்த்த மாதிரி இருந்தது. சூர்யாக்கு என்ன ஆச்சு. ஏன் இப்பிடி? வடிவேலு இல்லனா இந்த படம் ஒன்னும் இல்ல. அதுவும் "The Children of Heaven" பார்த்த உடனே இந்த படத்த பார்த்தேன். என் நிலைமைய யோசிச்சு பாருங்க :( இந்த படத்த பார்த்துட்டு என் தோழி அடித்த கமெண்ட் "இத பார்த்ததுக்கு நான் தொங்கணும்"

-----------------------------------------------------------------------------

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் மோட்டார் விகடன் சூப்பரோ சூப்பர்.

367 கிலோ எடையுள்ள TRIUMPH ROCKET III Roadster பைக் பற்றியும் (2299 சிசி இன்ஜின்.ஒரே ஒரு தடவையாவது இந்த மாதிரி பைக்ல போகணும்.ஹ்ம்ம்.நீங்க இத வாங்கி இந்தியா கொண்டு வர 20 லட்சம் தான்), பெங்களூரில் நடந்த ஆட்டோ ஷோ, கார் பராமரிப்பு விஷயங்கள், 2010 இல் வர போகும் கார்களை பற்றிய அலசல், சிம்பு ஒரு கோடி கொடுத்து ஒரு வருடம் காத்திருந்து வாங்கிய பிஎம்-டபிள்யூ எக்ஸ்-6 கார் (இது எனக்கு ரொம்ப முக்கியமான்னு திட்டுறது நல்லா கேட்குது) என்று நெறைய நல்ல விஷயங்கள்.

ஆனால் படிக்கும் போது சிந்திக்க வைத்த ஒரு விஷயம் இந்த மாத மோட்டார் விகடனில் இருக்கு.

எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை? என்ற தலைப்பில் வந்திருந்த செய்தி
"1988-ம் ஆண்டே இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தது என்றாலும், இப்போதுதான் இந்த நடவடிக்கை இறுதி வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டு ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால், பெர்மிட் இல்லாமல் ஓட்டினால், சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் (எத்தன பேரு சீட் பெல்ட் போடுறோம் :(), குடித்து விட்டு ஓட்டினால் என்று பல ஓட்டினால்களுக்கு அதிகமாக்கப்பட்ட அபராத தொகை பற்றிய செய்திகள்."
அபராதங்களை அதிகமாக்கினால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட போவதில்லை. அது நம்ம கைல தான் இருக்கு.

மோட்டார் விகடன் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது என்றாலும் நாணயம் விகடன் ஏமாற்றுகிறது.

ஆனால் புத்தகத்தை கையில் பிடித்து படிக்கும் சந்தோசத்தை இந்த ஆன்லைன் விகடன் (விகடன் மட்டும் இல்லை. எந்த ஒரு e-book க்கும் தான்) கொடுப்பதில்லை.

Friday, November 13, 2009

Synapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்



"அர்ஜுன் அம்மா யாரு?" "நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா!!!!!!!!!!!!!! என்று அதிரடியாக அறிமுகப்படுத்தி கொள்ளும் ப்ரியா அக்காவின் பதிவுகளும் அதிரடியே. இவரால் சுவீடனில் ஆரம்பிக்கப்பட்ட Synapse இப்போது பெங்களூரில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இது வரை ப்ரியா அக்கா எழுதியதில் எனக்கு மிக மிக பிடித்தது அவர் தந்தை பற்றி அவர் எழுதிய தந்தை மகற்கு ஆற்றும் நன்றி. நான் மிகவும் சந்தோசமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் நான் செய்ய விரும்புவது இரண்டு விஷயங்கள். இந்த பதிவை படிப்பது, மொழி படம் பார்ப்பது. எனக்கு அலுக்காத விசயங்கள் இவை. என்னை பொறுத்தவரை ராதா மோகனால் மற்றும் ஒரு படம் மொழி போல் எடுக்க முடியாது. அது போல் இவர் எத்தனை பதிவு எழுதினாலும் இந்த பதிவு போல் வராது.

அர்ஜுன் பிறந்தது பற்றியும், அவனின் மழலை மொழியையும் மிக அழகாக பதிவு செய்துள்ள அவர் இப்போது அர்ஜுன்க்கு ரெஸ்ட் கொடுத்து இருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து அர்ஜுனை வைத்தே அவனை பற்றி Synapse இல் எழுத வைக்கும் எண்ணம் இருக்கிறதோ என்னவோ?
ஆனால் அர்ஜுனை பற்றி அவர் எழுதிய காதல் மலரும் நீ... கருவில் முள்ளும் நீ பதிவு படித்தால் அர்ஜுனை அள்ளி கொஞ்ச தோன்றும்.

அவர் ஒரு பயண தொடர் எழுத முற்பட்டு சில பதிவுகளை மிக அருமையாகவும், சில பதிவுகளை சொதப்பியும் அவரின் கணவரிடம் மட்டும் இன்றி அவரை நம்பி அவரது பதிவை படிக்கும் சிலரிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டார். குறுந்தொகையை தப்பாக எழுதி மாமனாரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அனுபவம் கூட அவருக்கு இருக்கிறது.

இவரின் குறும்புகளை தாங்க முடியாமல் நாங்க தவிக்க 'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார் என்று ச.ந.கண்ணனை வம்புக்கு இழுக்க வேண்டியது, இட்லிவடையை சமத்தாக இருக்க சொல்லி அறிவுரை சொல்வது என்று இவரின் அலும்பு தாங்கல. ஹ்ம்ம் என்ன உலகமடா இது.

Salmon மீன் வறுவல், ரசமலாய் என்று போட்டோ மற்றும் அதை செய்வது பற்றிய குறிப்புகளும் போட்டார். நாங்களும் இப்படி அருமையாக இவர் சமைப்பாரா என்று வியந்து போய் இருக்க அவரின் கையால் சாப்பிட்ட அவரின் கணவரின் நண்பர் கொடுத்த கமெண்டும், அவரின் தோழி சுபா அந்த போட்டோ கூகுளில் இருந்து எடுத்தது என்ற உண்மையையும் (!?!) சொன்ன பிறகு தான் தெரிந்தது அது எல்லாம் காமெடி பதிவு என்று.

கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு என்று நம்மளையும் பதிவு மூலம் அவங்க வீட்டிற்கே கூட்டி சென்றவர் மீந்து போன இட்லி மாவு கூட கொடுக்காமல் ஏமாற்றினார்.

அவர் பார்க்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அதையும் பார்க்க விடாமல் IPL வந்து அவரின் உயிரை வாங்கும். டென்னிஸ் பற்றியோ, கிரிக்கெட் பற்றியோ எதுவும் தெரியாது என்றாலும் ((socket ல இருக்க வேண்டிய கேபிள் அவிழ்ந்து கிடந்தது தெரியாம டென்னிஸ் மேட்ச் டிவில தெரியலன்னு உட்கார்ந்திருந்த ஆளுங்க இவங்க) டோனி, பெடரர் பற்றி பேசி கதிரின் காதில் புகையை வரவைப்பது அவரின் பொழுதுபோக்கு. அதற்கு துணையாக ச.ந. கண்ணன் வேறு சில பதிவுகளை (டோனியை போல யாரும் இல்லன்னு) போட்டு ஏற்றி விடுவார். ஒரே ஒரு நல்ல விஷயம் விளையாட்டு பற்றி தெரியாது என்றாலும் பெடரருக்காக அய்யனாரிடம் வேண்டி அவரை ஜெயிக்க வைத்தார். அந்த விசயத்தில் பெடரரின் ரசிகையான எனக்கு மிக்க மகிழ்ச்சி.

No name yet என்று அவரின் தோழிகளை பற்றி எழுத ஆரம்பித்து அதை முடிக்காமல், அதற்கு பெயரையும் சூட்டாமல் விட்டுள்ளார். சீக்கிரம் அந்த பதிவுகளுக்கு பெயரிட்டு அதை முடிக்கட்டும். நீங்கள் எல்லோரையும் விட்டு தனியாக இருக்கும் போது இந்த பதிவுகளை படிக்காதீர்கள். உங்களை அறியாமல் கண்ணீர் வரும். மனது கனத்து விடும். அனுபவம் பேசுகிறது.

நான் கதை கேட்ட கதை, நான் எழுதிய கவிதை என்று சொந்த திறமைகள் பற்றியும் அவ்வபோது பதிவுகள் வரும். எந்த அளவு சொந்த கதைகள் சொல்றாரோ அந்த அளவு பொது நல நோக்குடன் பஸ்சில் நடந்தது, tax ஒழுங்கா கட்டுவது என்ற பதிவுகளும் வரும். அவருக்கு அது பொது நலமாக தோன்றுவது இல்லை என்றாலும் படிப்பவர்கள் நாமும் இனி இப்படி இருக்கலாமே என்று எண்ணுவோம்.

அவரின் சொந்த ஊர் பற்றிய பதிவை படித்து விட்டு நம்மள மாதிரியே இருக்காங்களே என்று நான் எண்ணியதோடு மட்டும் இல்லாமல் நம்மளால இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று எனக்கு தோன்றியது.

சரோஜா. தாம் தூம், நான் கடவுள், கண்டேன் காதலை என்று சினிமா பற்றிய (இதுல ஹிந்தி சினிமா பற்றி வேறு ... யாருக்கு புரிய போதுன்னு ஒரு தைரியம்) பதிவுகள் வரும். சரோஜா படத்துக்கு உதயம் தியேட்டர்ல உக்காந்து விசில் அடிக்க முடியாம சத்யம்ல பார்த்தாங்கன்னு கவலை வேற மேடம்க்கு.

வைரமுத்து, உன்னி கிருஷ்ணன், தாமரை என்று எழுதுவதோடு நிறுத்தி கொள்ளாமல் அவ்வபோது பாட்டு போட்டிகள் வைத்து நம்ம மூளைக்கு (சாரி கூகிள் ஆண்டவர்க்கு) வேலை கொடுப்பார். நாமளும் உயிரை கொடுத்து கண்டுபிடித்தால் ஒரு மிட்டாய் கூட கொடுக்க மாட்டார். மிட்டாய் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கூகிள் பண்ணி சொன்ன உங்களை கூகிள் ஆண்டவர் கண்ணை குத்தட்டும் என்று சாபம் வேறு கிடைக்கும்.

நகத்தை எடுத்தது, பல்லு பிடுங்கியது, போன் அட்டென்ட் பண்ண போய் கீழ விழுந்தது இதை பற்றியெல்லாம் எழுதி விட்டு ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள், படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு என்று கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலங்குற மாதிரி ஒரு ஸ்டேட்மெண்ட் வேற.

இவர் பதிவிட்டு எங்களை படுத்துவது பத்தாதென்று அவர் மாமனாரின் பிரிவுபச்சார விழாவில் பேசி அவர்களையும் படுத்த முயன்றார். ஆனால் அவர் நாத்தனார் அவர்களை காப்பாற்ற எங்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. ஆனால் அவரின் மாமனாருக்கு அவரின் வேலையின் மீது இருந்த ஈடுபாட்டை அழகாக குறிப்பிட்டு அவரை வாழ்த்தி எங்களையும் வாழ்த்த வைத்து நல்ல பெண்ணாக நடந்து கொண்டார்.

Marriage க்கும் XOR க்கும் என்ன தொடர்புன்னு கேட்டு மத்தவங்க குடும்பத்துல கும்மி அடிக்க முற்பட்ட இவங்களுக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கிறது. இவங்க தம்பி திருமணத்தை நாகர்கோவிலில் நடத்தி வர்ற மொய் பணத்தை எல்லாம் ஆட்டையை போடணும்னு.

இப்போது சிறுகதை எழுத ஆரம்பித்திருக்கும் இவர் திரு. தேசிகன் அவர்களுக்கும், ச.ந.கண்ணன் அவர்களுக்கும் (இப்படி தான் உசுப்பேத்தனும்) சவால் கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்போம்.

எல்லோரும் மன நிம்மதியுடன், உடல் நலத்துடன் வாழ வாழ்த்தும் இவர் உடல் நலத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துவோம்.

Synapse இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்துகள்.

Friday, November 6, 2009

ரொம்ப பிடிச்சிருக்கு!!!

இப்போது படித்த இந்த பதிவு என் உள்ளத்தை கவர்ந்தது.
Alice(s) in wonderland.

Friday, October 30, 2009

என்னத்த சொல்றது போங்க?

ஒரு ஐந்து குடும்பங்களுடன் நானும் சேர்ந்து பக்கத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தோம்.
அதில் இரு குடும்பத்தை சேர்ந்த ஒரே வயதை ஒத்த இரு குழந்தைகள் (ஒரு பொண்ணு,ஒரு பையன்) இருக்கிறார்கள் (2nd grade படிக்கிறார்கள்)

நாங்கள் வெளியில் செல்லும் போது இருவரும் ஒரே காரில் வருவதை விரும்புவார்கள். எப்போதும் நானும் அவர்கள் இருக்கும் காரில் தான் பயணம் செய்வேன்.

எங்கள் பயண நேரங்கள் முழுவதும் விளையாட்டில் தான் கழியும். அதுவும் எல்லாம் அறிவு பூர்வமா தான் விளையாடுவாங்க. நாம எதுனா சொன்னாலும் மதிக்க மாட்டாங்க. அதுவும் கொடுமைய பாருங்க. Word Building, Missing Letters, Rhyming words இப்பிடி தான். நீங்களே சொல்லுங்க... எனக்கும் இதுக்கும் என்னங்க சம்மந்தம். தப்பா சொன்னா மானம் வேற போய்டும். விளையாட்டில் இருந்து விலகவும் முடியாது. அதுவும் முதல் பயணத்தில் சொன்ன வார்த்தைகள அடுத்த பயணத்தில் use பண்ண கூடாது. கரெக்ட்டா நியாபகம் வச்சு "ஆன்ட்டி (இந்த கொடும வேற. ஆயிரம் தடவ சொல்லி கொடுக்கிறேன் அக்கான்னு கூப்பிட சொல்லி. அந்த குட்டிங்க கூட மதிக்க மாட்டேங்குது) போன தடவ நீங்க இந்த words சொல்லிடீங்க. வேற சொல்லுங்க.

நான் அவங்க வயசுக்கு தெருவுல தான் விளையாடி இருக்கேன். ஜோடி புறா, நாடு பிரித்தல், கில்லி, பாண்டி, நொண்டி இப்பிடி நெறைய. அதே மாதிரி வீட்டுக்குள் விளையாடினால் cards, பல்லாங்குழி, தாயம், இப்பிடி. நான் செஸ், கேரம்லாம் ஆறாவது ஏழாவது படிக்கும் போது தான் விளையாட ஆரம்பித்தேன். அதுல பெருசா விருப்பமும் இல்ல. நான் வெளியில விளையாடின ஒரு விளையாட்டு கூட இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது. ஹ்ம்ம் இத விடுங்க.

அன்றும் வழக்கம் போல் "ஆன்ட்டி Rhyming words விளையாடலாம்"

"எனக்கு தூக்கம் வருதும்மா. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்" (தப்பிக்க வேற வழி?)

"இல்ல ஆன்ட்டி, நீங்க வீட்டுல போய் தூங்கிக்கலாம். இப்போ கண்டிப்பா விளையாடுறோம்"

காரில் இருந்த எல்லோரிடமும் பேசி கடைசியாக வலுகட்டாயமாக என்னையும் சேர்த்து நான்கு பேர் ரெடி பண்ணினாங்க. அந்த குட்டி பொண்ணு,குட்டி பையன், நான், பையனோட அம்மா. பையனோட அப்பா கார்ல ஏறுன உடனே தூங்க ஆரம்பிச்சிட்டதால அவங்கள விட்டுடாங்க.

ஆரம்பமே நமக்கு தான் ஆப்பு.

ஆன்ட்டி ரெடியா?

ஹ்ம்ம். ரெடிமா.

"car"

"bar"

தப்பிச்சேன் என்று மனதிற்குள் சொல்லி கொண்டேன்.
ஒரு நான்கு ஐந்து சுற்று நடந்து முடிந்தது. நாங்க போட்ட சத்தத்துல தூங்கிட்டு இருந்த அந்த பையனோட அப்பா எழுந்தாச்சு. அவங்க அரைகுறை தூக்கத்தில் அமைதியா உக்காந்து நாங்க விளையாடுவதை பார்த்து கொண்டே வர என்னோட முறை இப்போது

ஆன்ட்டி, it is your turn now.. word is "Free"

நான் சொன்ன வார்த்தை "tree"

"ஏற்கனவே சொல்லியாச்சு ஆன்ட்டி. நீங்க வேற சொல்லுங்க"

இன்னும் இரண்டு மூன்று வார்த்தைகள் நான் சொல்ல அனைத்திற்கும் அவர்கள் கூறிய பதில் "ஏற்கனவே சொல்லியாச்சு ஆன்ட்டி. "

"வேற வழி இல்லை. யோசித்தே ஆக வேண்டும். அட போங்க குட்டிங்களா" என்று எண்ணி கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.

அரை குறை தூக்கத்தில் இருந்த அந்த பையனின் அப்பா, அந்த குட்டீஸ் சொன்ன வார்த்தையை சரியாக கவனிக்காமல் "code" என்றார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க சொல்றீங்க என்று கேட்க, அவர் என்னிடம் "road க்கு code"

road ஆ? அப்பிடி எப்போ சொன்னாங்க என்று நான் குழம்பி போய் உட்கார்ந்திருக்க.
road க்கு code அப்பிடின்னு சொன்னத குட்டீஸ் கவனிக்கல, code அப்பிடின்னு சொன்னத மட்டும் தான் கவனிச்சாங்க. அத கேட்டுட்டு அந்த குட்டி பொண்ணு சிரிக்க ஆரம்பிச்சிட்டா.

உடனே அந்த பையன் "Don't feel dad" என்று சொல்ல, எல்லோரும் அவனையே பார்க்க,மறுபடி அவன் "Dont feel dad" என்றான்.

ஒன்றும் புரியாமல் நானும், அவன் அப்பா அம்மாவும் விழித்திருக்க அவனே தொடர்ந்ந்தான்."எல்லோரும் சிரிக்கிறாங்கன்னு (குட்டி பொண்ணு மட்டும் தான் சிரிச்சா) கவலை படாதீங்க டாடி. You need more practice. that's it. Here after we both will play in home. Then you will come to know more words. I ll help you . Dont worry dad." என்று சொல்லி முடிக்க அவரின் முகத்தை பார்க்க வேண்டுமே ஐயோடா.

அதோடு முடியவில்லை. அந்த குட்டி பெண் தொடர்ந்தாள் "பார்க்கலாம் next time. நெறைய words கேட்குறேன். உங்க டாடிக்கு தெரியுதா என்று பார்க்கலாம்"

அவர்கள் இருவரும் ரொம்ப சீரியஸா பேசுவதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தோம்.

இப்போதும் நான் யோசித்து கொண்டிருக்கிறேன். அந்த குழந்தைகளின் வயதில் நான் இருந்த போது இப்பிடி எல்லாம் பேச தெரிந்திருக்கவில்லை. ஏன் இப்போதும் கூட?

இப்போது அவங்கள எங்க பார்த்தாலும் "என்னங்க, training எப்பிடி போகுது" என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது.

Thursday, October 22, 2009

மீண்டும் வேண்டும்

Chennai Hostel TV hall - ஒரு பத்து பேரு உட்கார்ந்து சன் மியூசிக் பார்த்துட்டு இருந்தோம். ரூம்ல இருந்து டிவி ஹால்க்கு என் தோழி ஒருத்தி வந்தா.அந்த நேரம் பார்த்து "அடியே கொல்லுதே" பாடல்.

அவள் வந்து உட்காரும் முன், என் பக்கத்துல இருந்து ஒருத்தி "டீ, சவுண்ட் வைச்சிட்டு வா" என்று அவளிடம் சொல்ல அவள் சவுண்ட் அதிகபடுத்துவதற்கு பதில், சேனலை மாற்றி விட்டாள்.

"உனக்கு என்ன மாலைக்கண் நோயா. ஏன் டீ. ஒரு சவுண்ட் அதிகமாக்க தெரியாதா"

நான் "ஏன்டீ தெரியாம சேனல் மாத்தினதுக்கு இப்பிடி பொங்குற?"

உனக்கு என்ன தெரியும் என்று அசிங்கமா திட்ட ஆரம்பிக்க, நான் நம்ம மச்சான் பக்கம் (நம்ம சூர்யா தான்) கவனத்தை திருப்பி விட்டேன்.

சேனலை சரியாக வைத்து விட்டு என் இன்னொரு பக்கத்தில் வந்து அமர்ந்த அவள் "என்ன ராஜி, விசா வந்துடுச்சாம். எப்போ கிளம்புற"

"ஹ்ம்ம் வந்துடுச்சு. ஆனா இன்னும் date தெரியல. கிளம்புற வரை கண்டிப்பா சொல்ல முடியாது. பார்க்கலாம்"

"நான் கூட switzerland பார்க்கணும்."

"அடிப்பாவி. நானே US போறேன். என்கிட்டே எதுக்கு switzerland பத்தி சொல்ற"

"இல்ல சும்மா சொன்னேன்"

சவுண்ட் அதிகமா வைக்க சொன்ன தோழி இவளை பார்த்து "ஒரு bet டீ. நீ மட்டும் switzerland அ கரெக்ட்டா spell பண்ணிடு. நீ அங்க போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்."

அப்பிடியா என்று சொல்லி கொண்டே இவள் ஆரம்பித்தாள் "சு" "வி" "ட்" "ச' "ர்" "லா" "ந்" "து"

கேட்டவளின் முகத்தை பார்க்கணுமே. "அடிங்க ... ஒழுங்கா மரியாதையா இங்கிலீஷ்ல சொல்லு."

என்ன நினைத்தாலோ அவள் தெரியவில்லை "எனக்கு மாலை கண் நோய் மாதிரியே, மாலை மொழி (??!!??) நோயும் இருக்கு. சாயந்தரம் ஆறு மணியில இருந்து காலையில எட்டு மணி வரைக்கும் இங்கிலீஷ் பேசினாலும் புரியாது. பேசவும் தெரியாது. அதுனால நீ morning 8 - eve 6 குள்ள கேளு. சொல்றேன்."

கேட்ட அம்மணி பீட்டர் அம்மணி. ஒண்ணும் சொல்ல முடியல அவளால. அன்னைல இருந்து கொஞ்சம் பீட்டர் குறைந்து இருக்கு.
--------------------------------------------
நான் டிவி ஹாலில் இருந்து எழுந்து உள்ளே சென்றேன் சாப்பிட தட்டு எடுத்து வர.

நான் ரூம்குள்ள நுழைந்த உடன் டிவி ஹால்ல இருந்து ஒரு நாலைந்து குரல் "ராஜி. உன் அக்கா மச்சான் ..ஓடி வா டீ"

நான் ஓடி வந்து கண்ணு மண்ணு தெரியாம என் தோழியின் மடியில் உட்கார அவள் "ஐயோ என் கால் உடைஞ்சிடுச்சு. எருமைமாடு கண்ணு தெரியல. ஜோ, சூர்யாவ நீ பார்க்க என் கால ஏன்டீ உடைக்கிற"

எரும மாடுன்னு அவளே சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் நாம feel பண்ண கூடாது. சோ வேலையில் கவனம்.
நான் உருகி போய் "சூர்யா கண் மாதிரி ஒரு expressive, powerful ஆ வேற யாருக்குமே இல்ல."

என் பக்கத்துல இருந்த ஒருத்தி "என் கண்ணு கூடவா" என்று அவ கண்ணை என்னிடம் காண்பிக்க, தூக்கி போட்டு மிதிப்பேன் என்று அவளிடம் சொன்னேன்.

அதற்குள் இன்னொருத்தி "வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி இப்போ அவ கண்ண காமிச்சா" என்று சொல்ல "யார யார் கூட compare பண்ற என்று விட்டேன் ஒரு உதை"

"hostel இட்லிய வச்சு கண்ண குத்தினா என்ன ஆகும் தெரியும்ல. மாலைக்கண் நொள்ள கண் ஆய்டும் (அதே அம்மணி தான்)."

அதற்குள் இன்னொருத்தி "ஜோவ பார்க்குறதுக்கு முன்னால என்ன மட்டும் சூர்யா பார்த்துருக்கணும். அப்புறம் ஜோவ பார்த்து இருக்க மாட்டான்"

"ஜோவா பார்த்திருக்க மாட்டான் உண்மை தான். ஆனா ஒண்ணு sucide. இல்லனா சாமியார்"

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லோரும். பிச்சிபுடுவேன் பிச்சு.
-------------------------------
இந்த மாதிரி ஆயிரம் நிகழ்வுகள் எங்கள் அழகான மாலை/இரவு பொழுதுகளில் நான் சென்னையில் இருந்த வரை.

இப்போது மீண்டும் அந்த நாட்களை எதிர்பார்த்து மாலை/இரவு பொழுதுகளில் இந்த நினைவுகளோட மட்டும் ...

Monday, October 12, 2009

கண்களுக்கு விருந்தளித்த காலைப்பொழுது










Friday, October 9, 2009

எனது கவிப்புலமை

பிரியா: ஏதாவது போஸ்ட் போடுடி.
நான்: Synapse ல முதல்ல ஒரு போஸ்ட போடு. ஒரு மாசமாச்சு.
பிரியா: @#$%&*(&( ^*((*^()#@(அசிங்கமாக திட்டப்படும் வார்த்தைகளுக்கு வேற எந்த மாதிரி போடலாம்னு சொல்லுங்களேன்)

சஞ்சய்: அதிசயமா போஸ்ட்லாம் போட்டுருக்க. அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்க?
நான்: யோசிச்சிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம்னு சொல்லு.
சஞ்சய்: எதையாவது எழுது போ. (என்ன ஒரு பொறுப்பான பதில். உன்ன கலாய்ச்சு ஒரு போஸ்ட் போட்ட தான் நீ அடங்குவ. )

இயற்கை: அடுத்த போஸ்ட் சீக்கிரம் போடுங்களேன்.
நான்: என்ன போஸ்ட் போடலாம்னு யோசிச்சிட்டேன்.ஆனா டைப் பண்ண தான் சோம்பேறித்தனமா இருக்கு. யாராவது டைப் பண்ணி குடுத்தா நல்லா இருக்கும். நீங்க டைப் பண்ணி தரீங்களா.
இயற்கை: ஐயோ. மறந்துட்டேன். வெளியில போகணும். போயிட்டு வந்து ping பண்றேன்.
(ஒரு ஸாரி கூட சொல்லாம எஸ்கேப் ஆய்ட்டாங்களே. வரட்டும் கவனிச்சிக்கிறேன்.)

கணேஷ்: அடுத்த போஸ்ட் என்ன போடலாம்னு இருக்கீங்க.
நான்: இப்போ தான் யோசிச்சிட்டு இருக்கேன். டைப் பண்ணனும்.
கணேஷ்: ஒரு கவிதை எழுதுங்களேன்.
நான்: ஐயயோ அதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
கணேஷ்: நீங்க ரொம்ப நல்லா போஸ்ட் போடுறீங்க. உங்களுக்கு கண்டிப்பா கவிதை எழுத வரும். எழுதி பாருங்களேன். எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.
நான்: உண்மையா தான் சொல்றீங்களா. நிஜமா? அப்போ ஓகே. நான் ட்ரை பண்றேங்க,

அன்று முழுவதும் தூக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்து எதை பற்றி கவிதை எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

அம்மா பத்தி எழுதலாம்னு யோசிச்சா பார்த்திபன் கிறுக்கல்கள் புக்ல எழுதின கவிதை ஒரு வரி விடாம மனசுல ஓடுது, அம்மா பத்தி எழுதினா பார்த்திபன் தாக்கம் இருக்கும். அதுனால இது வேணாம்.

வேற இயற்கை (இந்த இயற்கை இல்லங்க) பத்தி எழுதலாம். நீர், நிலம், காற்று அப்பிடி ஏதாவது. ஐயோ நம்ம கவிப்பேரரசு ரிதம் படத்துல எல்லாத்தையும் பத்தி எழுதிட்டார். அதுனால இயற்கை பத்தி எழுதினா அவரோட தாக்கம் வந்துடும்.

காதல் பத்தி எழுதலாம். காதல் பத்தி நினைத்தவுடன், தபூசங்கரின் "தேவதைகளின் தேவதை" நியாபகம். எப்போதும் நியாபகம் வராத வரிகள், அப்போது தான் நியாபகம் வர தொடங்கியது.

இவங்க யார் தாக்கமும் இல்லாம நாமலே நம்ம originality படி எழுதணும். கொஞ்சம் டைம் எடுத்து நல்லா யோசிச்சு ஒழுங்கா எழுதணும் என்று மனசை தேற்றியபடி தூங்கி போனேன்.

மறுநாள் ஆபீஸ் போய் உட்கார்ந்து client க்கு மெயில் அனுப்ப டைப் பண்ண ஆரம்பித்தேன். ஏதோ கவிதை டைப் பண்ணுவது போல் ஒரு பீலிங். தலையை உதறி கொண்டு சுய நினைவிற்கு வந்தவளாய் ஒழுங்காக மெயில் அனுப்பினேன். அதன் பிறகு கணினி திரையை வெறித்து பார்த்து கொண்டு, மரங்களை உற்று நோக்கி கொண்டு, லஞ்ச் டேபிளில் தோசையை கையில் வைத்து கொண்டு சாப்பிடாமல், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் எதை பற்றி கவிதை எழுதலாம் என்று ஒரே யோசனை.

எதை பார்த்தாலும் அதை பற்றி கவிதை எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம்.
கடைசியாக மனதிற்குள் ஒரு மின்னல் அடிக்க கை பர பரவென இயங்க தொடங்கிவிட்டது.
"புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த‌
சிரிப்பில் சிக்கியது
ஒரு வ‌ழியாக‌
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக‌ இள‌மையாக‌
அழகிய தாவணியுடன்
வந்ததும் அத‌ன்
அவ‌ள் ம‌டிப்பில்
ம‌டிந்தது
*
*
*
இப்ப‌டியான‌ என‌து
ப‌தின் ப‌ருவ‌த்து
காத‌ல் நெருப்பு
ஒருவ‌ர் கை மாறி
ஒருவ‌ர் கை செல்லும்
ஒலிம்பிக் தீப‌ம்போல் அணையாம‌ல்"

கவிதை எழுத சொன்னவரிடம் இந்த பதிவை காண்பிக்க, அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இந்த கவிதையினால் என்று நினைத்து கொண்டால், மிக சரியே.

இந்த கவிதை நல்லா இருக்குன்னு ஆச்சரியத்துல இல்ல, இந்த கவிதை அவரோடதுங்குற அதிர்ச்சியில்.

ரொம்ப யோசிச்சு நம்மளால ஒரு கவிதை எழுத முடியல. அதுனால மான ரோசமெல்லாம் துடைத்து போட்டு விட்டு அவோரட கவிதையை எடுத்து இங்கு போட்டு விட்டேன்.